Monday, February 12, 2024

NO COST ENTERTAINMENT

NO COST ENTERTAINMENT 

விலையில்லா பொழுது போக்கு

பரமேஸ்வரன் / பத்மநாபன்

குட் மோணிங் என்று குரல் கேட்டு வாசல் பக்கம் பார்த்தார் பத்மநாபன். அங்கே வாமன வடிவில் பரமேஸ்வரன். உம் வாரும் என்றார் ஊஞ்சல் சேவை பத்மநாபன் .உள்ளே வந்த பரமேஷ் வழக்கமான சோத்யம் [கேள்வி] தொடுத்தார. மாமி அடுக்குளை லியா?. ஏற்கனவே கொதித்துக்கிடந்த ஊஞ்சல் அய்யங்கார் [மனதிற்குள் இவனை என்ன செய்தால் தேவலை என்று கோபம் சுனாமியாய் புறப்பட வெறித்து பார்த்தார்.] பரமேஷ் மீண்டும் மாமி அடுக்குளை லியா? " என்றதும் பத்மநாபய்யங்கார் முறைத்த வெறித்தனமான பார்வை கண்டு பரமேஷுக்கு சிறுநீர் பீறிட்டு ப்பாய்ந்து விடும் போல் இருந்தது . அது மாதிரி ஏதாவது ஏடாகூடமா நடந்தால் பத்து பரமேஷை கீழேபோட்டு களி மண் மாதிரி மிதித்துக்குழைத்துவிடுவார். நிலைமை விபரீதமாக போய்விடும் என்று பயந்து அடுக்குளையில் எலி மாதிரி பாய்ந்தார். உள்ளே ஜம் [அதுதான் ஹேமாம்புஜம்] கோடாலி முடிச்சுடன் தரையில் அமர்ந்து 'சௌந்தர்ய லஹரி' சொல்லிக்கொண்டிருந்தாள். பரமேஷ் மனதிற்குள் எப்போதோ போத்தனூர் ஸ்கூலில் படித்த "ஆனை படுத்தால் குதிரை மட்டம் என்று ஜம் உருவத்தைப்பார்த்து ஈனஸ்வரத்தில்  முனகிக்கொண்டே குகும் என்று செருமினார். ஹேமாம்புஜம் திரும்பி ஒரு பார்வை யை வீசினாள்,

பரமேஷுக்கு வியர்த்தது. ஒன்னுமில்லை ராஜம் [அதான் எண்ட பாரியை ஓய் உமக்கு கோப்பி இல்லை னு கறாரா ]. மாமிக்கு தெரியுமே பரமேஷுக்கு கோப்பி இல்லைனாலு ஏதொரு காரியமும் செய்யம்பெட்றி ல்லா -அதே ஒரு கப் கோப்பி தன்னாலு எனிக்கு வளர சந்தோஷம் ண்டாகும் .

அதே --கோப்பி என்று இழுத்தார்.

இதோ பாரும் எங்களவர்க்கே இன்னிக்கு காப்பி -- பீப்பி தான் .அப்புறம் வேத்தாம்பளைக்கு காபி தந்தால் நான் கிராதகி பட்டம் சுமக்கணும்.. அவருக்கு கோவம் வந்தால் ஒரே நரசிம்மாவதாரம் தான். பேசாம போயிடுங்கோ , நீங்க முழுசா வீடு திரும்பணுமே -எனக்கு கவலையா இருக்கு என்றாள் ஹேமாம்புஜம். ஐயோ என்று அலறிக்கொண்டே பின்னால் பாய்ந்தார் பரமேஷ்  .

சுமார் 10 நிமிடம் ஆயிற்று இன்னும் வரவில்லை பரமேஷ்.

பின் வழியா ஓடிடலாம்னு பார்த்தாரோ, இங்கே வழியே கிடையாதே என்று குழம்பி கலங்கினாள் ஜம்  நம்ம வீட்டில் ஏதாவது மயக்கம் போடடு நம்மை அலைய வைத்துவிடப்போகிறார் என்று நடுங்கி ஹேமாம் புஜம் , ஊஞ்சல் ஆழ்வாரிடம்அவர் பின்னால போனார் வரவே இல்லை. கொஞ்சம் பார்த்து அவரை வீட்டுல கொண்டுபோய் விட்டுடுங்கோ  என்றாள்

. ஏன்?  வீட்டுக்கு நான் தான் ஸ்கூல் ஆயா மாதிரி வந்தவன் போனவனெல்லாம் கொண்டுபோய் விடணுமா. வர வர உங்க லூட்டி தாங்கல்ல ;நான் மாயவரம் போய்டப்போறேன் ;

தொடரும்

 


No comments:

Post a Comment

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...