Sunday, August 13, 2023

SCIENCE – V A C C I N E -3

 SCIENCE – V A C C I N E -3

அறிவியல்வாக்ஸின் -3

எனது முந்தைய பதிவில் B -LYMPHOCYTES, antibody களை விரைந்து உருவாக்கும் நினைவாற்றல் கொண்டவை எனவே memory செல்கள் என்று அழைக்கப்படுகின்றன என தெரிவித்திருந்தேன்.

இதன்  மேல் விளக்கமாக பேராசிரியர் Dr .கே.வெங்கட்ராமன்  சில தகவல்களை அளித்துள்ளார். B வகை மட்டுமல்லாது, [T cells exposed to antigens]  antigen களை எதிர்கொண்ட  T வகை செல்களும்  antibody களை  உருவாக்கும் திறன் கொண்டவை . எனவே நோய் எதிர்ப்பு என்பது இருவகையில் தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது அவை முறையே B செல்-mediated  மற்றும் T செல் –mediated  immune ரெஸ்பான்ஸ் [ B cell வழி உருவாகும் / T செல் வழி உருவாகும் நோய் எதிர்ப்பு ] என்று அறியப்படுகின்றன என்று விளக்கியுள்ளார். அன்பருக்கு அனைவர் சார்பிலும் நன்றி.

தொடர்ந்து அவரின் பங்களிப்பு கிடைக்குமானால் மேலும் நமது அறிதல் வலுப்படும் .மீண்டும் ஒரு முறை Dr . கே..வி  அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறேன் ..

இந்த அடிப்படைத்தகவல் களுடன் வாக்ஸின் தயாரிப்பு குறித்த மேலும் தகவல்களை பார்ப்போம் .

வாக்ஸின் தயாரிப்புக்கூடங்கள் உலகத்தரத்தில் அமைந்த பாதுகாப்பு மற்றும் தூய்மை நிறைந்த கலன்கள் , பணியாளர்கள் தானியங்கி கருவிகள், மிகத்துல்லியமாக அளவிடும் கருவிகள் போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன், தொடர்ந்து கண்காணிக்கும் உயிரின ஆராய்ச்சி பகுதிகள் விவாத அரங்குகள் மற்றும் Sterile area எனப்படும் நிரந்தர நுழைவுத்தடை கொண்ட பல் அடுக்கு பாதுகாப்பு அரண்களுடன் அமைக்கப்படுவன . வெளி மனிதர்களுக்கு  பார்வை அரங்குகள் பாக்டரியிலிருந்து வெகு தொலைவில் அமைத்த்திருப்பர் . இதனால் தூய்மைப்பராமரிப்புக்கென பெரும் செலவு ஏற்படும், எனவே தயாரிப்பு செலவு மிக அதிகம் அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது / கூடாது.      உயிர் காக்கும் வாக்ஸின் தயாரிப்பில் பல்வேறு உத்திகள் [STRATEGIES ] கையாளப்படுகின்றன . சுருக்கமாக அவற்றை விளக்க முயலுவோம் .

2020 ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் [WHO ] சுமார் 200 வாக்ஸின்  தயாரிப்பு முயற்சிகள் உலகெங்கணும் நடந்து வருவதாக தெரிவித்திருந்தது. எனவே பல நிறுவனங்களும் , நிர்வாகங்களும் சோர்வுற்று செய்வதறியாமல் திகைத்தன . ஏனெனில் பொதுவாக வாக்ஸின் தயாரித்து பல சோதனைகளைக்கடந்து பயன்பாட்டுக்கு வர சுமார் 7 முதல் 10 ஆண்டுகள்  கால அவகாசம் ஆகும் என்று உலகே அறியும். சரியான மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்யாமல் 7 ஆண்டுகள் கொரோனா போன்ற நோயை எதிர்கொள்ள இயலாது. . மிகவும் இக்கட்டான தருணம் அது . அந்த சூழலில் இந்தியா இயங்கிய விதம் மகோன்னதமானது. ஏனெனில் நமது பொருளாதாரம், பொது சுகாதாரம்  மருத்துவக்கட்டமைப்புகள் , LITERACY என்னும் கல்வி நிலை அனைத்தையும் ஏளனப்பார்வை பார்த்தே வளர்ந்து விட்ட நாடுகள் உண்மையில் வளரவில்லை என்பதை கொரோனா வைரஸ் ஐயந்திரிபற பட்டவர்த்தனமாக்கியது. ஆம் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த கூட்டங்கள் அமெரிக்கா /ஐரோப்பா / அதிலும் பிரிட்டன் , இத்தாலி , ஜெர்மனி நாடுகளில் மிக மிக அதிகம். தேவையான அளவு சவப்பெட்டிகளை வடிவமைக்கக்கூட அவகாசமின்றி தோண்டப்பட்ட MASS GRAVE   என்னும் ஒட்டு மொத்தப்புதைகுழிகள் ஏராளம். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க இந்தியா தனது வாக்ஸின் வடிவமைப்பு செயல் பாடுகளை பன் மடங்கு உயர்த்தியது , லாக் டவுன் என்னும் விசேஷ பாதுகாப்பை மிகவும் அக்கறையுடன் பின்பற்றி உயிரிழப்புகளை வெகுவாக தவிர்த்து விட்டது. நமது பொது சூழல்கள் அடிப்படையில் பார்த்தால்  கொரோனா உயிரிழப்பு சொற்பமே .

நமது நாட்டிலும் கூட பலர் இன்னும் கூட இந்தியா வை குறை கூறுவதையும் , யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு , நமது கல்வித்திட்டங்களை கிண்டல் செய்வதும் தொடர்கிறது. இன்றைய கட்டுரைக்கு தேவை இல்லாத விலகல் எனினும் நமது மேன்மைகள் யாவை என்பதை பிறிதொரு கட்டத்தில் வாதிட நினைக்கிறன் . இப்போதைக்கு இந்த விலகலை மன்னித்தருள்வீர்..

வாக்ஸின் தயாரிப்பின் அடிப்படை , குறிப்பிட்ட நோய் தோன்ற காரணமாக இருக்கும் ஆன்டிஜென்களை  அடையாளம் கண்டு அதே வகை ஆன்டிஜென் அமைப்புள்ள நோய் தாக்கும் திறனற்ற ஆன்டிஜென்களை நமது உடலில் ஊசி வாயிலாக செலுத்தி , எதிர்ப்பு சக்தியை [பொருத்தமான ஆன்டிபாடிகளை] தோற்றுவிக்கும் [நோய் எதிர்க்கும்] திறனை மேம்படுத்தும் உத்தி எனப்புரிந்துகொள்ளலாம். ஆகவே நோய் கிருமியை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி , அக்கிருமியின் எந்த உடல் பகுதிகள் ஆன்டிஜென்களாக பயன் படுத்தலாம் என்று கண்டறிவர். அல்லது அல்லது உயிரினவகை  அமைப்பை செயல் இழக்க வைத்து [attenuated ] வைரஸ்/ பாக்டீரியா [எது காரணியோ] அதை வாக்ஸின்  தயாரிப்பில் பயன்படுத்துவர்.. அதன் நோய் தாக்கும்   திறனற்ற  புறஅமைப்பு ப்ரோடீன்கள் [shell proteins ] வாக்ஸினில் இடம் பெறும் ANTIGENகள்.  ஒரு வாக்ஸினில் உள்ள பொருட்கள் யாவை ?  ஏன் என அறிவோம்.

தொடரும் அன்பன் ராமன்

 

4 comments:

  1. An antigen is a protein which has to be processed and is to be converted into an epitope
    We generally use the term antigen but technically it refers to epitope.
    This antigen processing is carried out by Macrophages.Inside the macrophage the antigen is processed and the processed antigen (epitope) is presented outside the macrophage along with MHC Class 2 molecule .This epitope can be recognised by T-helper cells that secretes cytokine .
    This cytokine will attract B -cells.
    B cells in its turn recognise the epitope and produce antibodies
    But T cytotoxic cells that recognise viral antigen through macrophages (MHC class1 )react and more number of sensitised Tc cells are produced. These cells can deactivate the viruses entering the body without the help of B cells

    ReplyDelete
  2. Please enlighten
    1.The structure of a
    virus, the proteins and their function.
    2. The specific funtions of B Cells and T Cells.

    ReplyDelete
  3. your questions are noted .Pl wait for answers at a suitable stage . viral forms are varied ;their proteins form a shell that provides a'structure' to the virus. With in the shell occurs the viral nucleic acid which 'dictates' the host cell to make multi copies of viral genome and shell proteins to reconstitute them into virus. for other details please wait. K.Raman

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...