Wednesday, May 22, 2024

SALEM SUNDARI – 16

  

SALEM SUNDARI – 16  

சேலம் சுந்தரி-16

போன தடவை மாடசாமி தானே பழங்கள் வாங்கினார் , இந்த முறை நானே வாங்கிடுறேன் அதுவும் நம்ம வேலையாத்தானே பார்க்கப்போகிரோம் என்று தீர்மானித்து முதல் நாள் மாலையில் பழங்கள் வாங்கி வைத்து மறுநாள் குறித்த நேரத்தில் ஸ்ரீரங்கம் காபி நிலையம் அருகில் சுந்தரி நின்றிருந்தாள். சற்று மாறின தோற்றம் , தலை குளித்து ஈர தலையை லூசாக விட்டு கீழே முடிந்து, ஒற்றை மல்லிகை சரம் பின் தலையில் சூடி தழைய அணிந்த புடவையில் மீண்டும் கௌரியை நினைவூட்டும் தோற்றம். மாடசாமி சற்று அவளை உற்று பார்த்து கௌரியை நினைவு கூர்ந்தார். 2 வினாடி தான் மீண்டும் இயல்பாக "போலாமா" என்று கேட்டு, அடுத்த 3 நிமிடத்தில் ராமசாமி வீட்டின் முன். ராமசாமி -அம்ஜம் வாசலிலேயே இருக்க என்ன என்பது போல் மாடசாமி பார்க்க , ஒண்ணுமில்லை இப்ப பெருமாள் வரார் வாசலில் , அவரை சேவிச்சுட்டு உள்ளே போவோம் என்றார் அம்ஜம் . நல்ல சகுனம் அம்மா உங்களுக்கு என்று மாடசாமி சுந்தரியிடம் சொல்ல அவள் கண்களில் நீர்கோர்த்து எவ்வளவு இயல்பான மனிதர்கள் இவர்கள்.

எதையும் எளிதாக தீர்மானமாக எதிர் கொள்கிறார்களே என்று  வியந்தாள்.

எதிர்பார்த்த படியே பெருமாள் வீதி உலா மிக அருகில் உத்சவர் சேவை , அம்ஜம் தரையில் கவிழ்ந்து சேவித்ததை பார்த்த சுந்தரி எப்படி கொஞ்சங்கூட யோசிக்காமல் கவிழ்ந்து அதுவும் 4 முறை என்று அதிசயித்தாள். மாமி 4 தடவை கும்பிடணுமா ?என்றாள் , சுந்தரி. ஆமாம் பெருமாள் மற்றும் பெரியாவர்கள்  யார் ஆனாலும் குறைந்தது 4 தடவை சேவிப்பது வடகலை ஐயங்கார் சம்ப்ரதாயம்.  இப்படி சேவிச்சா தொப்பையே விழாது என்று அம்ஜம் ஸ்டைலாக ஓரக்கண்  பார்க்க  மாடசாமிக்கு சுப்புரத்தினம் சொன்ன [அந்த பொண்ணுக்கு வகுரு பொடச்சுக்கிட்டு இருக்கு }என்ற வாசகம் மனதில் நிழல் ஆடியது. இந்த அய்யருங்க ஒன்னொன்னுலயும் எவ்வளவு நுணுக்கமான யோசிச்சு வெச்சிருக்காங்க என்று சுந்தரி யோசித்தாள். பெருமாள் சேவை முடிந்து உள்ளே  போனதும் பழங்களை சுந்தரி அம்ஜம் முன் வைத்து நமஸ்காரம் செய்தாள்

நன்னா இரும்மா .. என்ன? தங்கைக்கு பாக்கறனு கேள்விப்பட்டேன் சந்தோஷம் , பையன் யாரு [தெரியாததுபோல்] கேட்டார் மாமி.

சுந்தரிக்கு எப்படி சொல்வதென்று புரியவில்லை -நீங்க சொல்லுங்க சார் என்று ராமசாமி மாடசாமி இருவருக்கும் பொதுவாக விண்ணப்பித்தாள்

ராமசாமி : வேற யாரு ? நம்ப சுப்பிரமணிதான்

அம்ஜம் : யாரு உங்க மச்சினனா

ராமசாமி: ஆமாம் உன் தம்பி தானே அவன் என்று

அம்ஜத்தை  திணறடித்தார்.                                                     மாடசாமியும் சுந்தரியும் இந்த நையாண்டியை வெகுவாக ரசித்தனர்..

சுதாரித்த அம்ஜம், தங்கமான பிள்ளையாண்டான் ஒன்  தங்கைக்கு   நல்ல யோகம் டியம்மா என்றார் மாமி..

சுந்தரி கை கூப்பி உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும்மா என்றாள்.  நம்ப என்ன? இப்ப பெருமாளே நேர வந்தார் அதை விடவா ? ஜாதகம் பாத்துட்டயா?

எங்களுக்கு அவ்வளவெல்லாம் தெரியாது. பையன் நல்ல குணமான நேர்மையானவர், அது போதும் நீங்க பெரியவர்களே  மச்சினன் /தம்பி னு உயர்ந்த இடத்தை அந்த பையனுக்கு கொடுக்கிறீங்களே. அதெல்லாம் பார்த்துதான் இந்த இடம் சரிப்பட்டு வரும்னு 'மனசு' சொல்லுது மாமி.

அப்புறம் என்னடியம்மா , பெருமாள் பார்த்து முடிச்சுடுவார். நீ நன்னா பிரார்த்தனை பண்ணிக்கோ , நல்ல நாள் ல மேல மேல ஆக வேண்டியதை பார்ப்போம்.. இன்னிக்கு மோர்க்குழம்பு பீன்ஸ் பருப்பு உசிலி, எலுமிச்சை ரசம் , தயிர் சாதம் போது மா ? என்றார் மாமி. இவ்வளவு கிடைச்சா பத்தலை? என்று  மாடசாமி ஆமோதித்தார்.

ராமசாமி இப்போது சொன்னார் "மச மச"ன்னு அரட்டை அடிக்காம வேலை எல்லாம் 11.00 மணிக்குள்ள முடிச்சிட்டு , 11.00 மணிக்கு சுப்பிரமணி அம்மாக்கு போன் பேசணும் அதுக்காக தான் வந்திருக்காங்க இவங்க ரெண்டு பேரும் என்றார் .

உடனே சுறுசுறுப்பானார் அம்ஜம் . அம்ஜம் ஒரு சகல கலா சாதகி . 10.50 க்கு எல்லாம் ரெடி. பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து முடித்து ஊஞ்சலில் அமர்ந்தாள். அம்ஜம் சுந்தரி கீழே அமர்ந்து மாமியையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன அப்பிடி பார்க்கிற? என்றார் மாமி. .

எவ்வளவு வேலையை அசராம செய்யறீங்க னு பார்த்தேன் என்றாள் சுந்தரி.

ஒன்னை பார்த்தா அவாத்து கௌரி மாதிரி இருக்கு எனக்கு என்றார் மாமி. .ஏற்கனவே மாடசாமி இதே பாதிப்பில் இருக்கிறார். இப்போது மாடசாமிக்கு கௌரியை பார்க்க வேண்டும் [அவளுக்கும் ஏதாவது நல்ல மாப்பிளையை பார்க்க வேண்டும் ] என்று மனம் அலை பாய்ந்தது. 

தொடரும் 

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...