CINE MUSIC- 4
திரை இசை -4
இசை யின் பரிமாணங்கள்
திரை
இசையைப்பொறுத்தவரை இலக்கண மரபுகள் என்ற
எந்த எல்லைகளும் இல்லாத ஒரு வடிவம்
அதன் தனிச்சிறப்பு. இப்படித்தான் திரை இசை இயங்கி
வந்ததா எனில் -இல்லை என்பதே
உண்மை. அப்படி என்றால் ஏதோ
ஒரு காலம் வரை மரபு
வழியில் பயணித்து பின்னர் மரபின்றி இயங்குவதே
மரபு என்ற நிலைக்கு நகர்ந்ததே
திரை இசை. ஆரம்பத்தில் முற்றிலும் ராகங்களை
பின்பற்றியே பாடல்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் ராகங்களின் சாயல்
கொண்டு / ராகங்கள் கொண்டும் பாடல்கள் வரத்துவங்கின. அந்த நிலையில் ஏகப்பட்ட
இசை அமைப்பாளர்கள் உலவிய களம் /காலம்
-தமிழ் திரையில் 1952 லிருந்து. மந்தைமந்தையாக இசை அமைப்பாளர்களும் இசைக்குழுக்களும்
கோடம்பாக்கத்தில் கோலோச்சின . அவர்களில் பலர் ஆந்திர மாநிலத்தவர்
; அப்போது தென்னிந்திய மொழிப்படங்கள் அனைத்துமே சென்னையில் தான் தயாராயின . எனவே
இசை, நடனம் , ஒளிப்பதிவு, இயக்கம்
எதிலும் எந்த மாநிலத்தவரும் பங்குபெற்று
வந்தனர். அதனால் இசையிலும் கூட
பொதுக்கலாச்சார அடிப்படையில் கர்னாடக இசையின் கூறுகள்,மேலோங்கி இருந்தன . தமிழகத்தினர் சிலரும் இசை அமைப்பாளர்கள்
பணியில் இயங்கி வந்தனர் ; அவர்களில்
முக்கிய மான வர்கள் ஜி
ராமநாதன் [பிச்சாண்டார்கோயில் ], கே வி மஹாதேவன்
[நாகர்கோயில்], ஸி ஆர் சுப்பராமன்
, சுப்பைய நாயுடு போன்றோர். அந்தக்காலகட்டத்தில்
தான் இசையில் புதுமை என்பதாக
கர்னாடக சாயலில்+ அதிலிருந்து விலகல்
கொண்ட நளினமான ஸ்வரங்களின் செயலிலும்
சக்கைபோடு போட்டவர்கள் ஜி ராமநாதன் மற்றும்
ஸி ஆர் சுப்பராமன் , இருவரும்;
மாற்றமில்லா ராக
பாவ ரசிகர்களுக்கு கே வி மஹாதேவன்
என்று தமிழகம் அடையாளப்படுத்தி வைத்திருந்தது
. ஆனால் ஒவ்வொருவரும் தனி ஸ்டைல் என்று
ஏற்படுத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் இசைப்புரட்சி செய்துவந்த ஸி
ஆர் சுப்பராமன் தனது 29ம் வயதில்
அகால மரணம் அடைந்தார் பின்னர்
அப்போது அவரின் உதவியாளர்களாக இருந்த
ராமமூர்த்தியும் , விஸ்வநாதனும் ஸி ஆர் சுப்பராமன்
அவர்களின் [ தேவதாஸ் , சண்டிராணி, மருமகள் ] படங்களை முடித்துக்கொடுத்து ஒரு
இடம் பிடித்தனர். இவர்கள் தான் பின்னாளில்
விஸ்வநாதன் -ராமமூர்த்தி என்ற இசை இரட்டையர்கள். இவ்விடத்தில்
ஜி ராமநாதன் அவர்களின் இசைத்தாக்கம் எளிதில் கடந்துபோகக்கூடியதல்ல. அதற்கு சான்றாக
-பாடல்கள் -ஏறாத மலை தனிலே
, சுந்தரி சௌந்தரி நிரந்தரியே, குரங்கிலிருந்து
பிறந்தவன் [தூக்கு தூக்கி] வசந்த முல்லை
போல, முல்லைமலர்மேலே , யாரடி நீ மோஹினி
, இன்பம் பொங்கும் வெண்ணிலா , காத்திருப்பான் கமலக்கண்ணன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அனைத்தும் கேட்பதற்கு ரம்யம் ததும்பும் பாடல்கள்.
இவை
அனைத்திலும் ராகங்கள் புதைந்து கிடந்தாலும் மெலடி என்னும் ஒலிநயம் தூக்கலாக இருப்பதையும்
இசைக்கருவிகள் மாறுபட்ட ஒலிக்கலவையாக தோன்றுவதும் ஜி ராமநாதனின் தனிச்சிறப்பு. அப்போதே
அவர் ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க துவங்கிருந்தார் என்பது அவர் காலத்தில் கிட்டத்தட்ட
புரட்சி என்றே சொல்லலாம்.
அதாவது தமிழ்திரையில் இசை வேறுகோலம் பூண த்தொடங்கியது 1954 வாக்கி ல்.ராஜா ராணி கதைகளிலே யே ஜி ராமநாதனின் சித்துவிளையாட்டு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இசைக்கருவிகள் .
ராகம் தழுவிய மற்றும் வழுவிய பாடும் முறைகள், அதற்கு முன் அதிகம் அறிந்திராத கருவிகளின் ஒலிகள் மற்றும் அவற்றின் ஒருங்கிணைப்பு என புதிய அவதாரம் தோன்றிட விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பங்களிப்பு அலாதியானது மட்டுமல்ல அபரிமிதமானதும் கூட. அதன் தாக்கம் ஆழமாக வேரூன்றி "மெல்லிசை" என்ற genre [ஜானர் ] தோன்றி 1963 ல் "மெல்லிசை மன்னர்கள் " என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும். அந்த சூழல் விசித்திரமானது முவேந்தர் கள் போல . 3 முன்னணி ஹீரோக்கள் நடிகர் திலகம் ,காதல் மன்னன், மற்றும் மக்கள் திலகம் என்ற பட்டங்களுடன் வந்த இரு கணேசன்கள் , ஒரு ராமச்சந்திரன் ஆகிய மூவர்.
இந்த மூவரின் கதாபாத்திரங்களுக்கென வேவ்வேறு அமைப்பில் அமைந்த பலபாடல்கள் குன்றாத இலக்கியச்சுவையும் அவற்றிற்கென தொடுக்கப்பட்ட இசைவீச்சுகளும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் உலவுவதை இன்றளவும் கேட்டு மகிழ்வோர், பிரமிப்போர் மற்றும் ஆராதிப்போர் உலகெங்கணும் உலவும் தமிழர்கள். அந்தக்காலத்தையும், களத்தையும் வெகு நேர்த்தியாக வசப்படுத்திக்கொண்ட மெல்லிசைமன்னர்கள் படத்துக்குப்படம் இசைதனில் வானவில்போல எண்ணற்ற பலவண்ணங்களைக்குழைத்து இசைரசிகர்களைக்கிறங்கடித்தனர். அந்தத்தலைமுறை இன்றளவும் மெல்லிசையின் அன்புப்பிடியிலிருந்து விலக வில்லை என்பதைவிட விலக விரும்பவில்லை என்பதே உண்மை.
அந்தவகை இசையின் வடிவத்திற்கு அடையாளம் காணப்படுபவர் திரு. எம் எஸ் விஸ்வநாதன் . அவர் தனித்து இயங்கியபோதும் மதி மயக்கும் எண்ணற்ற இசைவடிவங்களில் பாடல்களை அமைத்து அழியாப்புகழ் அடைந்துள்ளார். இந்த வகை இசைக்கூறுகளுக்கு அவரே முன்னோடி என்பதால் அவரது உழைப்பை மறுக்கவோ, மறைக்கவோ , மறக்கவோ இயலாது .
தொடரும்
அன்பன் ராமன்
CRS, MSV, KVM, SMS, என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
ReplyDeleteஒவ்வொருவரும் தனி பாணி.
கவிதைகள் எல்லாம் பாடலாக வந்த காலம் போய், இப்போது உரைநடையிலும் பாடல்கள். வந்து விட்டது.
வெங கட்ராமன்