Monday, March 4, 2024

No Cost Entertainment – 4

 No Cost Entertainment – 4

பத்து பரமேஷ்-4

ஆமாம் மாயவரம் போய்டப்போறேன் னு               முழங்கரீறே  அங்க யார் இருக்கா? தெரியாமத்தான் கேக்கறேன் என்றாள் புஜம் என்ற ஹேமாம்புஜம். சற்று எகத்தாளமாக.

பத்து [பத்மநாபன்] என்ன சோப்ளாங்கியா , ஒரு அறை விட்டார் என்றால் 3 நாளைக்கு மோன நிலையும் முனகலும் தான் சித்திக்கும்.. பாவம் ஊஞ்சலே  உல்லாசம்  , வேண்டாம் இவள் சகவாசம் என்று இருந்த தூங்கும் புலியை இடறியாயிற்று இனி புலி அறைந்தாலும், குதறினாலும் உதவிக்கு யாரும் இல்லை.

ஓஹ் உனக்கு உலகம் ரொம்பத்தெரியும் -மாயவரத்துல யார் இருக்கா னு கேக்கறியே -அசடே கேட்டுக்கொள் என்று GOOGLE என்ஜின் திறந்தார் ; உடனே வந்தது பட்டியல்

நாகநாதசுவாமி கோயில், மயூரநாதர் கோயில், திருமணஞ்சேரி , சட்டநாத சுவாமி, , அபிராமி-அமிர்தகடேஸ்வரர் கல்யாண சுந்தர சுவாமி -இவ்வளவும் இருக்கு நீ யாரு ருக்கா னு சர்வஞானி மாதிரி பேசற போடி ஞானசூன்யம் என்று அதிர்ந்தார். ஹேமாம்புஜம் கோபத்தின் உச்சியில் இப்போது .

சரி நாலும் கிடைக்க நடுவுல திருமணஞ்சேரி யாமே  திருமணஞ்சேரி என்று வம்பிழுத்தாள். yes என்றார் பத்து. ஆமாம் நீயும் கூட போகவேண்டி வரும் . ஏன்னா உன்னை தலை முழுகிட்டு மறுவேலை பாப்பேன். ஹேமாம்புஜம் அசரவில்லை . என்ன  மறுவேலை? இன்னொரு கல்யாணமா ?

இன்னும் ரெண்டு கல்யாணம் நம்மாத்திலே யே நடக்கும் , ஒன்னு எனக்கு , அடுத்தது ஒனக்கு வேற வேற பொண்ணு மாப்பிளை , ஐயா எல்லாம் ரெடி பண்ணிட்டார் . பார் என்ன நடக்கிறதென்று என்று சிவாஜி கணேசன் தொனியில் முழங்கினார். .

இப்போதும் ஹேமாம்புஜம் அசரவில்லை. உங்கள யார் பண்ணிக்கிறேங்கறா என்று கம்பீரமாக பார்த்தாள்

இனி பத்து வின் இடி முழக்கம்

-அசடே கேள். சரியான வயசுல கொழுப்பெடுத்த பெரியவர்கள் எங்காத்து வரன் மடம் தான், வேற சிலர் முனித்ரேய ம் தான் என்று முழங்கி 40 வயசுக்கு வந்து, அப்பாம்மா போய்ச் சேந்து, வரன் குதிராம , குதிர் குதிரா பெண்கள் [அந்நாளைய பெண்கள்] மடமோ [மடையனோ] முனியோ [முனியாண்டியோ] ஆனாலும் பரவால்ல னு திருமணஞ்சேரிலே வாரம் 108 பிரதட்சணம் பண்ணிண்டிருக்கா. 

அதுல மைதிலி னு ஒத்தி -அழகுன்னா அவ்வள அழகு, பெரியவா அது வேண்டாம் இது வேண்டான்னு படுத்தி இந்த அப்சரஸ் இப்ப எவனாவது வந்தா போறும் னு இருக்கா. நான் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் என்று [பெரும் கற்பனையை]  அவிழ்த்ததுடன், நீ அவளைப்பாத்தேன்னா ஐயோ பெருமாளே என் கல்யாணத்தை காப்பாத்து , என்று 2 மண்டலம் அந்தக்கோவில் ல பிரதட்சணம் பண்ணுவ இது சர்வ நிச்சயம் . கோபத்தின் உச்சியில் புஸ் பஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டு ராஜநாகம் போல் நடுக்கூடத்தில் உறுமிக்கொண்டிருக்கிறார் பத்து என்கிற பத்மநாபன்

தொடரும்

அன்பன் ராமன்

6 comments:

  1. மாயவரம் பக்கத்தில்தான் பரிமள ரெங்கநாதர் கோவில் இருக்குன்னு ஹேமாம்புஜத்திடம் சொல்லிவிடும்

    ReplyDelete
  2. "ஜாம் ஜாம்" னு இருந்த இரண்டு "ஜம்"
    களுக்கும் போறாத வேளை. பொட்டிப் பாம்பா இருந்த பத்து இப்போ பத்து தலை நாகமா படம் எடுத்து ஆடறார்.
    போன வாரம் தாம் பாட்டுக்கு
    ராஜத்துக்கு "ஜிங் ஜாங்" போட்டுட்டு "சிவனே" ன்னு இருந்த பர"மேஸ்வரன்" ருத்ர தாண்டவம் ஆடறார். சிவராத்திரி வேற வறது.
    அந்த ராஜத்த மதுரை மீனாட்சியம்மனுக்கும் . இந்த ஹேமாம்புஜத்த அஷ்ட லக்ஷ்மி கோவில் வீர லஷ்மிக்கும் ப்ரீர்த்தி பண்ணிக்க சொல்லணும்

    ReplyDelete
  3. அந்த matrimony அட்சர பத்து அனுப்புவாரா?

    ReplyDelete
  4. டாக்டர் ரெங்கராஜன் அவர்களே
    கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல் இருக்கிறதே -- கிணறு வெட்டியாச்சு இனிமே பயந்தால் எப்படி?
    என்னது மேட்ரிமோனி அட்ரஸ் [மாயவரம் ] வேண்டுமா.? பத்மநாபன் , பிற பாவப்பட்டவர்களுக்கு தரக்கூடும் . போன் நம்பர் அனுப்புகிறேன் பேசிப்பாருங்கள் கிடைக்கும் . ஆனால் ஒன்று காலை 7.40 க்கு முன் போன் பேச வேண்டாம்.அவருக்கு ஹேமாம்புஜம் லேட்டாக காபி தரப்போ க அந்த கடுப்பில் சரியாக பதில் சொல்லமாட்டார். என் பெயரை சொல்ல வேண்டாம். சொன்னால் இவனால் தான் இந்த ஹேமாம்புஜம் இந்தவீட்டிற்கு வந்தாள் , காபி சர்க்கரை பட்சணம் அனைத்திற்கும் காயப்போடுகிறாள். வரட்டும் அந்த ராமன் அவன் மண்டையை உடைக்காமல் விடப்போவதில்லை என்று பொருமிக்கொண்டிருப்பதாகக்கேள்வி. நமக்கு காரியம் தான் முக்கியம் ;அதனால நெளிவு சுளிவா பேசி அட்ரஸ் [மேட்ரிமோனி ] வாங்கிக்கொள்ளுங்கள். நன்றி ராமன்

    ReplyDelete
  5. பத்தும் ஈஸுவும் பாவம்
    அந்த ரெண்டு "கஜங்"களையும்
    சமாளிக்கறது கஷ்டம்தான்

    ReplyDelete

"காதலிக்க நேரமில்லை" - ஒரு பார்வை

 " காதலிக்க நேரமில்லை" - ஒரு பார்வை அந்நாளைய தாத்தா முதல் , இந்நாளைய பாப்பா வரை " காதலிக்க நேரமில்லை " என்ற ...