BIO TECHNOLOGY-- GENE THERAPY-2
பயோடெக்னாலஜி- ஜீன் வைத்தியம்
- 2
சென்ற பதிவில் ஜீன் வைத்தியம்
பற்றி சில அடிப்படை தகவல்களை குறிப்பிட்டிருந்தேன். அவை குறித்த மேல் விவரங்களை இன்றைய
பதிவில் காண்போம் முன்னர் குறிப்பிட்டிருந்தைப்போல
, மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை இன்றி ஒருவரின் பிழையான ஜீன்களை முறையாக மாற்றி
அமைத்து நோய் களைவதே ஜீன் தெரபி ஆகும்.
இதற்கான சில பிரத்தியேக
அணுகுமுறைகள், வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை, நேரடி அல்லது மறைமுக உத்திகளைக்கொண்டு நிறைவேற்றப்படுகின்றன.
அவை குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியன பற்றிய தகவல்கள் இவை. ஆரம்பஅணுகுமுறை- நோய்
விளைவிக்கும் ஜீன், தனது அமைப்பில் குறைபாடுகள் கொண்டுள்ளது. ஜீன் தெரபி துவங்கிய ஆரம்ப
காலத்தில் [ஆரம்ப நிலையில்] குறைபாடுகள் இல்லாத ஜீன்/ ஜீன்களை உடலினுள் செலுத்தி முறையான
ப்ரோடீன் களை தோற்றுவிக்கச்செய்து, குறைகளை அகற்றினர்.
அந்த முறையில் 'புதிய குறையற்ற
ஜீன்கள் மனித உடலினுள் செலுத்தப்பட்டு, புதிய ப்ரோடீன்கள் உதவியால் நோய் என்னும் குறைகள்
அகற்றப்பட்ட முறைக்கு ஜீன் சேர்ப்பு [GENE
ADDITION] என்று பெயர். இதனை நிறைவேற்றிடும் முறைகளில்
முன்னேற்றங்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
1
புதிய
ஜீன்
கொண்டு
நோய்
தீர்த்தல்
[USING A NEW GENE ] இதுவே ஆரம்ப நிலைகளில் பயன் பட்ட உத்தி.
2
திருத்தி
அமைக்கப்பட்ட
[பிழை
நீக்கப்பட்ட]
ஜீன் /
ஜீன்களை
உடலில்
செலுத்துதல்.
படிப்படியாக இந்த அணுகுமுறைகளில்
புதிய செயல் முறை உத்திகளைக்கொண்டு ஜீன் தெரபி முன்னேற்றம் அடைந்து வருகிறது. இவ்வகையில்
நிகழ்ந்த ஒரு சீரமைப்பு “ஜீனோம் எடிட்டிங்” என்ற செயல் முறை. இந்த அணுகுமுறை பழைய செயல்களில் இருந்து மாறுபட்ட உத்தி.
அதாவது புதிய அல்லது திருத்திய ஜீன்களை செலுத்துவதற்கு பதில், சில நுண் மூலக்கூறுகளைக்கருவிகளாக
கொண்டு [MICRO-MOLECULAR
TOOLS ] உடலினுள் இருக்கும் ஜீன் செயல்பாடுகளை முறையாக
கட்டுப்படுத்துதல். அதாவது ஜீன்களின் அமைப்பை அல்லது செயலை வெளியிலிருந்தே
மூலக்கூறுகளின் உதவியால் கட்டுப்படுத்தி நோய் பரவுதலையும், வீரியத்தையும் முடக்குதல்.
இவற்றில் ஆழ்ந்த சோதனைகள்
பின்வரும் தேவைகளை மையப்படுத்தி விரிவாக முயற்சிகளை கைக்கொண்டு வருகின்றன.
ஜீன் அமைப்பில் இருக்கும் குறைகளை செயல்படவொண்ணாமல் தடுத்து குறை
களைதல் , வேறு எதிர்வினை ஜீன்களை [ANTAGONISTIC
GENES ] தூண்டி விட்டு தவறான செயல் நிகழாமல் கட்டுப்படுத்தல்.
தவறான செயல் புரியும் ஜீன்/
ஜீன்களை முற்றிலும் முடக்குதல்
நோய் தோற்றுவிக்கும் ஜீனின்
செயல்களுக்கு துணை புரியும் DNA பகுதிகளை அகற்றுதல் [EXCISION
]மூலமாக தீவினை ஆற்றும்
பகுதி அடக்கி முடக்கப்படுத்தல்.
இவ்வாறு மாறுபட்ட அணுகு
முறைகள் வழியே ஜீன் தெரபி மேம்பட்டு வருகிறது. இவற்றை எவ்வாறு செயல் படுத்துகின்றனர்
என அடுத்த பதிவில் காண்போம்.
தொடரும்
நன்றி
அன்பன் ராமன்
பயோ-டெக் என்பது மற்ற இளங்கலை பட்ட படிப்பு போன்றதல்ல என்பதை உணர்த்தி, மேலும் மருத்துவ படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை, பொறியியல் படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் இதை எடுத்து படித்து ஒரு டிகிரி வாங்கி டலாம் என்ற அளவில் இந்த பயோ-டெக் படிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்பதை கூறியும் மேலும் அதன் பயன்பாடு என்பது மனித குலத்திற்கு எவ்வளவு அருந்தொண்டாற்றி வருகிறது என்பதையும் நமது ப்ரொஃபஸர் ராமன் நமக்கு புரியும் படியாக மிக அழகாக விளக்கி வருகிறார். மிகவும் பாராட்டு குரிய சேவை.
ReplyDelete