Monday, September 25, 2023

THE UNWANTED

 THE UNWANTED 

வேண்டாதவன்

என்ன வேண்டாதவனா ? ஆம் அதுதான் அவனுக்கு பொருத்தமான பெயர். பெயர் பொருந்தும் அளவுக்கு தீயவனா? அவனைப்பிடிக்காதவர் ஒருவர் சொல்கிறார் --"தீ" அவனே என்று. வேறு யாரும் ஒன்றும் சொல்லவில்லையா ?  வேறு யாரும் என்றால் யார்?  யாராவது அவனுக்கு பிடித்தவர்கள் அல்லது அவனை பிடித்தவர்கள் -அவர்கள் தானே "வேறு யாரும் " என்ற லிஸ்டில் வருபவர்கள்.        நீங்கள் அப்படி வருகிறீர்களா?

சரி, அவனுக்குப்பிடித்தவர்கள் சொன்னால்?  எவன் கேட்பான், மேலும் வசவு தான் விழும் 'வேண்டாத' அவனுக்கு போகட்டும், அவனைப்பிடித்தவர்களைப்பார்த்து விவரம் கேட்டால்? அவனை பிடித்தவர்கள்  என்று பார்த்தால் அநேகமாக அனைவருமே தேறுகிறார்கள் -ரெங்கசாமி அய்யங்காரையும் , முத்துரங்க முதலியாரையும் தவிர . இதென்ன ஒரு அய்யங்காரையும் முதலியாரையும் இழுக்கிறீர் என்று குரல் கேட்கிறதே "பிடித்தவர்கள்" கூட்டத்தில். இவ்விருவரும் தான் அவனை 'பிடிக்காதவர்கள்'; அப்படி என்றால் அவர்களை "பிடிக்காதவர்கள்" பட்டியலில் சேர்த்துவிடவேண்டியது தானே என்கிறீர்களா? அது முடியாது மட்டும் அல்ல தவறும் கூட.

ஐயோ பொழுவிடிந்ததும் கர்மஸ்ரத்தையாக வந்து குழப்புகிறாயே , ஆளை விடு என்றொருவர் ஓடப்பார்க்கிறார்.

'என்னை விட்டு ஓடிப்போக முடியுமா ?-- இனி முடியுமா  என்று பாடத்தோன்றுகிறது. அதாவது வசமாக மாட்டிக்கொண்டீர்கள், எனவே இப்போது நான் அந்த "வேண்டாதவன் "பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பேனே -மிக எளிதாக? இல்லையா.

சரி நீ அதிகாலையில் 'வேண்டாதவன்' என்று ஆரம்பித்தாயே --'அந்த வேண்டாதவன் ' யார்? சீக்கிரம் சொல்லுய்யா என்று சுந்தரவதனமு ம், சுப்பிரமணியம் என்கிற சுப்புவும் அலைமோதிக்கொண்டிருக்கிறார்கள். இதென்ன ஒன்று, பத்து .நூறு என்று கூட்டம் கூடி விட்டதே?   தமிழ்நாட்டில் கூட்டம் சேர்ப்பது எளிது ஆனால் அவர்களை அங்கேயே இருத்துவது கடினம் அதுக்கு தான் 1/4 ம் பிரியாணியும் என்று ஒரு விசேஷ formula அமலில் இருக்கிறதே. அதுக்கெல்லாம் இங்கு வழியில்லை; மேலும் இது தானாக சேர்ந்த கூட்டம் என்று நான் பெருமைப்பட வேண்டாமா?

       அடப்பாவி ! ஒன்றுமில்லாததற்கே கூட்டத்தைக்கூட்டி "தானா சேர்ந்த கூட்டம்"  என்று தம்பட்டம் வேறு . சரி வேண்டாதவன் ஒரு புறம் , பிடித்தவர் ஒரு கோஷ்டி, பிடிக்காதவர் வேறொரு கோஷ்டி, ரெங்கசாமி அய்யங்காரும் , முத்துரங்க முதலியாரும் அவனைப்பிடிக்காத வர்கள் ஆனால் "அவனைப்பிடிக்காதவர்கள் பட்டியலில் வைக்க முடியாது . அப்படியானால் காத்திருப்போர் பட்டியலில் அவர்களை வைக்கலாமே என்றார் டேவிட் தேவவரம் -போலீஸ் அதிகாரியோ? [போலீஸ் அதிகாரிக்கு தான் காத்திருப்போர் பட்டியல் பளீரென்று நினைவில் தோன்றும் ] . இவ்வளவு பீடிகைகள் ஏன் இன்னும் பட்டியலே முறையாக பிரிக்கப்படவில்லை அதற்குள் காத்திருப்போர் பட்டியல் என்று என்ன அவசரம்.? என்றார் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்  இந்தக்களேபரங்களில் சிறிதும் கவலையோ ஈடுபாடோ கொள்ளாத இருவர் =முத்துரங்க முதலியாரும், ரெங்கசாமி அய்யங்காரும் ,எல்லாம் பெருமாள் பாத்துப்பான் என்று வாக்கிங் ஸ்டிக் இல்லாமலே வாக்கிங் போகும் 80+ ஆசாமிகள் இருவரும் . ரெண்டும் சரியான வைஷ்ணவங்க என்று 40 வயது பாஷ்யம் அங்கலாய்த்தார். இவ்வளவு நடந்துண்டுஇருக்கு ரெண்டும் கவலையே இல்லாம வாக்கிங் என்று கொதித்தார் பாஷ்யம். முதலியார் குறிப்பால் உணர்ந்து கொண்டு, Mr பாஷ்யம்  , for over 45 minutes you have congregated over an  absolute irrelevance.  With all your concern what  has  fructified other  than your chirp , murmur and impertinence ? How does it concern you , if ‘we’ are not concerned ? பாஷ்யத்திற்கு வெளிப்படையாக வியர்வையும் .அடக்க முடியாத அளவு சிறுநீரும் வரத்துவங்கி, சாரி சார் என்று கூழைக்கும்பிடு போட முதலியார் Reply me by the evening என்று நடையை தொடர்ந்தார்

அந்தக்காலத்து படிப்பு இங்குலீஸ் பறக்குது என்றனர் கூட்டத்தினர். சரி இதுதான் பட்டியல்

1 வேண்டாதனை பிடிக்காதவர்கள்[ அவனை பிடித்து எதையும் சாதித்துக்கொள்ளாதோர்  , 2 வேண்டாதவனை பிடிக்காதவர்கள் [மனதால் வெறுப்போர் ]

3 'அவனை' பிடித்தோர் [தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அவனைப்பிடித்தவர்கள் ]

4 'அவனை பிடித்தோர் [அவன் இடையூறு செய்வதில்லை என்று விரும்புவதால் -பிடித்தவர்கள் ஆயினர்]

முதலியாரும் அய்யங்காரும் அவனைப்பிடிக்கவில்லை [காரியம் முடித்துக்கொள்ள] அனால் அவனை பிடிக்கும் என்பதால் பிடித்தவர்கள் ஆகின்றனர் .எனவே அவர்களை எந்த லிஸ்டிலும் சேர்க்க முடியாது . காத்திருப்போர் பட்டியலில் நாம் வைக்க முடியாது. என்றார் குழப்பத்தின் மூல கர்த்தா.     சரி "வேண்டாதவன் " யார் ?

வேறு யார் -வாத்தியார் தான்.

 இந்த சமுதாயம் அவனை வெறுக்கும்/ஒதுக்கும், தூற்றும் நிந்திக்கும் ஒருபோதும் சிந்திக்காது அட்மிஷன் துவங்கும் வரை. பின்னர் அவனைப்பயன்படுத்திக்கொள்ளும் ஆனால் "வாத்தி" என்று ஏளனம் செய்யும். அவனுக்கும் இது தெரியும் அவன் வெறுப்பை சம்பாதித்து வாழும் கலை   அறிந்தவன் -ஆயினும் வாத்திப்பயலுக்கு என்ன தெரியும்என்று ஆய கலைகள் 65 யும் அறிந்த சமூகம் பேசும் .அதென்ன 65?   65 வது வாத்திக்கு என்ன தெரியும் என்று முழங்கும் கலை. அவனிடம் பயிலும் மாணவனே "அவனை" மிருகங்களோடு ஒப்பீடு செய்வதை நன்கறிவான். ஆனால் ஒருநாளும் தூக்கில் தொங்க மாட்டான்.             அவனுக்கு -அது தான் அந்த வேண்டாதவனுக்கு தெரியும் -எப்போது பேச வேண்டும் என்றும் யார் கோழைகள் என்றும்.                                                                          அவன் வாத்தி அல்லவா?, சலசலப்பு "அவனின்" அன்றாட யதார்த்தம்                                              நன்றி ராமன்

2 comments:

  1. சுந்தரவதனம் என்ற பெயர் வேண்டாதவர் listல் வருகிறது.
    எப்படி என்று கேட்கிறீர்களா?
    அந்த மனுஷன் Madura College Board member.அடிக்கடி கல்லூரிக்கு விஜயம் செய்து தான்தான் கல்லூரியை நடத்துவதாகச் சொல்வான்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. IF MY MEMORY SERVES ME RIGHT, HE WAS "SUNDARAVARADHAN"

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...