Monday, August 14, 2023

3 ANOTHER TALENT

 3 ANOTHER TALENT

3 மற்றுமோர் திறமையாளன்

நீலகண்ட ஐயர் அவர்களை நினைவிருக்கிறதா ? அவரை எப்படி மறக்க முடியும் என்கிறீர்களா? அதானே--அவரை மறந்தாலும் அவர் விற்பனை செய்யும் ‘விஞ்ஞான முறை கீரை வடை 100 கணக்கான ரசிகர்களை தன் பால் ஈர்த்திருக்கிறதல்லவா ? அவர் அளவுக்கு இல்லாவிடினும் --மாறுபட்ட சிந்தனை மற்றும் சுறுசுறுப்பில் [தெரிந்தோ/ தெரியாமலோ] நீலகண்ட ஐயரைப்போலவே  வளர்ந்து வரும் வெங்கடேசன் தான்  இன்றைய சப்ஜெக்ட் .

இதுவரை 'அவன்' குறித்த யாவும் ஒருமையில் இருப்பதிலிருந்தே வெங்கடேசன் ஒரு சிறுவன் என கணித்திருப்பீர்களே  நீங்கள் தான் ‘யமகாதகர்கள் ஆயிற்றே .ஆம் சிறுவனே தான் -சராசரி தமிழ்நாட்டு lower middle class வகை குடிமகன். ஆம் இவனது தந்தை வாடகை tricycle ஒட்டி பிழைப்பவன் . சராசரி தமிழ்நாட்டு பிரஜை ஆயிற்றே குடிக்காமல் இருக்கமுடியுமா? இவன் குடிப்பதனால் இவன் மகன் வெங்கடேசன் குடி "மகன்" ஆகிறான்.. இப்போது தெரிகிறதா அவனது குடிமகன் status . கொஞ்ச காலமாகவே நம்ம ஊர்களில் பலரின் status மற்றும் STATUS QUO இதுதானே. சரி அவன் குடித்தால் நமக்கென்ன என்பதைத்தாண்டி நாம் என்ன செய்யமுடியும் என்று நம்மால் கடந்து போய் விட முடியும் . ஆனால் வெங்கடேசன்? அவன் தான் SMART வகை சிறுவன் என்று தெளிவுபடுத்தியுள்ளேன் அல்லவா? அவன் தாயின் மீதும் , தங்கை மீதும் அளவற்ற பாசம் கொண்டவன் அதே போல் தந்தை மீது கோபம் கொள்பவன் . அப்பா குடிக்காதீங்கப்பா நல்லா சோறு , காய் என்று சாப்பிட்டு தூங்கினால் உடம்புக்கு நல்லது --குடி உடம்பை கெடுக்கும் என்று புலம்புவான் .எந்த குடிகாரன் பிறர் பேச்சைக்கேட்பான் ? வெங்கடேசனின் தந்தை கோபாலு மட்டும் விதிவிலக்கா என்ன.?

குடிகார தகப்பன்மார் வீட்டில் தாயும் குழந்தைகளும் பாசத்தின் இலக்கணமாகவே வாழ்வது ஏழ்மை தரும் கொடை என்பது மாறாத யதார்த்தம். படிப்பிலும் நாட்டம் உள்ளவன் வெங்கடேசன்;

வகுப்பில் மிக கவனமாகக் கற்பான் ..எந்த கேள்விக்கும் விடை சொல்வான். அவன் தலை எழுத்து இப்படி ஒரு தகப்பன் மற்றும் பொறுமையின் வடிவான தாய் , சிறிய குருவி போல் தங்கை. .இந்தக்கூட்டுக்குள் பாசம் இல்லாமல் வளராது குழந்தைகள்.   இந்தப்பின்னணியில் வெங்கடேசனைப்புரிந்துகொண்டால் பல உண்மைகளை சீர் தூக்கிப்பார்க்க இயலும்.

அவன் ஒரு நிலைப்பாடு எடுத்தான் இனி இந்த அப்பாவிடம் இருந்து விலகி விடைபெற்றால் தான் ஏனையோர் அமைதியாக வாழ முடியும்  குடித்துவிட்டு மிச்சம் கொண்டு வரும் 15-20/- ரூபாய்க்கு ஊறுகாய் வாங்கி தின்று 4 பேர் உயிர் வாழ முடியுமா ?. தீவிரமாக யோசித்தான்.. சயின்ஸ் வாத்தியார் ரகுபதியிடம் தனது நிலை மற்றும் தகப்பனார் குறித்து பூரா விவரங்களையும் சொல்லி அழுதான். அவர் ஒரு        De-addiction சென்டர் விலாசம், அதிகாரி, போன் நம்பர் எல்லாம் கொடுத்து அடுத்த ஞாயிறு அன்று அவனையும்  , தாயையும் அவரே அந்த மையத்துக்கு அழைத்து சென்றார். அம்மையத்தில் இருந்த பொறுப்பு நர்ஸ் நித்யா இரு மாத்திரைகளை தந்து தாயிடம் சொன்னாள் --. ஒரு மாத்திரையை காலை உணவில் கொடுத்து விடுங்கள் .அதன் பின்னர் அவரால் அதிகம் குடிக்க முடியாது . இரண்டாம் மாத்திரையை மறுநாள் காலை அதே போல் உணவில் கலந்து கொடுத்தால் பின்னர் மதுவின் வாசனையை க்கூட அவரால் சகித்துக்கொள்ள முடியாது. அதனால் குடிக்க முடியாமல் சோர்ந்து கிடப்பார். இங்கே அழைத்து வந்து மேலும் சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிடலாம் என்றார் நித்யா .

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...