Monday, January 8, 2024

TIRUCHI LOKANATHAN-[Posting --850]

 Posting --850                                                         

 பதிவு --850                       பாடகர் :  திருச்சி லோகநாதன்

எத்துணையோ இடர்ப்பாடுகளைக்கடந்துதான் அன்றாடம் பதிவிடுகிறேன். இறையருளால் இன்றளவும் தொடர்ந்து எழுதி வெளியிடுகிறேன். ஆயினும் வாசகர்கள் பங்கேற்பு ஊக்கம் தருவதாக இல்லை.  எனினும், தூக்கத்தை தவிர்த்து பகலில் எழுத உதவிடும் இறையருளுக்கும், அன்றாடம் படித்துவிடும் அன்பர்களின் ஆதரவிற்கும் -எனது பணிவான வணக்கமும் நன்றியும். .இவையின்றி இத்துணை பதிவுகள் வந்திருக்க வாய்ப்புண்டா -எண்ணிப்பார்த்து மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்

திருச்சி லோகநாதன் ஒரு பெரும் பாடகர் என அநேக இசை அமைப்பாளர்கள் சொல்வதுண்டு. அவர் காலத்தில் ஒலிப் பதிவு உபகரணங்கள் மிகக்குறைவு. எனினும் சிறப்பான தொனியில் பாடி பலரின் பாராட்டையும் பெற்ற பெரும் ஆளுமை அவர். அவரது இரு புதல்வர்களும் [மகாராஜன்,/ தீபன் சக்கரவர்த்தி ]  திரைப்படங்களில் பா டி புகழ் எய்தியவர்கள் தான். ஆயினும் தொடர்ந்து பாடி ஒரு நிலையான இடம் பிடிக்கும் அளவிற்கு வாய்ப்புபெற்றனரா எனில் இல்லை என்பதே -சோகமான பதில். சரி திருச்சி லோகநாதன் பற்றி நாம் அறிய வேண்டுவன -பல பெரும் பாடகர்களுக்கு முன்னரே திரையுலகில் வலம் வந்தவர். 1964க்குப்பின்னர் பாட இயலாத நிலைக்கு உடல்[உள்ளம்] பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் பாடாமலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டது. அனைத்து அக்கால இசை அமைப்பாளர்களிடமும் பாடிய பெருமைக்கு சொந்தக்காரர் திரு லோகநாதன் அவர்கள். அவரின் பொக்கிஷங்களில் சிலவற்றை இன்றைய பதிவில் காண்போம்

1 கூவாமல் கூவும் கோகிலம் -[படம் வைர மாலை ]  1954  கண்ணதாசன்  இசை : விஸ்வநாதன் -ராமமூர்த்தி -குரல்கள் திருச்சி லோகநாதன்-எம் எல் வசந்தகுமாரி. சுமார் 70 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப்பாடல் கேட்பதற்கு இனிமையும் எளிமையும் நிறைந்த பாடல். திரையுலகின் ஏழ்மையிலும் ஜொலித்த வைரமலை. பாடும் ஜோடி யார் கவனித்தீர்களா? சாட்சாத் ஆர் எஸ் மனோகர் மற்றும் பத்மினி -எப்படியெல்லாம் ஜோடி சேர்த்துள்ளனர். கேட்டு ரசிக்க இணைப்பு  https://www.google.com/search?q=koovaamal+koovum+kokilam+video+song+download&sca_esv=596130221&source=hp&ei=xMqYZfD2Np_2seMP1YmIcA&iflsig=ANes7DEAAAA koovaamal  VAIRAMALAI 1954 KANNADSAN TL, MLV VISU-RAAMAMURTY

                                                             …………….

இது ஒரு உலக மகா  ஹிட் வகை. குழவி முதல் கிழவி வரை, சிறுவன் முதல் கிழவன் வரை இன்றும் ரசிக்கும் பாடல் -நின்று கேட்பவர்கள் அநேகர். 

2 கல்யாண சமையல் சாதம் -மாயாபஜார் -1957 -பாடல் தஞ்சை ராமையாதாஸ் , இசை கண்டசாலா குரல் திருச்சி லோகநாதன் - கடோத் கஜனுக்கு ஒலித்த குரல். அற்புத நடிப்பு ரெங்கராவ் , ஒளிப்பதிவு மார்கஸ் பார்ட்லே அதீத கேமரா உத்தியும் வெகு நேர்த்தியான படப்பிடிப்பும் மறக்கவொண்ணா திறமைகளின் அணி வகுப்பு. எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத வகை பாடல். ரசிக்க. [இதே காட்சி தெலுங்கில் வண்ணத்தில் கிடைக்கிறது.]

https://www.google.com/search?q=kalyaana+samayal+saadham+videosong+&sca_esv=595971146&source=hp&ei=0heYZZrCHNTj2roP_aOI2Ag&iflsig=AO6bgOgAAAAAZZgl4l maya bazzar ghantasala music

3 ஊரார் உறங்கையிலே [நாலு வேலி நிலம் -1959] நாடோடிப்பாடல் [ஆசிரியர் தெரியவில்லை] இசை கே வி மகாதேவன் -குரல்கள் திருச்சி லோகநாதன்          எல் ஆர் ஈஸ்வரி. பாடல் வெகு யதார்த்தமாக பயணிப்பதை ப்பாரீர். குரல்களும் வெகு இயல்பான வடிவில் .அந்தநாட்களில் அடிக்கடி ஒலித்த பாடல் பின்னாளில் ஒளித்து வைத்துவிட்டனர் போலும் . நல்ல பாடல் ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=nalu+veli+nilam+tamil+movie+video+song+download&newwindow=1&sca_esv=595935508&sxsrf=AM9HkKnHpZSL6yyeF_vKzHjoB0_ TL LRE folklore kvm 1957

4 ஆசையே அலைபோலே [தை பிறந்தால் வழி பிறக்கும்- 1958] கண்ணதாசன் -கேவி மகாதேவன் -குரல் திருச்சி லோகநாதன். நல்ல தத்துவம் படகு ஓட்டுபவன் பாடுவதாக அமைந்த இயற்கை மிளிரும் பாடல் .கேட்டு ரசிக்க

https://www.google.com/search?q=nalu+veli+nilam+tamil+movie+video+song+download&newwindow=1&sca_esv=595935508&sxsrf=AM9HkKnHpZSL6yyeF_vKzHjoB0_ ASAIYE   THA PIRa  KVM KANADSAN 1958

5  வீணைக்கொடியுடைய வேந்தனே [சம்பூர்ண ராமாயணம்-1958 ]    இசை   கே வி மகாதேவன் --குரல்கள் முதலில் திருச்சி லோகநாதன் , பின்னர் பகவதிக்குசிதம்பரம் ஜெயராமன். பாடல் மருதகாசி, பாட வந்த புலவன் வீணை இசையில் தடுமாற மன்னனின் கோபத்திற்கு ஆளாகி பின்னர் அவையினர் மன்னனையே [ராவணன்] பாடச்சொல்லி கெஞ்சி அவன் பாடுவதாக காட்சி ராகங்களின் ஸ்வரங்களைச்சொல்லி [குரல் சி.எஸ் ஜெயராமன் ] பாடுவதாக அமைத்துள்ளார் கே வி எம். நல்ல ரம்யம் .இணைப்பு இதோ

https://www.google.com/search?q=veenaikodi+udaiya+vendhane+video+song+download&sca_esv=596130221&source=hp&ei=nMyYZdj2M7yeseMP28KGyAY&iflsig=ANes7DEAAA veenaikkodiyudaiya  tl /cs j இவை போன்ற பல பாடல் களுக்கு உயிரூட்டிய கலைஞன் திரு .லோகநாதன் அவர்கள். வேறுபாடகர்  பாடல்களுடன் பின்னர் சந்திப்போம்/

நன்றி

அன்பன் ராமன்

3 comments:

  1. வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை
    இதை மிஞ்சி லோகநாதனின் பாட்டு வேறு ஏதுமில்லை

    ReplyDelete
  2. Thanks for continuing your interesting Blog. திருச்சி லோகநாதன் is a very talented singer blessed with melodious voice.

    ReplyDelete
  3. ஊரார் உறங்கையிலே is my favourite song.

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...