Wednesday, January 3, 2024

FRIENDS CIRCLE

 FRIENDS CIRCLE

நட்பு வட்டம் [நண்பர் வட்டம்]

 ஒரு காலத்தில் யாருக்கும் பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்களே இல்லை என்ற நிலை இருந்தது. அப்போதெல்லாம் யாரேனும் ஓரிருவர் மட்டுமே வகுப்பறை தோழமை என்பதாக பெற்றோர் அறிந்திராத நண்பர்கள் என்ற அளவில் இருந்ததுண்டு . ஆனால் இன்று  குழந்தைகளின் நட்பு வட்டம் குறித்த அக்கறை எத்துணை பெரியோர் மத்தியில் நிலவுகிறது? இதை நாம், ஒரு பேசு பொருளாகவே எடுத்துக்கொள்வதே இல்லை. .இதைப்பற்றிக்கேட்டால் 'அது பெர்சனல் மேட்டர் ' என்று தடை விதிக்கிறார்கள். எது  பெர்சனல் மேட்டர்'? 7, 8 வயது சிறாருக்கு ஏன் பர்சனல் மேட்டர்? பெற்றோரே தாழ்வு மனப்பான்மை கொண்டு தன குழந்தை அதிகம் படித்துவிட்டதாக பேருவகை கொண்டு பாக்கெட் மணி என்று பாக்கெட் கொள்ளாத அளவுக்கு பணம் தந்து அவன்/அவள் --வானமே எல்லை என்ற முற்றுப்புள்ளி கடந்து வானமே இல்லை என்று கட்டுக்கடங்கா மன நிலை அடைந்து , 10 வயதிலேயே எல்லை மீறுதல் நடந்தேறுகிறது. இது பற்றி-- ஒரு விழிப்புணர்வு எவருக்கேனும் உளதோ?

'உன் வேலையைப்பார்த்துக்கொண்டு போய்யா-- என்று வள் என்று பாய்ந்து கடிக்காதது ஒன்று தான் பாக்கி. இவ்வனைத்திற்கும் அடிப்படை "எல்லையில்லா பாசப்பொழிவு -காச நோய் போல் வேரூன்றி, சிறார்க்கு எல்லை தெரிவதில்லை, பெற்றோரே தனி மனித சுதந்திரம் என்று உளறிக்கொண்டு ஒரு பெரும் விவஸ்தை அற்ற கூட்டம் பொருந்தாத வாதங்களை முன்வைத்து, இறுதியில் எங்கள் குழந்தை பெரு வாழ்வு வாழ்வது பிறர் கண்களை உறுத்துகிறது என்று ஊர் வாயை மூடும் பணி   சிறப்பாக நடந்தேறுகிறது.  

இந்த நிலைக்கு ஒரு முக்கிய மனோபாவம், 'பாசம்' உண்மைநிலையை பார்க்கவொட்டாமல் தடுப்பது தான்.  எனவே பிறர் பார்வை அனைத்தும் 'பொறாமை' என்ற வளையத்துக்குள் அடைக்கப்பட்டு, இங்கே பறிபோய்க்கொண்டிருக்கும் குடும்ப கௌரவம் மற்றும் முன்னேற்றத்திற்கு தேவையான கண் காணிப்பும் என்பது கூட முற்றாக துரத்தி அடிக்கப்பட்டு, இனிமேல் மீட்க முடியாத point of no return வரையில் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் பெற வேண்டிய ஞானத்தை பெறாமல், பெற்ற குழந்தையை குளத்தில் தள்ளும் குதூகலம் - வேறெவர்க்கும் அமைதல் கூடாது என்றே இதை பேச வேண்டியுள்ளது.

உனக்கென்ன ஆயிற்று? என்று எதிர் வாதம் செய்ய இருக்கும் பெற்றோரே எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை -ஆயின் உங்களுக்கு ஏதும் ஏடாகூடமாக ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் எனது அனைத்து கருத்துகளுக்கும் முன்னோடி. எனவே சுயநலம் இல்லாமல் சொல்லும் கருத்துகூட உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது எனில் ஒரே ஒரு முடிவு நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பது தான் யதார்த்தம் --ஆம் வேளை சரியில்லை இதில் தொடர்புள்ள அனைவருக்கும் தான். 

புரியாதவர்க்கு முடிவு தெரியாது முடிவே வந்த போதும். அதன் பின் சூரியன் எங்கே மிதந்தால் என்ன? கண் தான் போய் விட்டதே.   இது. வெகு காலம் கடந்து ஒவ்வொரு வினாடியும் உறுத்தும் போது பிள்ளையே பிசாசாய் தெரிவான், மனைவியின் மீது பழி விழும் "நீ அவனை/ அவளை சரியாக கவனிக்கவில்லை " என்று. துயரின் விளிம்பில் நிற்கும் தாய் பேசாமல் நிற்பாள் உடனே அவளே குற்றவாளி என்று சான்று வழங்காதீர்; நீங்கள் செய்தது என்னவாம்? என்று மன சாட்சி கேட்கும். ஆனால் ஒன்று [அப்போதே அந்தக்காலத்திலேயே] அந்த மனசாட்சியை துரத்திவிட்டு பாசத்திற்கு ரத்தினக்கம்பளம் விரித்தால் வந்த   -- இது தான் விளைவு.

நற் பண்பும் / வேறு துயர்களும் நட்பு வட்டத்தின் விளைவே என்பதை புரிந்துகொள்ள இறையருள் வழிநடத்தவேண்டும், நண்பர்கள் நல்லவரெனில் பண்பு சீர்பெறும் , தீயவர் எனில் பண்பு சிதைந்து, பழக்கங்களில் தீமை உட்புகுந்து சிகரெட் சீட்டாட்டம் , குடி [அடுத்து  ஒரு மூன்றெழுத்து  -சமாச்சாரம் ]என்று அதியற்புதமான நட்புவட்ட திருவிளையாடல்கள் அவ்வப்போது அரங்கேறும் -அதுதான் பாக்கெட்மணி என்றொரு ஆசீர்வாதம் அபரிமிதமாக வழங்கி பேருவகையில் திளைக்கிறோமே. என் மகன் என்று!. ஒன்றை மனதில் கொள்ளுங்கள் போதை மருந்து வலை, பள்ளி வளாகங்களில்[கல்லூரிகளை விட]  சிறப்பாக இயங்குவதாக தகவல்; கல்லூரிகளில் போதை மருந்தை விட பேதை மயக்கம் தான் பெரிது அதற்கும் நட்பு வட்டம் அனவரதமும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது ஊரறிந்தது -ஆனால் நம் குழந்தைகள் அரிச்சந்திரனை விட உத்தமர்கள் என்று சான்றும் பாக்கெட்மணியும் வழங்கிய பெற்றோரே இப்போதே விழிப்படையுங்கள் இல்லையேல் பின்னர் குடும்பத்துடன் ஆந்தை போ;ல் விழிக்க வேண்டி வரும் .                        நட்பு வட்டம் முறையாக அமைய வேண்டும். சொல்லும் செயலும் சீர் பெற, நல்ல நண்பர்கள் அவசியம்.  பெரும் பணப்புழக்க குழுக்களில் நல்ல திறமை சாலிகள் ஒருபோதும் நுழைவது இல்லை. அவர்கள் எளிய வாழ்வும் உயரிய குறிக்கோளும் கொண்டு முன்னேறுபவர்கள் அவர்கள் போதை பேதைஇரண்டையும் கண்டு   ஓடி விலகி வாழ்ந்து திறன் வளர்ப்பவர்கள்.அவர்கள் இன்று பண பலம் கு ன்றியவர்கள், எனினும் மாய வலையில் சிக்காதவர்கள். ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் பரிமளிப்பர் -நட்பு வட்டம் அப்படி -வேறொன்றுமில்லை.

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. I continue my friendship with two of my schoolmates, one of my college mate (one is no more) and many of my colleagues from HKRH College and Madura college.

    ReplyDelete

OLD MOVIE SONGS -9

  OLD  MOVIE SONGS -9 PIANO FOR IMPACT +SINGING STYLES -2 பியானோ ஒரு இசைக்கருவியா / போர்க்கருவியா ? இதென்ன கேள்வி என்கிறீர்களா ? ...