OPPORTUNITIES
வாய்ப்புகள் -GEOGRAPHY
GEOGRAPHY கல்விக்கான வேலை வாய்ப்புகள் அநேகம். நாளுக்கு நாள் இந்த தேவை அதிகரிக்க என்ன காரணம் எனில் தாராள மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்னும் கொள்கை வலுப்பெற்றதனால் பன்னாட்டு நிறுவனங்கள், எந்நாட்டிலும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள ஆர்வம் கொள்கின்றனர் .அவை பெரும்பாலும் நகர நிர்மாணம், துறைமுக விரிவாக்கம், விமான நிலையங்கள் புதிய தாகவோ,புதுப்பித்தல்/ மேம்பாடு அடைவித்தல் போன்ற பணிகள். . சில பகுதிகளில் எண்ணைக்கிணறுகள் நிர்மாணம், சுத்திகரிப்பு நிலையங்கள். இவற்றை வடிவமைப்பதில் திறன் பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் எந்த நாட்டில் ஒப்பந்தப்பணிகள் மேற்கொண்டாலும், நில ஆய்வு, மண்ணின் ப்ரத்யேகத்தன்மை குறித்த சரியான விவரங்களை அரசினரிடமிருந்து கோரிப்பெறுவர். இருப்பினும் அன்றாட பணிகளுக்கு, அந்தந்த நாட்டில்/ பகுதியில் இருந்தே ஜியாக்ராபி பயின்ற நபர்களை பயன்படுத்திக்கொள்வர். இதன் மூலம், உள்ளூர் பணிகளை எளிதாக நிறைவேற்றுவர்.
cartographer
பூகோள அமைப்புகளை சரியாக அளவிட்டு,குறிப்பிட்ட நில விஸ்தீரணம் பற்றிய தெளிவான வரைபடம் உருவாக்கி தரும் பயிற்சி பெற்ற நம்பகமான map உருவாக்கி தரும் பணியாளர். அவர் அந்தப்பகுதிசார்ந்த நபர் எனில்,மேலும் முக்கிய தகவல்களையும் ,ஒப்பந்ததாரர்களுக்கு முறையாக நிறைவேற்றி தர இயலும்.
Architectural டெக்னாலஜிஸ்ட்
இது ஒரு சவால் நிறைந்த பணி . அதாவது குறிப்பிட்ட இடத்தின் பூமியின் இயற்கையான தன்மை, நீர் ஏற்கும் தன்மை , நிலத்தின் உறுதித்தன்மை போன்ற இயற்கை பண்புகளின் அடிப்படையில் அமைய இருக்கும் புதியகட்டுமானம் எவ்வளவு பரிமாணம் இருத்தல் நலம், அந்த புதிய கட்டுமானம் மொத்த எடை , எடையின் பகிர்மான டிசைன் [weight distribution design ] இவற்றை விரிவாக புரிந்து பரிந்துரை செய்பவர் architectural technologist ] இவருக்கு aesthetics எனப்படும் சீரான வடிவமைப்பு பற்றிய தெளிவும் அடிப்படை சிவில் எஞ்சினீரிங் குறித்த தெளிவும் தேவை . சிலர் அவ்வப்போது சிவில் என்ஜினீயர் ஆலோசனை அடிப்படையில் தகவல்களை கட்டுமான உரிமையாளருக்கோ ஒப்பந்ததாரருக்கோ தொகுத்து தந்து கணிசமான ஊதியம் பெறுவார்.
என்விரான்மென்டல் கன்சல்டன்ட் [environmental
consultant]
இக்காலத்தில் அனைத்து திட்டமிடல் குழுக்கள்/ அதிகார மையங்கள் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டிய ஆலோசனையாளர் இவரே. இவர் நடை பெற இருக்கும் திட்டம் செயல் பட உகந்த சுற்றுச்சூழல் , மாசு , மறுசுழற்சி
[recycling], ஆற்றல் புதுப்பித்தல் [renewable energy ] செய்ய யலுமா என்பதை உரிய முறையில் சீர்தூக்கி அறிவுரைப்பவர். பெரும் நகரங்களில் இவரது ஒப்புதல் இன்றியோ ,ஆலோசனைக்கு மாறாகவோ, தோன்றிய கட்டுமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இடித்துத்தள்ளப்படலாம் . இவர் கிட்டத்தட்ட அரசாங்க அதிகாரி போன்றவர்.
GEOGRAPHICAL INFORMATION SYSTEMS OFFICER
ஜி ஐ எஸ் [G I S ] என்பது கம்ப்யூட்டர் உபயோகித்து, கிடைக்கப்பெற்ற தகவல்களை , முறைப்படுத்தி தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கான விவரங்களை பலவிதமான வடிவங்களில் தருவது, அவை அட்டவணை [TABLE
], சார்ட்[CHART ] எனும் வரைபடம் , மேப் [MAP] புகைப்படங்கள் , விடியோக்கள் மற்றும் விளக்கங்கள் டிஜிட்டல் முறை குறியீடுகளாக முறைப்படுத்தி தகவல் அளிக்கும் முறை ஆகும் இவற்றில் ரிமோட் சென்சிங் எனும் தொலை தூர உணர்தல் முறையும் அடங்கும் இவை அனைத்தையும் சரியான அளவிடல் கொண்ட [ஸ்கேல்] வரைபடத்தில் ஒருங்கிணைத்தும் மேப் வடிவில் வழங்கலாம்
இவற்றை நிறைவேற்றித்தரும் பணியாளர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்ற்னர். அவை முறையே GEO-SPATIAL ANALYST ,
TECHNICIAN , MAPPING TECHNICIAN ,GIS DATA SPECIALIST Or GIS அப்ப்ளிக்ஷன் ஸ்பெஷலி -ஸ்ட் என்றெல்லாம் அறியப்படுகின்றனர்.
SOCIAL RESEARCHER சமூக ஆய்வாளர்
சமூக ஆய்வாளர்கள் மாறுபட்ட அணுகுமுறைகளைக்கொண்டு
, சமூகக்குறியீடுகளான, கல்வி, பொருளாதார அடையாளங்கள் சமூக கொள்கை சார்ந்த கருத்துகள்,
சுகாதாரம் , திட்டமிடல் மற்றும் பாலியல் சார்ந்த விவரங்கள், கல்வித்தொடர்புடைய வேலை
வாய்ப்பு போன்ற அனைத்து தகவல் வேலை வாய்ப்பு வேலையின்மை குறித்த விவரங்களை யும் முறையாக
திரட்ட மற்றும்ஆய்வு மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள்.
இவை தவிர பிற முக்கிய துறைகளில்
Geography பயின்றோர் சிறப்பாக அங்கம் வகிக்க இயலும். அவற்றில் சில:
வானிலை ஆராய்ச்சி மையங்கள், நகர்ப்புற
வடிவமைப்பு திட்டபணிகள், மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்துறை,
பள்ளி, கல்லூரி, பல்கலை அமைப்புகளில் ஆசிரியப்பணி
என்று பல வகை வாய்ப்புகள் உள்ளன.
தொடரும்
அன்பன் ராமன்
வேலைவாய்ப்புகள்அதிகம்
ReplyDeleteவிஷயம் தெரிந்தவரகள குறைவு