T M SOUNDARARAJAN -5
டி எம் சௌந்தரராஜன்- 5
"எங்கே நிம்மதி
"புதிய
பறவை
[1964] கண்ணதாசன் , விசு-ராமமூர்த்தி, டி எம் எஸ்
ஒரு பிரமிப்பூட்டும் பாடல். அந்நாளில் இசை ஜாம்பவான்களை மிரளவைத்த இசை அதிலும் எண்ணற்ற இசைக்கருவிகள், மூச்சுவிடாமல் தொடரும் இசை ஒரு புறம் , சளைக்காமல் வெடித்துக்கிளம்பும் கோரஸ் ஒரு புறம், , எரிமலை என பொங்கி கிளம்பும் வயலின்களின் பிரவாகம் . 40
க்கும்
மேற்பட்ட
வயலின்கள்
ஒருமித்து இசைத்த ஒரே ஸ்வரவரிசைகள், 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள், ,பதிவுக்கூட தியேட்டரின் இருக்கைகள் நிரம்பி வெராந்தாவில் அமர்ந்து இசைத்த வீணைகள், சித்தார்கள், இம்மியும் பிசகாமல் கொடுத்த இசைக்குறிப்புகளை மேற்பார்வை செய்த ஹென்றிடானியேல் , கோவர்தனம் /உதவியாளர்கள், அனைவரையும் மேய்த்த எம் எஸ் வி என்று பெரும் வரலாறு கொண்ட பாடல். இன்றும் இசைக்கலைஞர்கள் வியந்து நினைவுகூறும் பிரம்மாண்டம் . இதை அனைத்தையும் கடந்து தேவையான ஸ்தாயியில் ஏற்ற இறக்கங்களை தவற விடாமல் இயங்கி தன திறமையை மீண்டும் பறைசாற்றிய டி எம் சௌந்தரராஜன்; இவற்றில் மிகுந்த குழப்பம் விளைவித்துவிடக்கூடிய கோரஸ் ஒலிகளை எப்படி நிர்வகித்து கட்டுக்குள் வைத்தனரோ. பாடல் முடிந்ததும் பெரு மழை பெய்து ஓய்ந்த உணர்வும் , 1964 காலகட்ட தமிழ் சினிமா இசை எட்டிய உயரம் நிச்சயம் வியப்புக்குரியது
-சந்தேகமே
இல்லை
பாடலை
கேட்டு
மகிழ
இணைப்புகள்
இதோ.
தவறாமல்
கேட்டு
பார்த்து
இன்புறுவீர்,
https://www.youtube.com/watch?v=PAxlF1hV0hA enge nimmadhi
https://www.youtube.com/watch?v=K4lu758K0uk
TMS
“இரவும் நிலவும்வளரட்டுமே”
கர்ணன்
[1964], பாடல்
:கண்ணதாசன்
, இசை:
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
, குரல்கள்:
பிசுசீலா
, டி
எம்
சௌந்தரராஜன்
என்ன ஒரு பாடல் ? கவியையா கவிதையையா , கலைஞர்களையா, குரல்களையா , கம்பீர இசையையா , இரட்டைப்படையென்ற சொல்லாடலுக்கு சான்றாய் நின்ற இரட்டை க்கருவிகளையா, இரட்டையராய் நின்று , இசையை கதையின் காலகட்டத்தை கண் முன் நிறுத்திய இசைவித்தகர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இவர்களையா? இன்னும் உண்டு மன்னன் என்றால் எப்படி கம்பீர நடை போடவேண்டும் என ஒவ்வொரு அசைவிலும் உணர்த்திய சிவாஜி கணேசனையா, நீ என்ன--மன்னனே ஆனாலும் என்னவன் தானே வா என் பின்னாலே என்பதுபோல் சிட்ட்டாய்
பறந்து ஓடும் சுபாங்கியாய் மிளிர்ந்த தேவிகாவையா ? இதற்கென இடத்தினை தேர்வு செய்து காட்சிப்படுத்திய பீ ஆர் பந்துலுவையா ? அல்லது ஹொய்சால ர்களின் கலை மிளிரும் ஹ ளே பீடு [கன்னடமொழியில் பழையவீடு ] சாம்ராஜ்ய கோயிலையா ? என நீண்டு செல்லும் பட்டியலுக்கு கட்டியம் கூறும் பாடல்
"இரவும்
நிலவும்
வளரட்டுமே
" இவற்றில் எதை சிலாகிப்பது ? எவ்வளவுதான் விவாதிப்பது?
இப்பாடல் ஒரு மாறுபட்ட பாதையில் பயணிப்பது நுட்பமாக பேசப்படவேண்டிய ஒன்று .ஆ,ம் , காதல் பாடல் எனினும் , வழக்கத்துக்கு மாறாக பெண் [சுபாங்கி ] முன் எடுத்து போக, ஆண் [கர்ணன் ]பின் தொடர்கிறான் . அவ்வளவு ஏன்? பாடலை துவக்கி ஆலாபனை செய்து முன் எடுத்து
முனைவதும் அவள் தான். ஆங்காங்கே பொதுவாக ஆண்கள் காட்டும் அவசரம் இவள் காட்ட , வேண்டாம் பொறு சற்று நிதானம்கொள்
என்பது
போல்
ஆண் பாடுவது முற்றிலும் வித்தியாசமான /ஆனால் ரசிக்கக்கூடிய அமைப்பு.
எவ்வளவு நேர்த்தியாக சரோட், சந்தூர் ஷெனாய் , க்ளாரினெட் வயலின் வீணை ஒலிகள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன -1964 ல். மனதை நெருடுகிறது
https://www.google.com/search?q=iravum+nilavum+valarattume+video+song+&newwindow=1&sca_esv=16b87234c4719fc3&sca_upv=1&sxsrf=ADLYWIIe_zfNnNHT2XIJhrMIVFUtkCKQgA%3A1715675403 karnan 1964 kd, v r ps tms
நான் மாந்தோப்பில் -எங்கவீட்டுப்பிள்ளை [1965] வாலி, வி- ரா டி எம் எஸ் எல்ஆர் ஈஸ்வரி
அருமையான கிராமீய மணம் கொண்ட பாடல்,1964, இசைக்கூறுகளையும்,
கருவிகளையும்
சொற்களையும்
கவனியுங்கள்
. இசை
அமைப்பில்
மண்
மணம்
மேலிடுவது
புரியும்.
பெரும்
பகுதியும்
குழல்
மற்றும்
தபலா
வில்
பயணிப்பது,
இடை
இசை
அநேகமாக
தாளத்தில்
[லயத்தில்]
நகருவதும்
அச்சு
அசல்
கிராம
அமைப்பு.
டி
எம்
எஸ்
வெகு
நேர்த்தியாக
பாட
,ஈடு
கொடுத்து
இயல்பாகப்பாடிய ஈஸ்வரி. கேட்டு ரசிக்க இணைப்பு.
https://www.youtube.com/watch?v=-DJRUm4vUBo nan manthoppil -1965 engav p,
vali vr tms lre
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் "அன்பே வா"
[1966] வாலி,
எம்
எஸ்
விஸ்வநாதன்,
டி
எம்
எஸ்,
பி
சுசீலா.
கனவுக்காட்சி எனினும் மிகப்பெரும் ஆளுமையை வெளிப்படுத்திய மெல்லிசை மன்னர். எண்ணற்ற இசைக்கோலங்கள், இசைக்கருவிகள் , வெகு நேர்த்தியாக
அமைக்கப்பட்ட இசைத்தொகுப்புகள் மற்றும் கோரஸ் ஒலிகள் , குதிரையின் குளம்பொலி தான் பாடலுக்கு அடிநாதம் அதன் மீது பயணித்த நாத வரிசை. அவ்வப்போது மாறும் கருவி ஒலிகள். இவை எல்லாம் கடந்த தேவலோகம் போல் தோன்றும் அமைப்பு செல்லோ பேன் [CELLOPHANE ] தாள்களை குறுக்கும் நெடுக்கும் இழுத்து ஒளிபாய்ச்சி ஆங்காங்கே நட்சத்திரங்கள் போல் ஜொலித்த புள்ளிகள் மொத்தத்தில் ஓடாத சாரட்டை[CHARIOT] ஓடுவதாக நம்ப வைத்த காட்சி அமைப்பும் குரல்களின் வசீகர பயணமும் இணைந்து
தோற்றுவித்த மயக்கம் ;முற்றிலும் விஸ்வநாதனின் இசை ஆளுமைக்கு சான்றாய் நிற்கும் பாடல் . 60 ஆண்டுகளை கடந்தும் இளமை குன்றாத நயம். இவை போன்ற ஆக்கங்கள் வருமோ ? ஆனால் ஏக்கங்கள் வருகின்றன,. கேட்டு மகிழ இணைப்பு
https://www.google.com/search?q=RAAJAAVIN+PAARVAI+RAANIYIN+PAKKAM+VIDEO+l&newwindow=1&sca_esv=b5246bed5d27d0e1&sca_upv=1&sxsrf=ADLYWIKqGJgHTe1E2n6Q4E6T_Wjy31H4DA%3A17162742 1966 VAALI MSV TMS PS
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment