Sunday, March 10, 2024

BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE TECHNOLOGY -3

BIOTECHNOLOGY- PLANT TISSUE CULTURE TECHNOLOGY  -3

பயோடெக்னாலஜி -தாவர திசு வளர்ப்பு -3

விலங்குவகை திசுக்களைவிட தாவர வகை திசுக்களை வளர்ப்பது எளிதெ ன்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன் அதன் விளக்கம் தாவர்த்திசு வளர்ப்பு க்கு சில அடிப்படை உப்புக்கள் சில நைட்ரோஜன் வகை உணவுப்பொருள் [உப்பு கள்] ,சில வைட்டமின்கள் இவற்றை உரிய விகிதத்தில் தரும் அமைப்பை [மீடியம்] உருவாக்கி , நமது தேவைக்கான திசுவை மேலாக அமரவைத்துவிட்டால் மெல்ல மெல்ல திசுவில் செல் எண்ணிக்கை அதிகரித்து சிறிய காலி பிளவர் போல் கொத்துக்கொத்தாக வளரும். அதைப்பார்த்தால் இதுவா செடியா என்று கேட்கத்தோன்றும்.. தொடர்ந்தும் இதை பராமரிப்பது அவசியம். இந்த நிலையில் இருக்கும் திசு -காலஸ் [CALLUS]  எனப்படும். ஓரிரு வாரங்களில் [-25-35 நாட்களில் ]   காலஸின் மேற்பரப்பில் திட்டு திட்டாக பசுமை நிறம் தோன்றும்.. தொடர்ந்து இதே வகை பராமரிப்பு நீடிக்கலாம்.. சில தேவைகளுக்கு இந்த பசுமை தொகுப்புகளை தனித்தனியே பிரித்து மீண்டும் சோதனைக்குழாய்களில் [TEST TUBES ]/குடுவைகளில் [FLASK ] வளர்க்கலாம்.   பிரிக்கப்பட்ட துகள் ஒவ்வொன்றும் தனி தாவரமாக உருவெடுக்கும் திறன் படைத்தது. வேர் இருந்தால் இலையை , இல்லை இலைஇருந்தால் வேரை  உருவாக்கிக்கொள்ளும் திறன் கொண்டவை தாவர திசுக்கள் .இதுபல்திறன் உடையது என்பதால் இப்பண்புக்கு TOTI POTENCY [டோட்டி பொடென்ஸி] , அதாவது TOTAL POTENTIAL அல்லது மொத்தத்திறன் என்றழைக்கப்படுகிறது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி மேம்பட மேம்பட, இந்த திறன் குறைந்து விடுவதால் விலங்கு திசுக்களை வளர்க்க முழு கவனமும், தேவைகளும் அதிகம் . 

இவ்வாறு ஒரு திசுவில் இருந்து பல தாவரங்களை உருவாக்கிக்கொள்ளலாம். ஒவ்வோறு தாவரத்தையும் குறிப்பிட்ட உணவுவகை பராமரிப்பின் மூலம் வெவ்வேறு பண்புகள் கொண்ட காய் /கனி/ விதை என வேண்டிய பொருளை தரவல்ல தாவர அமைப்புகளை உருவாக்கலாம்.. இதனால் நமக்கு என்ன பயன்  என்றால், அரியவகை மூலிகைகள், மரங்கள் இவற்றை அழியாமல் காப்பாற்ற முடியும். மேலும் குறிப்பிட்ட வகை எண்ணெய்கள் , வாசனை திரவியங்கள் , சந்தன எண்ணெய் , குங்குமப்பூ போன்ற பொருள்களை திசு கல்சர் முறையில் ஏராளமாக உருவாக்க ஏக்கர் கணக்கில் தோட்டம் இல்லாமலே செய்ய இயலும்.

மேலும், கொடியவகை நோய்களுக்கான குறிப்பிட்ட வகை தாவர மருந்துகளை எந்த நாட்டிலும் தயாரித்துவிட முடியும். சில பிரத்தியேக கேன்சர்களுக்கான மருந்துகள் /அவற்றை உருவாக் கும் தாவரங்கள் அழிந்து விடாமல் பாதுகாத்துக்கொள்ள திசு கல்சர் பேருதவி புரிகிறது. சில பிரத்தியேக கேன்சர்களுக்கான மருந்துகள் /அவற்றை உருவாக் கும் தாவரங்கள் அழிந்து விடாமல் பாதுகாத்துக்கொள்ள திசு கல்சர் பேருதவி புரிகிறது. குறிப்பாக periwinkle எனும் நித்யகல்யாணி செடியில் இருந்து சிலவகை கேன்சருக்கான அல்கலாய்டு மருந்துகள் -vincristine வின் கிரிஸ்டின் ரத்தப்புற்றுநோய் [blood cancer -leukemia] தடுக்க வல்லது  ,vinblastine வின்ப்ளாஸ்டின் திசுக்களில் கான்சர் [carcinoma] தடுக்க வல்லது இவ்விரண்டும், தனித்தனியே பெறப்படுகின்றன. இவற்றிற்கான ஜீன் அமைப்பை துல்லியமாக கணித்தால் இவ்வகை அல்கலாய்டுகளை பயோடெக்னாலஜி உதவியால் விரைந்து தயாரிக்க இயலும். இவை பரீட்சார்த்த நிலையில் உள்ளன.

மேலும் புதிய முறைகளைக்கொண்டு ,  விரைவான அளவில் முக்கிய தாவரங்களை உற்பத்தி செய்தல், ஊட்டம் மிகுந்த தானியங்களை தோற்றுவித்தல், தாவரங்களில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ஜீன்களை புகுத்துவது,

வறட்சி /  உப்பு நீர்  பயன்படுத்தும் ஜீன் களை குறிப்பிட்ட தாவர வகைகளில் இணைத்து அவ்வகை தாவர இனங்களை காத்து வளர்த்தல் என பல பயன்பாடுகளை தர வல்லது திசு கல்சர் செயல் முறை..

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...