Thursday, June 6, 2024

B R PANTULU -3

 B R PANTULU -3

இயக்குனர்  பி ஆர்  பந்துலு-3

உலகமெங்கும் ஒரே மொழி , "நாடோடி"  : பாடல் கண்ணதாசன்   எம் எஸ், வி  டி எம் எஸ் சுசீலா

வெகு நேர்த்தியான டூயட்.

நடிகை பாரதி -எம் ஜி ஆர் இணைந்து நடித்த  முதல் படம் . தமிழ் நாட்டில் பலரும் பாரதியை எம் ஜி ஆர் கண்டெடுத்து போல் பேசுவர். ஆனால், உண்மையில் அவர் பந்துலுவின் கண்டெடுப்பே. ஏனெனில், இருவரும் பெங்களூரு வாசிகள். மேலும் பாரதி பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியினர், அழகாக தமிழ் பேசும் பெங்களூர் வாசிகளில் பாரதியும் ஒருவர் .

பெங்களூரிலேயே 1/2 நூற்றாண்டாக வாழும் தமிழர்கள் கன்னடம் பேசாமலேயே காலம் தள்ளுபவர்கள். ; இங்கு எல்லோருமே தமிழ் பேசுவார்கள் என்று தங்களின்                               பற்றாக்குறையை மூடி மறைத்து  ஹி ஹி ஹி என்று வழிவார்கள்.  இதை ஏன் பேசுகிறேன் என்றால், பிறமொழியினர் தமிழில் பிரகாசிக்க நம்மவர்கள் பிறமொழி அறிதல் ஜென்மபாபம் என நினைக்கின்றனர். ஆந்திரா/ மும்பை வாழ் தமிழர்கள் அந்தந்த மொழிகளில் வியத்தகு ஆளுமை கொண்டோர் . அது என்னவோ --கர்நாடகாவில் [அதிலும் பெங்களூரு வாசிகள்] தமிழ் தவிர வேறேதும் அறியாத இல்லத்தரசி கள், தாத்தா/பாட்டிகள் எண்ணற்றோர். இந்நிலை பெங்களூருவுக்கு மாத்திரமே. இதை நான் இங்கே பேசக்காரணம் மொழிகளை அந்தந்த வட்டாரங்களில் கற்றால், சொற்கள், பேச்சுவழக்கு , அறிவதோடல்லாமல் , நாமும் அவர்களுள் ஒருவராக ஏற்கப்படும் மகத்தான சமூக அங்கீகாரம் கை வரப்பெறலாம். மொழிக்கலவர சூழல்களை சாதகமாக்கி,  சமூக விரோதிகள் நமக்கு எதிராக  வன்முறை செயல்களை  பயன்படுத்துவதிலிருந்து தப்ப முடியும். .

நடிகை பாரதி, சொந்தக்குரலில் தமிழில் பாடி /பேசி நடித்தவர் அதுவே என்னை 'நம்மவர்கள்" பற்றி எழுத உந்தியது. சரி இப்பாடல் மிக ரம்மியமான கவிதை எனில், காட்சி அமைப்பும் நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்ற 1966 ன் ஒரு அற்புதம் . காட்சியின் நேர்த்தியை யம் பாரதியின் அனாயாசத்தையும் கண்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=XObyqQ50I1c ULAGAMENGUM NADODI KD MS V PS TMS

வழி வழியே வந்த தமிழ் பண்பாடு [ நம்ம வீட்டு லட்சுமி ] 1966 கண்ணதாசன்               எம்எஸ் வி, பி சுசீலா

அந்நாளைய பிரபலமான பாடல்.பாரதி முக்கியபத்திரத்தில் கேட்டு மகிழ இணைப்பு இதோ பாடல் கண்ணதாசன்

https://www.google.com/search?q=nammaveettu+lakshmi+video+songs+download&newwindow=1&sca_esv=17f8a8f7a4f95661&sca_upv=1&sxsrf=ADLYWILhdGOi8iI38ujaXtEMhDHJrM4lGg%3A1715917379222&e VAZHI VAZHIYE  NAMMA VEETTU LAKSHMI KD MSV PS

தமிழில் சமூக படங்களில் இடம் பெற்ற ஹிந்துஸ்தானி வகை இசை இப்பாடல் என்பது என் நினைவு. மிக ரம்மியமான பாடல்

உன்னை எண்ணி என்னை மறந்தேன் [படம் ரகசிய போலீஸ் -115 ] 1968  கண்ணதாசன்  , எம் எஸ் வி,  பி சுசீலா

அன்றைய திரை கலாச்சாரத்தில் இப்படி ஒரு பாடலும் நடனமும் வேறெங்கும் இருப்பதாக நான் அறியேன். நிர்மலாவின் மெல்லிய உருவமும் நடனமும் சுவை சேர்க்க ஜெயலலிதா எம் ஜி ஆர் மீது செலுத்தும் ஆதிக்கமும் கட்டுப்பாடும் காட்சிக்கு வலு சேர்க்க , எம் எஸ் வி பாடலில் பல சங்கதிகளை நுழைத்து வெகு நேர்த்தியாக கொடிகட்டிப்பறந்துள்ளார் இப்பாடலில் .        பாடலை [வீடியோ MGR -JJ ] நுணுக்கமாக கவனியுங்கள் பந்துலுவின் இயக்கம் நன்கு விளங்கும்  அருமையான இசை ரசிக்க கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=UNNAI+ENNI+ENNAI+MARANDEN++VIDEO+SONG+&newwindow=1&sca_esv=17f8a8f7a4f95661&sca_upv=1&sxsrf=ADLYWIK3VHLa2C8YanMHz-jclGRLcfx02Q%3A1715918482 UNNAI ENNI 1968 KD MSV PS

அந்தரங்கம் நான் அறிவேன் "கங்கா  கௌரி"  1973 , கண்ணதாசன் எம் எஸ் வி , பிபி ஸ்ரீனிவாஸ் ஜானகி

இது ஒரு தேவலோக கிண்டல் பாடல் . படம் நான் பார்த்ததில்லை .எனவே காட்சியை விளக்க இயலவில்லை.. ஆனால் ஏதோ நகைச்சுவை ஓடுவதை காண முடிகிறது. பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்துள்ளதாக சொல்லப்பட்டது . மிக நேர்த்தியான பாடல்.  . [கண்ணதாசன் ]

கொசுறு செய்தி

இப்படம் தயாரித்த போது பந்துலு பொருளதர நெருக்கடியில் இருந்தார். எனவே எம் எஸ் விக்கு தெரியாமல் படத்திற்கு விளம்பரம் வெளியிட்டார். ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று MSV கேட்க , நீங்க பெரிய ம்யூசிக் டைரக்டர் , உங்களை வெச்சு சம்பளம் கொடுக்க முடியுமா ன்னு தெரியல என்றாராம் பந்துலு [அன்றைய எம் எஸ் வியின் சம்பளம் 25 -27 ஆயிரம் தான் 1 படத்திற்கு என்று சொல்லப்பட்டது]. இதைக்கேட்ட MSV , நான் என்னைக்காவது பணம் கேட்டிருக்கனா -உங்க கிட்ட என்று கோபித்து , நானே ம்யூசிக் பண்ணித்தரேன் எப்போது முடியுமோ அப்போ பணத்தைப்பத்தி பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, ஒரு வேளை  நான் நல்லா ம்யூசிக் பண்ணல்ல நினைக்கிறீர்களோ என்பதனால் கேட்கிறேன் என்று எம் எஸ் வி சொல்ல , மிகவும் ஆடிப்போனாராம் பந்துலு. பாடல்கள் சிறப்பாக அமைந்த படம்.  மீண்டும் இருவருமிணையவாய்ப்பின்றி பந்துலு மறைந்தார்.. எண்ணற்ற தென் இந்திய படங்களை, வழங்கிய பந்துலு இப்போது இல்லை. 

கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=andharangam+nan+ariven+video+song+download&newwindow=1&sca_esv=17f8a8f7a4f95661&sca_upv=1&sxsrf=ADLYWIJHMGLTMUdoxVQRPCWMrQIEdbAeRg%3A17159188 GANGAS GOWRI 1973 KD MSV PBS SJ

நன்றி அன்பன் ராமன்

1 comment:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...