Monday, January 8, 2024

DIRECTOR- B R PANTULU

 DIRECTOR- B R PANTULU

இயக்குனர் பி ஆர் பந்துலு

பெயர் அடிப்படையில் இவரை இன்ன பகுதியினர் என்று நிர்ணயிக்க இயலாது. பிறந்த ஊர் குப்பம் .இப்பகுதி 3 மாநிலங்கள் எல்லைகள் சங்கமிக்கும் இடம்;அவை பழைய ஆந்திர ,கர்நாடக, தமிழக எல்லைகள் சந்திக்கும் பகுதி. அந்த ஊர் ரயில் நிலையத்தில் 3 மாநில காவல் துறைகளும் தத்தம் பகுதியில் இயங்குவதையும், திருடர்கள் ஒரு பிளாட்பாரத்தில் திருடிவிட்டு வேறு பகுதிக்கு [அதாவது அடுத்த மாநிலப்பகுதிக்கு ]ஓடி பிடிபடாமல் தப்பித்து விடுவதை முன்னாளில் நானே பார்த்திருக்கிறேன். போகட்டும், பந்துலு அவர்கள் மூன்று மொழிகளிலும் திரைப்படங்கள் தயாரித்தவர். அவர் விஜயலக்ஷ்மி பிக்ச்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தார். அவரின் புதல்வி தான் விஜயலக்ஷ்மி [முதல் பெண் ஒளிப்பதிவாளர் -பின்னர் தான் சுஹாசினி ].

பந்துலு தேச உணர்வு மிக்க பலபடங்களை தயாரித்தவர் .அனைத்து ஆளுமைகளையும் திறம்பட நிர்வகிப்பதில் சூரர். அன்றைய நடிகர் திலகம்/மக்கள் திலகம் இருவரையும் வைத்து தயாரித்த மாபெரும் படங்கள்-- கர்ணன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். அதே போல் அனைத்து இசை அமைப்பாளர்களை தேவைக்கேற்ப பயன் படுத்தியவர். செல்வி ஜெயலலிதா வை திரைக்கு அறிமுகப்படுத்தியவர் [படம் சின்னத கொம்பே CHINNADHA GOMBE -கன்னடம்] அதைப்பார்த்து தான் தமிழில் ஸ்ரீதர் ஜெயலலிதாவை'வெண்ணிற ஆடை' யில்  அறிமுகப்படுத்தினார் .

1 "அமுதை பொழியும் நிலவே "தங்க மலை ரகசியம் [1957] கு மா பாலசுப்ரமணியன் , இசை டி ஜி லிங்கப்பா , பந்துலு இயக்கத்தில் ஜமுனாவின் நடிப்பில் பி சுசீலாவின் குரலில் பட்டி தொட்டி எங்கும் மட்டும் அல்ல பல மொழிகளிலும் முழங்கிய அற்புத ட்யூன் ,இன்று கேட்டாலும் நம்மை ஆட்கொள்ளும் வசீகரம் சுசீலாவிற்கு புகழ் சேர்த்த பாடல் . கேட்டு ரசிக்க  AMUDHAI POZHIYUM https://www.google.com/search?q=amudhai+pozhiyum+nilave+video+song+download&newwindow=1&sca_esv=595635046&sxsrf=AM9HkKn_wLwZQTz9G_Es5YDpjfYstO TG L   KU MA BAALA SUB

2சித்திர ம் பேசுதடி 1958 இல் வெளிவந்த சபாஷ் மீனா - கு மா பாலசுப்ரமணியனின் பாடல் இசைடி ஜி  லிங்கப்பா, குரல்டி எம் சௌந்தரராஜன் நடிகர் திலகம், அப்பிறையை புதுமுகம்  மாலினி  நடித்த ஏழ்மையில் காதல் காட்சி அற்புதமான ட்யூன் எப்போதும் கட்டிப்போடும் வகை நளினம் கேட்டு மகிழ  

https://www.google.com/search?q=chithiram+pesuthadi++%5Bsabash+meenaa%5D+video+songs+download&newwindow=1&sca_esv=595635046&sxsrf=ACQVn0-wUT chithiram psudhadi

அதே படத்தில் மற்றுமோர் இசை ஜாலம்

3 "காணா இன்பம் கனிந்ததேனோ" குமா பாலசுப்ரமணியன் பாடலுக்கு டி ஜி லிங்கப்பா தந்த மயக்கும் இசை. குரல்கள் பி சுசீலா டி மோதி . மயக்கமுக கிறக்கமும் தரவல்ல ஆலாபனைகள் ஒரு முறை கேட்டால் மீண்டும் தூண்டும் ஈர்ப்பு .கேட்டு மகிழ

https://www.youtube.com/watch?v=N6eNByxNtaY  kaana inbam

4 / 5 "தாமரைப்பூ குளத்திலே " முரடன் முத்து " [1964] கண்ணதாசன் பாடல் இசை லிங்கப்பா நடிகர் திலகம்-- தேவிகா நடிப்பில் வந்த மறு பதிவு. அதன் முன்னோ டி கன்னட "சின்னத கொம்பே  'கல்யாண் குமார் -ஜெயலலிதா நடிப்பில்/ ஜே யின் ஆட்டம் பாரீர் . இரண்டு பாடல்களின் இணைப்பும் இதோ  

muradan muthu kannadasan

https://www.google.com/search?q=thamarai+poo+kulathile+video+song+download&newwindow=1&sca_esv=595635046&sxsrf=AM9HkKlAdv3mH8prbMTEJoeyhXphEhGEwQ% thaamaraipoo kulaththile

https://www.google.com/search?q=chinnadha+gombe+movie+video+songs+download&oq=chinnadha+gombe+movie+video+songs&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChig  kannada jayalalitha  pbs ps 1964

6 "என்னுயிர் தோழி " கர்ணன் -1964 -கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி வழங்கிய இசை காப்பியம் கர்ணன் சுசீலக்காவின் அதீத திறமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டிய சங்கதிகள் பாடலில் 1.54 முதல் 2,19 வரை வரும் ஆலாபனையும் கவியின் சொல்லாட்சியும் இனி எங்கே கிடைக்கும் கேட்டு மகிழவும் இழந்ததை நினைத்து ஏங்கவும் இதோ இணைப்பு.

https://www.google.com/search?q=ennuyir+thozhi+video+songs+download&oq=ennuyir+thozhi+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUqBggBEEUYOzIGCAAQRRg5MgYIARBFGDsyBggCEEUYQDIGCAMQRRg8MgYI karnan 1964 kannadsan msv tkr

7 "நாணமோ இன்னும் நாணமோ "- ஆயிரத்தில் ஒருவன் 1965 வாலி   -விஸ்வநாதன் ராமமூர்த்தி [இணைந்து இசை அமைத்த கடைசிப்படம் -அதன் பின்னர் நடந்தது அனைவரும் அறிந்ததே ] அற்புத இசை மற்றும் காட்சி. இதில் மாபெரும் வியப்பு யாதெனில் சுசீலாவின் குரல் modulation திறமையால் அச்சு அசலாக ஜெயலலிதாவே பாடுவது போல் குரலில் அவ்வளவு ஆளுமையுடன் பாடியுள்ளார். நான் பலமுறை கேட்டு உணர்ந்த உண்மை . பாடலை ரசிக்க

https://www.google.com/search?q=naanamo+innum+naanamo+song+lyrics+in+tamil&newwindow=1&sca_esv=596471376&sxsrf=ACQVn08dAg7byjGaG8kLpo2q-t_GBAbb3Q%3A1704694523026&ei=-5KbZa 1000il oruvan 1965 vali msv tkr

8 'பூங்கொடியே பூங்கொடியே "- ஸ்கூல் மாஸ்டர் 1973 -கண்ணதாசன் , விஸ்வநாதன் -எஸ் பி பாலசுப்ரமணியன், எஸ் ஜானகி குரல்களில் அந்நாளைய விறுவிறுப்பு இளம் எஸ் பீ பி அப்போதைய சென்சேஷன் அல்லவா? கேட்டு ரசிக்க இணைப்பு.

https://www.google.com/search?q=poongodiye+poongodiye+%5BSCHOOL+MASTER+%5D+TAMIL+MOVIE++video+song+download&newwindow=1&sca_esv=5956450 POONGODIYE POONGODIYE  SCHOOL MASTER  1973 MSV BR PANTHULU KANNADASAN                                                                                       ஏராளமான பாடல்களை அடுக்கலாம் ஆனால் blog post க்கு அடுக்குமா?

பொருத்தருள்வீர்

நன்றி அன்பன் ராமன்

 

1 comment:

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...