Monday, May 20, 2024

SALEM SUNDARI -15

 

SALEM SUNDARI -15

சேலம் சுந்தரி-15

சுந்தரி பரபரத்து தங்கையின் போட் டோவை , 3 காபி வரவழைத்தாள். ராமசாமியிடம் 2 காபி கொடுத்து போட்டோவை பிகே சாருக்கு அனுப்ப சொல்ல, கொஞ்சம் பொறு என்றார் ராமசாமி. சுந்தரிக்கு உள்ளூர கோபம் பொறுங்கறாரே , நம்ம அவசரம் புரியலையா என்று குமைந்தாள்.

மோப்பம் பிடித்த கழுகு, சுந்தரிக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுத்தார். நான் பொறு னு சொன்னால் எத்தனையோ காரணம் இருக்கும். உனக்கு அவ்வளவு அவசரம் னா CHIEF ACCOUNTS OFFICER [RAIL DIVISION] GUNTUR னு போட்டு தபால் அனுப்பு , உர்ர் னு முணுமுணுக்காத. லெட்டர் போய்ச்சேரலைனா எவனையும் கேட்கமுடியாது. 

நான் மெஸ்ஸெஞ்சர் வழியா அனுப்பி அவர் கைல சேத்துடுவேன்அதுனால தான் பொறு னு சொன்னேன் என்று கறாரா பேசிவிட்டு. இப்ப வா இங்கே என்று கீழிறங்கினார் ராமசாமி.

ஐயோ இவர் இப்ப பிளாட்பாரத்துல கூட்டிக்கிட்டு போய் உதைக்கப்போறாரோ என்னவோ என்று நடுங்கினாள். நேரே கேப்ரியல் செக்ஷன்ல போய் ராமசாமி கிசுகிசுத்தார் ;உடனே ஆஹ் ஆஹ் ஹா என்று கேப்ரியல் சிரித்து இந்த கவர் பிகே சார் கைலே டெலிவரி தரணும் அவ்ளோ தானே நாளைக்கி ஈவினிங் 3.30 க்கு குன்டூர்லே நம்போ FILE குத்திட்டு இந்தோ கவரும் குட்த்துடுவாங்கோ, சலீம் சலீம்ன்னு  கூப்பிட்டு லெட்டரை கொடுத்து பி கே சார்கிட்டே கொடு வேறே யார்க்கும் வேணாம் என்று அந்தப்பணியை ஒப்படைத்தார் கேப்ரியல்.

சுந்தரி வியந்தாள் எவ்வளவு எளிதாக வேலையை முடிக்கிறார்கள் [அதான் மா சா சொன்னார் அவன் எறங்குனா 4,5 நாள் ல எல்லா வேலையும் முடிப்பான்னு ] இப்ப இல்ல புரியுது. என்று வியப்படைந்தாள். வியப்பு ஏன் என்றால் ;மூச்சு விட்டால் கூட எப்படி கண்டுபிடிக்கிறார் இந்த ராமசாமி ஐயோ என்று கதி கலங்கினாள்..

மறுநாள் மாலை 4.00 மணிக்கு போன் பி கே இடம் இருந்து ராமசாமிக்கு --பெண்ணின் போட்டோ வந்துவிட்டது சுப்பிரமணி கிட்டே கொடுத்திருக்கிறேன். 

இது கல்யாண விஷயம் அதுனால ஆஃபீஸ் டைம் ல தான் பேசணும் னு காத்திருக்க வேண்டாம் என்று 3 போன் நம்பர் 1] பி கே, 2 ]சுப்பிரமணி 3 ] பி கே சார் மனைவி. என் wife க்கும் எல்லாம் தெரியும் நீங்களோ உங்க மிஸஸ் /வேற லேடீஸ் ஆக இருந்தாலும் தகவல் சொல்லிட்டா எனக்கோ சுப்பிரமணிக்கோ நியூஸ் வந்துடும் , டிலே இல்லாம மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்ய முடியும் . அடுத்த 5 நிமிடத்தில் மாடசாமிக்கு 3 போன் நம்பர்கள் , சுந்தரிக்கு போன் no. 3 [பிகே சார் மனைவியுடையது] கொடுத்து அவசரம் இருந்தால் எப்பவும் பேசலாம் என்று ராமசாமி தெளிவாக சொல்லிவிட்டார்.

சுந்தரி ரொம்பவே வருத்தப்பட்டாள் ;உட்கார்ந்த இடத்துல எல்லாத்தையும் முடிக்கிறார் ராமசாமி, யாருக்காக ? மாடசாமிக்காக ;

இந்த மாடசாமி சாரை பத்தி புகார் சொன்னேனே -இப்ப அவர் தானே இவ்வளவும் செஞ்சு தருகிறார் ;இது வரமா சாபமா ? ஆஞ்சநேயா அன்னிக்கு ஏன் நான் தடுமாறினேன் என்று உள்ளூர விசனப்பட்டாள் . கொஞ்சம் சான்ஸ் கிடைச்சாலே சுப்புரெத்தினம் சார் கோபப்படுறார், ஆனா மாடசாமி/ ராமசாமி கேப்ரியல் இவங்க மூணு பேரும் ஹஹ் ஹஹ் ஹா னு சிரிச்சுகிட்டே  எல்லாரையுமே கதிகலங்க வெக்கறாங்களே., அவங்கவங்க வேலைல பலே கில்லாடி யா இருப்பாங்க போல இருக்கு , நேத்துதான் போட்டோ வை வாங்கி அனுப்பினார் ராமசாமி  இன்னிக்கு போட்டோஅவங்களுக்கு  கிடைச்சு  அங்கிருந்து போன் நம்பரும் வாங்கி தந்துட்டாரே!. நம்மளால இதெல்லாம் செய்ய முடியுமா.? மரியாதையா அவங்க சொல்றபடி செஞ்சா கெளரவமா எல்லாம் செய்யலாம். ஞாயிறன்று சுப்பிரமணி அம்மா கிட்ட பேசணுமே .. என்ன பேச ஐயோ பயமா இருக்கே என்று சார் என்று  .  அழைக்க மாடசாமி என்ன என்றார். விஷயத்தை சொன்னதும் மாடசாமி இப்போது எதுவும் பேசவேண்டாம் என்று ஜாடை செய்தார். சுப்புரெத்தினம் பல் டாக்டர் வீட்டிற்கு போகவேண்டும் என்று 4.30க்கு கிளம்பினார்.. துண்டு சீட்டில் ராமசாமி வீட்டிற்கு ஞாயிறு காலை போக வேண்டியிருக்கும் . எல்லா சந்தேககங்களையும் குறித்துக்கொண்டு போனால் நேரம் வீணாகாமல் முக்கியமான எல்லாவற்றையும் பிளான் பண்ணி வைத்துக்கொள்ளமுடியும். ராமசாமி சார் மனைவி ஆலோசனையில் கல்யாண ஏற்பாடுகள் குறித்து தெளிவு பெறலாம் , அப்பிடியே மாமி சூப்பர் சாப்பாடு தருவாங்க சாப்பிட்டுவிட்டு வரலாம் ஞாயிறு காலை 8.45 மணி மைசூர் காபி நிலையம் ஸ்ரீரங்கம் என்று தெரிவித்திருந்தார் மாடசாமி 

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...