Wednesday, January 10, 2024

THE HOME AMBIENCE

 THE HOME AMBIENCE        

உள்ளம் மலரும் இல்லம்

இன்றைய பதிவின் ஆங்கில தலைப்பு [THE HOME AMBIENCE] உணர்த்தும் பொருள் தான்உள்ளம் மலரும் இல்லம் ஆம் ஒவ்வொருவரும் தத்தம் நட்புவட்டம் அமைப்பது என்ற செயலின் அடிப்படையை தீவிரமாக துருவி ஆராய்ந்தால் ஒரு உண்மை வெளிப்படும். அதுதான்- வளர் சூழல்-- என்ற, இல்லம் மற்றும் அதன் நிலைப்பாடுகள்.

இதனை, நன்கு புரிந்துகொண்டால், பல குழப்பங்களை முற்றாக தவிர்த்து விடலாம். ஏனெனில், குழந்தைகள் எந்த ஒன்றையும்-- மொழி உள்பட, பழகிக்கொள்வது பெற்றோரிடம் இருந்துதான். அதனால் தான் பேச்சு அல்லது சொல்லாட்சியில் குழந்தைகள் பிறரிடம் பேசும் போது கூட தமது இல்ல வழக்கத்திலேயே பேச பிற குழந்தைகள் வியந்து கண்ணை அகல விரித்துப்பார்த்து 'என்ன என்ன?' என்று திகைப்பும் ஆர்வமும் மேலிட நூதன சொல் பிரயோகத்தை கற்றுக்கொள்ள எத்தனிப்பதை காணலாம்.. இந்த நடைமுறையை, நன்கு உணர்ந்த சிறுவர்கள், பிற குழந்தைகளை அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினர் என்று புரிந்து கொள்கின்றனர்.

போகட்டும்.  இதிலே இல்லம் ஏன் மகத்துவம் பெறுகிறது? இந்தக்கேள்வியை மிகச்சரியாக புரிந்து கொண்டால் குழந்தை வளர்ப்பில் நிகழும் குறைபாடுகள் தம்மை தோற்றுவிக்கும் கவனக்குறைவு தவிர்க்கப்படும்.      இது போன்ற செயல்கள், குழந்தைகள் இயல்பாக கடைப்பிடிக்கும் நுணுக்கமான கவனித்தல் பண்பிலிருந்தே உருவாகிறது. ஆம் குழந்தைகள் இயல்பாகவே ஒரு 'தேடலில்' இருந்து கொண்டே இருக்கும். சொல் தெரியாது பொருள் புரியாது, உணவு வகைகளில் பல பெயர் இருந்தாலும் தாங்களாகவே ஒரு பெயர் சூட்டி அதை வாங்கித்தா என்று அடம் பிடிக்கும் இயல்பு கொண்டவர்கள். இவ்வாறு ஒவ்வொன்றையும் தேடும்  முயற்சியில் அவர்கள் ஆழ்ந்து கவனித்தல் என்ற  பண்பை  கடைப்பிடித்து மொழியும் உணர்வும் கொண்டு வளர்ச்சியுறுகின்றனர்.

எனவே அவர்களுக்கான 'மொழி பயில் கூடம் ' வீடு என்றே பெரும் உளவியலார்கள் கூட விளக்குகிறார்கள். எனவே இதை உணர்ந்து பெற்றோர் தம் குழந்தைகள் முன் நல்ல சொற்களை பயன்படுத்துவது -குழந்தைகளுக்கு நன்மை செய்யும். சுடு சொற்களும் தரக்குறைவான சொற்பயன்பாடும்  குழந்தைகள் இளம் வயதில் தவிர்த்து வாழ்தல் நலம்.       மேலும் ஒவ்வொரு பெரியவரும் [அண்ணன், அக்கா ,பெரியப்பா போன்றோர் தத்தம் கடமைகளை நிறைவேற்ற , குழந்தைகளும் தத்தம் தேவைகளை நாமே செய்துகொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டினை                                                                                                                 சிறுவயதிலேயே கடைப்பிடிக்க தலைப்படுகின்றனர். இதுதான் டிசிப்ளின் என்ற கட்டுப்பாடு குறித்த ஆரம்ப நிலை புரிதல் ; சப்பிட்ட தட்டை தானே சுத்தம்  செய்யும் நிலையை ஏற்றுக்கொள்ளும் மனம் பெருகின்றன.

இவற்றைப்புரிந்து கொண்டு பெற்றோர் மெல்ல மெல்ல குழந்தையை தானே படிக்கவும் எழுதவும் ஊக்குகிவித்தல் நாளடைவில் கல்வி கற்றல் பணி தன்னிறைவு நிலை நோக்கி நகரத்துவங்கும். அந்த நகர்வை ஊக்குவித்தும் பாராட்டியும்,  குழந்தையை ஆதரிப்பது மனதளவில் குழந்தைக்கு உத்வேகம் தரும். ஆகவே தான் 'வளர் சூழல் " ஒவ்வொரு குழந்தையின் மனம், மொழி, அறிவ, புரிதல் என்ற மனித வாழ்வின் அடித்தளங்கள் அனைத்தையும் அமைதியாகவே வடிவமைப்பன. ஆகவே தான் வீட்டில் வளரும் குழந்தைகள் சில ஒழுக்கங்களை பின் பற்றி -அறிவு மற்றும் மன வளர்ச்சி பெற்று முறையான முன்னேற்றம் அடைகின்றனர். இதன் ஒட்டு மொத்த அமைப்பே பெர்சனாலிட்டி எனும் தனிமனித அடையாளம். எனவே இல்லம் என்பது ஒரு அமைதியான கட்டமைப்பு பட்டறை . எனவே பெரியவர்கள் இந்த கருத்துகளை மனதில் திருத்திக்கொள்ள அதிக சிரமமோ     செலவோ இல்லாமல் சரியான முன்னேற்றப்பாதையில் பயணிக்க இல்லம் ஒரு ஆதரவுக்களம் அமைத்து முறையான வளர்ச்சியை நோக்கி குழந்தைகள்  சொந்த விருப்பமாகவே முன்னேற இயலும் . 

நன்றி

அன்பன் ராமன்                                                                                                                      

3 comments:

  1. வெளியூர் சென்றுவிட்டு தன் வீட்டுக்கு வந்ததும் நாம்அடையும் சந்தோஷம் அளவற்றது. பெரிய ஹோட்டல்களில் பல நாட்கள் சாப்பிட்டுவிட்டு நம்வீடு வந்து வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்டால் அதற்கு ஈடுஇணை உண்டோ!

    ReplyDelete
  2. உண்மைதான். ஆனால் பல இல்லங்களில் இத்தகைய புரிதல்கள் மிகவும் குறைவாகவும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி யை குழந்தைகள் மூலம் வெளி படுத்துவதும் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைத்து பின்னர் சமுதாயத்திற்கு கேடு தரும் செயல்களில் ஈடுபட செய்கின்றன.

    ReplyDelete
  3. உள்ளம் மலரும் இல்லம் - A very nice topic, beautifully broughtout.

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...