Sunday, September 24, 2023

CLIMATE-2

 வானிலை -2

வானிலை அமைப்பு சூரிய ஒளி மற்றும் பிற கிரகங்கள் [பூமி உள்ளிட்ட] இடையே நிகழும் எனர்ஜி exchange எனும் ஆற்றல் பரிமாற்றத்தினால் தோன்றுவது. இதில் முக்கிய நிகழ்வு, வெப்ப பகிர்வு பூமத்திய பகுதிகளுக்கும், துருவங்களுக்கும் [equator and poles] இடையில் நடப்பது தான். அதாவது மையப்பகுதியான equator அதிக வெப்பமுற்று , தன்னை  சூழ்ந்துள்ள காற்றை சூடாக்கி ,அடர்த்தி குறைந்த காற்று மேல்நோக்கி எழும்பி செல்கிறது;இப்போது பூமியின் சுழற்சியில் காற்றும் சுழன்று குளிர்ந்த துருவப்பகுதிகளை அடைந்து மேகக்கூட்டங்கள் வானில் மிதப்பதைப்பார்க்கலாம்

கடல் நீர் உருண்டு புரண்டு 'வெப்பக்கடத்தி" யாக செயல் படுகிறது. இதனை thermohaline என அழைப்பர்.  கடற்பரப்பில் உள்ள நன்னீரும், வெப்பமும் உப்புநீரும் சுழன்று இடம்பெயருவதால் வெப்பம் கடத்தப்படுவதே thermohaline எனப்படுகிறது.

கடல் நீரில் வெப்ப சுழற்சி, வெப்பத்தை கடத்துவது [ஹீட் டிஸ்ட்ரிபியூஷன் ] வெப்ப பகிர்மானம் நிகழ்த்துவதற்கே. வெப்பம் இல்லாமல் எந்த இயக்கமும் இயற்கையில் நிகழ்வது இல்லை. இவை அநேகமாக சூரியனின் இயக்கத்துடன் தொடர்புடையன. அதே போன்ற வெப்ப பகிர்மானம் நிலப்பரப்பில் இருந்து நிகழும்போது வெப்பக்காற்று நீராவியை சுமந்து மேல்நோக்கி நகர்ந்து பூமியின் துருவத்தை அடைந்து மற்றும் இடை வழியிலேயே மேக வடிவம் கொண்டு மிதப்பதை காணலாம். இப்போது பூமியின் மையப்பகுதிகளில்பெருமளவில்  காற்று இல்லை, ஆனால் கட்டிடங்கள், மரம் செடி கொடிகள் , இயங்கும் ஊர்திகள் அனைத்தும் வெளிவிடும் வெப்பம் நம்மை சூழ்ந்து கொண்டு புழுக்கம் [stuffy by  humidity ] என்ற நிலை ஏற்படுகிறது. அதாவது சுற்றியுள்ள காற்று தன்னால் ஏற்கக்கூடிய அளவு நீரை முன்னரே எடுத்துக்கொண்டு விட்டதால் , நமது உடலில் இருந்து வெளியேறும் உடல் நீர் காற்றில் இணைய முடியாமல் நமது உடலின் மீது நீர்த் திவலைகளாக படிந்து வியர்வை தோன்று கிறது. நம் உடலில் இருந்து சில உப்புகளும் நீருடன் வெளியேற, வெயில் மிகுந்த summer காலங்களில் உடல் சோர்வு ஏற்படுகிறது. எனவே அவ்வப்போது சர்க்கரை/உப்பு இரண்டும் கலந்த பழச்சாறு வகைகளை அருந்துவது body சால்ட் balancing எனும் சம நிலைக்கு உதவும் .

பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வனைத்தையும் நிகழ்த்துவது static variables -latitude [பூமியில் ஒருபகுதியில் இருப்பிடம் எத்தனை டிகிரியில் உள்ளது], altitude [கடல் மட்டத்தில் இருந்து ஒரு இடம் இருக்கும் உயரம் ], நீர் -நில அளவு [land-water ratio], மலைகள் [mountain ranges] கடல் சூழ்ந்த அமைப்பு [coastal distribution]   எனும் நிரந்தர இயற்கை கட்டமைப்புகள் . இவையே ஒரு இடத்தின் வானிலை எனும் தட்ப வெப்ப பண்புகளை நிர்ணயிக்க வல்லன.

சரி, இப்போது புறவெளி என்னும் atmosphere குறித்த சில உண்மைகளை புரிந்து கொள்வோம் இந்த வான் வெளி என்பதை பூமி பரப்பில் இருந்து எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்ற அடிப்படையில் பெயர் மற்றும் அவற்றின் தன்மைகள் குறித்து விவரிக்கின்றார் வான்வெளி அறிவியலார்..

பூமி யின் வான் வெளி பல அடுக்குகள் வளையங்களாக அமைந்த பகுதிகளில் ஆனது .

TROPOSPHERE : [அடி வளி மண்டலம் =LOWER ATMOSPHERE ] பூமிக்கு அருகில் 0 -10 KM விஸ்தீரணம் உள்ள பகுதி. அதாவது பூமத்திய ரேகையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டரில், துருவப்பகுதிகளில் இருந்து சுமார் 18 KM வரை வியாபித்திருப்பது.. இப்பகுதியில் நீர் ஆவி வடிவில் /மேக உருவில் உலவி பூமியில் நிலவும் கிளைமேட் பண்புகளை நிர்ணயித்து, அவ்வப்போது மாறுதல்களையும் நிகழ்த்துகிறது, இப்பகுதியில் எப்போதும் சலனம் அதிகம் வெப்பமும் அழுத்தமும் மாறிக்கொண்டே இருந்து அன்றாட வானிலை [WEATHER] மாற்றங்களை தோற்றுவிக்கும். இப்பகுதியின் வெப்ப நிலை 1 கிலோமீட்டர் உயர 6 டிகிரி செல்சிஸ் என்ற அளவுக்கு குறையும். இப்பகுதியில் உலவும் ஓசோன் படலம் [ OZONE LAYER ] உயிர்களுக்கு தீமை உண்டாக்கும். 

அடுத்த பகுதி STRATOSPHERE [                ] பூமி மட்டத்திலிருந்து 10-50 KM உயரம் வரை வியாபித்துள்ள பகுதி .இதற்கு முந்தைய TRPOSPHERE பகுதியில் உள்ள நீராவிப்படலப்பகுதிக்கு வெளியில் அமைந்த பகுதி STRATOSPHERE எனப்படுகிறது. இப்பகுதியிலும் உயரம் அதிகரிக்க அதிகரிக்க,  வெப்பம் அதிகமாகிக்கொண்டே வரும் . இந்த பகுதியில் சூரிய கதிர்களின் தாக்கம் மிக அதிகம்.

இப்பகுதியில் ஓசோன் படலம் உள்ளது. அது பூமி வாழ் உயிரினங்களுக்கு , சூரிய ஒளியிலிருந்து பாயும் புற ஊதாக்கதிர்களிருந்து  .[ULTRA VIOLET RAYS ]                                  UV -B [ 280-315 nm ] பாதுகாப்பு அளிக்கிறது அதனால் இந்த பகுதி ஓசோன் என்பது பாதுகாப்புப்போர்வை [protective blanket] என்று அழைக்கப்படுகிறது ஊறு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் இந்த ஓசோன் படலத்தை கடந்து பூமிமேல் இறங்க இயலாது. சில தவறான தொழில்நுட்ப முறைகளினால் இந்த ஓசோன் படலம் நலிவுற்றுஓசோன் ஓட்டைகள் ஏற்பட்டன . அனால் அவைகள் ஓட்டைகள் அல்ல அவை நலிந்த பகுதிகள். அதாவது பழைய கம்பளி போர்வையில் ஆங்காங்கே நைந்து போன பகுதிகள் போன்றவை இவை. உரிய இடத்தில் பின்னர் விளக்குகிறேன்.

MESOSPHERE  [மைய மண்டலம்] 50--80 KM

பூமிக்கு வெளியே 50 கிமீ முதல் 80 கி மீ வரை பரவிக்கிடக்கும் படலம் . இந்தப்பகுதியில் இயக்கம் மிக விறுவிறுப்பானது.. பிற பகுதிகளைப்போல இல்லாமல் உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் குறைந்து கொண்டே வரும்.. இப்பகுதியில் சூரிய மற்றும் காஸ்மிக் [COSMIC ]கதிர்களின் வீச்சு பலமானதாக இருக்கும். இதனால் மூலக்கூறுகள்[MOLECULES ],  அயனிகளாக[IONS ] சிதைவுறும் ; இங்கே ஓசோன் [O 3] உற்பத்தியாகும் .

IONOSPHERE [அயனி மண்டலம் ] 80 கி.மீ க்கு அப்பால் உள்ள பகுதி .அதி தீவிர கதிர் வீச்சு பகுதி இது. MOLECULES எனப்படும் மூலக்கூறுகள் வரகு விரைவாக சிதைவுறும் . இப்பகுதியில் தீவிர ஆற்றல் கொண்ட துகள்கள்[HIGH ENERGY PARTICULATES ] மிதக்கின்றன  .

புறப்பகுதி [OUTER  REGION ]

மிகவும் பெரும் பரப்பில் விரிவடைந்து  3 பெரும் பகுதிகளாக பெயரிடப்பட்டுள்ளது

அவை THERMOSPHERE [வெப்ப மண்டலம் ] 80 முதல் 700 கிலோமீட்டர்  வரை வியாபகம் உள்ளது

2]EXOSPHERE [ வெளி மண்டலம் ]700 -- 5000 கிலோமீட்டர் உயரம் வரை வியாபகம் கொண்டது                                                                                                                                                   

 3] MAGNETOSPHERE [காந்த மண்டலம் 5000 -60,000 கிலோமீட்டர் உயரம் வரை வியாபகம் கொண்டது

பூமியின் ஈர்ப்பு விசை இந்த பகுதி வரை நீள்கிறது இப்பகுதியில் வான் ஆலன் கதிவீச்சு ப்பட்டைகள் [VAN ALLEN RADIATION BELT ] இயக்கம் உள்ளது. அதில் எலக்ட்ரா ன்கள், ப்ரோட்டான்கள் , ஹீலியம் உட்கருக்கள் [NUCLEI ]அடர்ந்து உள்ளன. பூமியுடன் எப்போதும் தொடர்பில் உள்ள சாட்டிலைட் கள்  மிதப்படும் இங்கே தான்

தொடரும் அன்பன் ராமன்

 

 

 

No comments:

Post a Comment

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...