Tuesday, May 9, 2023

ரெங்கா ரெங்கா-28

 ரெங்கா ரெங்கா-28

  ஐயோ ரெங்கா-2

+2 முடித்தவர்கள் அக்கௌன்ட்ஸ் வழிமுறைகளை நன்றாக செய்திருந்தனர் .                                                                                                                                                                                                                                                                                                                           M .Com முடித்தவர் மிக எளிதாக சரியான  விடை  அளித்திருந்தார். . மீண்டும் கே சேம்பர் க்கு திரும்பினர் மூவரும் . மார்க் எல்லாம்  சொல்லுங்க என்று கேட்டு வாங்கி அவரவர் ட்ரைனிங் ப்ரொகிரஸ் நோட்டில் குறித்து விட்டு , இந்த கேண்டிடேட் களின் பயிற்சி பற்றி ஒவ்வொருவர் பெயருக்கு அருகில் இந்த ரிப்போட் டில் உங்கள் எழுத்தில் எழுதி கையெழுத்திடுங்கள். அனைவருக்கும் நல்ல பாராட்டு தெரிவித்திருந்தனர் . இப்படி போனவன் வந்தவனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால்  ஆபிஸ் எப்படி நடக்கும் பதில் சொல்லுங்கள் என்று அவர்களை மாட்டி விட்டார் ப கே.

அதிகாரிகள் எழுதிய குறிப்பு நாங்கள் நேரடி ஆய்வில் கண்டவை.  +2 தகுதியுடன் நால்வர் உள்ளனர் .M .com பட்டதாரி ஒருவரும் பயிற்சியில் இருக்கிறார். அனைவரும் ரயில்வே  தேர்வு + நேர்முகம் வழியே பயிற்சிக்கு வந்துள்ளனர். எனவே விண்ணப்பதாரர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை, போலியானது, உள்நோக்கம் கொண்டது .எனவே இந்தக்குற்றச்சாட்டு புறக்கணிக்க வேண்டிய ஒன்று . நாங்களே நடத்திய தேர்வில் மேற்படி 5 பே ரும் [4 +.M com ] நன்றாக விடை அளித்திருக்கின்றனர். B .com தகுதி உள்ள விண்ணப்பதாரர் தனது கல்விக்கு பொருந்தாத வகையில் விடை அளித்து , அவரை சேர்த்துக்கொள்ளாதது நியாயமே என்பதை நிரூபித்துள்ளார் . இந்த புகார் தாரரை  நிரந்தரமாக தகுதியற்றோர் பட்டியலில் வைத்து அனைத்து ரயில்வே டிவிஷன் களுக்கும் தெரிவித்து ரயில்வே யின் மாண்புதனை காப்பாற்றிக்கொள்ளுதல் நலம் என்று பரிந்துரைத்தனர்.   

 Sd .. Chatterjee ,   Sd.. Manoj Kate

புகார் அளித்தவனை தீவிர கண்காணிப்புக்காக 3 மணி நேர விசாரணைக்குட்படுத்தி அவன் ஏன் இந்த  வேலையில் இறங்கினோம் என்று நொந்து போனான் .

சுமார் 2 மணி நேரங்களில் தகவல் பரவி , ரயில்வே ஊழியர்கள் திரண்டு வந்து புகார் அளித்தவனை நையப்புடைத்தனர்         அவ்வளவு   உயர் அந்தஸ்தில் இருப்பவர் பஞ்சாபகேசன்

மனம்நிம்மதியான   ரெ  மாலையில் சுப்ரமணியுடன் ஆஞ்சநேயரை தரிசிக்க ஓடினான் .                                                                                    

!  இன்று ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் . மற்றும் வடை மாலையுடன்  .யாரோ செல்வந்தருடைய வீட்டில் 30 ஆண்டுகளுக்குப்பின் ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்அந்த செல்வந்தர் தன மகன் வாரிசு குறித்த கவலையில் இருந்த நிலையில் , சுமார் 1 ஆண்டாக வியாழன் மாலையில் ஆஞ்சநேயருக்கு இந்த பட்டரின் ஆலோசனைப்படி அர்ச்சனை /பால் அபிஷேகம் செய்து வந்தாராம் . இப்போது அதன் பூர்த்திக்காக இந்த ஏற்பாடுசிறிது நேரத்தில் செல்வந்தர் குடும்பம் + புது வரவுடன் கோயிலில் மிகுந்த பக்தியுடன் பட்டர் சொல்வதை இம்மி பிசகாமல் செய்தனர்.. அர்ச்சனை முடிந்து பிரசாதம் [வடைகள் தான்வழங்கினர்  .  ரெ  திடீர் குழப்பத்தில் மதியம் முழுவதும் கவலை உற்று , வேலைக்கு ஏதாவது இடைஞ்சல் வந்து விடுமோ என்று ஆஞ்சநேயனை வேண்டிக்கொண்டான்அந்த நன்றிக்காக வந்த கஸ்தூரி ரெங்கனுக்கும் சுப்ரமணிக்கும் ஆஞ்சநேயர் தனது ஆசீர்வாதமாக 4, 4 வடைகளை வழங்கி  ரெ நன்றிப்பெருக்கில் ஆஞ்சநேயா என்று கண்ணீர் உகுத்தான்,. சார் அழாதீங்க சார் எந்த நிலையிலும் ஆஞ்சநேயர் நம்மள காப்பாத்துவார் சார் . வாங்க சீக்கிரம் போகலாம் ஒரு வேளை பஞ்சாபகேசன் சார் வந்தாலும் வருவார் என்றான் சுப்பிரமணி.    இருவரும் கோயிலை விட்டு வெளியே  வந்த அதே நொடியில் பஞ்சகேசன் குடும்பத்தினர் பூஜை பொருட்களுடன் வந்துகொண்டிருந்தனர். .

தொடரும்

அன்பன் ராமன்




                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               


No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...