Wednesday, April 3, 2024

K S GOPALAKRISHNAN -2

 K S GOPALAKRISHNAN -2

கே எஸ் கோபாலகிருஷ்ணன்-2   

 

5 பாத்தாலும் பாத்தேன் [1000 ரூபாய் -1964] கண்ணதாசன், கே வி மகாதேவன் , பிபி ஸ்ரீனிவாஸ் பி சுசீலா

பிளாட்பாரம் நபராக சாவித்ரி ;இனிமேல் இதுபோன்ற வெகு இயல்பான அனாயாச நடிப்புக்கு யாரை காட்ட முடியும்?. சுசீலா அவர்களை வெகு சிறப்பாக நடைபாதை மொழியின் மணம் மாறாமல் பாட வைத்திருப்பது சிறப்பு.

குறிப்பாக படபடத்து வெட வெட த்து சட சடத்துப்போகுது , பக்கத்துல நீ இருந்தா இன்னா ன்னவோ ஆவுது,  அட ஏதோ ஒண்ணு என்னையும் ஒன்னயும் இப்புடிபுடிச்சு ஆட்டுது  இந்த வார்த்தைகளை சுசீலா அவர்கள் பாடியுள்ளதை சாவித்ரி முகபாவங்காளல் மேலும் மெருகேற்ற ஒரு மாறுபட்ட வகைப்பாடல் . கண்டு கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=VIDEO+SONG+PAARTHTHAALUM+PAARTHTHEN+NAAN+ONNAPOLA++VIDEO+ONG+&newwindow=1&sca_esv=435da4ccbf164833&sxsrf=ACQVn08MpBmsH4XJ1Miemeqa  

6 ‘பாவி என்னை மறுபடியும் [என்னதான் முடிவு -1965] பாடல் மாயவனாதன், இசை ஆர் சுதர்சனம் குரல் டி எம் எஸ். குரூர செயல் முறைகள் கொண்ட ஒருவன் மிகவும்வருந்திப்பாடுவதாக அமைந்த பாடல் , படம் நல்ல கதையம்சம் கொண்டது ஆனால் பெரும் வரவேற்பை பெறவில்லை பாடலை கேட்டுகவிதையை  ரசிக்க

https://www.google.com/search?q=ennadhan+mudivu+tamil+moviesong+%27paavi+ennai+video+song+download&newwindow=1&sca_esv=36209707b48417aa&sxsrf=ACQVn0_giR69XOqATqff0r3G23rhiytj_Q maayavanathan r. sudhasanam, t m s

7 காலமிது காலமிது [சித்தி-1966] கண்ணதாசன் , விஸ்வநாதன்  பி.சுசீலா

அதி ஆழ்ந்த பார்வை பெண்கள் நிலை குறித்து கவி அரசரின் விளக்கம் தொகையறாவிலேயே மொத்தக்கருத்தையும்ம் நுழைத்துவிட்ட  வித்தகம் கவியரசரின் திறமை அன்றோ.

வெவ்வேறுநிலைகளை இயல்பாக விளக்கும் கவிதை, தாலாட்டும் இசை அமைப்பு , மனம் ஒன்றவைக்கும் அமைப்பு

கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=kaalamidhu+kaalamidhu+video+song+download&newwindow=1&sca_esv=36209707b48417aa&sxsrf=ACQVn09H3ux7wbVqSAi4ZPN_AKQF3P7cSg%3A1711010236757&ei=vPH7Zf

8 ‘எலந்த பயம் [பணமா பாசமா -1968] கண்ணதாசன் , கே வி மஹாதேவன் , எல் ஆர் ஈஸ்வரி . ஈஸ்வரியின் சிறப்பு உச்சரிப்பினால் புகழ் எய்திய பாடல். பாடல் பயங்கர வெற்றி ஆனால் பங்கு பெற்ற எவரும் இப்பாடலை பெரிதும் ரசிக்கவில்லை , அனால் இளையோர் கூட்டம் இந்தப்பாடலின் ஈர்ப்பில்  இருந்து மீளஇயலாமல் இருந்த காலம் உண்டு .பாடலுக்கு இணைப்பு https://www.google.com/search?q=elanthapayam+video+song+download&newwindow=1&sca_esv=36209707b48417aa&sxsrf=ACQVn0-g-o6fVlSv3rL46VkYUzH105424A%3A1711011092187&ei=FPX7ZeaLC5S

இது போன்ற பல சமூகப்படங்களையும், சில பக்திப்படைப்புகளையும் தந்துள்ளார் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள். இவர் தனது 86 ம் வயதில் மறைந்தார்.

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...