Sunday, April 2, 2023

Rengaa Rengaa 8

Rengaa Rengaa 8

ரெங்கா ரெங்கா -8

சார் போஸ்ட் என்ற குரல் கேட்டு ஒரு அம்மாள் வெளியே வந்தாள் , கஸ்தூரி ரெங்கன் இருக்காரா என்றார் போஸ்ட் மேன் . இல்லையே என்றார் அந்த பெண்மணி. அவருக்கு லெட்டர் வந்திருக்கு குடுத்துடுங்க என்று ஒரு பழுப்பு நிற கவரை தந்து விட்டு போனார் போஸ்ட் மேன் . அம்மா அதை முன்னும் பின்னும் திருப்பி திரும்பிப்பார்த்தார் ஒன்றும் புரிய வில்லை . சரி என்று வீட்டுக்குள் கொண்டு போய் அலமாரியில் வைத்தாள் . இரண்டு நாளாக எதுவும் நடக்க வில்லை.

மூன்றாம்  நாள் காலை மாடசாமி ராமசாமியிடம் ஏண்டா இந்தப்பையனுக்கு லெட்டரே  வல்லியா ; எங்க தெருவுல ஒரு லூசுப்பயலுக்கு நீ பாஸ் RANK 1027 எனவே காத்திருக்கவும் னு லெட்டர் வந்திருக்கு , இவனுக்கு ஏண்டா தகவல் இல்ல ஆச்சரியமா இருக்கே , அவனைக்கேளுடா எங்கயாவது கோட்டை விட்டுடப்போறான் என்று எச்சரித்தார் மா சா . மதியம் 12 மணிக்கு  செக்க்ஷன் பைலை வாங்க வந்தவனி டம் ராமசாமி கேட்டார் -ஏண்டா ஆர்டர் வந்திண் டு இருக்கே ஒனக்கு வரலியா என்றார் . ஒண்ணு ம் தெரியல சார் என்று சொல்லிவிட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.. நான் நல்லபடியா தானே பரீட்சை எழுதினேன் . அந்த கேப்ரியல் சார் கூட ரிசல்ட் பாத்துட்டு பார்ட்டி கேட்டாரே . அந்த முத்துலட்சுமி மேடம் நம்பர் பச்சையா மின்னுது ரொம்ப விசேஷம்னு சொன்னாங்களே அவ்வளவு தானா. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலே போய் விடுமா? -ரெங்கா ஏன் இப்படி என்ன சோதிக்கற ? கடைசி வரைக்கும் போராடியே சாகணுமா என்று மிகுந்த துயரம் கொண்டான்.  அவனையறியாமல் பயம் தொற்றிக்கொண்டது கொண்ட வந்த டிபன் பாக்ஸைத்திறக்கவே இல்லை. மதியம் செக்ஷன் காரர்கள் டீயில் 1 கப் அவனுக்கும் உண்டு. அதை மாத்திரம் பருகினான். அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை. மிகுந்த விரக்தி கொண்டான். வீட்டில் போய் டிபன் பாக்ஸை டேபிளில் வைத்தான். அம்மா எடுத்து தேய்க்க நினைத்தாள் . கை கனத்தது . திறந்து பார்த்தால் தயிர் சாதமும் கீரையும் இளித்தன . என்னவோ புரியவில்லை . சரி இந்தாடா காப்பி சாப்பிடுடா என்றாள்  தாய் .

ஆமாம் இப்ப எனக்கு அது ஒண்ணு தான் குறைச்சல் -அந்த காப்பியை நீயே சாப்பிடு என்றான். சோர்ந்து படுத்துவிட்டான் . தாயார் அவனுக்கு உடம்பு சரியில்லையோ  என்று வந்து தொட்டுப்பார்த்தாள் .

எல்லாம் உசிரு இருக்கு இன்னும் போகல்ல என்றான் கஸ்தூரி ரெங்கன். என்னடா ஆச்சு உனக்கு என்றாள் அம்மா . ஒண்ணும் ஆகல ஆனா கூடிய சீக்கிரம் ஆயிட்டா தேவலை எல்லாருக்கும் நான் ஒரு பாரம் என்று மனதிற்குள் புழுங்கினான்.

சுவற்றுப்பக்கம் புரண்டு படுத்துக்கொண்டு ருண்ட எதிர்காலம் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டான்.

மணி மாலை 6. வாசலில் நிழல் ஆடியது ,  தாயார் எட்டிப்பார்த்தாள் அங்கே ராமசாமி நின்றிருந்தார். அவன் இன்னும் வரல்லியா என்று கேட்டார். இல்லை வந்துட்டான் படுத்துண்டே இருக்கான் கேட்டாலும் சரியா சொல்லமாட்டேங்கறான் என்றார் தாய் . டேய் என்று உள்ளே  வந்து கொண்டே உடம்புக்கு என்ன என்றார். ஒண்ணுமில்ல என்ற படியே பின்னல் ஓடி முகம் கழுவிக்கொண்டான்.  மனசு சரியில்லைன்னா கோயிலுக்கு போவோம் வா என்றார்.

[ஆஹா கோவில்  உண்டியல் போடணும் னு 20/- ரூவாயை எடுத்து வெச் சேன் போடவே இல்லை  சரி போட்டுருவோம் என்று பணத்தை எடுக்க அலமாரியைத்திறந்தான்]. அவன் வைத்த பணத்தின் மீது பழுப்பு நிற கவர் ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்ட் என்ற முகவரியிலிருந்து] .

அம்மா இது எப்ப வந்தது என்று அலறினான். ராமசாமியே அதிர்ந்து போனார் . பாருங்கோ சார் என்று கவரை ராமசாமியிடம் தந்தான். ராமசாமி பிரிக்கட்டுமா என்றார் . உங்க கையாலேயே பிரிங்கோ சார் என்றான் ஆனால் அவன் அம்மாவை லேசில் விடுவதாக இல்லை . மீண்டும் இதுஎப்ப வந்தது என்று உறுமினான். மூணு நாள் முன்னாடி என்றாள் . வெளில வெச்சிருந்தா நானாவது பாத்திருப்பேன்,அதையும் கெடுத்த ; இப்ப சார் வரல்லேன்னா இந்த லெட்டர் காலாவதி ஆகி அதோட நானும் காலாவதி ஆயிருப்பேன் ஏன் இப்படி படுத்தற ஒனக்கு துளசி வாங்கிண்டு வரணும் னா எழுபத்தி ரெண்டு தரம் துளசி துளசி துளசி துளசி  னு பொலம்புவயே அது மறக்காது ; உன்ன மாதிரி ரெண்டு பேர் இருந்தா ஊர் உரு ப்பட்டுடும் என்று காய்ச்சி விட்டான் தாயாரை.

அவன் கோபம் முற்றிலும் நியாயமானது . மீண்டும் ஒரு வாய்ப்பு எளிதில்    கிட்டுமா ?  இந்த ஒரு நிக ழ்ச்சியில் எத்துணை பேரின் முயற்சியும் ஆசிகளும் ஒட்டு மொத்தமாக வீணாக போயிருக்கும் . உரிய காலத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால் பெருமாளே நினைத்தாலும் உதவி செய்ய முடியாது .

 டேய் உனக்கு அடுத்த சனிக்கிழமை மாலை 2.00  மற்றும் தேவைப்பட்டால் ஞாயிறு காலை 11 மணிக்குமாக இரண்டு INTERVIEW என்று வந்திருக்கிறது . மாடசாமி சொல்லி தான் விசாரிக்க வந்தேன் நல்லதா போச்சு , நாளைக்கு போய் மத்ததெல்லாம் பிளான் பண்ணலாம் இப்ப கோயிலுக்கு போகலாம் வா என்று இருவரும் கிளம்பினர் உண்டியலுக்குரிய காணிக்கையுடன்

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...