CINE MUSIC- III
திரை இசை –III
பாடல்
ஒலிப்பதிவு
பாடல் ஒலிப்பதிவு என்பது கிட்டத்தட்ட மகப்பேறு நிகர்த்த விறுவிறுப்பும் குழப்பங்களும் பின்னிப்பிணைந்த ஒரு கவனப்பிசகல் இல்லாத நுணுக்கமான டென்ஷன் மிகுந்த சூழல் . என்னுடைய ஒப்பீடு சிலருக்கு கோபத்தைக்கூட வரவழைக்கலாம் ;ஆனால் கள யதார்த்தம் இரண்டு நிகழ்வுகளிலும் ஒன்றை ஒன்று விஞ்சும் படபடப்பு மிக்க துடிப்பான தருணங்கள். ஒரு ஒப்பீடுக்காக சொல்வதானால் கவிஞன் தந்தை போன்றவன் -அந்த நேரத்தில் அருகில் இருக்கலாம் இல்லாது போகலாம் . இசை அமைப்பாளன் =தாய் , மகவை இறுதிவரை சுமப்பவன் ;உருவும் உயிரும் இசைஅமைப்பாளன் தந்தவை , ஆன்மா வை ஊட்டியவன் கவிஞன் .இந்த மகவை ஈன்றெடுக்க உடற் பயிற்சி போல் ஒத்திகைகள் . மகப்பே று மருத்துவன் = ஒலிப்பொறியாளர் [Sound Engineer ] அவரது உதவியாளர்கள் நர்ஸ் போன்றோர். ஒலிப்பதி வு க்கூடம் தெய்வீகமான அறை , கோயில் போல அமைதி .இவை அனைத்தையும் மனக்கண்ணில் நிறுத்துங்கள் ஆ அந்த நாளைய பாடல் பதிவு சம்பவங்கள் மனத்திரையில் ஓடும். இவை பழைய அணுகு முறைகள் , ஒரே ஒரு மைக் =ஆண் பெண் இருவரும் ஒரு கண்ணாடி அறையில் மாறி மாறி மைக்கில் பாட வருவதும் ஓசை இன்றி விலகுவதும் ரெக்கார்டிங் நேரங்களில் ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும் .
அடுத்த
கூடத்தில் வரிசை வரிசையாக இருக்கைகள்
.முன் வரிசையில் வயலின் இசைக்கும் ஜாம்பவான்கள்
-துல்யமான வாசிப்பு .அதே வரிசைக்கு முன்
கம்பிக்கருவிகள் கிட்டார் /மாண்டலின் , லீட்
கிடார் , ரிதம் கிடார் மற்றும்
ஓரத்தில்செல்லோ , ட்ரிபிள் காங்கோ, சில சமயம்
சிறிய ஸ்டூல் போன்ற இருக்கையில்
போங்கோ,/மிருதங்கம். பின் வரிசையில் க்ளாரினெட்
, சாக்ஸபோன் , trumpet , ஷெனாய் , தவில் [தேவைப்பட்டால்]. .இவை
அரைவட்ட அமைப்பில் இருக்கும் .க்ளாரினெட் , சாக்ஸபோன் , trumpet , ஷெனாய் , தவில் கலைஞர்கள் எழுந்து
நின்று தத்தம் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட
இசை த்துண்டுகளை [bits ] வாசிப்பார்கள். . அநேகமாக அந்தக்காலத்தில் இரண்டே
மைக்குகள் தான். பியானோ இடம்
பெரும் பாடல்களில் அது முன் வரிசையில்
மையம் கொள்ளும். விசேஷ கருவிகள் சிதார்
, வீணை , சரோட் ,சௌரங்கி [சிலர்
சாரங்கி என்பர்] இவை தனி
மேடையில் இருந்து அவ்வப்போது பிரத்யேக
மைக் முன் இயக்கப்படும்
. அனைவரும் காட்சி சாலை உயிரினங்களாக
கண்ணாடி அறைக்குள் இருக்க டெஸ்கில் என்ஜினீயர்
, இசை அமைப்பாளர் காதுகளில் ஹெட் போன் அணிந்து
இருப்பர் .பாடகர்கள்/ இசைக்கலைஞர்கள் பார்க்கும் வகையில் வெளியே உதவியாளர்கள்
தரும் சமிஞை யை எதிர்பார்த்து
தயார் நிலையில் கலைஞர்கள் காத்திருக்க , தலை அசைவில் எல்லாம்
தயார் என்று சமிஞைகள் பரிமாறப்பட்டு மீண்டும் இசை அமைப்பாளர் கண்ணால் ஒரு
சர்வே செய்தபின் மைக்கில் 1, 2, 3 என்ற குறியீடாக விரலைச்சொடுக்க சுநாதமாக ஒலி கிளம்பும்
-குரலாக வோ இசை ஆகவோ.,சரி எனில் தொடரும் இன்றேல் கட் என்று ஒலிப்பதிவு மைக்கை நிறுத்திவிட்டு
, இசை அமைப்பாளர் ஓடி ச்சென்று என்ன பிழை என்று சொல்லி காட்டி திருத்தம் சொல்ல மீண்டும்
ஒலிப்பதிவு தொடங்கும்.
யார் யார் எப்போது தனது பங்கை வழங்க வேண்டும் என்பதை உதவியாளர்கள் நன்றாக அறிவர் .ஒரு சிறு பிசிறோ,பிழையோ இல்லாமல் துல்லியமாக நிர்வகித்து பாடல் பதிவுக்கு மாபெரும் துணை புரிவர். அக்காலத்தில் புகழேந்தி [KVM ], கோவர்தனம் [MSV ] இருவரும் STAR RATING அங்கீகாரம் பெற்றவர்கள் இசை ஒலிப்பதிவில்
இவ்வாறு முழுப்பாடலும் "மாஸ்டர்" இல் பதிவு செய்யப்பட்டு ஸ்பூல் டேப் பில் மறுபதிவு செய்து தயாரிப்பாளருக்கு வழங்குவர் .அதை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு செய்து பாடல் காட்சிகள் படமாக்கப்படும் .இது ஒரு புறமிருக்க , 'மாஸ்டர்" இல் இருந்து படத்தின் பாடல்களை இசைத்தட்டு பதிவிடும் நிறுவனங்களுக்கு காபி கள் கொடுக்கப்பெறும் .இசை தட்டாக பிரதிகள் செய்து விற்பனை மற்றும் விளம்பரங்களுக்கு ரேடியோ நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். இசைத்தட்டாக பதிவிட ஒரு பாடல் 3 நிமிடம் 30 வினாடிகள் என்ற கால அளவிற்கு குறைக்கப்படும் .ஒரு சரணம் அல்லது இடை இசையில் ஆங்காங்கே வெட்டு விழும் . அதனால் தான் திரையில் வரும் பாடலில் சில பகுதிகள் இசைத்தட்டுப்பாடலில் இருப்பதில்லை. .ஒரு படத்தின் பாடல்களை 3 அல்லது 4 இசைத்தட்டுகளாக சைடு A மற்றும் சைடு B யில் பதிவிடும் போது மிக நல்ல மற்றும் சுமார் வகைப்பாடல் இரண்டும் A /B இல் வருமாறு பதிவிடுவார். அப்போதுதான் எல்லா இசைத்தட்டுகளையும் விற்பனை செய்ய முடியும். இன்றேல் சில இசைத்தட்டுகள் தங்கிவிடும் .
மேலும் வளரும்
அன்பன் ராமன்
Music director- Mother
ReplyDeleteLyricist- Soul
Sound engineer - Gynacologist
Helpers - Nurses
Comparison is good
Venkataraman