Tuesday, June 4, 2024

FRAUDULENT GUYS-2

 FRAUDULENT GUYS-2      

ஏமாற்றுப்பேர்வழிகள் -2

இப்பத்தான் என்ற வரை முறையே இல்லாத வாழ்வியல் உத்தி ஏமாற்றுவது..

உங்கள் கணவரை லாரி இடித்துவிட்டது  , மயங்கி சாய்ந்து ICU வில் இருக்கிறார் வாருங்கள் என்று அவசரப்படுத்தி ஆட்டோ வில் ஏற்றி ஏதோ ஒரு முகவரியில் விட்டுவிட்டு வந்தவன் எஸ்கேப் . ஏங்கிய முகமும் அலைந்த களைப்பும் பற்றிக்கொண்டு அலைய கணவர் போனில் எங்கே போனாய் உன்னை எங்கெல்லாம் தேடுவது , ஹாலில் இருந்த 80" டிவி எங்கே . இது போன்ற திருட்டுகள் ஏராளம் .

மேடம் உங்களுக்கு 50 ஆயிரம் டாலர் ப்ரைஸ் விழுந்துள்ளது. நீங்கள் 1000 ரூபாய் இந்த நம்பருக்கு டிரான்ஸ்பர் செய்தால் OTP வரும் அதை இங்கு அனுப்புங்கள் . 1 மணி நேரத்தில் 50 ஆயிரம் U S  $ என்று வலை விரிக்க மாமி 1000/- தானே என்று ட்ரான்ஸ்பர் கொடுக்க அவ்வப்போது MSG -"MINISTRIES ' CLEARANCE AWAITED 'என்று நம்பிக்கை ஊட்டிவிட்டு இரவில் மொத்த க்கவுண்டையும் வழித்து துடைத்து விட்டு ஓடும் எத்தர்கள் ஏராளம்.

விழித்துக்கொண்டிருக்கும் போதே விழியைப்பறிப்பது என்று ஒரு சொல்லாடல் உண்டு . அதற்கு 2 சான்றுகள். 1 தேக்கு மரம் -ஒரு ஏக்கர் . 100 மரம் உண்டு . உங்களுக்கு எத்தனை மரம் வேண்டும் ? எல்லா மரத்துக்கும் நம்பர் போட்டு வெச்சிருக்கோம். மரம் ஒண்ணுக்கு 2000/- ரூவா கட்டிட்டு 20 வருஷம் கழிச்சு ஒவ்வொரு மரமும் 5 லெட்சரூவா போகுமே.

 2 பொண்ணுங்களுக்கும் பாரின் மாப்பிள்ளை யா பார்த்து கட்டிவெச்சுரலாம் , யோசிக்காதீங்க  என்று பேசிக்கொண்டே கிச்சன் பக்கம் எட்டிப்பார்க்க, கண்கள் அகல விரிய திருமதி எட்டிப்பார்க்க , நீங்க சொல்லுங்கம்மா , இதைவிட நல்ல ஈல்ட் , கள்ள நோட்டு அடிச்சாதான் கிடைக்கும் என்று திருமதியை அசைத்து விட்டான் . சரி சாயங்காலம் வாரீங்களா மரம் காட்டுறேன் , நீங்களா தேர்ந்து எடுங்க ;ஆனா ஒன்னு அடுத்தடுத்த மரம்னா அஞ்சோ பத்தோ எடுத்துட்டா டாகுமெண்ட் போட்ரலாம். 51/2மணி க்கு ஸ்பாட்டுக்கு போயிருவோம். என்கிறான் லோகு               [ தரகு].

7.00 மணிக்கு போலாமே -இது ஐயா .

இருட்டுலியா மரம் பாப்பாங்க -புரியாத சாரா இருக்கீங்க. என்கிட்டே சொன்னா மாதிரி வேற யார்கிட்டயும் பேசிடராதீங்க இருட்டுல கொய்யா மரத்தை காட்டி தேக்கு னு ஏமாத்திருவான். நான் இருட்டுல ஏமாத்துற ஆள் இல்லை [பகல்  லியே ஏமாத்துவேன் என்று நாசூக்காக சொல்கிறார்]

 திருமதி "நீங்க 41/2க்கு வாங்கோ நான் சார கையோட கூட்டிக்கிட்டு வரேன் என்றார். .  .   நல்லது ம்மா,  நான் 41/4க்கு வரேன் என்று பெரிய அளவில் மிளகாய் அரைத்து மூன்று ஆண்டுகளுக்கு பின் தேக்கு பாக்கு லோகு எதையும் காணும் ஒரே நாளில் 10000/- அவுட்.

கோர்ட்ல கேஸ்  போடப்போனா--  பியூன்உங்களுக்கு அறிவிரு க்கா ?  20 வருஷம் கழிச்சு ஒரு மரம் 5 லச்சம் னு ஏமாந்தீங்களே, 20 வருஷம் கழிச்சி மரத்துக்கு பதிலா இண்டஸ்ட்ரியல் ஸ்டீல் னு ஏதாவது வரும் .

 தேக்கு ஒரு மரம் 3000 க்கு போவும். உங்கள ஏமாத்தவே வேணாம் எங்கள் ஓடிப்போய் ஏமாந்துட்டு வருவீங்க னு கிண்டல் செய்கிறார். யாரு? – பியூன்

மற்றுமோர் வகை   பச்சை காய்கறி சப்ளை

இது நடந்த அந்த நாட்களில்   பச்சை காய் கறி வாரம் 100/-க்கு   காய் மாசம் 400-500/- , வருஷம் 5200//- சராசரி .

நாங்க 3200க்கு ஒருவருசத்துக்கு நல்ல தரமான பச்சை காய் சப்ளை  செய்கிறோம் . 3200/- மூணு தவணையில் 1200/- , 1000/- 1000//- கட்டி ஒரு ஆண்டுமுழுவதும் நல்ல காய்கறிகளை உண்டு மகிழ்வீர் என்று வழவழ தாளில் பச்சை காய்கறி போட்டோ போட்டு 1200/- வாங்கி , 3 வாரம் காய் தந்துவிட்டு மொத்தமாக எஸ்கேப் .

கூட்டி கழிச்சு பார்த்தால் 300 -320 க்குள் தான் பொருள் விலை இருக்கும் . மீதியை /- ஏவ்  என்று ஏப்பம் விட்டாயிற்று. அவன் எங்கே போனான் யாருக்கும் தெரியாத பசுமைப்புரட்சி இந்த பச்சை காய் கறி வியாபாரம்

 .தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...