Friday, January 5, 2024

SCIENCE --- ELECTRON TRANSPORT –SIGNIFICANCE

 ELECTRON TRANSPORT –SIGNIFICANCE

எலக்ட்ரான் நகர்வின் முக்கியத்துவம்  .

உயிரின உலகில் இரு பெரும் ஆளுமைகளாக க்ளோரோபிளாஸ்ட்  என்ற பசுந்தாவர அமைப்பினையும், மைட்டோகாண்ட்ரியா என்ற உறுப்பினையும் குறிப்பிட்டிருந்தேன்.இவற்றில் பின்னது தாவர மற்றும் ஏனைய உயிரினவகைகளுக்கும் பொதுவானது. வெகு சில உயிரின வகைகளில் இந்த அமைப்புகள் இல்லாத பூர்விக நிலை உள்ளது.ஆய் நமக்கு இப்போது தேவை இல்லாதன சரி இவ்விரு அமைப்புகள் [க்ளோரோபிளாஸ்ட் / மைட்டோகாண்ட்ரியா] பெற்ற பேராற்றல் யாதெனில் -இரண்டுமே ஆற்றலை வகைப்படுத்தி அந்தந்த உயிரினங்களுக்கு ஏற்ற வகையில் எனர்ஜி எனும்              ஆற்றலை வடிவமைக்கும் பிரத்யேக அமைப்புடைய கருவிகள் என்றே சொல்லலாம். இதில் வியப்பு யாதெனில் இரண்டும் வெவேறு பாதைகளில் பயணிப்பன.இரண்டும் வெவ்வேறு புள்ளிகளில் துவங்கி இறுதியில் ஆற்றல் வடிவான ATP தனை உருவாக்கி வெவேறு இடை மூலங்களை [intermediaries or products] தருவன

இவற்றை தனித்தனியே புரிந்துகொண்டு பின்னர் இவ்விரண்டையும் வேறு படுத்திப்பார்த்தால் இயற்கையின் அமைப்பில் நிகழ்ந்துள்ள பரிணாம விரிவாக்கம் குறித்த உவகையும் மதிப்பும் மேம்படும்.

க்ளோரோபிளாஸ்ட்  என்னும் அமைப்பில் நிகழ்வு

சூரியஒளியால் தூண்டப்பட்டு ஒரு எலக்ட்ரான் உயர் எனர்ஜி நிலையை எட்டி அங்கிருந்து படிப்படியே எனெர்ஜியை மெல்ல மெல்ல இழந்து இயல்புநிலைக்கு திரும்புகிறது. இதுபோல் அடுத்தடுத்த குளோரோபில் அமைப்பில் உள்ள எலெக்ட்ரா ன்கள் இடம் பெயர்ந்து தொடர்ந்து எனெர்ஜி பரிமாற்றம் நிகழ்ந்து ஒருநிலையில் இந்த எனர்ஜி சேமிப்பை இரு பொருட்கள் வடிவில் நிகழ்த்தும் செயலே ஒளிச்சேர்க்கை [photosynthesis] எனப்படுகிறது.

ஒளியை ஏற்று எலெக்ட்ரான் உந்தப்படுவதால் தாற்காலிகமாக குளோரோபில் ஒரு எலெக்ட்ரானை இழந்து தத்தளிக்கும். அப்போது அருகில் உள்ள நீர் மூலக்கூறு [water molecule H2O] ஒன்றின் எலெக்ட்ரானை குளோரோபில் பறித்துவிட[ELECTRON ABSRACTION], நீர் சிதைவுறும் அதனால் H ம், O ம் விலகிட ஆக்சிஜென் [1/2 O2] வெளியேற, பசுந்தாரவங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்ற நிகழ்வு அரங்கேறுகிறது.இது ஒளி சார்ந்தது என்பதால் இது லைட் ரியாக்ஷனில் ஒரு பகுதி. நீர் பகுப்பு [சிதைப்பு] ஒளியின் தாக்கத்தால் அமைவதால் இது நீர் ஒளிபகுப்பு   [PHOTO LYSIS OF WATER ] எனப்படுகிறது. ஆக்சிஜன் வெளியேறிவிட, மீதம் உள்ள ஹைட்ரஜனை, உள்ளேயே இருத்தி குறிப்பிட்ட பாதையில் செலுத்தும் நிகழ்வு நடை பெறும். எலெக்ட்ரான் நகர்வுக்கு இணையாக H+ நகர்வும் அமைய க்ளோரோபிளாஸ்ட் அமைப்பில்உள்ள குறிப்பிட்ட ப்ரோடீன் வரிசைகள் எலெக்ட்ரான் மற்றும் ஹைட்ரஜன் இரண்டையும் தனித்தனியே இடம் பெயரச்செய்கின்றன. இவை அனைத்தும் நாடகக்காட்சிகள் போல், ஒன்றன் பின் ஒன்றாக வரிசை பிறழாமல் அரங்கேறுவது ஒரு விளக்கவொண்ணா விந்தை. இவ்வாறு கடத்தப்படும் எலெக்ட்ரான்கள் படிப்படியாக ஆற்றலை இழந்து பல்வேறு ப்ரோடீன்களை ஆற்றலின் NADP தாக்கத்து க்கு உட்படுத்தி இறுதியாக NADP என்ற ப்ரொடீனை ஹைட்ரஜனுடன் இணைத்து NADPH ..என்ற ஆற்றல் மிகு அமைப்பை தோற்றுவிக்கும். இதன் உதவியால் ஒளியில்லா நிகழ்வுகளுக்கு தேவையான ஆற்றலையும் கார்பன் ஹைட்ரஜன் இணைப்பையும் பின்னர் தோற்றுவிக்கும். இறுதியில் ஆக்சிஜன், கார்போஹைட்ரேட்[GLUCOSE],  இவை பசுந்தாவரங்களின் ஒளிச்சேர்க்கையின் பயனாக பிற உயிரினங்களுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு நாளும் உருவாக்கம் பெறுகின்றன.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...