Tuesday, August 15, 2023

EDUCATION -3

 EDUCATION -3

கல்வி -3

கற்கும் முறை

முதலில் ஒன்றை தெளிவாக அறிவோம் . அதாவது , ஏதேனும் ஒன்று நம் பிடிக்குள் வரவேண்டுமாயின் நாம் அதை நோக்கி பயணிக்க வேண்டும் . மிகத்  தெளிவாக சொல்வதென்றால் ஒருவித நெருக்கம் ஏற்பட வேண்டும் , அதாவது நாம் யாரோ என்று விலகி நின்று "அந்த ஒன்றை" கைப்பற்ற இயலாது . அந்த ஒன்று "பாடமோ  விளையாட்டோ . சைக்கிளோ , பைக்கோ, இசைக்கருவியோ" -எதுவாயினும் "நெருக்கம் கொள்ளுதல்" என்பது முதல் படி  ஒரு புதிய பள்ளியிலோ கல்லூரியிலோ  சேர்ந்தால் நாம் ஒரு வித தயக்கத்துடனே தான் அங்குள்ள ஊழியர்/ அலுவலர்/ ஆசிரியர் அனைவரிடமும் தொடர்பு கொள்கிறோம் . தொடர்ந்து அதே மனிதர்களிடம் பழகப்பழக , ஒரு வித இயல்பான இணக்கம் ஏற்பட்டு நமது நெருக்கம் / தைரியம் அதிகம் ஆகி கிட்டத்தட்ட நமது வீடு போல் புகுந்து புறப்படுகிறோம்.  எனவே நெருக்கம் கொள்ளுதல் என்ற முயற்சிதான் மென்மேலும் அறிய முற்படவைக்கும்.

Familiarity என்பது பழக்கத்தின் வாயிலாக ஏற்படும் புரிதல் போன்றது . பழக்கம் /பழகுதல் சில அணுகுமுறைகளை [approach] எனும் செயல் வழிமுறைகளை  இயல்பாக கற்றுக்கொடுக்கும். தினம் தினம் ஒரு பொருளைப்பார்த்துக்கொண்டே இருந்தால் நம்மை அறியாமல் அப்பொருளின் தோற்றம் நம் மனதில் ஒரு வித ''புரிதலை"உண்டாக்கும் .உதாரணம் ஒரே வகையா 2 ஜோடி காலணி / 2 உணவு சாப்பிடும் தட்டுகள்  எதிலும் , இது தான் எனது  என்று குழப்பமில்லாமல் சொல்ல முடிகிறதல்லவா -அதுதான் அந்த புரிதல் என்பது . இதே நிலை  நாம் பயில வேண்டிய பாடங்களுக்கும் நமக்கும் ஏற்படுத்திக்கொள்ள முடியும் . சிரிக்காதீர்கள் .ஆம் இதில் கேள்வி கேட்பான் என்ற உங்கள் எண்ணம் தான் உங்கள் எதிரி. பரிட்சைக்கென்று எதையும் படிக்காதீர்கள்.

அது [பாடம் /பாடத்திட்டம்]  நான் தெரிந்து கொள்வதற்கே என்று நம்பிக்கை வைத்து படியுங்கள், நிச்சயம் அது உங்கள் வயப்படும்  இந்த மாதம் வரும் குமுதம் இதழ்களிலிருந்து TEST வைப்போம் என்று அறிவித்துவிட்டால் , நிச்சயம் குமுதம் என்ற அந்தப் பெயர்      வெறுப்பை க்கிளப்பும் . இது உண்மை

எனவே பரீட்சை என்பது நம்மை அறிந்துகொள்வதை விட நமது இயலாமையை வெளிச்சம் போட்டுவிடும் என்று அஞ்சுகிறார்கள். இந்த எண்ணம் வேரூன்றிப்போய், பாடம் புத்தகம் படிப்பு பரீட்சை என்ற "ப "சீரிஸ் நம்மை அச்சுறுத்தாவிடினும் ஒருவகையில்  நிம்மதியைக்குலைப்பதாக உணருகிறோம். . யோசித்துப்பாருங்கள் இந்த "ப" வரிசைப்பட்டியலில் உள்ள ஏதாவது ஒன்று ஹஹ் ஹஹ் ஹா வா உன்னை பரிட்சையில் கவனித்துக்கொள்கிறேன் என்று என்றாவது மிரட்டல் விடுத்து பார்த்திருக்கிறோமா ? இல்லை ;ஆனாலும் இந்த நிம்மதி இழப்பு ஏன் வருகிறது ஏன்றால் "COMPARISON " எனும் ஒப்புநோக்குதல் அவனைப்பார் , இவனைப்பார் உன்னையும் பார் என்று மதிப்பெண் அடிப்படையில்  நிந்திப்பதாக உணருகிறோம். சரி குழந்தைகளின் ஆர்வமற்ற போக்கிற்கு அடித்தளம் இடுவோர் பெற்றோரும் அவர்தம் சுற்றமும்என்பதை இங்கே குறிப்பிடாமல் கடந்து செல்ல இயலவில்லை. யாரும் யாரோடும் ஒப்பீடு செய்யப்படவேண்டிய நிலையோ அவசியமோ இல்லை ;ஏனெனில் உயிரினங்களில்  ஒவ்வொரு உறுப்பினர் /மெம்பெர் தனக்கென ப்ரத்யேகமாய் வழங்கப்பட்ட [அதாவது நீங்கள் வழங்கிய ]  "GENE" தொகுப்புடன் உங்கள் வீட்டில் குழந்தையாய் பிறந்து இப்போது கல்வி பயிலும் நிலையில் குழம்பிக்கொண்டு இருக்கிறார். கல்வி என்பது மகிழ்ச்சியுடன் செயல்பட வேண்டிய ஒரு கட்டம் . அதில் சஞ்சலம் இல்லாத அமைதியான அணுகு முறைகளை பின்பற்றவேண்டும்

நான் நீண்ட காலமாக பார்த்துவைத்திருக்கும் ஒரு உண்மை . பயில்வோரில் இருவகையினர் என்று வகைப்படுத்தலாம் . EARLY BLOOMERS மற்றும் LATE BLOOMERS .அதாவது பள்ளிநிலையில் மிகுந்த உற்சாகமும் துடிப்பும் வெளிப்படுத்தும்  EARLY BLOOMERS ;இன்னோர் வகை பின்னாளில் கல்லூரிக்கல்வியில் மிகுந்த திறனையும் KILLER INSTINCT என்னும் கொலை வெறியுடன் நாட்டம் செலுத்தி பன்னாட்டு பல்கலைக்கழங்களில் எளிதாக நுழையும் திறன் படைத்தோர். முதலில் பெரும் [HIGH] மதிப்பெண்களுடன் பள்ளியில் பரிமளித்த பலர் இப்போது   Habeas corpus எனும் ஆட்கொணர்வு மனு போட்டு தேட வேண்டிய நிலைக்கு போனது ஏன்.?

ஒரு சாதாரண நிலையில் இருந்து பீறிட்டு கிளம்பி மகோன்னத திறமையை வெளிப்படுத்தும் late bloomers உரிய நேரத்தில் பிரகாசிப்பவர்கள் என்பது அடியேனின் நீண்ட காலப் புரிதல். கீழ் நிலைகளில் மதிப்பெண்களை விட பல்வேறு விதமான வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் களமாக வடிவமைத்தல் குழந்தைகள் "சுமை" இன்றி மகிழ்வோடு பயில வழி வகுக்கும்.  இதற்கான வழி முறைகள் என்னென்ன? பெற்றோர் கவனம்  செலுத்தவேண்டியன யாவை?    சில உணவு முறைகள் , அணுகு முறைகள் என என் சிற்றறிவுக்கு எட்டிய கருத்துக்களை பகிரலாம் என்று நினைக்கிறன் .             மீண்டும் சந்திப்போம் 

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...