Thursday, February 15, 2024

DIRECTOR-- A C TIRULOKCHANDER

DIRECTOR-- A C   TIRULOKCHANDER

இயக்குனர் ஏ சி திருலோகச்சந்தர்

வீரத் திருமகன் - இது தான் சி திருலோகச்சந்தர் இயக்கிய முதல் படம் - வி எம் நிறுவனத்தில். அந்த 60 களிலேயே, எம் பட்டம் பெற்று படம் இயக்க வந்த முதல் நபர் இவர் தான் என்று நினைக்கிறன். அசத்திய அசாத்திய திறமையாளர்;பின்னாளில் பல வெற்றிப்படங்களை வடிவமைத்துத்தந்தவர். எனினும், வி எம் குறித்து சில தகவல்கள் முக்கியத்துவம் நிறைந்தவை. அன்றைய கால கட்டத்தில் தயாரிப்பு நிறுவனங்களில் அவர்கள் முன்னிலையில் தான் பாடல் கம்போசிங் [பாடல் உருவாக்கம் -கவிதை, ட்யூ ன், இசைக்கட்டமைப்பு] எல்லாம் நடைபெறும் 1960 களில் இருந்துஏ வி எம்அவர்களின்  மகன் திரு. குமரன் தான் இந்த பாடல் அமைப்பில் முழு மேற்பார்வை  செய்பவர்] அவர் ஒப்புதல், பின்னர் வி எம் ஒப்புதல், இரண்டும் இன்றி பாடல் பதிவாகாது .   அப்படி உருவான படத்தில் [வீரத்திருமகன் ] பாடல்கள் சோடை போகுமா என்ன? அதில் கூடுதல் வியப்பு சச்சு தான் கதாநாயகி- இணை ஆனந்தன் . இது சரித்திர சமுக கலவைக்கதை -அதனால் உடை, ஒப்பனை, காட்சிகளில் சரித்திரமும் பாடல் நடனம் இவற்றில் சமூக உருவமும் தென்படுவதைக்காணலாம். . எனவே இயக்கமும் இசையும் இதே கோணத்தில் இயங்கியிருப்பதைக்காணலாம். இது ஒரு அற்புதமான பாடல் காட்சி, ஒளிப்பதிவும் காட்சியின் தாமரை /இலைகள் இன்றுகூட செய்துவிட முடியாத விந்தை. தாமரை மையப்புள்ளி [நாயகி], இலைகள் [தோழியர்] நாயகியை தோழியர் சுற்றி வருவதாக உணர்த்தும் அமைப்பு. ஆர்ட் டைரக்டர்கள் இது செய்ய இயலாது என்று மிராண்ட நிலையில் இயக்குனர் AC T  , மற்றும் வி எம் செட்டியார் அவர்கள், இதை காட்சிப்படுத்தினால் வெகு சிறப்பாக இருக்கும் என்று நினைத்து         எப்படியாவது தாமரைத்தடாகம் போல செட் அமைத்து அதுவும் பெரிய நீர்நிலையில்அப்போது தான் லாங் ஷாட் மிகவும் வசீகரமாக இருக்கும் என்று முடிவெடுத்து இரண்டொரு முறை தோல்வி அடைந்து,  பின்னர் அதே நிறுவனத்தில் செட் தயாரிக்கும் கார்ப்பென்டர்-    அவர்களது வி எம் ஸ்டூடியோ வில் பணிபுரிந்த ஆறுமுக ஆசாரியை வரவழைத்து காட்சியை விளக்கினாராம்.

அப்போது அந்த ஆசாரி செய்யலாங்களே -என்ன தெப்பம் மாதிரி மிதக்கணும், பூ சுத்தக்கூடாது, இலை தான் சுத்தணும் அவ்வளவு தானே என்று அழகாக சுழலும் அமைப்பில் செய்து அது தான் நாம் படத்தில் பார்க்கும் ரம்மியதோற்றம். கொஞ்ச நேரத்துல செய்துடலாமே என்று தெம்பூட்டி, செய்தும் கொடுத்துவிட்டு, என்னங்க தெப்பத்துல எவ்வளவு பேர் ஏறி வராங்க, ஒரு ஒரு ஆள் தானே பூவிலி யும், இலையிலியும் -நல்லா மிதக்கும் என்று உறுதி அளித்தாராம் ஆறுமுக ஆசாரி  சொன்னபடி செய்து அது தான் நாம் படத்தில் பார்க்கும் ரம்மியதோற்றம்

எளிய மனிதர்கள்-  செயல் வீரர்கள்.

மதிநுட்பம் இருக்குமிடத்தில், தொழில் நுட்பம் எதற்கு? என்று கேட்க வைக்கிறது.

1 நீலப்பட்டாடை கட்டி [வீரத்திருமகன்] கண்ணதாசன் வி- ரா, பிசுசீலா எல் ஆர் ஈஸ்வரி குழுவினர் . +இது போன்ற வேறொரு பாடல் இனம் காண்பது அரிது. ஏனெனில் பாடல் ஒரு குதூகலிக்கும் குழுவாக இயங்கும் பெண்களைக்கொண்டது , இரு பெண்கள் பதிலிறுத்துப்படுவதாக அமைந்த பாடல்.

இசையின் விறுவிறுப்பும் காட்சியின் பிரமிப்பும் புலன்களுக்கு விருந்து அதியற்புதமான பாடல்

இப்பாடலின் இசை ஒரு மகோன்னதம் அது குறித்துப்பேசும் ஞானம் இல்லாதவன் அடியேன். . நம்மை குதூகலிக்க வைக்கும் பாடல், இசை காட்சி மற்றும் அந்தக் காலத்திய கடின உழைப்பு --பாடலை கண்டும் கேட்டும் ரசிக்க

https://www.google.com/search?q=YOU+TUBE+NEELAPPATTADAI+KATTI+VIDEO+SONG&oq=YOU+TUBE+NEELAPPATTADAI+KATTI+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIGCAEQRRhA0gEJM

2 ரோஜாமலரே ராஜ குமாரி [வீரத்திருமகன் -1962] KANNADASAN VI-RA,  PB SRINIVAS                    P SUSEELA

இது ஒரு புதுமை அன்றைய திரை உலக  டூயட் வகை பாடல்களுடன் ஒப்பீடு செய்தால். பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை மாறி மாறி குரல் வலை களும், இசைப்பின்னல்களும், தோழமை குதூகல சிரிப்புகளும் என்று மிதக்கும் இசை. பி பி ஸ்ரீனிவாஸ் -பி சுசீலா குரல்களில்.

பாடலின் துவக்கமே ஆடு மேய்ப்பவன் ஊதும் குழலில் துவங்க கந்தர்வ கானம் காற்றில் உலவ கேட்கவே குதூகலம். பண்டிட் விஸ்வேஸ்வரன் [நாட்டியக்கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன்   அவர்களின் கணவர்] இந்தப்பாடலை 'சிரஞ்சீவிஎன்றே வர்ணிப்பார் , அவரும் எம் எஸ் வி யுடன் பயணித்தவர் அல்லவா? பாடலுக்கு இணைப்பு

https://www.google.com/search?q=YOU+TUBE+roja+malare+rajakumari++VIDEO+SONG&newwindow=1&sca_esv=be7ea59267233eb7&sxsrf=ACQVn0-Tw_3m51PFiAvrSKTsQeKcRQW_tg%3A1706957473742&

3 கண்ணா கருமை நிறக்கண்ணா [நானும் ஒரு பெண் -1963]

 கண்ணதாசன் - இசை  ஆர். சுதர்சனம், குரல் பி சுசீலா  

அந்த நாளில் இந்தப்பாடல் முழங்காத நாளே இல்லை. கிருஷ்ணா பக்தர்கள் உட்பட எவரும் இந்தப்பாடலை குறை சொன்னதில்லை; உண்மையான பக்தன் குமுறுவது எப்படி தவறாகும்?. ஆம் கண்ணதாசன் குமுறிய வரிகள் "என்னைக்கண்டாலும் பொறுப்பாரில்லை' - 'நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா', “எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?" இதைவிட ஒரு கேள்வி இருக்க முடியுமா?கண்ணதாசன் ஒரு க்ரிஷ்ணபக்தன், கண்ணனிடம் உரிமையோடு போராடும் தீரமும் ஞானமும் கொண்டவன் -பாடிதள்ளி விட்டார். ஆனால் பாடல் உயர்ந்து நின்றது. இசை வி எம் நிறுவனத்தின் அன்றைய ஆஸ்தானம் திரு ஆர் சுதர்சனம் தந்த இசை அற்புதம் [ வி எம் நிறுவனத்தின் சின்னம் திரையில் தோன்றும் போது ஒலிக்கும் க்ளாரினெட் இசை .  வழங்கியவர் திரு ஆர் சுதர்சனம் அவர்கள். அற்புத திறமையாளர். அவர் திறமைக்கு அடையாளம் இதே பாடல் ஹிந்தியில் இதே ட்யூன் கொண்டு வெளிவந்துள்ளது என்ற உண்மை. இதற்கு மேல் சான்று வேண்டுமோ? . பாடலை கேட்டு ரசிக்க https://www.google.com/search?q=YOU+TUBE+TAMIL+KANNA+KARUMAI+NIRAKKANNAA+VIDEO+SONG&newwindow=1&sca_esv=be7ea59267233eb7&sxsrf=ACQVn0_hr3hFKCM9Pb01dqFB5lFQLdjK2A%3A17069 1963

இந்த பகுதியை நிறைவு செய்து மீண்டும் அடுத்த பதிவில் தொடருவோம்.                                    அன்பன் ராமன்

No comments:

Post a Comment

Teacher –Beyond your Image- 3

  Teacher –Beyond your Image- 3 ஆசியர் -- உங்கள்   பிம்பத்தை தாண்டி -3 ஆசிரியயப்பணியில் கையால் ஆகாதவர்களை , அவர்களே தங்களை மாற்றிக...