Seerkazhi GOVINDARAJAN -2
சீர்காழி- 2
6 ஆத்துல தண்ணி வர -'தை பிறந்தால் வழி பிறக்கும்' –[1958] பாடல் மருத காசி , இசை கே வி மஹாதேவன் - சீர்காழி
கிராமிய மனம் /மணம் வெளிப்படும் பாடல் , பிரேம் நசீர் ,மைனாவதி பங்குபெறும் கதை. கிட்டத்தட்ட 'இலவு காத்த கிளி /ஏமாந்தவன் இசைக்கும் ஓலம் என்ற பொருளில் சொற்கள் வெளிப்பட பாடல் அமைந்துள்ளது. இப்போது சினிமாவில் எதெதையோ காட்டி யதார்த்தம் என்கின்றனர் ;இந்த பாடலும் காட்சியும் நிஜமாகவே யதார்த்தம் மிளிர்வதையும், மிக இயலின்பான நகர்வுகளும் பார்ப்பவரை பின்னோக்கி இழுத்து அந்த நாளை க்கான வைப்பதை உணராலாம். அந்த காலகட்டத்தில் மொழி எல்லைகள் கடந்து வேற்று மொழிகளில் நடிப்பது
, ஏற்கப்பட்டது. மிகவும் பேசப்பட்ட படம். பாடலை ரசிக்க இணைப்பு இதோ: https://www.google.com/search?q=aaththila+thanni+vara+adhil+oruvan+meen+pidikka+video+song&newwindow=1&sca_esv=7412f18cd7d011ba&sxsrf=ACQVn088fZ8XwqVJoxCpY788Fa7G5MUh0w%3A1707287
1959 marutha kasi kvm
7 எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் [கறுப்புப்பணம்-1964 ] கண்ணதாசன், வி-ரா, குரல் சீர்காழி
பொது உடமைக்கருத்துகளை சுமந்து வரும் பாடல். கண்ணதாசனே தோன்றி நடிக்கும் 3, 4 பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தக்கருத்துகளை
குழந்தைகள்
மனதில்
ஏற்படுத்தும்
முயற்சியாக
பாளிக்குழந்ததை கள் இணைந்து பாடுவதாக அமைந்துள்ளது.
சீர்காழி கணீரென்று எப்போதும் போல பாடியுள்ளார். இணைப்பு :
8
KARUPPU PANAM SG 1964 V- R,
ஓடம் நதியினிலே -காத்திருந்த கண்கள் -1964, கண்ணதாசன் , வி-ரா , சீர்காழி
இப்பாடலுக்கு பல சிறப்புகள்; விஸ்வநாதன் -ராமமூர்த்தி என்றாலே , இசைக்கருவிகள் ராஜ்ஜியம் செலுத்தும் என்ற 1964 இல் வெறும் 3 கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்ட
ஆழமான
சோக
கீதம்.
அது
மட்டுமா,
இது
போன்ற
பல்வேறு
தகவல்கள்
வேறு
பாடல்களுக்கு
உண்டா
எனில்
-என்னால்
பதில்
சொல்ல
முடியவில்லை இந்தப்பாடலை கவிஞர் சொன்னபடி [ஒருத்தி மட்டும்
கரையினிலே என்று எழுதாமல், தரையினிலே என்று எழுதி] அப்படியே பாடி பதிவாகி உள்ளது. கவிஞர்
இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார் என்று ஒருதகவல் உண்டு. வேறென்ன தகவல் என்றால்,
இந்தப்பாடல் மிகக்குறைந்த [3] கருவிகள் கொண்டு பதிவிடப்பட்டுள்ளது. முற்றிலும் குரலை
நம்பியே பயணிக்கும் பாடல். ஹிந்தி இசையுலக ஜாம்பவான் திரு நௌஷாத் அவர்களுக்கு மிகவும்
விருப்பமான பாடல்..
மும்பையில் எம் எஸ் வி குழுவினரின்
இசை நிகழ்ச்சிகள் நடந்தால்,
திரு நௌஷாத் கலந்து கொள்வதுடன்
இந்தப்பாடலை பாடச்சொல்லி கேட்டுவிட்டுத்தான் போவாராம். இவ்வளவு எளிய பாடலை நௌஷாத் பெரிதும்
சிலாகிப்பார் என்றுபலமுறை செய்திகள் வந்துள்ளன. கேட்டு மகிழ
9 அழகிருக்குது உலகிலே -'அனுபவி ராஜா அனுபவி]' [1967] கண்ணதாசன் , விஸ்வநாதன் , டி எம் எஸ், சீர்காழி.
பொறுப்பற்ற சகோதரர்கள், ஊரில்
இருந்து
குற்றாலம்
போகும்
வழியில்
இளம்
பெண்களை
வம்பிழுப்பாதக
பாடல்
காட்சி
;அவ்வப்போது
நையாண்டி
-கருமையான
கூந்தல்
பாதி,
கடையில்
வாங்கும்
கூந்தல்
பாதி
என்று,
கவிஞர்
சொல்லுக்கு
விறுவிறுப்பான
இசை
எம்
எஸ் வி , பாடல் கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் நிகழ்ந்துள்ளதாக காட்சி அமைப்பு. கேட்டு மகிழ இணைப்பு
https://www.google.com/search?q=azhagirukkudhu+ulagile+tamil+song+video&newwindow=1&sca_esv=ed9d5bce5adbada5&sxsrf=ACQVn0-FjjJaYWZjqeZD7xJdSpsugvVXFg%3A1707610576330&ei=0BHIZcr anubavi raajaa TMS, SG 1967
10 மரணத்தை எண்ணிக்கலங்கிடும் விஜயா [கர்ணன் -1964] கண்ணதாசன் வி-ரா , சீர்காழி
பகவத்கீதையின் சாரத்தை இதை விட எளிதாக, அழகாக சொல்லவும் இசைக்கவும் இவர்களன்றி யாரால் இயலும் ? செவிமடுத்துக்கேட்டால் தர்மத்தின் தேவையும், வலிமையையும் புலப்படும். கண்ணன் தன் மீதே புகழும் இகழ்வும் படியும் என்று அர்ஜுனனை இயக்குகிற வலிமை வெகு அழகாக பாடலில் வருகிறது கேட்டு மகிழ
https://www.youtube.com/watch?v=Sk5uzyywRec
11உள்ளத்தில் நல்ல உள்ளம் [கர்ணன்-1964] கண்ணதாசன், வி-ரா சீர்காழி
சென்ற பாடலின் தொடர்ச்சியாக இந்தப்பாடல் 'சக்ரவாஹம்' ராகத்தில் வடிவமைத்துள்ள மெல்லிசை மன்னர்கள் /கண்ணதாசன், சீர்காழி அனைவரும் ரசிகர் மனங்களில் அமர்ந்து மாளா ப்புகழ் அடைந்துள்ளனர் பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம்-.இப்பாடலில் இசையின் தாக்கம் பரம வீரியம் கொண்டது. கண்ணனும் கர்ணனும் ஒவொரு வகையில் குற்றம் இழைத்ததை சுட்டிக்காட்டும் கவி வலிமை , இசையின் சோக இழைவும் தாள க்கட்டும் பாடலை எப்போது கேட்டாலும் ஒரு கணம் அலுக்காமல் விடாது. உலுக்கியவர்கள் உயிருடன் இல்லை ;ஆயினும் உ லுக்கல்
என்னவோ
உயிர்ப்புடன்
இருப்பது
பாடலின்
சிறப்பு
; கேட்டு
குலுங்கி
கலங்க USE RAJ 4 K LINK
https://www.google.com/search?q=ullaththil+nala+ullam+video+song&oq=ullaththil+nala+ullam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyBwgDECEYnwU
இது போன்ற பல வகையான கவியப்பாடல்களை தந்து நீங்காப்புகழ் எய்தியவர் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.
நன்றி
அன்பன் ராமன்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது
ReplyDeleteஎன் உள்ளத்தை தொடும் பாடல்