Wednesday, August 23, 2023

CINE DIRECTION/ DIRECTOR-4

 CINE DIRECTION/ DIRECTOR-4

திரை இயக்கம்/இயக்குனர் -4

சென்ற  பதிவில் இரண்டு தகவல்கள் [ஒன்று கெல்வின் வெப்பம்] 2 படப்பிடிப்புகளம் [area /விஸ்தீரணம் ] பற்றியது.

கெல்வின் அளவுகோலில் குறிப்பிடப்படும்  எண்ணிக்கை மிக துல்யமான மதிப்பீடு . இதைப்புரிந்துகொள்ள நாம் நன்கறிந்த VIBGYOR என்னும் ஒளியின் நிறக்கலவை பற்றி நினைவு கூர வேண்டும். . அதாவது R என்னும் சிவப்பு நிற ப்பகுதி குறைந்த கெல்வின் மதிப்பு [3400 -3600 K ]உடையது. அது படப்பிடிப்பு ஸ்டூடியோ வின் விளக்கொளி ஆகும் அதில் சிவப்பு ஒளிக்கற்றை தூக்கலாக இருக்கும் எனவே அதை சமன்படுத்தும் வகையில் INDOOR FILM நிறம் ஏற்கும் படி தயாரிக்கப்பட்டிருக்கும். அதாவது உள் அரங்குகளில் படப்பிடிப்பு செய்ய COLOUR FILM -T பயன்படுத்துவர் [T என்பது TUNGSTEN ஒளி யின் குறியீடு ]. வெளிப்புறப்படைப்பிற்கான பிலிம் 5600 -6000 K =COLOUR FILM -D பயன்படுத்துவர் [D  என்பது DAY LIGHT இன் குறியீடு] அதாவது இந்த ஒளியில் நீல வண்ணம் சற்று தூக்கலாக இருக்கும் அதை சமன் செய்யும் வகையில் FILM தயாரிக்கப்பட்டிருக்கும் . எனவே உட்புறக்காட்சிகள் ஒருவகை பிலிமிலும் [T], வெளிப்புறக்காட்சிகள் வேறு வகை [ D ]. பிலிமிலும் படம் பிடிக்கப்படும். தவறான ஒளியும் பிலிம் இணைப்பும் காட்சிகளை வீணடித்து  பார்க்கவொண்ணாத கோரமாக ஆக்கிவிடும் . அப்படி ஒரு வேளை indoor பிலிமில் வெளிப்புறக்காட்சி பதிவிட நேர்ந்தால் மற்றும் outdoor பிலிமில் ஸ்டூடியோ காட்சி படம் பிடிக்கவேண்டுமெனில் நினைத்துப்பார்க்கவே பதற்றம் தோன்றும் .

தவறான ஒளி -பிலிம் காம்பினேஷன் சர்க்கரைப்பொங்கலில் பூண்டு போல விளைவைத்தான் தரும். சரியான ஒளிப்பதிவாளர் தயவு தாட்சண்யமின்றி அவ்வகை சமரசத்திற்கு இணங்க மாட்டார் வேலையைத்துறக்கவும் தயங்க மாட்டார் இல்லையேல் தீராப்பழியை  சுமக்க நேரிடும் அவரது மார்க்கெட்டே சரிந்து விடும். அனுபவம் இல்லாத எவராவது  இதுபோன்ற விஷப்பரீட்சையில் இறங்கினால் தான்  உண்டு அதன் பின்னர் பரிட்சார்த்தக்கு கூட அவருக்கு வேலை கிடைக்காது அதனால் காட்சிகளின் திட்டமிடலுக்கு ஏற்ப என்னென்ன வகை பிலிம் எவ்வளவு தேவைப்படும் என்று ஒளிப்பதிவாளர் கணக்கிட்டுச்சொல்வார் அதன் படி தேவையான பிலிம் இறக்குமதிக்கு ஏற்பாடு செய்வர்.

விஸ்தீரணக்கணக்கு என்பது ஒவ்வொரு பாடல் காட்சியும் எவ்வளவு நிலப்பரப்பில் பதிவிட வேண்டும் என்று தெரிந்தால் தேவையான லென்ஸ் வகைகள் , உதவியாளர்கள் , REFLECTOR SHEET தேவையான எண்ணிக்கையில் எடுத்துச்செல்ல முடியும் . வெளி ஊரில் நின்று கொண்டு இன்னும் 2 REFLECTOR என்று கேட்டால் ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆத்திரம் தாங்காமல் அறைந்துவிடுவார் .வெளியூரில் பலர் முன்னிலையில் யார் அறை வாங்குவது ? எனவே தேவைக்கு மேல் உபகரணங்களை எடுத்துச்செல்வார் ஒளிப்பதிவாளர் I . ஆனால் வெளியில் சொல்லாமல் இயங்குவார் ஒளிப்பதிவாளர்-I

இதற்கு அடுத்த பணியாக லொகேஷன் என்னும் இடம் தேர்வு செய்தல் . அந்தக்குழுவில் ப்ரொடக்ஷன் மேனேஜர் இருப்பார்+ ஒளிப்பதிவாளர் I அல்லது ஒளிப்பதிவாளர்-II + இயக்குனர் சில குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று காட்சிகளின் பொருத்தம் , தங்கும் / போக்கு வரத்து வசதி , வேன் ,லாரி தேவைப்பட்டால் கூட்டம் கூட்ட மக்கள் எல்லாம் இருக்கின்றனவா என்று அறிந்து வருவர். புதுமுக நடிக, நடிகையர் எனில் சென்னையில் ஒத்திகை பயிற்சி எல்லாம் முடித்துக்கொண்டுசென்று வெளியூரில்   இயன்ற வரை பாடல் காட்சிகளை படமாக்கிக்கொண்டு வருவர். இல்லையேல் வெளியூரில் நீண்ட நாள் தங்க நேரிடும் , எதிர்பாராத செலவினங்கள் தலை தூக்கும் அதை நினைத்துப்பார்த்தால் போதுமடா சாமி என்று தெறித்து ஓடி விடுவர் . பெரிய நடிகர்கள் எனில் தேவையான தேதிகளில் கால் ஷீட் என்னும் செயல் ஒப்பந்த தேதிகளை வாங்கிவைத்துக்கொண்டு படப்பிடிப்பிடிப்பு க்கு தேவையான பிற ஏற்பாடுகளை கவனிப்பர்.

தேர்ந்த இயக்குனர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் , முகத்தை எப்படி திருப்பவேண்டும் , எத்துணை வினாடிகள் கண்ணை அகலவிரித்துப்பார்க்க வேண்டும் உள்ளிட்ட நுணுக்கங்களை விளக்கி படப்பிடிப்பில் மிக்க கவனம் செலுத்துவார்கள் . தேர்ந்த கலைஞர்களிடம் அதிகம் சொல்ல மாட்டார்கள் என்ன வேண்டும் என்பதை தெளிவாக்கி விட்டு உதவி இயக்குனர்களை விரைவாக வசன ஒத்திகை பார்த்து குறிப்பிட்ட கலைஞரை [ஆணோ /பெண்ணோ] அழைத்துவரச்சொல்வர் . இதற்கிடையில் காமெரா தயார் நிலையில் இருக்க,  வ்யூ பைண்டரில் [view finder ] காம்போசிஷன் என்னும் frame அமைப்பை ப்பார்த்து ஓகே சொன்னதும் கிளாப் அடிக்கப்பட்டு கமெரா இயங்கும். பின்னரே நடிப்பு துவங்கும். indoor படப்பதிவு என்றால் நடந்து கொண்டே நடிப்பார்கள் குறிப்பிட்ட எல்லை வந்ததும் லைட் 4 அண்ட் 5 ஆன் , டூ ஆப் என்று வாக் கி டாக்கி யில் ஒளிப்பதிவாளர்  அறிவிக்க லைட் மேன்  அந்தரத்தில்  ஒரு கட்டையில் அமர்ந்து கொண்டு லைட் 4 அண்ட் 5 லிருந்து ஒளிவெள்ளம் பாய்ச்ச, போகஸ் மாறாமல் காமெரா நகர்ந்து உயிரோட்டமாக காட்சிகளை பதிவு செய்து கொண்டே வரும். . அந்தகாலத்தில் ஷூட்டிங் நடை பெரும் போது வசனமும் பதிவாகும் அதற்கென ஒரு மைக் ஒருநீண்ட  குச்சியின் முனையில் பிணைக்கப்பட்டு காமெராவுடனேயே பயணிக்கும். அதனால் நடிக /நடிகையரின் குரலும் உணர்ச்சி பாவமும் வெகு இயல்பாக தோன்றுவதைக்காணலாம்.

பின்னாளில் டப்பிங் வந்து விட்டது நடிக்கும்போது என்ன உளறி இருந்தாலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் களின் உணர்ச்சி மிக்க பேச்சினால் நொண்டி முடம் போன்ற நடிகர்கள் வெகுவாக சோபிக்கின்றனர் . இந்த முடங்களுக்கு கோடிகளில் சம்பளம் - பால் அபிஷேகம், காவடி, அலகு குத்துதல் , தலீவா என்று மயானவகைப்புலம்பல் என்று திமிலோகப்படுகிறது இதுதான் ஒரு விளக்கவொண்ணா அவலம். இவ்வகை நடிகர்களின் ஆதிக்க மனோபாவத்திற்கு சில இயக்குனர்களும் அடிமைப்பட்டு கிடப்பது தான் திரைத்துறையின் அதலபாதாள வீழ்ச்சிக்கு கரணம். திரைத்துறையின் சோகமே யாதெனில் ஊரான் காசில் உல்லாசம் காண்பதெனும் கலாச்சாரம். பழைய தயாரிப்பாளர்கள் / இயக்குனர்கள் கண்டிப்பானவர்கள் ஊதாரிகளின் ஆதிக்கம் செல்லுபடி ஆகாமல் இருந்தது . தொழிலின் செயல் நுணுக்கங்கள் தெரியாத நபர்கள் தயாரிப்பு இயக்கம் என்று கிளம்பியதன் விளைவுகள் காட்டும் பலன்களே இவை.

இந்த கதை நடிப்பு இவற்றில் உள்ள ஊனங்களை மறைக்க ஆம்ஸ்டர்டம் பள்ளத்தாக்கில் படப்பிடிப்பு , ஸ்விட்ஸ்ர்லாந்து ஏரியில் நீந்திக்கொண்டே காதல் , நாயகனும் நாயகியும் ஆளுக்கொரு ஹெலிகாப்டர் பாதத்தில் தொங்கிக்கொண்டு ஜிஞ்சாரே ஜிஞ்சாரே கீழ விழுந்தா செத்தாரே என்று சைனாக்காரர்கள் போல மூக்கினாலும் இன்ன  பிற வழிகளினாலும் பாடி ஆர்ப்பரிக்க ஆஹா ஓஹோ ஸ்விட்ஸ்ர்லாந்து மலை முகட்டி ல் தொங்குகிறாரே நடிகை பூஜ்யஸ்ரீ என்றும்  , இயக்குனர் எங்கிருந்து தொங்கினாரோ என்றும்  பாராட்டி விமரிசனம் வேறு  . இப்போது தயாரிப்பாளர் தொங்குவதென்னவோ நிஜம். .      இது விலகல் போல தோன்றினாலும் எங்கிருந்து கோலோச்சிய தமிழ்த்திரை இன்று யதார்த்தம் என்ற பெயரில் பாதாளத்தில் வீழ்ந்து  ததிங்கிணத்தோம் போடுவதை பேசாமல் கடக்க இயலவில்லை

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...