Sunday, January 7, 2024

EDUCATION- OUTCOME- 2

 EDUCATION- OUTCOME- 2

கல்வியின் பயன்கள் -2

கல்வியின் பயன்கள் எண்ணற்றவை --ஆயின் எப்போது என்ற வினா இருந்துகொண்டே இருக்கும் . கல்வியின் பயன் பெற விழைவோர் அடிப்படையாக ஒன்றை புரிந்துகொள்ளுதல் நலம் -ஏனெனில் கல்வியின் பயன் வேலையில் அமர்தல் என்றே தவறான கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள் .எனவே தான் பட்டம் பெற்ற பலர் வேலையில் அமர இயலவில்லை. என் மகன் BE முடித்து 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஒரு நேர்காணலுக்கு க்கூட அழைப்பில்லை என்கிறோர் அநேகம்.. இது குறித்து ஏராளமான புரிதல் தேவைப்படுகிறது; பின்னர் அதை கவனிப்போம். அதற்கு முன்பாக கல்வியின் பயன்கள் பற்றி சற்று ஆழ்ந்து உணரவேண்டியுள்ளது  

அதாவது அடிப்படையில் எந்த கல்வி திட்டமும் 'குறிப்பிட்ட' வேலைக்கென வடிவமைக்கப்பட்டதல்ல. என்ன உளறுகிறாய் என்று ஒருவர் சீ ருகிறார்.[அவர் மகன் BE ]முடித்தபின்னும் BE--  AT --HOME என்ற நிலையில் தொடருகிறான், அதுவே சீற்றத்தின் அடிப்படை]. சீறாதீர்கள் -யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். ஓடிப்போய் ஓலை கொட்டகை கல்லூரியில்[BE யில் EEE -கிடைத்த மகிழ்ச்சியில் நீங்களே EEE என்று வாயெல்லாம் பல்லாக பார்த்தவனை எல்லாம் உன் பையன் B.Sc -Physics என்று நையாண்டி செய்தீர்களே இப்போது  அவன்கொக்கி போடுகிறான் " உங்கபையன் BE படிச்சும் -பிச்சுக்கிச்சா" என்று எதிர்வினை ஆற்றுகிறான் ஏனென்றால் அவன் மகன்மகள் இப்போது ISRO நிறுவனத்தில் மேற்படிப்புக்கு தேர்வாகி STIPEND எனும் உதவித்தொகை [மாதம் 10,000/- என்ற அளவில் ] செயல் பயிற்சியும், தொழில் தொடர்பான கல்வியும் அந்நிறுவனத்திலேயே பெற தேர்வாகியுள்ளார்.  இது எதை உணர்த்துகிறது?.

என்ன படிக்கிறோம் என்பது அல்ல, எப்படி பயிலுகிறோம் என்பதே எதிராக்காலத்திய அளவுகோல். +2 வில் ஸ்கூல் FIRST என்று பெருமை கொண்டவர் பலர் உயர்கல்வி நிலையில் முடங்கி விடுவது ஏன்? இதுவே கண் திறக்கும் சம்பவம். மார்க் மார்க் என்று அலைந்து கண்டது என்ன? -சில ட்யூஷன் வாத்தியார்கள் செல்வம் கொழித்ததைத்தவிர? கும்பலோடு கோவிந்தா இறுதியில் =பெறுவதும் அதுவே [கோவிந்தா].தனி மனித செயல் தான் ஒருவரை மேம்படுத்தும் -கூட்டணிகள் அரசியலுக்கு உதவலாம் - தனி மனிதன் உழைத்தாலன்றி உறுதியான முன்னேற்றம் காண்பது அரிது. 10ம் வகுப்பிலும் +2 விலும் கிழித்தால் போதாது. உயர் மட்டத்தில் உயர்ந்து பயணிக்க சரியான FOUNDATION என்ற ஆழமான புரிதல் மிக மிக அவசியம். அதைவிடுத்து அடையும் அனைத்து வெற்றிகளும் தாற்காலிக பெருமிதங்களே.

ஆழமான அடித்தளம், சொல் பொருள், இயக்கம், சொல்லாட்சி ஒவ்வொரு அறிவு சார் துறைக்கும் தனித்தன்மை கொண்டு இயங்குவது. எனவே எந்த செயலிலும் மொழி என்னும் கருவி முன்னிலை பெறுவதை மறந்தோ/மறுத்தோ யாரும் முன்னேற்றம் காண்பது அரிது..இதற்கான அடித்தளம் 2ம் வகுப்பு முதலே செம்மையாக நிறுவப்படுதலும், அதற்கான நினைவாற்றல்  கட்டமைக்கப்படுவதும் அத்தியாவசியம். இப்படித்தான் மொழிகளைபுறக்கணித்துவிட்டு, பிற பாடங்களில் மார்க் மார்க் என்று அலைந்து புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்து மேன்மை அடைய மனப்பால் குடிக்கும் மாணவசமுதாயமும் , பெற்றோரும் புரிதலை வளர்க்காமல் வளமான எதிர்காலம் காண விழைவது எட்டாக்கனியே. மொழியை விலக்கி வழியைத்தேடுவது ஈடேற்ற ஒண்ணாத வாழ்நாள் ஏக்கம்..மொழித்தெளிவு இல்லாமல் "புரிதல்" இல்லை. புரிதல் இன்றி "தெளிவு "இல்லை.  தெளிவு இன்றி சீரிய பார்வை கிட்டாது. சீரிய பார்வை இன்றி இன்னல் களைதல் /மாற்று வழிமுறை களை முன்னெடுத்தல் புலப்படாது. இவை இல்லாத எந்த கல்வியும் தனிமனித தன்னம்பிக்கையை தகர்த்துவிடும் இவை அனைத்தையும் வேலைக்கான நேர்காணலில், எளிதில் கண்டுபிடித்து வேலை கிடைக்காமல், பல மாணவ மாணவியர் மீண்டும் மீண்டும் நேர்காணல் பங்கெடுப்பிலேயே வாழ்வின் பெரும் பகுதியைக்கழிக்கின்றனர். ஏன்?  புரிதல் இன்றி பயின்ற பாடம் பின்னாளில் துயர் தரும். ஆக, முறையான  கல்வியின் முதற்பயன்   புரிதல் என்னும் அறிவு சார் திறன். வேறெந்த வசதிகளும் புரிதலிடம் அடங்கிப்போவதைத்தாண்டி வேறொன்றும் செய்ய இயலாது. புரிதலை நிர்ணயிக்க பல காரணிகளும் சிறுமுயற்சிகளும் இணையவேண்டி வரும். அவற்றை பயன்படுத்த நல்ல பலன் தோன்றும். அடுத்த பதிவில் பேசுவோம்

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. நானும் கல்லூரியில் சேரும் போது என்ன படிக்க வேண்டும் என்று யாரிடமும் கேட்க்காமல் விலங்கியல் துறையில் சேர்ந்தேன். உடனே எனக்கு அந்தக்காலத்தில் வேலை கிடைத்தது. மேல் படிப்புக்கு குடும்ப நிலை சரியில்லை என்பதால் ஒரு வருடம் ஒரு கல்லூரியில் Demonstratorஆகப் பணி புறிந்தேன்.
    மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. MSc படித்து முடித்தவுடன் ஒரு கல்லூரியில் Lecturer ஆக வேலை கிடைத்தது.
    இதெல்லாம் 1960-65 ல் நடந்தது. இப்போது அப்படிஇல்லையே.

    ReplyDelete
  2. Dr. Venkat, in your hurry to inform of what happened to you in in 1960s, you should have included the information that your grasp of the subject was complete and your explanation in interviews convinced the selectors of your ability to teach. only that fetched the job --not the year is my conviction -especially of your career. Regards K.Raman

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...