Sunday, April 30, 2023

SAMIs COME TOGETHER-21

 SAMIs COME TOGETHER-21

சாமிகள் சங்கமம் -21

அங்க ஏன் வரச்சொல்றாங்க என்று மா சாவும் கௌரியும் புரியாமல் தவித்தனர்..சரி என்று ஒப்புக்கொண்டனர் . நல்லதோ அல்லதோ HOD சொன்னால் கேட்க வேண்டியது தான் .இப்போதுதான் கௌரிக்கு ஞாபகம் வந்தது SCHOLARSHIP LETTER வந்திருப்பதை சாரதாவிடம்  காட்டி விடவேண்டும் , மேலும் மேடம் வீட்டுக்கு போகும் போது சொல்கிறேன் , நீங்களும் வாங்கனு சொல்லியாச்சு அதையும் காப்பாத்தணும் இல்லேன்னா வம்பு தான். ராமசாமி சார் வீட்டுல மேடத்துகிட்ட சாராதவையும் கூட்டிக்கிட்டு வரலாமா னு பெர்மிஷன் கேட்டு மேடம் சொல்வது போல் செய்ய வேண்டியது தான் என்று பிளான் போட்டுவிட்டாள். 2 -3 நாளிலேயே எப்படி எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று புரிந்து விட்டது ; இதைத்தான் சாரதா சொல்லிக்கொண்டே இருந்தாள் . மேடத்துகிட்ட 2 வருஷம் படி அப்புறம் எப்பிடி டெவெலப் ஆயிடுவனு பாரு என்று அடிக்கடி சொன்னதன் பொருள் கௌரிக்கே புரிந்தது போல் இருந்தது சனி மாலை ராமசாமி வீட்டில் மீண்டும் சாமிகள்/ திரிவேணி சங்கமம். ஸ்காலர்ஷிப் லெட்டரை சுபத்ராவே  அழகாக பிரித்து ராமசாமி/ அம்ஜம் இருவருக்கும் காட்டி விளக்கினாள் . இவ்வளவு கட்டுப்பாடு சட்ட திட்டமெல்லாம் இருக்கா என்றனர் ரா. சா அம்புஜம் இருவரும். இல்லையா பின்ன மொத்தம் 1 லட்ச ரூவா சார் சும்மா தருவானா ? தூண்டித்துருவி ப்பார்த்து , நான் ஏதாவது லஞ்சம் வாங்கிட்டேனான்னு கூட ரகசிய விசாரணை யெல்லாம் நடந்திருக்கும் சார் . தமிழ் நாடு முழுவதும் NIA தீவிர கண்காணிப்பில் பலவித நுணுக்கமான உளவு பணிகள் துல்யமாக நடக்கின்றன அதுவும் DEFENCE MINISTRY சமாச்சாரம் னா சும்மாவா என்றார் சுபத்ரா

அதுனாலதான் நான் அட்மிஷன் முடியற வரைக்கும் யாரையும் நானும் பார்க்கவோ அவங்க என்னைப்பார்க்கவோ விடமாட்டேங்கறேன். மேலும் நாங்க முறையா செலக்ட் பண்ணி அந்த கேண்டிடேட் ரிஜெக்ட் ஆனா ஏதோ ஊழல் னு சந்தேகப்படறாங்கனு அர்த்தம். . இவளுக்கு ஸ்காலர்ஷிப் வரணுமேன்னு நான் மடியிலே நெருப்பைக்கட்டிக்கிட்டு இருந்தேன்னு எனக்கும் சமயபுரத்தாளுக்கும் தான் தெரியும். ஆனா இவ சொல்றா   என்ன பார்த்தா இவளுக்கு பயம்மா இருக்காம் கை , தலை எல்லாம் வேர்த்துக்கொட்டி அப்புறம் ஐஸ் வாட்டர் குடிக்க குடுத்து முழுசா வீட்டுக்கு அனுப்பி வெச்சேன் இவளை என்றார் HOD சுபத்ரா . கௌரி வெட்கி தலைகுனிந்து அம்ஜம் பின்னால் மறைந்து கொண்டாள். இறுதியில் ஸ்காலர்ஷிப் உத்தரவில் வித்யா வேதாந்தம் கையெழுத்திட்டிருப்பதை  காட்டி அந்த பெண்மணி எவ்வளவு உயர் பதவியில் இருக்கிறார். என்று விளக்கி . நல்ல வேளை  அவங்க கிட்டயெல்லாம் தொங்கும்படியா வெக்காம கௌரவமா ஜெயிச்சுட்டா கௌரி என்று உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சுபத்ரா . மாடசாமி எவ்வளவு உயர்ந்த மனிதர்களுடன் நாம் நெருங்கிப்பழகும் வாய்ப்பை இறைவன் தந்தருள்கிறான் என்று தெய்வங்களுக்கு நன்றி தெரிவித்தார் . மீண்டும் சூப்பர் அடை கொத்துமல்லி சட்னி , ஜமாய்த்திருந்தாள் அம்ஜம். . கௌரிக்கு மாபெரும் TREAT போல தோன்றியது.

விடை பெரும் தருணம் கை கூப்பி மாடசாமி தெரிவித்தார் "மேடம் யூனிவர்சிட்டி போன்ற இடங்களுக்கு நான் போனதே இல்லை அதுனால அங்க உள்ள நடைமுறைகள் தெரியாது. இவ சின்னவ ஏதாவது முன் பின் நடந்திருந்தா எங்களை மன்னிச்சிடுங்க , நானும் அவளுக்கு எனக்கு தெரிஞ்ச அட்வைஸ் எல்லாம் அப்பப்ப சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் என்று கலங்கினார். உடனே சுபத்ரா சார் நீங்க என் சகோதரர்னு முத நாளே நான் சொன்னதை மறந்துட்டீங்களா ? ஒரு தடவை பார்க்கும் போதே நல்லவங்களா  வேஷம் போடறவங்களானு நான் ஈஸியா கண்டுபிடிச்சுடுவேன் வேஷ கோஷ்டிக்கெல்லாம் இங்க இடமே கிடையாது , இன்டர்வ்யூக்கு வந்துட்டு டான்ஸ் ஆடினவனுங்க கதி என்ன னு அவளைக்கேளுங்க சொல்லுவா என்றார் HOD. .இதுக்கெல்லாம் கலங்காதீங்க .அவ எங்க வீட்டு குழந்தை ங்கற உணர்வோடு தான் எங்க யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் நான் வளர்த்திருக்கேன். ராமசாமி சார் கொடுத்த ஒரு சிறிய ஓப்பனிங் ல தான் இன்னிக்கு டெல்லில எங்க யூனிவர்சிட்டி பெருமையடையும்படி மாரியம்மா அசீர்வாதம் கிடைச்சிருக்கு. அவளை நான் சொல்றமாதிரி follow பண்ண சொல்லுங்க , சூப்பரா வந்துருவா அப்புறம் நம்ப அவளை foreign ல தான் போய் பாக்கணும். என்று வணங்கி விடை பெற்றாள்

தொடரும்   அன்பன் ராமன்

Saturday, April 29, 2023

RENGAA RENGAA -21

 RENGAA RENGAA -21

ரெங்கா ரெங்கா  21

சரியாக 9.30 க்கு வகுப்பைத்துவக்கினார். பஞ்சாபகேசன் . 11 பேருக்கு 6 பேர் மாத்திரம் ஆஜர். மெல்ல 4 பேர் 10 மணிக்கு மேல் வந்தனர். ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்விக்கு 'இல்லையே மணி 10 ஆக வில்லை என்றான் ஒருவன். சரி உங்களுக்கு வந்த CALL LETTER ல் துவக்க நேரம் பாருங்கள் என்றார் .அதில் 9.30 என்று குறிப்பிட்டிருந்தது.நீங்கள் உங்கள் டிவிஷன் அலுவல் அதிகாரியிடம் உங்களை சேர்த்துக்கொள்ளச்சொல்லி -  மெயில் அனுப்பச்சொல்லி போன் மூலம் பேசி அனுமதி வாங்கி வாருங்கள்.; நீங்கள் ரயில்வே இல் தாற்காலிக வேலையில் இருக்கிறீர்கள் என்று தான் உங்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறோம். நீங்கள் வேலையில் காட்டும் அக்கறையின் லட்சணம் என்ன என்று உங்கள் பாஸ்  களுக்கு தெரியட்டும். .மெயில் இல்லாமல் உங்களுக்கு அனுமதி கிடையாது என்று அனுப்பிவிட்டு , பிற ஆசிரியர்களுக்கும் அவர்கள் யாவர் என்றபட்டியலையும், கொடுத்து மெயில் இல்லாமல் உள்ளே விடாதீர்கள் . நாள் கடந்தால் அவர்களின் தலையெழுத்து என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து , உடனடியாக ATTENDANCE ரெஜிஸ்டர் பூட்டி வைக்கப்பட்டது. 10.05 க்கு ஒரு பெண் வந்தாள், அவளை அனுமதித்தார். உடனே வெளியே அனுப்பப்பட்டவர்கள் என்று வாதிட வந்தனர் பஞ்சாபகேசனிடம். அவர் கூலாக அந்த பெண்ணை அழைத்து டிவிஷன் அதிகாரியின் கடிதம் மற்றும் ஆஸ்பத்திரி DMO வின் பரிசோதனை க்குரிய தேவை பற்றிய கடிதம் இவற்றை காட்டி, அவன் சென் சனி அன்று நிலைமையை விளக்கி அவகாசம் கேட்டதையும் ,உயர் அதிகாரி அனுமதி + மெடிக்கல் பரிந்துரை வாங்கி வந்தால் அனுமதிப்பதாக, துறை ரீதியான பெர்மிஷன் பெற்றுள்ளாள். அவள் இந்த டிவிஷனில் ஊழியர் 6 ஆண்டுகளாக ; இப்போது தேர்வு பாஸ் செய்து பயிற்சியில் சேர்ந்துள்ளாள் ; இங்கு அனைவருக்கும் ஒரே சட்டம் தான் இங்கே கூச்சல் போடாமல் சொன்ன ஏற்பாட்டை நிறைவேற்றி வாருங்கள். இல்லையேல் வரும் வியாழன் முதல் 9.30க்குள் வந்து சேர்ந்துக்கொள்ளலாம். இன்று சண்டே எனவே 3 நாள் தள்ளி வியாழன் முதல் வாருங்கள். என்றார். எங்களுக்கு வகுப்பு போகுமே என்றார் இருவர் . போகட்டுமே என்று தானே நீங்கள் மெல்ல 10 மணிக்கு வந்தீர்கள் இப்போதென்னவோ பயிற்சியில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் போல் பேசுகிறீர்கள்.. சொன்னதை நிறைவேற்றுங்கள் என்று அனுப்பி வைத்தார். அவர்களில் ஒருவன் குண்டூர் டிவிஷன் ஆபீஸ்  டிராபிக் CHIEF இடம் COMPLAINT கொடுப்போம் என்று கிளம்பினான். பலர் ஒப்புக்கொள்ளவில்லை . இவன் தனியே போய் அந்த அதிகாரியிடம் முறை இட்டான். அவர் இவன் முகத்தில் கரியைப்பூசினார்  ; சாதாரணக்கரி  அல்ல ரயில் கரி . யு ஹவ் நோ பிசினஸ் டு கம் லேட். you stupid , don 't think we are idiots here ; ஹூம் ஆர் யு talking about ..அவனது லெட்டர் வாங்கி I  AM  CANCELLING யுவர் ADMISSION என்று சீறிப்பாய்ந்தார். இவன் சார் சார் என்று மண்டியிட்டான் . அவர் உன்னை ஒரு வாரம் suspend செய்கிறேன் எனவே உனக்கு 2 மாதம் 3 வாரம் பயிற்சி அடுத்த batch ல்  2 வரம் பயிற்சி  இவை முடிந்த பின் தான் வேலை என      என்று ஆர்டர் அடித்துசர்வீஸ் செக்ஷன் அதிகாரியிடம் தானே போய் ஒப்புதல் வாங்கி , அனைத்து அலுவலக பிரிவினருக்கும்  தகவல் நகல் அனுப்பி பஞ்சாபி கேசனை போனில் பாராட்டி  you did the  right thing என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கிடையில் வேறு இரு வகுப்புகள் முடிந்து 12.30க்கு lunch break .

சுப்பிரமணி சார் கீழே வரீங்களா என்று ரெ வை கூட்டிச்சென்றான் . மாமி மெஸ் சாப்பாடு அளவு சாப்பாடு சரியான அளவில் சாதம் , குழம்பு ,ரசம், காய், மோர் ஊறுகாய் எளிய ஆனால் சுவையான உணவு . நீங்க சாப்பிடலியா என்றான் ரெ . இப்ப வீட்டுக்கு போய்விட்டு அம்மா வுடன் சாப்பிடுவேன் 2.15 க்குள்ள வந்துடுவேன், நான் போகல்லேன்னா அம்மா சாப்பிடாம உக்காந்திருப்பா ; எவ்வளவோ சொல்லியாச்சு கேக்க மாட்டேங்கறாங்க . உங்க wife ? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல . 1 1/2 வருஷத்துக்கு முன்ன  தான் என் தங்கைக்கு கல்யாணம் பண்ணினோம் . அந்த கடன் வேற இருக்கு கொஞ்ச கொஞ்சமா அடைக்கறேன் . என்ன செய்ய நம்ப பட்ட கடனை நம்ப தான் சார் அடைக்கணும்.. வேற யாரும் கூடப்பிறந்தகவங்க? ஒரு அண்ணன்  7, 8 வருஷமா US இருக்கான் திரும்பிக்கூட பாக்கிறதில்ல , நம்ப தரித்திரத்தை யார் சார் பங்குபோட்டுக்க வருவாங்க ? சொத்து பத்து இருந்தா வந்து வந்து பாப்பாங்க, திடீர்னு சொந்தக்காரங்க கூட முளைப்பாங்க அது தான் சார் உலகம். என்றான் சுப்பிரமணி. ..சார் க்ளாஸ்க்கு லேட்டா இல்லாம போங்க லேட்டா போனா சார் ரொம்ப கோவப்படுவர். சாயங்காலம் 5 மணி எக்ஸ்பிரஸ் போனப்புறம் டவுனுக்கு போலாம் , அங்க அனுமார் கோயில் நல்ல விசேஷம் . பஞ்சாபகேசன் சார் அங்க நெறையா போவார் . சக்தி வாய்ந்த அனுமார். ;அவர் தான் இந்த ஊர்ல எங்களை காப்பாத்தறார் என்றான் சுப்பிரமணி . மாலை ஆஞ்சநேய தரிசனம். சென்னை கோயில் கள் , ரா சா மா சா எல்லாம் மனதில் வந்து போயின . இப்போதைக்கு சுப்பிரமணி தான் மாடல் ; வாழ்வியல் அனுபவம் அவன் பண் பட்டு  நிற்கிறான் . ஆஞ்சநேயர் என்னையும் கரையேற்றுவார் என்று ஆழ்ந்து பிரார்த்தனை செய்தான். சிறிது நேரம் கடைத்தெருவில் நடந்தனர் 7.15 மணி வாக்கில் மாமி மெஸ்ஸில் மெட்றாஸ் சார் என்று அறிமுகம் இரவுக்கு சேவை 3 பீஸ் + புதினா சட்னி கணக்கில் 21/- ரூபாய் மதியம் 50/- . 8.10 க்கு ரூம் திரும்பினர் . 10 மணி வரை படித்துவிட்டு உறங்கினான் .

தொடரும் அன்பன் ராமன்

Friday, April 28, 2023

SAMIsCOME TOGETHER-20

 SAMIsCOME TOGETHER-20

சாமிகள் சங்கமம் -20

மேடம் ஏன் ராத்திரி போன் பண்ணுனு சொன்னாங்க ? ஏதாவது டோஸ் விடுவாங்களோ ? நன் ஒண்ணும் தப்பு பண்ணலியே , ஒண்ணுமே புரியலையே , மாரியம்மா மேடம் கோவப்படாம பாத்துக்கம்மா என்று வேண்டினாள் வேண்டிய . மணி 8.25 , மாமா திரும்பி வந்தார் . மாமாவுக்கு உணவு பரிமாறிக்கொண்டே கௌரி சொன்னாள் . மேடம் என்னை போன் பண்ணச்சொன்னாங்க , பேச பயம்மா இருக்கு, நீங்க பேசறீங்களா மாமா என்றாள் . மாமா நீ பேசலாம் நான் போய் சம்மந்தமில்லாம  ஹி ஹி  ஹி கௌரி மாமா பேசறேன் னு சொன்னா நீங்க கௌரியோட பேசுங்க இங்க பேசாதீங்க னு கறாரா சொல்லிட்டா நம்ப ரொம்ப சிக்கல்ல மாட்டிக்குவோம் அதுனால நீயே பேசு , நாங்கல்லாம் தேவை இல்லாம குறுக்க பேசக்கூடாது. என்றார் . வேறு வழியில்லாமல் போன் பேசினாள் . மேடம் நன் கௌரி பேசறேன் . கௌரின்னா எந்த கௌரி எங்கிருந்து பேசற ஏதாவது சொன்னா தானே தெரியும். சரி குட் ஈவினிங் குட் மார்னிங் னு சொல்லி பேர் சொல்லி ஆரம்பிக்கணும் னு யாரும் சொல்லித்தரல்லியா . இனியாவது அந்த மாதிரி பேசி பழகு . சாரி மேடம் என்றாள் கௌரி. சாரி மேடம் வேண்டாம் சரி மேடம் னு சொல்லு என்ன புரியுதா என்றார் HOD . கௌரி வெல வெலத்தாள் . மாமா "சரி டோஸ் விழுது விழட்டும் அப்பதான் சரியா கத்துக்க முடியும்" னு  தனது அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்..மேடம் பேசினார் இந்த சாட்டர்டே மாமா பிரீ யா இருக்காரான்னு கேட்டு சொல்லு உடனே என்றார். கௌரி "மாமா நீங்க இந்த சாட்டர்டே பிரீ யா இருக்கீங்களானு மேடம் கேக்க சொல்றாங்க ".  சாட்டர்டே 3 மணிக்கு மேல பிரீ தான் என்று சொன்னார். அதை தெரிவித்த கௌரியிடம் , மேடம் இந்த சாட்டர்டே மாலை 6.00 மணிக்கு நம்ப ராமசாமி சார் வீட்டுல மீட் பண்றோம் முடியுமா என்று சொல்ல சொன்னார். சரி என்று ஒப்புக்கொண்டனர்.நானே ராமசாமி சாருக்கு சொல்லிடறேன் என்று மேடம் தெரிவித்தார் . பின்னர் கௌரியிடம் "உனக்கு ஸ்காலர்ஷிப் லெட்டர் வந்திருக்கிறதே அதையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு வா என்று தெரிவித்தார் HOD .

தொடரும்          அன்பன் ராமன்

Thursday, April 27, 2023

RENGAA RENGAA -20

 RENGAA RENGAA -20

ரெங்கா ரெங்கா -20

குண்டூர் ஸ்டேஷ ன் arrived , come , come என்று ரெ வை கூட்டிக்கொண்டு இறங்கினார்ராகவலு. விரைவாக அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் மேற்பார்வை யாளர் சுப்பிரமணியன் என்பவரை கூட்டி வந்து , ரெ பகலில் ஆபீஸ் போய்விட்டு இரவில் வந்து தங்கிக்கொள்ளட்டும், நீ உள்ளே பெட் போட்டு நல்லா பாத்க்கோ அவரூ மெட்ராஸ் வாடு , கவுனம் என்று தங்க ஏற்பாடு செய்து விட்டு, ரெ விடம் தம்பீ டெய்லி 20/- ருப்பீஸ் குடுங்கோ சுப்ரமணிக்கி அது போதூ என்று சொல்லி விடை பெற்றார் , வண்டி ஏறி தன்  வேலையை பார்க்க போனார். .                    மாடசாமி தென் இந்தியாவுல பெரிய ஆள் தான் போலிருக்கு என்று ரெ வியந்தான்..

சுப்பிரமணிசார் இந்தாங்க பால்” என்று சூப்பர் பால் ஒரு பேப்பர் சுப்பில் தந்தான். 5 நிமிஷத்துல ரூம் ரெடி பண்றே ன் , கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்று சுத்த தமிழில் சொன்னார் சுப்பிரமணி. நீங்க மெட்றாசா என்றான் ரெ . இல்ல சார் சேலம் , மேல ஆஃபீசர் பஞ்சாபகேசன் சார் காலை 9.30 க்கு வருவார்.அவர்தான்  எனக்கு இங்க வேலை  வாங்கி தந்தார் 12 வருஷமா இங்க வேலை செய்யறேன். அவரு எத்தினி பேருக்கு ஹெல்ப் பண்ணிருக்காரோ கணக்கே இல்ல , ரொம்ப high quality officer ; இந்த ரயில்வே டிவிஷன் அவருக்கு எவ்வளோ மரியாதை இருக்கு.என்று சொல்லிக்கொண்டே மள மள வென்று ac அறையில் . ரெ வை தங்க வைத்தான் சுப்பிரமணி.7 மணி வரைக்கும் தூங்குங்க , நான் வந்து கீசர் போட்டு தரேன் அப்புறம் குளிங்க அதுக்குள்ள டவுன் ஒரு தமிழ் மாமி மெஸ் இருக்கு அங்கிருந்து டிபன் வாங்கி தரேன் அதை சாப்பிடுங்க வேற ஓட்டல் ஐடெம்லாம் ரொம்ப காரம் அதுனால நான் பாத்து வாங்கி தரேன் , தூங்குங்க சார் , நன் வெளிய ஹால் தூங்குவேன் ரூம் பூட்டிட்டு படுத்துருவேன் குட் நைட் என்று படுக்கப்போனான்.

 காலை 6.20 க்கு கண் விழித்தான் க ரெ ஜன்னல் வழியே மேலே பார்த்தான் கோபுரத்தைக்காண வில்லை .ஐயோ என்று ஒரு வினாடி  பதறி பின் இப்போது குண்டூரில் இருக்கிறோம் என்று நினைவுபடுத்திக்கொண்டான். வெந்நீர் இல்லாமலே குளித்தான் , ஸ்ரீசூர்ணம் தரித்தான். காபி நினைவுக்கு வந்தது . இங்கே மாடசாமி சார் இருந்தால் எங்கே நல்ல காபி கிடைக்கும் னு கூட்டிக்கொண்டு போவார் என்று நினைவுகூர்ந்தான். 7 மணிக்கு சார் என்று சுப்பிரமணி கதவைத்தட்டினான் . உடனே வாங்கோ என்று கதவை ரெ திறந்தான் . சார் காபி வாங்கட்டுமா என்ற சுப்ரமணியிடம், ராத்திரி பாலுக்கே நான் இன்னும் பணம் தரலியே என்றான் ரெ .அதுக்கு ராகவலு சார் பணம் தந்துட்டார் சார் நீங்க ஒண்ணும் தர வேண்டாம் . என்றான் சுப்பிரமணி. சரி காபி எவ்வளவு, 15/-ரூவாய்க்கு சுமாரா இருக்கும் 20/-க்கு நல்லா இருக்கும் , 20/- சாப்புடுங்க எதுக்கு 15/-குடுத்து மோசத்தை வாங்கணும் ? என்றான் சுப்பிரமணி.

எங்கிட்ட ரொம்ப பணம் இல்ல என்றான் ரெ . ஐயோ என்று ரெ வின் நிலை பற்றி வருந்தினான் சுப்பிரமணி. சார் நீங்க ட்ரைனிங் தானே வந்திருக்கீங்க -3 மாசத்துக்கு? ஆமாம் என்றான் . ரெ . [இப்போது சுப்பிரமணி 12 வருடங்களுக்கு முன் நானும் இப்படித்தானே 5/- காபி க்கு காசு செலவழிக்க திணறினேன் , பாவம் சார் என்று பச்சாதாபப்பட்டான்]. சார் மாசம் ஆனதும் 20, 000/- குறையாம வரும் , அதுனால நான் மாமிகிட்ட பேசி உங்களுக்கு கணக்கு ஆரம்பிச்ச்சுடுவோம் சம்பளம் வாங்கிட்டு குடுங்க அதுவும் நீங்க அக்க வுண்ட்ஸ் டிபாட்மென்ட் தானே ? பஞ்சாபகேசன் சார் கரெக்ட்டா எல்லாம் ரெடி பண்ணிடுவார். இப்ப நான் போய் காபி டிபன் கொண்டுவரேன் . 9.00 மணிக்கு எக்ஸ்பிரஸ் வரும் அப்ப வெயிட்டிங் ரூம் திறக்கணும். இப்ப கதவை மூடி வெச்சிட்டு கிளம்பறேன். ட்ரெயின் போனதும் அடுத்த பில்டிங்  தான் ட்ரைனிங் சென்டர் சார் 9.20 க்கு வந்திடுவார் நானே கூட்டிக்கிட்டு போறேன் அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சுடுங்க அடுத்த ட்ரெயின்  3 மணிக்கு தான் அது வரை சார் செக்ஷன் வேலை இருந்தா பாத்துப்பேன் என்று கிளம்பினான். 8.20 க்கு இட்டிலி தோசை , சாம்பார் சட்னியுடன் கொண்டு வந்தான், ஒரு பிளேட்டை டைனிங் ரூமில் இருந்து கொண்டுவந்து இதுல சாப்புடுங்க என்று ஒரு தண்ணீர் பாட்டிலையு ம்  வைத்தான். திருப்தியாக உணர்ந்தான் . ரெ . சார் இந்த பேப்பரை பத்திரமா வெச்சுக்குங்க இப்ப 23/- ரூவா ஆச்சு , டெய்லி எழுதி மாசக்கடைசில டோடல் பாத்திட்டு மாமிக்கு பணம் குடுத்துடுவோம்; மாமி அவங்களும் நோட்டுல எழுதிடுவாங்க உங்க பேர் தெரியல மெட்றாஸ் சார் னு நோட்டுல எழுதியிருக்கேன் என்றான் சுப்பிரமணி . கரெ தன்  பெயர் சொன்னான்.  9.20 க்கு லெட்டருடன் அக்கவுண்ட்ஸ் ஆபிசில் ரெ , அதிகாரி பஞ்சாபகேசன் சார் முன் வணக்கம் செலுத்தி கடிதம் தந்தான். மணியைப்பார்த்தார் . கே [9.22] good என்று ரெ வை பாராட்டினார்.

மாடசாமி உன்னைப்பத்தி சொல்லிருக்கார் ; நீ தைரியமா இரு நல்லா வேலை கத்துக்கோ, கீழே சுப்பிரமணி னு ஒரு அட்டெண்டர் இருக்கான் உனக்கு உதவி செய்வான் . 9.30 க்கு முதல் ரூம் கிளாஸ் , இந்தா இந்த attendance கை எழுத்து போட்டுட்டு போய் அந்த ரூம் வெய்ட் பண்ணு , நான் வருவேன் என்று அனுப்பி வைத்தார்.

தொடரும்     அன்பன் ராமன்

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...