Wednesday, May 22, 2024

DIRECTOR B R PANTULU

 BR PANTULU

பி ஆர் பந்துலு

தென் இந்திய சினிமாவுக்கு பெருமைசேர்த்த பலரில் திரு பந்துலு அவர்களும் முக்கியமானவர். நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தக்காரர் . மிகச்சிறந்த படங்களை தயாரித்து வழங்கி, நடித்து, இயக்கி என பெரும் புகழ் ஈட்டியவர். ஆசிய சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலக்ஷ்மி, திரு பந்துலு அவர்களின் புதல்வி . சரித்திர ,புராண சமூகப்படங்கள் எடுத்தவர். மேலும் கன்னட /தமிழ் /தெலுங்கு மொழிகளில் நன்கு அறியப்பட்டவர். மொத்தத்தில் பெரும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

அவரது ஆரம்பகால "தங்கமலை ரகசியம்" [1957]படம் பலரும் அறிந்த ஒன்று. அதில் இடம் பெற்ற சுசீலா வழங்கிய பாடல்அமுதைப்பொழியும் நிலவேஅகில இந்தியாவில் பன் மொழிகளில் ஒலித்த இசைக்காவியம் . பாடல்                        இசை : டி ஜி லிங்கப்பா , குரல் பி. சுசீலா .வெகு இயல்பான இசை நடை, ஏற்ற இறக்கங்ககள்நிறைந்த மெட்டு வெகு தெளிவாக பாடப்பெற்று பெரும் புகழ் ஈட்டிய பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=amuthai+pozhiyum+nilave+video+song+download&newwindow=1&sca_esv=c22fddfe247c1d12&sca_upv=1&sxsrf=ADLYWIL2ZSVH_fLGYe_JcuV1Mz68P_VFtw%3A1715844328595&e 1957 TGL

பந்துலு அவர்களின் 1958 ம் வருட வெளியீடு "சபாஷ் மீனா" இதிலும் இசை டிஜி லிங்கப்பா அவர்களே. ஏராளமான வெற்றிப்பாடல்கள் கொண்ட படம். அதிலொன்று "காணா  இன்பம் கனிந்ததேனோ" குரல்கள் டீஏ மோதி , பி சுசீலா .

வெகு நேர்த்தியான இசையும் ஆலாபனையும் பாடலின் சிறப்பு. கொட்டும் மழையில் நிகழும் பாடல் குளிர்ச்சிக்கு பஞ்சமே இல்லை ,குரல் வளங்களும் அவ்வாறே. கேட்டு மகிழ இணைப்பு இதோ:

https://www.google.com/search?q=KAANAA+INBAM+KANINDHA+DHENO+VIDEO+SONG&newwindow=1&sca_esv=c22fddfe247c1d12&sca_upv=1&sxsrf=ADLYWIKym5ziqM_qCSAr5JAER3mFwwAGxQ%3A1715845 1958 TG L

அந்த நாளிலேயே கட்டபொம்மனின் வரலாற்றை வண்ணத்தில் படமாக்கியவர் பந்துலு. அண்டக்ஹ்படத்தில் இடம் பெற்ற ஒரு சிறப்பான பாடல்

'இன்பம் பொங்கும் வெண்ணிலா " சுழித்து ஓடும் நதியென பாய்ந்த பாடல் . அதியற்புதமான ராக ஓட்டம் மற்றும் தெளிவான இசைக்கூறுகள்.

 குரல்கள் பி சுசீலா /பி பி ஸ்ரீனிவாஸ். PBS அவர்களுக்கு பெரும் அங்கீகாரம்தந்த ஆரம்ப கால பாடல் இது.   இசை வழங்கியவர் ஜி ராமநாதன் என்ற ஜாம்பவான் . ஜெனீவாவில் விருது பெற்ற படம் . நடிகர் திலகம் . திரு .சிவாஜியின் அந்த விருதை யாரோ திருடிவிட்டார்கள் என்று 80 களில் கேள்விப்பட்டதுண்டு.

படம்    "வீர பாண்டிய கட்டபொம்மன்" [1959]கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=inbam+pongum+vennila+video+song+download&newwindow=1&sca_esv=c22fddfe247c1d12&sca_upv=1&sxsrf=ADLYWIJyajmXUKX6jYiXiclqLc0fe61v7A%3A1715845062911&ei 1959 GR

மற்றுமோர் சரித்திர நாயகன்   சி குறித்த படம் "கப்பலோட்டிய தமிழன் " 1961ல்பந்துலு தயாரித்த படத்தில் பாரதியாரின் பாடல் காற்று வெளியிடை  கண்ணம்மா ' பி பி ஸ்ரீனிவாஸ் , சுசீலா குரல்களில் இசை ஜி ராமநாதன் . பலரும் ரசித்த பாடல் ஜி ராமநாதன் அவர்களின் மெட்டமைப்பில் மிளிர்ந்த நளினம் . கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=katru+veliyidai+kannammaa+video+song+download&newwindow=1&sca_esv=c22fddfe247c1d12&sca_upv=1&sxsrf=ADLYWIJO2XTkjMbaR2hTUzU9YkXypEPUXA%3A171584541 1961 BHARATHI G R

திரு பந்துலு அவர்களின் பலே பாண்டியா[1962] ஒரு சிறப்பான காவியம் நல்ல பாடல்கள் நிறைந்தது . கவி அரசர் கண்ணதாசன் பாடல்களுக்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி .குரல்கள் டி எம் எஸ் / எம் எஸ் ராஜு . திரு ராஜு அவர்கள் எம் எஸ் வி யின் இசைக்குழுவில் ஒப்பற்ற புகழ் கொண்ட மாண்டொலி ன் வித்தகர் .நடிகவேள் எம் ஆர் ராதாவைப்போல கரகரத்த குரலில் பாடி ப்ரமிக்கவைத்தவர். கொன்னக்கோல் என்னும் ஜதி சொல்வதில் பெரும் வித்தகர் திரு ராஜு [இப்போது இல்லை].                                               பாடுவதற்கு                இந்தப்பாடல்  அவ்வளவு எளிதன்று.                                                

ஆயினும், இளைய தலைமுறையினர் பெரும் ஆர்வத்துடன் போட்டிகளில் பாடி பாராட்டு பெறுவது மகிழ்ச்சிக்குரியது.

https://www.google.com/search?q=NEEYE+UNAKKU+ENDRUM+NIGARAANAVAN+VIDEO+&newwindow=1&sca_esv=c22fddfe247c1d12&sca_upv=1&sxsrf=ADLYWII_YgRwTWPEzKjBwluYKtgnR9VjnA%3A1715845981094 1962 KD V R TMS MS RAJU

https://www.dailymotion.com/video/x17bxls NARAYANAN DIWAKAR

https://www.google.com/search?q=JAYA+TV+SUPERSINGER+NEEYE+UNAKKU+ENDRUM&oq=JAYA+TV+SUPERSINGER+NEEYE+UNAKKU+ENDRUM+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTM3NTk0ajBqNKgCAL LEGENDS ADORN THE SHOW .

எந்த இணைப்பையும் தவற விடாமல் ரசியுங்கள் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் .

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...