Wednesday, March 13, 2024

SINGER: VANI JAYARAM -2

 SINGER: VANI JAYARAM -2

வாணி ஜெயராம் -2

கேள்வியின் நாயகனே [மன்மத லீலை [-1975]  கண்ணதாசன், எம் எஸ் வி, வாணிஜெயராம்

ஒரு அருமையான பாடல் .அதாவது இசையின் மென் நுணுக்கங்கள் பலவற்றை சுமந்து வந்த பாடல் அதனாலேயே வாணி ஜெயராம் குரலில் பதிவான தர்க்க வாதங்கள் நிறைந்த பாடல்/. வாதங்கள் சரியே. நாயகன் ஒரு பெண் பித்தன் என்பது படத்தின் மூலக்கரு. அவ்வாறு இருக்க பாடலை , பாடலின் நேர்த்தியை      பாடப்பட்டுள்ள நளினத்தை  காட்சிப்படுத்தாமல், மனிதனின் வக்கிரத்தை முன்னிலைப்படுத்தி பாடல் செமத்தியாக சொதப்பப்பட்டிருக்கிறது என்பதே எனது புரிதல். பாடலுக்கு இணைப்பு 

 kelviyin naayagane

https://www.google.com/search?q=kelviyin+naayakane+video+song+download&newwindow=1&sca_esv=8b94fdf9c54254b4&sxsrf=ACQVn0_9VJDLC6hxGW0QnFdWzkbnIByTXw%3A1710057749240&ei=FWntZaOO apoorva ragangal 1975 kd msv vj

மல்லிகை முல்லை பூப்பந்தல் [அன்பே ஆருயிரே- 1975] பாடல் வாலி,              எம் எஸ் வி, வாணிஜெயராம்

இது ஒரு வினோத காட்சி,  நாணம் கொண்ட ஆண் , ஆதிக்க நாயகி இருவரின் திருமணம் பற்றியதான விளக்கம் இப்பாடல். சம்பிரதாய சடங்குகளின் தன்மையை இசைவடிவில் கருவிகள் பேச இயங்குவதை காணலாம் . இறுதி சரணம் 'அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம் என்று தொடங்கி ... பயணித்து அடுத்து 'பள்ளியின் வாசல் கதவடைத்து என்பதில் தொடங்கிட தபலா திடீரென்று நடை மாறி வேறு விதமாக [ஸ்] பீடு நடைபோடுகிறது. அந்த நடையில் ஒரு படபடப்பை காட்டும் விதமாக வாசிக்கப்பட்டுள்ளது . என்ன ஒரு கற்பனை ? ஏன் புதுமணப்பெண்ணின் இயல்பான படபடப்பை கோடிட்டு காட்டுகிறது . அற்புதமான வாசிப்பு. மீண்டும் "சொல்லி முடிப்போம் காதல் கதை" என்ற வரியில் தபலா பழைய நடைக்கு போகிறது.

இந்த பாடல் மேடையில் பாடப்பட்டால்கூட கடைசி சரணத்தின் ஒரிஜினல் தபலா நடை வேறெங்கும் நான் கேட்டதில்லை அதனால் இந்த இணைப்பை கூர்ந்து பின்பற்றிக்கேளுங்கள் நான் சொல்வது புரியும்

எண்ணற்ற இசை நுணுக்கங்கள் இப்பாடலின் பொக்கிஷம் ,சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்தை கேட்டு தெளிவு பெறலாம்

QFR malligai mullaippoopandhal

https://www.google.com/search?q=MALLIGAI+MULLAI+QFR+SONG&oq=MALLIGAI+MULLAI+QFR+SONG&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigAdIBCTE5MTAyajBqNKgCAL

malligai mullaippoopandhal

https://www.google.com/search?q=malligai+mullai+pooppandhal+video+song+download&newwindow=1&sca_esv=8b94fdf9c54254b4&sxsrf=ACQVn0-_pk_rspGNv6iUmdyIy3OV-zqSJQ%3A1710058594527&ei=Ym anbe aaruyire 1975 vaali  msv vj

தென்றலில் ஆடும் கூந்தலில் [மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்-1978] பாடல் புலமைப்பித்தன் ,,எம் எஸ் வி, கே ஜே ஜேசுதாஸ் , வாணி ஜெயராம்

நளினமான பாடல் , எ ம் ஜி ஆர் முழு நேர அரசியலில் நுழையும் முன் வந்த கடைசி சில பட ங்களில் இதுவும் உண்டு. குரல்களில் நேர்த்தி இப்பாடலின் கீர்த்தி. தவழ்ந்து தழுவும் இசை .தபலா வுக்கு பெருமை சேர்த்த பாடல். சில அரண்மனை காட்சிகளில் ஒளிப்பதிவு உச்சம் தொட்டுள்ளது [என் பாலகிருஷ்ணன்] கேட்டு ரசிக்க கண்டு களிக்க   இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=tamil+song+thendralil+aadum+video+song&oq=tamil+song+thendralil+aadum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigAdI maduraiyai meetta sundarapandiyan 1978 MGR KJJ VJ PULAMAIPPITHTHAN MSV

வளரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. குறை ஒன்றும் இல்லை ராமா

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...