GRATIFICATION- CRIPPLING WORK
லஞ்சம்/ வேலை நிறுத்தம்
இது என்ன திடீரென்று இந்த தலைப்பு.?
இனிமேல் கல்வி என்று ஏதாவது ஆரம்பித்தால் கல்லெறி வாக வேண்டி வரும். வைணவ மொழியில் சொல்வதானால் "வேணது எழுதியாச்சு"
; படித்தால் படிக்கட்டும், படித்ததாக நடித்தால் நடிக்கட்டும். எனக்கென்ன? சொல்ல வேண்டிய தேவையும் கடமையும் உணர்ந்து சொல்லிவிட்டேன். உன் வேலையைப்பார் எங்களுக்கு தெரியும் என்று வீராப்பும் வீம்பும் என்ன செய்யும் என்பதை 57 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். பட்டால் தான் தெரியும் என்ற முதுமொழி வீண் போகுமா என்ன?
சரி நமது கவனத்தை வேறு திசையில் திரும்புவோம் என்று எத்தனித்தால், திரும்பிய பக்கமெல்லாம் தலைப்பில் உள்ள ஏதோ ஒன்று 'ல'வோ, வே நி 'யோ அரங்கேறிக்கொண்டே
இருக்கிறதே .அவற்றை புறக்கணிக்க இயலுமா? புறக்கணிக்க இயலாது;ஆனால் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்க்கலாமே - நான் லஞ்சத்தை குறிப்பிடுகிறேன். இது குறித்து விரிவாக பேசுவோம்.
"சொல்லி தெரிவதில்லை" சமாச்சாரத்தை எப்படி தெரிந்து வைத்திருக்கின்றனரோ அது போலவே தான் 'ல' மற்றும் 'வே நி இரண்டையும் நன்றாக தெரிந்து
கொண்டுள்ளனர் ' இவ்விரண்டிலும் பலவிதமான வக்கிரங்களையும் தகிடுதத்தங்களையும் கண்கூடாகப்பார்க்கலாம்
லஞ்சமும் வேலை நிறுத்தமும், ஒவ்வொரு நாளும் நிகழ்வன. இடம் மாறலாம் ஆனால் இன்று எங்குமே இவை இல்லை என்றால் அந்த நாள் பொது விடுமுறை அல்லது லாக்டௌன் போன்ற சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் நிறைந்த களம் என்று புரிந்து கொள்ளலாம்.
லஞ்சமும் வேலை நிறுத்தமும், பரவலாக்கப்பட அடிப்படை காரணம் நமது அரசியல் இயங்கும் விதமே. ஊழல் செய்வது, சொத்துகுவிப்பது, தலை முறைகளுக்கு சேர்த்துவைப்பது என்று அரசியல் தலைகள் செயல்பட்டதால் வந்த விளைவே லஞ்சம். நான் எந்த லஞ்சத்தையும் நியாயப்படுத்த முயலவில்லை
.எந்தபுரையோடிய அவலத்தையும் நியாயப்படுத்துவது பஞ்சமாபாதகங்களில் ஒன்று என்றே நினைப்பவன் நான். இந்த'தலைகள்' பற்றி புரிந்து கொள்ள ஆங்கிலத்தில் OCTOPUS என பெயரிடப்பட்ட விலங்கினம் 8 கை போன்ற நீண்ட உறிஞ்சு கரங்கள் கொண்டு எதையும் பற்றிக்கொண்டு உறிஞ்சும் திறன் கொண்டவை. என்ற விளக்கம் 'ஓரளவிற்கு' பொருத்தமாக இருக்கும். ஆக்டோபஸ் கடலில் நீந்திச்சென்று இரையை பிடிக்கும். உள்ளூர் ஆக்டொபஸ்களோ இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மாநிலம் முழுதும் வியாபிக்கும் திறன் கொண்ட [அதிகார பீடத்தின்] மையத்தில் அமர்ந்திருப்பதை. பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
அவர்களை வசைமாரி பொழிந்துகொண்டே மீண்டும் மீண்டும் பலவித அளவு கொண்ட ஆக்டொபஸ்களை பதவியில் அமர்த்திவிட்டு, பின்னர் விமர்சனம் செய்கிறோம்.
சமீப காலத்தில் ஒரு நேர்மையாளர் சொன்னார்-- "இவர்கள் அரியாசனம் ஏறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் 'அறியா சனம்' [அறியாமைமிக்க ஜனங்கள்], என்று நயம்பட உரைத்தார். இப்போது வக்கிரத்தின் தொடக்கப்புள்ளி குறித்து ஓரளவேனும் புரிந்திருக்குமே.
தொடரும்
அன்பன் ராமன் . .
Hmm True
ReplyDelete