Saturday, January 6, 2024

SUBRAMANI AT SRIRANGAM

 SUBRAMANI AT SRIRANGAM 

திருவரங்கத்தில் சுப்பிரமணி

நன்கு தூங்கி கண் விழித்தான் "மாலே மணிவண்ணா" என்ற பாடல் ஒலி கேட்டு. தலை மாட்டில் ராமசாமி ய்ப்பார்த்து நோட்டம் விட , "மார்கழி மாசம் போல' என்று சொல்லி வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடி பல்; துலக்கினான் . நீ பரவால்லியே ப்பா மார்கழி மாசம்னு தெரிஞ்சுவெச்சிருக்கியே என்றார் ராமசாமி .சார் சேலத்துல எங்க வீட்டுக்கு அடுத்த தெருவில ஆண்டாள் கோயில் இருக்கு சார் அங்க இதெல்லாம் கேட்டு நல்ல பழக்கம் எனக்கே எல்லா பாசுரமும் தெரியும் சார், இப்ப இந்த குன்டூர்ல போய் -இதெல்லாம் இல்லாம ஏதோ வண்டி ஓடுது. ஆனா அதுக்கெல்லாம் கலங்க கூடாது ஆண்டவனாப்பார்த்து குண்டூர் , பி.கே சார் கஸ்தூரிசார் னு நல்ல மனிதர்களோடா வாழவெச்சிருக்கார் ; இல்லைனா சினிமா போஸ்டர் ஒட்டிக்கிட்டு எங்க குடும்பமே நாசமா போயிருக்கும் பி/கே சார் மனித வடிவியல் தெய்வம் சார் என்று பொலபொல வென்று கண்ணீர் உகுத்தான் 2 . கம கம  காபியுடன் அம்ஜம் மாடிக்கே வந்துவிட்டாள் . நீங்க ஏம்மா வந்தீங்க கால் வலியுடன் என்றான் சுப்பிர மணி . வலி கால வேள்யில வறதில்ல , 11, 12மணிக்கு மேல தான் ஆரம்பிக்கும் அதான் வந்தேன் ,நன்னா தூங்க முடிஞ்சுதா என்றாள்  அம்ஜம் . பி.கே சார் wife ம் இப்பிடி 'நன்னா' னு சொல்லுவாங்க -அய்யருங்கல்லாம் அப்பிடி தான் ஆனா எனக்கு அய்யர் பேச்சு புரியும் என்று சொல்லி நமஸ்காரம் செய்ய தரையில் விழுந்து வணங்கினான் . யாரும்மா இப்பிடி காலையில காபி தருவாங்க என்று .ழுதழுத்தான். இப்ப 7 மணிக்கு மாடசாமி வருவார் இன்னிக்கு உனக்கு அவர்தான் கம்பெனி எல்லா இடத்துக்கும் உன்னைக்கூட்டிண்டு போவார். நாளைக்கு நீ ஊருக்கு போகணும் இல்லையா அதுனால திருச்சில பாக்கறதெல்லாம் பாத்துடு என்றார் ராமசாமி. உடனே சுப்பிரமணி -சார் ஒருவாட்டி எங்க அம்மா தங்கச்சி எல்லாரையும் கூட்டிக்கிட்டு வரேன் இந்த ஊர் கோயில் பாக்கலாம்னு இருக்கேன் உங்களுக்கு ஒன்னும் இடைஞ்சல் இருக்காதே என்றான். நன்னா கூட்டிண்டு வா, ஆனா முன்னாலேயே சொல்லிடு என்றனர் ராமசாமி அம்ஜம் தம்பதியினர். குளித்து வந்தான் மணி 6. 20. அடுத்த கால் மணியில் டப டப சப்தம் ஆஜானுபாகுவாக மோட்டார்சைக்கிளில் மாடசாமி .உடனே பையை தூக்கிக்கொண்டான் சுப்பிரமணி. இருங்க தம்பி மாமி வீட்டுல காபி சூப்பரா இருக்கும் , சாப்பிட்டுட்டு தான் கிளம்புவேன் என்றார் மாடசாமி-கையில் காபியுடன் அம்ஜம் =இந்தாங்கோ என்றாள் ; ஒரு கும்பிடு போட்டு காபியை வாங்கிக்கொண்டார் மா சா. இவ்வளவு பண்பான மனிதர்களை, போய் கஸ்தூரிசாரின் தாய் ஏடாகூடமா பண்ணி சொதப்பிருக்காங்களே என்று உள்ளூர வருந்தினான் சுப்பிரமணி.

ராமசாமி வீட்டில் இருந்து மாடசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணி போன இடம் சமயபுரம் மாரி  அம் மன் கோயில் . மாடசாமிக்கு ஏக மரியாதை -வாங்கோ வாங்கோ என்று ஒரே வரவேற்பு. .5 நிமிடத்தில் மாரியம்மன் சன்னதியில், மாலை, எலுமிச்சம் பழ, விபூதி குங்குமம் ப்ரசாதத்துடன் வெளியே பொய் முன்பொருமுறை சுபத்ராவுடன் கௌரியும் தாயாரும் காபி சாப்பிட்ட அதே இடம் , சூப்பர் டிபன் காபி என்று மாடசாமியின் விருந்தோம்பல் எப்போதும் தனி ரகம்..ஆயிற்று போகும் வழியில் திருஆனைக்கா கோயில் தரிசனம் -சுப்பிரமணி நெகிழ்ந்து நன்றிப்பெருக்கில் மௌனி ஆனான். .10.30க்கு வீடு திரும்பினார். கௌரியின் தாய் இடம் மாடசாமி டசுப்பிரமணியை அறிமுகம் செய்தார். ஏதோ பேசிக்கொண்டிருக்க , நாளை மாலை 5.00 மணிக்கு சென்ட்ரல் -குண்டூர் பயணம், திருச்சி-சென்னை பஸ்ல போகலாமா னு யோசிக்கிறேன்  டிக்கட் ரிசர்வேஷன் சென்னை வரை இல்லை என்றான். கொஞ்சம் இரு என்று மாடசாமி யாருக்கோ போன் செய்து, ஸ்டுவர்ட் எனக்கு நாளைக்கு வைகை இல்லாட்டி வந்தே பாரத் டூட்டி போடுங்க என்றார். எதிர்முனையில் சார் வைகை சார்ட் இப்ப தான் முடிச்சேன் வந்தே பாரத் போடறேன், ரிட்டன் ராக்போட் நாளை நைட் -- பரவா இல்லையா என்றார் ஸ்டுவர்ட் . ஓகே என்று மாடசாமி சொல்லி விட்டு , தம்பி நாளை க்கு 10 மணி ட்ரைன்ல என்கூட சென்னைக்கு வாங்க அங்கே நான் உங்களை சென்ட்ரல் வண்டி ஏத்தி விடறேன். பி கே சார் கொடுத்த பேப்பர் விவரம் நாளை ஆபிஸ்ல போய் எடுத்து தரேன், பத்திரமா கொண்டு போங்க, யார் கிட்டயும் இதெல்லாம் சொல்லாதீங்க. இப்ப போய் வெக்காளி அமன் உச்சி கால கால பூஜை பாத்துட்டு, வந்து சாப்பிடுவோம் .4 மணிக்கு உச்சிப்பிள்ளையார் கும்பிட்டுட்டு திரும்பிருவோம். ரெஸ்ட் எடுத்துட்டு மிச்ச வேலை எல்லாம் நாளைக்கு பாத்துப்போம் என்றார் மா சா.

அப்பா, எப்பிடி மளமளன்னு வேலையை பாக்கிறாங்க அதான் பி கே சார் இவங்களை கொண்டாடறாரு, இப்ப இல்ல புரியுது. என்று வியந்தான் சுப்பிரமணி .

அதே போல் அனைத்தையும் முடித்து மறுநாள் ஆபிசில் முக்கிய விவரங்களை பேக் செய்து, ராமசாமியிடம் மற்றும் கேப்ரியல் சார் இடம் விடை பெற்று சுப்பிரமணி, மாடசாமியுடன் வந்தே பரத் ரயிலில் சென்னை அடைந்தான், மணி 12.17. நேரே ரெஸ்ட் ஹவுசில் ஒரு டபுள் ரூம் போட்டு, உடமைகளை வைத்து விட்டு அய்யர் மெஸ்ஸில் சாப்பிட்டு குட்டி தூக்கம் போட்டு 3.45 மணிக்கு வசந்தம் ஹோட்டலில் காபி முடித்து , சென்ட்ரலில் குறிப்பிட்ட வண்டியில் சுப்பிரமணியை  விட்டு விட்டு திரும்ப மீண்டும் ராகவலு -மாடசாமி குசலம் விசாரித்து, வண்டி கிளம்பியதும் நேரே மாடசாமி கௌரியை ஹாஸ்டலில் பார்க்க போனார். அவளுடன் ஷாப்பிங் போய் அவளுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து விட்டு, இரவு 7.30 மணிக்கு தேனீ மெஸ்ஸில் இடியாப்பம் -தேங்காய் பூ ஒரு பிடி பிடித்து ராக்போட்டில் திருச்சி திரும்பினார் மாடசாமி .

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...