Tuesday, March 12, 2024

CRIPPLING THE WORK

 CRIPPLING THE  WORK

வேலை நிறுத்தம்

இதுவரை நாம் கருத்தில் கொண்ட லஞ்ச ஊழலுக்கும் , இந்த தலைப்புக்கும் கொள்கை அடிப்படையில் பெரிய வேறுபாடு இருப்பதாக உணர முடியவில்லை அதாவது தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு பரவலாக காணப்படுவது "உனக்கு வந்தால் தக்காளி சட்னி , எனக்கு வந்தால் ரத்தம்" இது புற ப்பார்வையில் நகைச்சுவை யாக தோன்றினாலும், இது உள்ளார்ந்த விளக்கங்கள் கொண்டது. அவற்றில் சில

1 நீ எதையோ [சட்னி] காண்பித்து   [ரத்தம் என] அனுதாபம்  தேடுகிறாய்

2 உனக்கு நிகழ்ந்தது வலி இல்லாதது, ஆனால் நான் வலியில் துடிக்கிறேன்

3 நீ பேசுவது விதண்டா வாதம், நான் சொல்வது ஆழ்ந்த யதார்த்தம்

4 உனது தோற்றம், லேசாக கழுவினால் பொலிவாகும், எனக்கு சிகிச்சையும் வலியும் தொடரும். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

அடிப்படையில் அடுத்த பிரிவினரின் வேலை நிறுத்தம் குறித்த நமது பார்வை :

எனது கோரிக்கை/நிலைப்பாடு நியாயமானது ஆனால் நீ நாடகம் ஆடுகிறாய். என்ற அடிப்படையில் தான் வேலை நிறுத்தங்களை பல பிரிவினரும் பார்க்கிறார்கள் என்ன எனில் இந்திய திருநாட்டில் வேலை நிறுத்தம் என்பது கொள்கை அளவில் ஏற்கப்பட்ட தொழிற்சங்க உரிமைகளில் ஒன்று; எனவே அதை ஜனநாயகத்தின் அங்கமாக மற்றும் உரிமையாக அங்கீகரித்துள்ளது  அரசியலமைப்பு சட்டம் .

அது போதுமே போராட்டம் துவங்க. இதனால் அவ்வப்போது ஊழியர் போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது; அதில் நான் குறை காணவோ குற்றம் சுமத்தவோ வரவில்லை..

பின் என்ன சொல்கிறாய்? என்பவர்கள் நான் முன்வைக்கும் கருத்துகளை பரிசீலியுங்கள் -கள யதார்த்தம் புரியும் அல்லது குறைந்த பட்ஷம் ஏதோ ஒரு நியாயமும் தேவையும்   இருப்பதாக புலப்படும்

1 போக்கு வரத்து ஊழியர் போராட்டம்

அது ஏன் அரங்கேறுகிறது என்று தகவலை புரிந்துகொள்வதில்லை. செய்தி தலைப்பை பார்த்தவுடன் பொதுமக்களின் கோபம் கொந்தளிக்கிறது 

நல்லா  கொள்ளையா சம்பாதிக்குறானுக , தீபாவளி வந்தா  கொழுத்த போனஸ் , போக பஞ்சப்படி, இது இல்லாம சில்லறையே திருப்பித்தராம ஒவ்வொரு நாளும் 20-30 ரூவா அடிச்சுடறாங்க , இதெல்லாம் பத்தாதாம் இன்னும் மேலமேல கேட்டுக்கிட்டு ஜனங்களை வதைக்கறானுங்க ;இதுக்கு தான் ராணுவ ஆட்சி வரணும் பட்பட் னு சுட்டு தள்ளிடுவாங்க அப்போ இதெல்லாம் நடக்காது . 

சரி ஏன் பொலம்பறீங்க என்கிறார் அவர் மனைவி. ஒனக்கு எதுவுமே தெரியாது --இன்னிக்கு முதல் பஸ் ஓடாதாம். எத்தனை பேர் ரயிலைப்பிடிக்கணும் ஆஸ்பத்திரிக்கு போகணும் இன்டர்வ்யூ க்குபோகணும் னு நிக்கிறாங்க. அதெல்லாம் கவலையே இல்ல இவங்க ஸ்ட்ரைக்; எல்லாரும் டாக்ஸியிலியும் ஆட்டொலியும் போக முடியுமா? எல்லா ஊர்லயுமா எலெக்டிரிக் ட்ரெயின் இருக்குது?. சைக்கிள் ரிக்ஷா , குதிரைவண்டி,, இதுல தான் போகணும் ;தனியார் கம்பெனியில வாலை சுருட்டிக்கிட்டு   வேல பாத்தாங்க. இப்போ அரசு நிறுவனம் ஆனதும் எதையாவது சொல்லிக்கிட்டு வேலை நிறுத்தம் சே என்ன புத்தி இது. 

இப்ப இந்த பசங்களை ஸ்கூல் லேகொண்டு போய் விடணும்  .நம்ம தலை எளுத்து   ஒருத்தன் ஸ்கூல் வடக்க இருக்கு இன்னொருத்தி ஸ்கூல் கெளக்க [கிழக்கே] இருக்கு ஆபீஸ் மேற்கே இப்பிடி நாலு திசைக்கும் ஓடியே மூச்சு நின்னுரும் -போச்சுடா சாமி என்று அலறி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு பல லட்சார்ச்சனைகள் நடந்தேறும் 

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. போக்குவரத்து துறையில் பலர் ஓய்வு காலம் முடிந்தும் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கிடைக்காமலும
    பல்கலைக்கழகங்களில் பல மாதங்களாக சம்பளம் போடாமல் இருப்பதும் போராட்டத்துக்கு வழிவகுக்கும்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...