Wednesday, June 5, 2024

T M SOUNDARARAJAN-7

 T M SOUNDARARAJAN-7       

டி எம் சௌந்தரராஜன் -7                                    POSTING NO. 998

ஆறு மனமே ஆறு [ ஆண்டவன் கட்டளை -1964] கண்ணதாசன் , வி -ரா , குரல் டி எம் எஸ்

இது என்ன திரைப்பாடலா , ஆன்மீக அறிவுரையா , தெய்வத்தின் போதனையா ? எல்லாமுமேயா ? அன்றி யாதொன்றுமில்லையா ? . எப்படியும் வைத்துக்கொள்ளலாம். சிந்துபைரவி ராகம் என்று சொல்கிறார்கள். என்போன்ற ராகசூன்யங்களுக்கு அதெல்லாம் தெரியாது . ஆயினும் இது ஒரு 1964 ம் ஆண்டின் பெருமைமிக்க படைப்பு என்பதனை அறிவேன். தேர்நடுத்த 6 கட்டளைகளை வாழ்வின் நெறியாக விளக்கிட இந்தகவிஞை உந்தியது யார்/ எது? மிகஎளிய சொற்களில் மாபெரும் தத்துவங்கள்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

ஆசை கோபம் களவு கொள்பவன் மனித வடிவில் மிருகம்,

மேலும் மிருக மனம் தெய்வ மனம் என வேறுபடும் மானுடப்பண்புகளை 60 ஆண்டுகளுக்கு முன்னமே  எளிய நெறியாக போதித்து தனது ஆன்மீகத்தேடலை நமக்கும் சொல்லிச்சென்ற கவிஞன் -கண்ணதாசன் . அக்கவியின் சொல்லுக்கு மெட்டு எனும் இசைவடிவமும் , பின்னிசையும் தந்த விசு-ராமாமூர்த்தி இவர் தம் ஆளுமை மிளிர ஒலித்தபாடலை யா?  போற்றுதற்குரிய காட்சியாக படைத்த அன்றைய சங்கரை யா? அதை உயிர்ப்பித்த கணேசனையா [சிவாஜி] யாரைப் பேசாமல் விட இயலும்? துறவியின் குரலாய் ஒலித்த டி எம் எஸ் காட்டிய கம்பீரம் காலத்துக்கும் நிற்கும்

கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=aaru+maname+aaru+video+song&oq=aaru+maname+aaru+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCggAEEUYFhgeGDkyCggBEAAYgAQYxwXSAQkxNjcxOGowajSoAgCwAgE&sour aandavan kattalai -1964 kannadasan v-r tms

ஆன்மிக தத்துவம் பேசிய /  பாடிய  குழுவினர் இல்லற வாழ்வில் பொருளாதார தத்துவம் பயிற்றிக்குவித்த இன்னோர் பாடல்

வரவு எட்டணா செலவு  பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா , துந்தனா , துந்தனா , ஹோ ய் என்று கேலியும் கும்மாளமும் பின்னிப்பிணைந்த 1967 ம் ஆண்டின் ஆழமான பாடல் . கண்ணதாசனின் கவிதைக்கு இசை வடிவம் எம் எஸ் விஸ்வநாதன் வழங்க டி எம் எஸ் குழுவினர் பாடிய "பாமா விஜயம்" படப்பாடல். மீண்டும் ஒரு முறை எம் எஸ் வி தனது அன்றைய கிட்டார் முத்திரையை செம்மையாகப்பதித்தப்பாடல் , பல்லவியை தொடர்ந்து ஒலித்த நேர்த்தியான கிட்டார் ஒலி திரு. பிலிப் அவர்களின் தேர்ந்த வாசிப்பு. என்று கேட்டாலும் மனம் கவரும் ஸ்வரக்கோவை - பிலிப்பின் நேர்த்திக்கு ஈடு அவர் தான். பாடல் முழுவதிலும் கிட்டாரின் பயணம் மறக்கவொண்ணாத ரம்மியம்.. இது போன்ற ஒலிகள் வேண்டுமெனில் பழைய பாடல்களை நாடித்தான் பெற முடிகிறது. அத்துணை பாவங்களையும் பாடி வெளிப்படுத்திய டி எம் எஸ் குரலின் ஆதிக்கம் வெகு சிறப்பு . கேட்டு மகிழ இணைப்பு இதோ . 

https://www.youtube.com/watch?v=QsgEyp7yjMo VARAVU ETTANAA

பந்தய குதிரையாய் ஓடித்திரி ந்த  டி எம் எஸ் அவர்களை மென்மையான முயலை போல் துள்ளி ஓடவிட்டு புதுமை படைத்த பாடல்

"யார் அந்த நிலவு?"   படம் சாந்தி -1965 -கண்ணதாசன் , வி ரா , குரல் டி எம் எஸ்

ஆங்கில பாடகன் CLIFF ரிச்சர்ட் பாடல் போல் ஒரு பாடல் உன்னால் உருவாக்க முடியுமா ? என்று சிவாஜி  எம் எஸ் வியிடம் சவால் விட, உருவாக்கி விட்டால் , உம்மால் நடிக்க முடியுமா என்று எம் எஸ் வி --எதிர் சவால் விட கோடம்பாக்கம் சூடேறிய சம்பவம் அல்லவா அது ? என் மார்க்கெட்டே போய்விடும் நான் மென் குரலில் பாடினால் என்று தயங்கிய டி எம் எஸ் அவர்களை ஒரு வழியாக ஒப்புக்கொள்ள வைத்து உருவாக்கப்பட்ட பாடல். பாடலின் நேர்த்தியால் மிரண்ட சிவாஜி நன்கு யோசித்து மனதில் உள்வாங்கி நடித்த பாடல் காட்சி. அந்நாளில் இதில் சிவாஜி தான் மட்டும் நடித்தாரா இல்லை சிகரெட் புகையையும் நடிக்க வைத்தாரா என்று   பட்டிமன்றம் நடத்தியோர் பலர். மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான போட்டி தமிழ் சினிமாவில் 1965ல் . கிட்டார் [பிலிப்] ட்ரம் [நோயல் க்ராண்ட் ] santhoor /sarod கலை வர்கள் +{ டி எம் எஸ் ] அரங்கேற்றிய அந்நாளைய புதுமை கேட்டு மகிழ / ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=yaar+antha+nilavu+video+song&newwindow=1&sca_esv=04c57bc3f34f5e13&sca_upv=1&sxsrf=ADLYWILlO0lxBqcs2kBiyHk9TnYU05S5LA%3A1717492442178&ei=2tpeZurACobZ

இந்தப்பாடலில் உள்ள  வேறு சில தகவல்களை QFR பதிவில் காணலாம் . கண்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=yaar+antha+nilavu+qfr+video+song&newwindow=1&sca_esv=04c57bc3f34f5e13&sca_upv=1&sxsrf=ADLYWILc7PUhPG7-14WHknZ-BZRVIRiGfg%3A1717492669985&ei=vdteZuvM

வளரும்

அன்பன் ராமன்

1 comment:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...