SALEM SUNDARI- 13
சேலம் சுந்தரி-13
புதன் காலை காலை 9.20க்கே வந்து விட்டாள் சுந்தரி- அன்று போல் வாயில் படியை பார்த்துக்கொண்டே ஐயோ இன்னும் வரலே வரலே என்று உள்ளூரபுலம்பிக்கொண்டிருக்க, 9.50க்கு சுப்பரத்தினம் ஆஜரானார். இன்னும் மாடசாமி சார் வரலியா சார் என்று சுந்தரி ஆரம்பித்தாள் .ஏன்? HR லபோய் அவர் வரல்ல இவர் வரல்லன்னு சொல்லவா? அந்த வேல வெச்சிக்காதீங்க ஆமாம் வெச்சுக்காதீங்க.. மாடசாமி மாதிரி எல்லோரும் அமைதியா போக மாட்டாங்க , யாரைச்சொன்னாலும் உடனே அந்த ஜாதிக்காரங்க ஒண்ணா சேந்துக்கிட்டு போராட்டம் பண்ணுவாங்க. நீங்களும் உங்க ஜாதிக்கு என்ன சங்கமோ அதில சேந்திருங்க . இப்ப எல்லா ஆபீசுலயு ம் ஜாதிசங்கங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதுனால அவரவர் வேலையை மட்டும் பாத்துட்டா ஒரு தொல்லையும் இல்லாம வாழலாம். 9.56 திடீரென்று வாயிற்படியில் ராமசாமி, உள் எட்டிப்பார்த்து சார் என்று அழைக்க, சுப்புரெத்தினம் இன்னும் மாசா வரவில்லை என்று சொன்னார்.
சுந்தரி ராமசாமியுடன் பேச ஆரம்பிக்க , ராமசாமி, இந்த சுப்புரத்தினம் இருக்குமிடத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று கண்ணாலேயே வெகு தெளிவாக உணர்த்தினார். சுந்தரி அசந்துபோனாள் -எவ்வளவு கவனமாக ராமசாமி நடந்துகொள்கிறார்.
மணி 9.59 முரட்டு மீசை மாடசாமி வந்தார். அனைவருக்கும் வணக்கம் சொல்ல, சு ரெ , ராமசாமி வந்ததை கூற , மாடசாமி வழியில் பார்த்துட்டேன் சார் என்றார்.
சுந்தரிக்கு ஒரே பரவசம் ஏதோ தகவல்
வந்துள்ளதென்று..
உண்மையில் பஞ்சாபகேசன் இன்று காலை 11.00 அளவில் மறக்காமல் பேசச்சொல்லி ராமசாமிக்கு தெரிவிக்க
அதைச்சொல்ல ராமசாமி வந்தார். பின்னர் வழியில் மாடசாமிக்கு சொல்லி சுந்தரியை 11.00
மணிக்கு கான்டீன் வரும்படி ஏற்பாடு செய்ய சொன்னார்- ராமசாமி..
சுப்பு ரெத்தினம் டிபன் பாக்ஸ் ஸ்கூட்டரில் இருக்கிறது என்று கீழ இறங்க , மாடசாமி ராமசாமி 11.00 மணிக்கு கேன்டீனில் நம்மை எதிர்பார்க்கிறார் என்று சொல்லிவிட்டார். உடனே சுறுசுறுப்பாக முந்தின நாள் விவரங்களை சுருக்கமாக டைப் அடித்து சுப்புரெத்தினம் டேபிளில் 10. 35 க்கு வைத்து விட்டு டேபிளில் தலை வைத்து படுத்தாள்.
சிறிது நேரத்தில் வந்த சுப்பு ரெத்தினம் முந்தின நாள் ரிப்போர்ட்டை கையெழுத்திட்டு பத்திரப்படுத்திவிட்டு பார்க்க சுந்தரி டேபிளில் தலை வைத்திருந்தாள்.
சுப்புரெத்தினம்
என்ன என்று கேட்க "தலை வலிக்குது சார் மாத்திரை வாங்கி சாப்பிடணும் கேன்டீன் போய்
வரேன் சார் என்று நெற்றிப்பொட்டில் கைவைத்துக்கொண்டு சூப்பர் நடிப்புடன்
வெளியேறினாள். 11.05க்கு
மாடசாமி சேர்ந்து கொண்டார்..
ராமசாமி மேலே இருந்த உயர் அதிகாரி ரூமை திறக்கச்சொல்லி உள்ளே மூவரும் போய் அமர்ந்து கொண்டு டீ சாப்பிட சுமார் 11.12க்கு போன் பஞ்சாபகேசனிடம் இருந்து..
ராமசாமி பேசியதும்
இப்போது போனில் சுப்பிரமணி, சுருக்கமாக
ராமசாமி பேசிவிட்டு,
சுப்பிரமணியை சுந்தரியிடம் . .பேசி நேரடி விளக்கம் கேட்டுக்கொள் என்றார்.
.சுப்பிரமணி சரியான பதில்களை தெளிவாக சொல்லி, அமைதியாக பேசிய
முறையில் இப்போது சுந்தரிக்கு எப்படியாவது தங்கைக்கு சுப்பிரமணியனை கணவன் ஆக்கிவிடவேண்டி
ஆஞ்சநேயா என்று பிரார்த்தித்தாள்.
.சுப்பிரண்மணி பெரிய நிபந்தனை வைத்தான். கல்யாணம் குறைந்த செலவில் போதும். ஆடம்பரம் வேண்டாம். சேலத்திலோ, குண்டூரிலோ, திருச்சியிலோ எங்கு நடந்தாலும் யார் வந்தாலும் இல்லாவிட்டாலும், PK சார், ராமசாமி சார், மாடசாமி சார், கேப்ரியல்சார் இவர்கள் வந்து ஆசி வழங்கவேண்டும் இதைத்தவிர நான் ஆடை அணிகலன், பணம் எதுவும் கேட்கவில்லை.
பெண்ணின் போட்டோவை PK சாருக்கு அனுப்பிவிட்டு உங்ககளுக்கு சம்ம்மதம் இருந்தால்
ஞாயிறன்று காலை 11.00 மணிக்கு எங்க தாயாருடன் பேசுங்க என்று போன் நம்பர் கொடுத்தான் சுப்பிரமணி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment