TEACHERS‘’ ROLE- 4
ஆசிரியப்பணி -4
ஆசிரியன் சொல்லாட் சிக்கு உறுதுணையாக இயங்க வேண்டியது அவர் தம் எழுத்து தெளிவு . எந்த எழுத்தும் பிறர் உதவியின்றி தெளிவாக படிக்கும் வகையில் கரும்பலகையில் பளிச்சென இருத்தல் வேண்டும் . பல ஆசிரியர்கள் சுவற்றுப்பக்கம் திரும்பவே தயங்குகிறார்கள் . தெள்ளத்தெளிவாக இருக்கும் எழுத்துகள் படிப்பவர்க்கு ஊக்கம் தரும் , அதுபோல் முயற்சிக்க அது ஒரு தூண்டுகோலாக அமையும் . மேலும் சொற்களின்
spelling என்ற அமைப்பு எழுத எழுத நம் வயப்படும்.
ஒரு உதாரணம்: திடீரென்று தோன்றும் ஸ்பெல்லிங் குறித்த தய க்கங்களுக்கு இவ்வாறு செய்து பாருங்கள் .கண்ணை மூடிக்கொண்டு கையை எழுத விடுங்கள் 100க்கு 95 என்ற அளவில் கை சரியாக எழுதிவிடும் . அது பழக்கத்தினால் எழுதும் , குழப்பத்தில் சிக்காது . நாம் 'A 'யா ' 'E 'யா என்று மனதால் சிந்திக்க குழப்பம் தலை தூக்கும் சிந்திக்காமல் செயல் படும் கை பழக்கத்தின் வாயிலாக சரியாகவே எழுதுகிறது . எனவே தான் முன்னாளில் எதையும் எழுதிப்பார் என்று வலியுறுத்துவர். தொடர்ந்து எழுத எழுத
எழுத் துகள் தெளிவும் பொலிவும் பெரும்..அந்த பழக்கத்தை தொலைத்துவிட்டவர்களால் எந்த வேலையையும் செய்வது மலைப்பாக த் தோன்றும்
.
சிறு வயதில் எழுதும் பயிற்சி முறையாக இல்லாமல் மேல் வகுப்புவரை வந்த பின்னர் எழுத்து , எழுதும் முறை இரண்டும் சரியில்லை . உதாரணமாக 7 எழுது என்றால் முதலில் '/' போட்டு பின்னர் ' -- ' கோடு போடுகிறார்கள் .இதே போல் தமிழ் , ஆங்கிலம் எதிலும் எழுதுவதில் கூட முறையான பயிற்சி இன்மை பளிச்சிடுகிறது. ஆகவே தான் ஆசிரியர்கள் தெளிவாக பெரிய எழுத்தில் கரும்பலகையில் எழுதினால் சிலராவது எழுத பயில்வார்கள்.. 8 ம் வகுப்பில் பயிலும் மாணவர்களில்
சுமார் 37% மாணவர்களுக்கு அச்சிட்ட புத்தகங்களை படிப்பதில் குழப்பமும் தடுமாற்றமும் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
இதனால் தான் "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் " என்கின்றனர். எனவே ஆசிரியப்பணியில் இன்னது தான் என்றில்லை ஏதேதோ கற்பிக்க வேண்டியுள்ளது , எனவே எதையும் கற்பிக்கும் சுமை நமக்கெதற்கு என்று துறவறம் பூண்டநிலையில் ஆசிரியர்கள் இருக்கின்றனர் .
தெளிவாக உரத்தகுரலும், பளிச்சிடும் எழுத்தும் எண்களும் ஆசிரியர்கள் வழங்கி வரும் பரம்பரை க்கொடை அன்றோ? ஏழ்மையில் உழன்ற அந்நாள் ஆசிரியர் கல்வியில் கொடை வள்ளல் கள் எனில் அப்பெருமை எந்த செல்வந்தருக்கும் ஒரு போதும் கிடைக்காது என்ற மகத்தான பெருமையை கை விடலாமா ?
ஆசிரியர் தன்னை மறந்து பிறரைக்கடைத்தேற்றும் கர்மயோகி எனவே கல்வியின் மாட்சிமை ஆசிரியரின் செயலில் இருப்பதை உணர்ந்து செயல்பட்டாலன்றி கல்வியும் சமுதாயமும் பெருமையுடன் தழைக்காது .
ஏனையோரை விட ஆசிரியருக்கு இரு வகை அறிவு கைவர வேண்டும்
1 . கற்றறிவு 2 பட்டறிவு [அனுபவத்தில் விளைந்த அறிவு]. ஆசிரியரின் பட்டறிவு உடனேயே இளம் தலை முறையினருக்கு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் சூழலும் ஆசிரியன்றி வேறு எவர்க்கு வாய்க்கும்?
மாணவர்கள் எழுதி மதிப்பீடு செய்ய வேண்டிய ஆசிரியர், மாணவர்கள்
எழுதியிருப்பதை ஆழ்ந்து சீர் தூக்கினால் தெரியவரும் --ஐயோ இவர்கள் நமது மாணவர்களா என்ற திகிலூட்டும் சஞ்சலம் .
தத் தம் வீடு களின் புற ச்சுவ ர்க ளில்
' நே
ட்டிஸ் ஓ ட்டதே
, ஆச் சு பதி க்க தே '
என் ற அறிவிப்பு டன் "மீறினல் பேலிஸ் வசம் ஒப்பு டை க்க படும் " என்ற எச்சரிக்கையுடன் எழுதி ஆசிரியரின் பெருமைதனை பறைசாற்றுகின்றனரே
அந்த கறை தனைக்களையவேண்டுமல்லவா ? அதற்காகவேனும்
முனைந்து செயல் பட வேண்டிய கட்டத்திற்கும்
, கட்டாயத்திற்கும் ஆசிரியப்பணி வந்துள்ளதை அனைவரும் அறிவோம். தமிழுக்கே இந்த நிலை
பிற பாடங்கள் /மொழிகள் என்ன பாடு படும்?
இவ்வனைத்திற்கும் ஆதாரமாக . இருப்பது தெளிவில்லாத புரிதலும்,
ஆணித்தரமான கற்பிக்கும் உத்திகளை பெரும்பாலான ஆசிரியர்கள் புறக்கணிப்பதும் தான் என்பது
தெளிவாக புலனாகிறது. தெளிவான புரிதல் என்பது
ஒரு கருத்தை பல முறை பல கோணங்களில் சிந்தித்து நமது புரிதலை நன்றாக
வளப்படுத்திக்கொள்ள உதவும். ஒரு கையில் உணவும் மறு கையில் புத்தகமும் என ஓரிரு
முறை படித்துவிட்டு வகுப்புக்கு வந்து கற்பிக்க எத்தனிப்பது பலன் தராது மாறாக இரு சாராருக்கும்
அசதியை ஏற்படுத்தும் . அசத்த வேண்டிய கம்பீரமான ஆசிரியர், தானே ஆங் ஆங் என்று கொட்டாவி விட்டுக்கொண்டு வகுப்பு
நடத்தினால் [அலை பாயுதே கண்ணா என் மனம்] பாடல் வரியில் இருக்கும் நிலையை [ கண்கள் இரண்டும்
ஒரு விதமாய் சொருகுதே ] மிக எளிதில் மாணவர்கள் வகுப்பில் அரங்கேற்றுவர். எனவே
திறம்பட பணியாற்ற சுறுசுறுப்பு கண்டிப்பாக வெளிப்படவேண்டும் . தாடி மீசை வைத்துக்கொள்வது
தனி மனித உரிமை . அதில் நான் குறுக்கிட வரவில்லை. . எனினும் அவற்றை ஒரு கௌரவமான அளவில்
திருத்தி சீராக அமைத்துக்கொள்ளுதல் ஒரு மரியாதையை உண்டாக்கும். மாறாக ஏதோ பண்டாரம்
போல் சீர்படுத்தாத சிகையும் முக மண்டலமும்,ஆசிரியன் என்ற கம்பீரத்தை நிலைகுலையச்செய்யும்.
எனவே புறத்தோற்றத்திலும் பண்பு காத்தல் ஆசிரியரின் சமுதாய மதிப்பீட்டை வெகுவாக உயர்த்தும்.
எப்படி ஒரு நோய் தீர்க்கும் மருத்துவன் சுறுசுறுப்பாக , தூய்மையான ஆடை பூண்டு இருப்பது
எதிர்பார்க்கப்படுகிறதோ அது போன்றே ஆசிரியர் தனது புற[தோற்றம்] அக [மனம் / சிந்தனை] இரண்டையும்
சீராக வைத்துக்கொண்டால் ஏற்கத்தக்க ஒரு அங்கீகாரத்தை எளிதில் பெற முடியும்
.
மேலும் வளரும்
அன்பன் ராமன்
எழுத்தறிவித்தவன் இறைவன்தான்
ReplyDeleteகிறுக்கல் தான் எங்கள் trademark. யாருக்கும்( pharmacist தவிர) புரியாது. ஏன் எங்களுக்கே கூடசில சமயம் புரியாது. 😀😀.
ReplyDeleteA and E confusion solution is useful.
👌👍
Dr .கே .வி சார் எழுத்தறிவித்தால் தான் இறைவன்
ReplyDeleteDr RR சார் நல்லா சமாளிக் கிறீங்க .பார்மசிஸ்ட் என்னடான்னா டாக்டர் பேரைப்படிச்சுட்டு , மாத்திரை இதுவாத்தான் இருக்கும் கிறாரே