Monday, March 25, 2024

SALEM SUNDARI -2

 SALEM SUNDARI -2

சேலம் சுந்தரி-2

மணி 10.45 டேவிட் அறை வாயிலில் சுந்தரி.                     சார் என்றாள். எஸ் கமின் என்றது குரல் ; நெடிதுயர்ந்த உருவம், முன் தலை வழுக்கை ஆனால் மிடுக்கான அதிகாரி .பைலை கொடுத்துவிட்டு சார் மணி 10 48 இன்னும் அவர் டூட்டிக்கு வரலை சார் என்று வத்தி வைத்தாள் . யார் வரலை? என்றார் டேவிட். இவள் பெயர் சொன்னாள் .உடனே கோபமாக கம்பியூட்டரை ஓபன் செய்து டூட்டி சார்ட் பாத்தவர் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார். இந்தாம்மா நீ இங்க வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆவுது .அதுக்குள்ள இப்பிடி கம்ப்ளைண்ட் பண்ணிக்கிட்டு வர , உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்குதா ? யார் வேலைக்கு வரலை னு HR ல வந்து சொல்றியே அவர் இப்ப டூட்டி பாத்துக்கிட்டு இருக்காரு. ; என்ன ஏதுனு தெரியாம பேசக்கூடாது இன்னொரு தடவை இந்த மாதிரி ஒளறிக்கிட்டு வந்த-- ஒன்ன சஸ்பெண்ட் பண்ணிட்டு தங்கச்சி மடம் மாதிரி ஊருக்கு ட்ரான்ஸ்பர் போட்டுருவேன் ஓடு இங்க நிக்காத என்று துரத்தினார். ஐயோ அம்மா என்று பதறி அடித்து ஓடினாள் சுந்தரி.

குதறுவதற்கு தயாராக சுப்புரத்தினம் காத்திருக்க பிடரியில் வியர்வையுடன் செக்ஷனுக்குள் நுழைந்தாள் சுந்தரி. கொலைவெறியுடன் சுப்புரத்தினம் சுட்டெரிப்பதுபோல் முறைத்தார் சுந்தரியை. "ஏம்மா நீ என்ன நெனச்சுக்கிட்டுருக்க உம்மனசுல? , HR ல போய் புகார் பண்ணிட்டு வர --ஒருவருஷமா வேலையில் இருக்கியே, யார்யார் எப்பிடிஎப்பிடின்னு தெரியாதா உனக்கு?  குடுகுடுன்னு போய் பொய் சொல்லிட்டுவர்றியே இங்க இருக்கறவுங்க முட்டாப்பயலுக னு நெனைச்சிட்டீங்க போல தெரியுது அதுனால தான் இப்பிடி வேலையெல்லாம் பாக்கறீங்க. .ஆமா போறதுக்கு முன்னால எங்கிட்ட கேட்டுருந்தா என்ன ஏது னு பூரா விவரமும் சொல்லிருப்பேனே. அதைவிட்டுட்டு HR CHIEF கிட்ட போய் சொல்லலாமா?                                    ஒரு ஆபீஸ் னா .வெவ்வேற செக்ஷன் வேற வேற மாதிரிதான் செயல் படும். சில போஸ்ட் ல இருந்தா ஆபீஸ் டைம் பாத்து வேலை செய்ய முடியாது அப்போ அவங்க ட்யூட்டி பார்க்கிறார்களா இல்லையாங்கிறது ஆபீசுக்குள்ள இருந்துகிட்டு பேச முடியாது. இப்ப ஒரு டாக்டர் அறுவைசிகிச்சை பண்றார் மணி 5.00 ஆயிடுச்சு னு குட லை திறந்துபோட்டுட்டு நாளைக்கு 10.00 மணிக்கு பாப்போம் னு சொல்ல முடியுமா? மணி என்ன ஆனாலும் இருந்து முடிச்சுட்டு தான் போவாரு . அப்ப ராத்திரி வேல பாத்தே னு  னு பகல் ல வராம இருக்க முடியுமா? ஒரு 1/2 மணி லேட்டா வந்தா உடனே HR ல போய் புகார் சொல்ல முடியுமா?  இதெல்லாம் யோசிக்காம குடுகுடுன்னு ஓடிப்போய் பேசுறிங்களே    அம்மா அதுவும் யார் மேல ?          HR CHIEF உங்கள திட்டி அனுப்புனாரே -அழுதுகிட்டு ஓடிவரீங்களே இப்ப நீங்க தானே மாட்டிக்கிட்டேங்க? இனிமே உங்கள ரொம்ப கண்காணிப்பாங்களே, வலியப்போய் சுருக்கை எடுத்து மாட்டிக்கிட்டு நிக்கிறீங்களே. அனுபவமில்லைங்கறது நல்லா  தெரியுது. 

என்ன ஒரு வருத்தம் னா அந்த ஆளை போய் சொல்லி வத்தி வெக்கிறீங்களே , கடவுளுக்குகே அடுக்காதம்மா என்று சுப்புரெத்தினம் வருத்த உணர்வுடன் பேசினார்.

சாரி சார் ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன் , பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்குங்க என்று கண்கள் சிவக்க விசும்பி புடவைத்தலைப்பால் கண்ணை துடைத்துக்கொள்ள இப்போது ஹோட்டல் தோசை தொப்பை உள்வாங்கி இருந்தது.என்பதை சுப்புரத்தினம் பார்த்துவிட்டார் .சீ ML இல்லை போலிருக்கு என்று புரிந்து கொண்டார். இதற்கிடையில் சுந்தரிக்கு ஒரே உதறல் நான் HR செக்ஷனில் இருந்து வரும் முன் நடந்ததை புட்டு புட்டு வைக்கிறார் சுப்புரத்தினம் ;இனிமேல் என் வார்த்தை எல்லாம் சந்தேகிக்கப்படுமே என்று வருந்தினாள் .

போயி இந்த 2 லெட்டர் TYPE பண்ணி ROUGH COPY கொண்டாங்க என்று அனுப்பிவைத்தார் சுப்புரத்தினம்.

தொடரும்

அன்பன் ராமன்

BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE -6

 BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE -6

பயோடெக்னாலஜி--தாவர திசு கல்சர் -6

பயோடெக்னாலஜி துறையின் துவக்கம் சுமார் 35-40 ஆண்டுகள் முன்னம் நிகழ்ந்தது. பொதுவாகவே எந்த ஒரு குறிப்பிட்ட கல்வித்திட்டமும் , முற்றாக ஒரு பிரிவின் வளர்ச்சி என்பதே ஏற்க இயலாத கருத்து தான். நாம் பல உதாரணங்களைக்காண /காட்ட இயலும். கம்பியூட்டர் என்ற பிரிவின் வளர்ச்சி நிகழ்ந்தது எப்படி எனில் துல்லியமான கணித முறைகள்/ எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் அசுரவளர்ச்சிக்கு வித்திட்ட டிரான்சிஸ்டர் வகைகளின் விரிவாக்கம் மற்றும் ட்ரான்ஸிஸ்டர் டெக்னாலஜியின் .ஆதிக்கம் வேறு பல துறைகளில் வியாபகம் என்று நிகழ அதன் ஒரு பரிமாணம் கம்பியூட்டர் என்ற பெயரில் இயங்கத்துவங்கியது. அதன் வித்து பைனரி சிஸ்டம் என்ற கணிதவியல் அணுகுமுறையில் அமைந்தது 

இன்னும் சொல்லப்போனால் இந்த பைனரி நிலையின் உள்ளார்ந்த லாஜிக் பூலியன் லாஜிக் [boolean logic] எனப்படுவது . அதாவது ஒவ்வொரு தகவலையும் வகைப்படுத்த ஆம் [1] அல்லது இல்லை [0] என எண் அடிப்படையில் பிரித்து தொகுப்பதே கம்ப்யூட்டிங் எனப்படுகிறது. இது காலப்போக்கில் பலவேறு தொகுப்பைகளாக அவ்வப்போது பரிமளித்து அவை கம்பியூட்டர் மொழிகளாக [ computer languages -pascal , cobol , c , c +, , c ++, என்றெல்லாம் முழங்க திடீரென்று ஜாவா , என்று ஒரு திருதராஷ்ட்ர கூட்டம் போல உலவி , இந்த உலகே கம்ப்யூ ட் டர்  தான் என்று தலைகீழாகப்போய் , பிசிக்ஸ் ஆ அப்பிடீன்னா என்று கேலி பேசிய பெற்றோர் ஒருபுறம், கம்ப்யூ ட் டர்அதுவே எதிர்காலம் என்று உண்மையிலேயே நம்பி 6 மாத சான்றிதழ் கல்வி பஸ் ஸ்டாண்ட் மாடியில் வகுப்பில் சேர்ந்து சான்றிதழ் பெற்று , வேலை வேலை என்று அலையும் போது , கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கம்பியூட்டர் பயிற்சி பெற்றோர் வேலைக்கு , 1000/-ரூபாய் சம்பளம் 1980களில்.

20 ஆண்டு அனுபவ பேராசிரியரின் அன்றைய ஊதியம் 1800/- மக்கள் மதி மயங்காதா என்ன?  உடனே கொத்துக்கொத்தாக 10ம் வகுப்பு முடித்தவர்கள் கம்யூட்டர் பயில கம்பியூட்டர் கீ போர்ட் இயக்கத்தெரிந்து கொண்டு -கம்பியூட்டர் பயின்று விட்டதாக மாய வலையில் சிக்கி வாழ்வை தொலைத்தவர் பலர்.

இந்த மயக்கம் விரிந்து பரவ பல கல்லூரிகள் கம்ப்யுட்டர் சயன்ஸ் பிரிவை துவக்கினர் ;அவற்றை அன்று நிர்வகித்ததோர் Physics / Maths பேராசிரியர்கள்; ஏனெனில் கம்பியூட்டர் துறையில் உயர் பட்டம் பெற்றோர் எவரும் இல்லை. இப்படியாக உருவெடுத்த துறை இன்று IT [INFORMATION TECHNOLOGY ] என்று விரிவடைந்துள்ளது. இவ்வளவு விளக்கம் என் எனில் எந்த துறையும் பிற துறையின் பங்களிப்பு இன்றி உருவாக வாய்ப்பில்லை. இந்த அடிப்படையை புரிந்து கொண்டே பயோடெக்னாலஜி பற்றி பார்ப்போம். இதன் ஆணி வேரா க இருப்பவை செல்பயாலஜி,,மாலிக்குலர் பயாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி ; செயல் பயிற்சிக்கு உதவுவது மைக்ரோபயாலஜியின் அடிப்படை உத்திகளான,, மீடியா, விரைந்து செயல்படும் INOCULATION பயிற்சி மற்றும் , ASSAY எனப்படும் ஆய்வு முறைகள் . இவற்றை பின்பற்றிச்செயல்படும் போது , எதிர்ப்படும் சவால்களை புதிய அணுகுமுறைகள் கொண்டு முறியடித்து முன்னேறவேண்டும்.. சொல்லப்போனால் பயோடெக்னாலஜி கல்வி, முற்றிலும் செயல் முறைகள் சார்ந்ததே.;ஆகவே தான் முறையான பயிற்றுக்கூடங்கள் பேராசிரியர்கள் இருப்பதை உறுதி செய்துகொண்டு அவ்விடங்களில் பயில தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அவ்வப்போது வலியுறுத்தி வருகிறேன்.

அடிப்படையில் பயோடெக்னாலஜி என்ன செய்ய முயல்கிறது எனில் விரைவான / நிறைவான வேளாண் உற்பத்தி, பயிர்காத்தல், அறிய மூலிகைகளை பராமரித்தல், மனித நோய்களை ஒழிக்கவல்ல மருந்துகளை போதிய அளவில் உற்பத்தி செய்தல் [கொரோனாவிற்கு, எவ்வளவு விரைந்து, வாக்சின்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன என்று நினைவு கூறுங்கள். பயோடெக்னாலஜி முறைகள் இதை நிறைவேற்றின என்பதை உணருவோம்

மனித உடலில் இயற்கையாக சுரக்க வேண்டிய ஹார்மோன் கள் , என்சைம்கள் செயல் படாத போது, அந்த சுரப்பிகளை தூண்டலாம் அல்லது நேரடியாக பிற வழிகளில் கிடைக்கும் ஹார்மோன்கள் , என்சைம்கள் இவற்றை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு / செயல்  திறனை மேம்படுத்தலாம். உதாரணமாக இன்சுலின் -நீரழிவு முதல் வகையினருக்கு ஊசி மூலம்செலுத்தப்படுகிறது.. இந்த இன்சுலினை குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களை க்கொண்டு பயோடெக் முறைகளில் உற்பத்தி செய்கின்றனர். மனித வகை இன்சுலினை /பிற வகை என்சைம்களை பாக்டீரியாக்களின் உதவியால் பெறமுடிகிறது . எப்படி எனில்,    அந்த என்சைம்களுக்கு வழிகாட்டும் ஜீன் தொகுப்பினை [GENE CLUSTER ] பாக்ட்ரியாவின் உடலமைப்பில் நுழைத்து உரிய சூழலை [ENVIRONMENT ] உருவாக்கினால் , அவை அந்த என்சைம்களை வெளியேற்றும் ;அதை எடுத்து சுத்திகரித்து பயன் பாட்டுக்கு கொண்டுவருகின்றனர். பாக்டீரியாக்களுக்கு அந்த என்சைம் தேவையே இல்லை , எனவே இயற்கையில் அந்த என்சைம்கள் வேறு உயிரினங்களுக்கானவை ;ஆனால் ஜீன் தகவல் அடிப்படையில் இந்த என்சைம்கள் பாக்டீரியாவினால் உற்பத்திசெய்ய வைக்கப்படுகிறது .ஒரு உயிரினத்தைக்கொண்டு வேறொரு [மனித]உயிரினத்திற்கான தேவை ஈடு செய்யப்படுகிறது.. இவ்விடத்தில் தான் படைப்பின் ரகசியம் உணரப்பட வேண்டும் .1] ஜீன் எங்கிருந்தாலும் அதன் செயல் ஒன்றுதான். 2 ]ஜீன் தானாக இயங்குவதில்லை ;ஏதோ ஒரு செல்லினுள் அமைத்தால் அது பேசும் , அதன் மொழி சங்கேத மொழி . எல்லா உயிரினங்களும் ஒரே சங்கேத அடிப்படையில் இயங்குவதால், அதை UNIVERSAL   GENETIC CODE என்று அங்கீகரித்துள்ளனர். இதை புரிந்து கொண்ட பின்னர் தோன்றிய துறை தான் ஜெனெடிக் என்ஜினீயரிங் [GENETIC ENGINEERING ]. இது பெரிதும் விவிரிவடைந்து பல்வேறு புதிய வகை தாவர , விலங்கு, மீன் போன்றவற்றை உருவாக்கும் அளவிற்கு மேம்பட்டுள்ளது. எனவே அன்பர்களே பயாலஜியில் என்ன இருக்கிறதென்ற 1935ம் ஆண்டின் வசனத்தை இனியும் பேசாதீர்கள் ஏனெனில் அது [இன்றைய பயாலஜி] PERSONALIZED THERAPY என்ற தனி மனித வைத்திய முறை நோக்கி வேகமாக ஸ்டெம் செல் முறைகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. எனவே எதையும் நன்கு அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டிய தகவல்கள் பெருகி வருகின்றன ;புரிந்து கொள்வோம்

            --- நிறைவு ---                                                                                 நன்றி

அன்பன் ராமன்  

Sunday, March 24, 2024

K S GOPALAKRISHNAN

 K S GOPALAKRISHNAN

கே எஸ் கோபாலகிருஷ்ணன்  

தமிழகத்தின் பிரபலமான இயக்குனர்களில் நன்கு அறியப்பட்டவர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முக திறமையாளர். தஞ்சை மாவட்டத்தவர்

ஒரு பாடலாசிரியராக KSG வழங்கிய ஆரம்பகாலப்பாடல் ஒன்று

1 "மண்ண நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா " அது ஒரு நகைச்சுவைபோல் தோன்றும் ரொமான்டிக் பாடல் . குரல்கள் எஸ்சி கிருஷ்ணன் , ஜிக்கி  இசை மாஸ்டர் வேணு.  படம் எங்க வீட்டு மகாலக்ஷ்மி [1957] . திரு தங்கவேலுவுக்கு எஸ் சி கிருஷ்ணனின் குரல் பொருந்துவது ஒரு போனஸ்.  இப்பாடல் அந்நாளில் பட்டி தொட்டி எங்கும் முழங்கியது , ஆனால் கே எஸ் கோபாலக்ருஷ்ணனின் பாடல் என்பது ஏன் தெரியாமலே இருந்தது -எனக்கு விளக்கம் இல்லை. கேட்டு மகிழ இதோ இணைப்பு 

https://www.youtube.com/watch?v=8ELOoMefiew ‘MANNAI NAMB’I  ENGA V MAHALAKSH 1957 SCK JIKKI MD MASTER VENU

இயக்குனராக KSG அவர்கள் பெரிதும் பேசப்பட்டது "சாரதா" படத்தின் மூலம் தான் என்பது எனது புரிதல் 

"சாரதா" 1962

இதில் இடம் பெற்ற ஒரு பாடல்

2 "மணமகளே  மருமகளே வா வா "பாடல் பஞ்சு அருணாச்சலம் [அவருக்கு இதுவே முதல் பாடல் -"சாராதா 1962, இசை கே வி மகா தேவன் . குரல் கல் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜெயலட்சுமி, எல் ஆர் ஈஸ்வரி, அஞ்சலி [LRE இன் தங்கை]. இதுபோன்ற காட்சிகளும் பாடல்களும் சினிமாவை விட்டு ஓடி சுமார் 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாடல் எழுதவும் இசைக்கவும் உரிய மனங்கள் இன்றைய திரை உலகில் , பாயாலஜி மொழியில் சொல்வதென்றால் "EXTINCT " என்றே அழைக்கவேண்டியது தான் . பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=TAMIL+NG+%27MANAMAGALE+MARUMAGALE+VAA+VAA%27+VIDEO+SONG&oq=TAMIL+NG+%27MANAMAGALE+MARUMAGALE+VAA+VAA%27+VIDEO+SONG+&gs_lcrp=E

கற்பகம் -1963

இந்தப்படம் பல விசேஷங்களை உள்ளடக்கியது , மட்டுமல்ல சில முக்கியஸ்தர்களின் வாழ்வில் விளக்கேற்றியது எனில் 100க்கு 100 உண்மை.. விசேஷங்கள் எனில் இறந்த மனைவியின் நினைவில் சிக்கி புதுமனைவியை ஏற்க மறுக்கும் நிலையில் கணவன்,  அதை தெளிவாக்க மறைந்தவளே வந்து வாதிடும் பாடல், காதலைச்சொல்லும் பாடல்கள், என்று அனைத்தும் பி.சுசீலா வின் குரலில். [இது ஒரு சுசீலா MOVIE எனில் மறுக்க முடியாது ]

இது ஒரு புறம் இருக்க , கவிஞர் வாலி தனது  வாழ்வில்  கால் ஊன்ற போராடிக்கொண்டிருந்த தருணம் . அவருக்கு உறுதுணை நின்றவர்கள் , நாகேஷ், வி கோபாலகிருஷ்ணன் , மற்றும் பழைய நடிகர் ஸ்ரீகாந்த். அந்த நிலையில் ஒரு பாடல் எழுத அவசரமாக கவிஞர் கிடைக்காமல் போக யாரோ சொல்ல வாலி வந்து சேர்ந்தார் . அவர் எழுதிய முதல் பாடல்

3 1000 இரவுகள் வருவதுண்டு ஆனால் இது தான்"  இந்தப்பாடலில் வரும் சரணத்தில் யாரோ சொன்னார் கேட்டேன்என்றொரு வரி வருகிறது அது ஏன் "யாரோ சொன்னார் கேட்டேன்" என்று  திரு KSG கேட்க, வாலி சொன்னார்

கதையில் பாடும் பெண் திருமணம் ஆகாதவள் , பாடலோ ,முதலிரவு சார்ந்தது அதனால் "யாரோ சொன்னார்" என்று கேள்விஞானம்  தான் என்று உணர்த்துகிறாள் " KSG க்கு இந்த விளக்கம் ஆழ்ந்த தாக்கம் கொடுக்க , படத்தின் எல்லா ப்பாடல்களையும் வாலி யே எழுதட்டும் என்று முடிவெடுத்தார். ஆகவே எல்லாப்பாடலு ம் வாலி -சுசீலா இருவரின் பங்களிப்பே.

 இந்தப்பாடலில் எம் எஸ் வி  பூடக உணர்த்தல் முறையில் இரண்டாம் வரியின் இறுதி சொல்லை பாடாமலே இசைக்குறியீடுகளால் தெளிவாக்குவதைக்காணலாம்[ இதே உத்திதான்  காற்றுவந்தால் தலை சாயும் நாணல் " பாடலிலும் காண்கிறோம்]             

 கிட்டத்தட்ட வாலி வேரூன்றியது போலவே கே ஆர் விஜயாவும் நட்சித்திர நிலை எட்டியது இந்தப்படத்தின் மூலமே என்பதே இந்த படத்தின் தன்மைகளை விளக்க வல்லது. இன்னொரு கொசுறு தகவல்

இப்படத்தின் வெற்றிக்குப்பின்னர் தான் KSG ஒரு ஸ்டூடியோ நிர்மாணித்து [கற்பகம் ஸ்டுடியோ] நிர்வாகியாகவும் ஆனார். இயக்குனர்களில் ஸ்டூடியோ நிர்மாணித்தவர் KSG ஒருவர் மட்டுமே என்று என் நினைவு. வாலி, வி -ரா, சுசீலா கூட்டணியில் வந்த பாடல் பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=TAMIL+SONG+1000+IRAVUGAL+VARUVADHUNDU+%22VIDEO+SONG&oq=TAMIL+SONG+1000+IRAVUGAL+VARUVADHUNDU+%22VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYO

 

கை கொடுத்த தெய்வம்" தேச ஒற்றுமையை நினைவுபடுத்திய படம்  எனவே பாரதியாரின் பாடல்

4 "சிந்து நதியின் மிசை நிலவினிலே " பாடலை வைத்தார். இந்தப்பாடலின் வானுயர வெற்றிக்கு காரணம் அதை இசை அமைத்திருந்த பங்கு எனில் முற்றிலும் உண்மை. பாடலைக்கேட்டதும் நம்மை பரவசம் தொற்றிக்கொள்வதை உணரலாம்.. வேறு மொழிகளை உள்ளது உள்ளபடியே பாடவைத்து, கோரஸ் இணைத்து பாடலை வானில் விரிந்து படரச்செய்த விஸ்வநாதனை பாராட்ட என்ன சொன்னாலும் தகும் . மீதி தேவைகளை சிவாஜி கணேசன் வெகு நேர்த்தியாக நிறைவு செய்துள்ளார்                                      இந்தப்பாடல் இலங்கை / இலங்கை வானொலியில் தடை செய்யப்பட ஒன்று  .                                                                       "சிந்து நதியின் மிசை நிலவினிலே" {கைகொடுத்த தெய்வம் -1964] மஹாகவி சுப்ரமணிய பாரதி, வி-ரா, குரல்கள், டி எம் எஸ், LR ஈஸ்வரி, ராகவலு மற்றும் குழுவினர் . இணைப்பு 

https://www.google.com/search?q=TAMIL+SONG+SINDHUNADHIYIN+MISAI+NILAVINILE+VIDEO+SONG&oq=TAMIL+SONG+SINDHUNADHIYIN+MISAI+NILAVINILE+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBg

வளரும்

அன்பன் ராமன்

INTERVIEW

        

                                                                    INTERVIEW                                                          

 Having seen the present situation, it sounds appropriate to consider critical elements in an interview. Interviews are occasions of value to the employer and the prospective employees. It is not a session to show up ‘what one considers of self’. The panel doing a selection is a group of mature minds, keen in observation and incisive in analysis. They can clearly segregate eagerness to present ideas from those that are aimed at putting up high profile appearances to win over. Caution shall be the watchword of a jobseeker. Please recognize that your presentation must drive the panel to draw inferences, instead of your making claims of supremacy. Speaking the minimum and ‘to the point’ are the two important approaches that one has to cultivate as a part of one’s personality.

Often the panelists on an interview are seniors. Candidates seeking jobs should not assume for a moment that the ‘old seniors’ are not abreast of current trends in Industry or Science. Indeed, these senior members are as much alert and their panoramic view is big and wholesome. On the contrary, the young jobseeker may be sound in theory with little or no specific training in operative applications. Keeping these in mind, every jobseeker should respond to questions in a revealing manner that the candidate is sincere and open. It is not wrong to submit that ‘I do not know much’; please avoid telling ‘I will learn it in no time’. Such utterances reflect poor attitude and calculated gamble to win over the selectors. The bottom line is the jobseeker should reflect ability, politeness of disposition, willingness to learn. These will evoke the correct level of admiration from the panelists and would help the candidate in a suitable way. In exercising the caution of modesty, candidates should not sound submissive / slavery, which no one likes.      

   GOING ABOUT AN INTERVIEW

While the broad philosophies of interview have been said, it really matters as to how one can make his chances of selection brighter. Everything begins from ‘how does one look’?  Present yourself in a dress that is not repulsive. Social acceptability is different from ‘official dress code’. In modern days, the candidates are observed for their disposition long before they come to the chamber for interaction. So, chattering in the lobby with fellow candidates is a thing to avoid scrupulously. Chances are fellow competitors may be our classmates; that does not confer the freedom on us to lustily chirping through the corridors of the organization. Also, better we avoid the attitude of speaking to peons and menials of the constituents of the selection panel and trying to find out their residence and contacts in a bid to influence them. These attempts throw the signal that we need someone’s mercy as we are not confident of ourselves. Till such time that your turn comes, stay in a place; never peep into the chamber through the window or the half closed door. Such a disposition suggests a sneaky behaviour, no matter how talented you are. Once into the chamber, wait for the panel’s request to get seated. Before taking seat say ‘Thank you’ to all members by individually looking at each. Speak in a clear voice and a decibel quite audible. Do not murmur. Respond to the panelist and to the question in the same language. If you do not grasp the question, never say ‘please repeat the question’. Instead, appeal ‘may I have the advantage of a second listening?’ For items that you do not know, simply suggest ‘I am not too sure’. Always look and answer face to face. Do not keep looking at a distant planet. Speak to the member who has posed the question. Please avoid displaying your Mark sheets, Sports / Conduct certificates as you feel high of them. Please do not try to draw attention to your ‘District First’ claims. Leave a photo copy to the panel. It is a polite indicator of your confidence.  While leaving the place, thank them for the opportunity. Fine nuances help.      

IS LEARNING BITTER?- 4

 IS LEARNING BITTER?- 4

கல்வி கற்றல் கசப்பானதா? -4

ஆம் என்போர் அதிகம், இல்லை என்போர் சொற்பம் . இதுவே நாம்                                    களத்தைப்புரிந்துகொள்ள , சரியான துவக்கப்புள்ளி. இது ஏன் துவக்கப்புள்ளி என்று பார்க்கிறோம்? ஒன்றுமறியாத நிலையில் தான் கல்வியை பயில துவங்குகிறோம். ஆம் ஒரு மாணவர் பி எஸ் சி கெமிஸ்ட்ரி முதல் ஆண்டில் சேரும் போது -உண்மையிலேயே அவருக்கு செயல்வினைகள் [REACTIONS ] குறித்த ஆழ்ந்த புரிதல் இருக்காது . ஒரு சில குறியீடுகள் [SYMBOLS ], FORMULAE என்னும் சூத்திரங்கள் , சமன்பாடுகள் [EQUATIONS ] அறிந்திருப்பார். . எனக்கு கெமிஸ்ட்ரி நன்கு தெரியும் நான் ப்ளஸ் 2 வில் கெமிஸ்ட்ரியில் 196/200 என்று பேருவகை கொள்வார். இவ்வளவு இருந்தாலும் கெமிஸ்ட்ரி கல்வியில் பட்டப்படிப்புக்கு சேர்ந்துள்ள கட்டத்தில் அவர் கெமிஸ்ட்ரியில் LKG என்ற புரிதலே முதலில் ஏற்பட வேண்டும். அது ஏற்படுவதில்லை. ஒருசில பள்ளிச்சூழல்களில் வளர்ந்த 17-18 வயதினர் தாங்கள் +2 வில் பெற்ற மார்க் என்ற போதையில் இருந்து மீளாமல் மனதளவில் சிறகடித்து வகுப்புகளை சரியாக கவனிப்பதில்லை. ஒரு சிலர் தாங்கள் கரைகண்டவர் போல் வகுப்பு நடைபெறும் தருணங்களில் கேள்விகேட்டு குறுக்கீடு செய்து தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வர். இதனால் EGO என்னும் [தன்  முனைப்பு ]அவர்களை ஆட்கொள்ளுகிறது அதுவே நாளடைவில் ஆட்கொல்லி ஆகிறது. இதுபோன்ற கற்பனை பெருமைகளை முளையிலேயே கிள்ளி எறிதல் மன வக்கிரங்களை தடுக்கும். இதை வளரவிட்டால் மனவக்கிரம் வளரும், மனிதன் வளர்வது தடைபடும்.    இதுபோன்ற சில செயல்களுக்கு மாணவர்களின் ஆங்கில புலமை ஒரு பெரும் காரணி என்பது வருத்தத்திற்குரியது. ஆங்கிலம் சரியாக பேச த்தெரியும் என்பதால் கல்லூரிவகுப்புகளில் சிலர் கேள்விகளை எழுப்புவர்.

இங்கே தான் ஆசிரியன் விஸ்வரூம் எடுக்கவேண்டும் ;அந்த நிலைக்கு ஆசிரியன் நொடிப்பொழுதில் 300அடி உயரத்தினுச்சியைத்தொட்டு , தம்பி இந்த த்தகவலைப்பார் என்பதாக ஒருஉயர்மட்ட கோட்பாடுதனை சுட்டிக்காட்ட , அதையும் சண்டமாருதம் போல படபட என்று விரைந்து பொரிந்து தள்ள , அக்கணமே, மாணவனின்  பிம்பமும் , அவனது அகம்பாவமும் தவிடுபொடியாகி பலர் முன்னிலையில் அம்மண நிலைக்கு தள்ளப்படுவான். பல ஆசிரியர்கள் இதை செய்யாமல் சிறுவன் போகிறான் போகட்டும் என்று மென்போக்கு [SOFT APPROACH ] கொள்ள மேலும் சிலர் இதே வேலையை வேவ்வேறு வகுப்புகளில் பின்பற்ற , வகுப்புகளில் எனோ தானோ என்று போதிக்கும் சூழல் மெல்ல விஸ்வரூபம் கொள்கிறது. இதனால் தான் ஆசிரியப்பணிக்கு வரவிரும்புவோர் மொழி ஆளுமைகளை சிறப்பாக வளர்த்துக்கொண்டால், சிறுவர்களின் கிண்டலுக்கு உட்படத்தேவை இல்லை .

இதை சொன்னால் தமிழகத்தில் பலருக்கும் உடல் எரிகிறது ;அவர்களின் குறையை பட்டியலிடுவதாக நினைக்கின்றனர். உண்மை என்னவெனில், அவர்களின் உண்மையான உயரம் பல்ருய்க்கும் புலப்பட மொழி ஆளு மை ஒரு வலுவான கருவி.. விளக்கம் வேண்டுவோர் இந்த பெயர் கொண்ட மனிதர்களை பற்றி சிந்தியுங்கள், 1 தமிழருவி மணியன், 2 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்/ அமைச்சர் திருமதி ஸ்ம்ருதி  இரானி , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -இவர்களின் பிம்பங்களுக்கே அடித்தளம் அவர்களின் மொழியின் துல்லியம் மற்றும் நுணுக்கமான சொல்லாட்சி.. இதை [மொழியை] புறக்கணித்த எவரும்  உச்சம் தொட முடியாது. அல்லது எவ்வளவு ஆழ்ந்த புலமை இருப்பினும் அவருடன் மொழிவளமும் சேரும்போது , அவருயரமும் பிம்பமும் அதிகப்படும். ஒருவகையில் சில அரசியல் தலைவர்களின் 'உயரமான ' தோற்றம் கூட மொழியின்  கொடையே . எனவே எனக்கெதற்கு அது என்பவர்கள் எளிதில் கைப்பற்ற வேண்டிய பொக்கிஷங்களை பற்றிக்கொள்ள தவறிய தடுமாறிகள் என்பதை காலம் உணர்த்தும்..

குறிப்பாக ஆசிரியப்பணியில் உயரம் தொட்டு ஆசான் நிலையை அடைய , தொடர்ந்து தகவல் திரட்டலும் , அவற்றை முறையாகத்தொகுத்தலும், சிறப்பாக வெளிப்படுத்த உரிய மொழியாளுமையும் மிகமிக வலு சேர்ப்பன. எவ்வளவு தகவல் இருப்பினும் அதை எளிமையாக இனிமையாக தெளிவாகச்சொல்ல மொழியின் உதவி புறக்கணிக்கத்தக்கதல்ல. இதுதான் கல்வியில் கசப்பை விதைக்கவோ, அகற்றவோ உதவும்.

மொழியின் திறன் குன்றி சொதப்பும் ஆசிரியன் வெறுக்கப்படுவதும் , முறையாக தெளிவுபடுத்திய ஆசிரியன் ஏற்கப்படுவதும் போற்றி வணங்கப்படுவதும் -மொழியினால் கிடைத்த பலனே. ஏன் இந்த வேற்றுமை? இருவரும் கல்வித்தகுதிகளால்  சமமானவர்களே , செயல் திறன் மாறுபாட்டினால் விளையும் வேற்றுமை என்பது தெளிவாகிறது.

இவ்விடத்தில் ஒரு கேள்வி ?

எந்த ஆசிரியராவது மோசமான ஆசிரியர் என்ற பட்டத்தை விரும்பி ஏற்பாரா? மாட்டார் ஆனாலும் தன ஒரு திறமையாளன் என வெளிப்படுத்தவே விரும்புவார், முயல்வார். என்ன முயன்றாலும் இங்கே மொழி எனும் ஆதார அஸ்திவாரம் வலுவின்றி இருப்பதனால் எந்த புது முயற்சியையும் முன்னெடுக்காமல் 10ம் வகுப்பு ஆங்கிலம் போதும் என்று செயல் படுகிறார். நல்ல பயிற்சி தரும் பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள்  , இது போன்ற ஆசிரியர்களை விரும்புவதில்லை மாறாக கேலிப்பொருளாக ப்பார்க்க தலைப்படுகின்றனர். இவரிடம் பயில வந்தவன் இவரை துச்சமாகப்பார்க்க பெருமை அந்த ஆசிரியரையே சாரும் . எந்தக்கூட்டத்திலும்           

கேட்பவன், ஏதுமறியாதவன் என்பது தவறான கண்ணோட்டம். கேட்பவனுக்கும் தெரிந்திருக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு செயல் படுதல் நன்மை தரும்.

தெளிவாகப்பேசும், ஆர்வம், திறன், அக்கறை இல்லாதவர்கள் ஆசிரியப்பணியை விட்டு விலகுதல் அனைவர்க்கும் பயன் தரும். கற்பிக்கும் உத்திகளை கைக்கொள்ளாமல் , கேட்போரை வசைபாடுதல் நேரவீணடிப்பு என்பது தான் உண்மை. செய்ய வேண்டியது என்ன ? வரும் பதிவில் காண்போம்  

வளரும்

அன்பன் ராமன்

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...