NO COST
ENTERTAINMENT-5
பத்து –பரமேஷ்-5
சென்ற பதிவில் ...
ராஜநாகம் போல் நடுக்கூடத்தில் உறுமிக்கொண்டிருக்கிறார் பத்து;
இனி
அடங்கிவிடுவார் என்று பார்த்தால் வீரியம் குறையாமல் கொந்தளித்து கனல் வீசுகிறார்
பத்து .
அவ [அதான்
அந்த அப்சரஸ் மைதிலி ] எனக்கு தான் னு தெய்வ சங்கல்பம் அதுனால தான் நீ காபி
கிடையாது,
காப்பில சக்கர கிடையாது , தீபாவளிக்கு பட்ஷணம் கிடையாது னு குதிச்ச , இனிமே நீயே கிடையாது னு அய்யா முடிவெடுத்து எல்லாம் ரெடி.
அதுனால தான் மாயவரத்துக்கு போறேன் -இல்ல இல்ல , போய்டப்போறேன் னு அன்னிக்கே சொல்லியாச்சு. அடுத்தவாரம்
வக்கீல் நோட்டீஸ் வரும் நீ கிளம்பும் படி இருக்கும் . ஒன்னை தலை முழுகிடுவேன்
என்று அடித்துச்சொன்னார்.
நீ இந்த வீட்டுல இருந்தா தானே அது கிடையாது இது கிடையாது னு அழிச்சாட்டியம்
பண்ற நீயே கிடையாது -போ , கண்
காணாம போ எங்கயாவது போ என்று குதித்தார். ஜாம் ஜாம் என்றிருந்த ஜம் என்ற ஹேமாம்புஜம், இப்போது JAM போல மூக்கு சிவந்து
செய்வதறியாமல் கண் கலங்ககினாள்
குட்டக்குட்ட குனிந்துகொண்டிருந்தவன் இப்போது எம்பிப்பாய்ந்து எகிறி
அடிக்கிறானே , நான் foot
ball player என்று முன்பெல்லாம்
சொல்லுவார் ;ஏதோ அள்ளி விடறார் னு நெனச்ச்சியே உன் நிலைமையை ப்பார்த்தாயா
என்றது உள்மனம். இன்னும் ஆத்திரம் அடங்காத பத்து "ஒன்னை தள்ளிவெக்கறேனா
இல்லையா பார்” என்று குதித்தார்
சந்தடி சாக்கில் எலிபோல் நுழைந்து விட்டிருக்க வேண்டும் , திடீரென்று பததுவின் காலில் அரசியல் தொண்டன் போல் கவிழ்ந்து படுத்துக்குக்கொண்டு,அண்ணா அண்ணா அதொன்னும் வேண்டே என்று காலடியில் இருந்து குரல். கீழே பரமேஸ்வரன்
பத்து வின் காலைப்பிடித்து “க்ஷமிக்கணம் நிங்ஙகள் பெரியவா, ஞான் செரியவன் [தமிழுலு பரயெ ங்கில் தம்பி, தம்பி அதுபோல் ஞான்] நீங்ஙள் டெ family
matter லு ஞான் தல போடாம்பெற்றில்லா
னு அறியும். பட்ஷே நிங்ஙள் டெ பார்யெ அதாணு மாமி எனிக்கு கஷ்டமாய க்ஷணங்ஙளில் கோப்பி, பின்ன பட்ஷணம் அத்தரயும் கொடுத்துட்டுள்ளு -அதெங்ஙனே ஓர்மை
இல்லாத்த ஜீவன் போல மறன்னு போகான்? இல்லல்லோ
. கொறச்சு காருண்யம் இட்டாலு மதி ;அது கொண்டாணு ஈ பிரார்த்தன என்று கீழே இருந்தபடியே கை
கூப்பினார் பரமேஸ்வரன்;
தொடரும்
அன்பன் ராமன்
அதாரு அப்ஸரஸ் மைதிலி. ?அந்தம்மை
ReplyDeleteபயோ டேட்டா,வ்லாசம் நிங்கள்டே உண்டோ? அனுப்பி வைப்பேளா?
ஹீ ஹீ
க்ஷமிக்கணும்.