Monday, June 3, 2024

SALEM SUNDARI -19

 SALEM SUNDARI -19

சேலம் சுந்தரி-19

மாடசாமியிடம் சுந்தரி சொன்னாள் , நான் ஊருக்குப்போனால் என்ன ஏது னு , ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடிக்கிட்டு வருவாங்க, அதுனால அவள  இங்க வரச்சொல்லிட்டா , யார் கேட்டாலும் அக்காவீட்டுக்கு ஒரு 2, 3 நாள் போயிட்டு வரேன் னு சொல்லச்சொல்லி பெண் பார்க்கும் படலத்தை குழப்பமில்லாம முடிச்சிடலாம் அதோட நானும் மீண்டும் அந்த பையன், அவங்க அம்மா எல்லாரையும் வீடியோவுல பாத்துருவேன் என்றாள் . 

"கரெக்ட் தான்" என்றார் மாடசாமி. இந்த விவரங்களை தங்கை விசாலாட்சியிடம் அன்றே  போனில் தெரிவித்து எப்போது திருச்சி வரமுடியும் என்று தகவல் சொல் என்று தெரிவித்தாள் சுந்தரி.

அடுத்த வாரம் ஒட்டு போடறத ஒட்டி 3 நாள் கடைக்கு லீவு னு முதலாளி  அம்மா சொன்னா ங்க என்றாள் விசாலாட்சி . சரி நீ ஓட்டுபோட்டுட்டு கிளம்ப தயாரா இரு , நான் ஒட்டு போட வியாழன் ராத்திரி வருவேன் மறுநாள் காலைலயே ஒட்டு போட்ட பிறகு  என்னோட வந்துடு என்றாள் சுந்தரி. சரிக்கா என்று ஒப்புக்கொண்டு , கடை முதலாளியிடம் 3 நாள் அக்காவீட்டுக்கு போயிட்டு வரேன் என்று பெர்மிஷன் வாங்கி விட்டாள் விசாலாட்சி.. 

இதையெல்லாம் தெரிந்து கொண்ட  மாடசாமி சொன்னார் ".காலை 10.40க்கு  ஒரு பெங்களூர் திருச்சி விரைவு வண்டி சேலம் வரும் அதுல 2 டிக்கெட் போடுங்க இல்லைன்னா ஏதாவது டூட்டி பாஸ் வாங்க முடியுமா பார்ப்போம்" என்றார் அம்மான் மாடசாமி . சுந்தரிக்கு ஒவ்வொரு செயலிலும் மாடசாமியின் யதார்த்த நிலைப்பாடு ரொம்பவே உறுத்தியது.

எல்லா ஏற்பாடுகளையும் மாடசாமி ராமசாமியிடம் தெரிவிக்க , ராமசாமி துரித கதியில் இயங்கி , எங்கோ போனார் அடுத்த 20 நிமிடத்தில் ஒரு பெரிய பைலை கொண்டுவந்தார் மிக நன்றாக பேக் செய்யப்பட்டு "கவனம்" என்பதாக கான்பிடென்ஷியல் என்ற குறியீட்டுடன், 2 பேர் சென்று வர திருச்சிசேலம் - திருச்சி ட்யூட்டி பாஸ் கொண்டுவந்தார். இந்தா என்று மாடசாமியிடம் பாஸ் ஐ கொடுத்துவிட்டு  இந்த பைலை வியாழன் மதியம் ட்ரெயினில் கொடுத்தனுப்பி [அதுவரை என்னிடம் இருக்கட்டும்] சேலம் ரயில்வே ஆபீஸ் சுப்பரின்டென்டென்ட் கௌஸ் முகமதுவிடம் கொடுத்துவிட்டு மறுநாள் வேறொரு பைலை அவர் தருவார் , அதை என்னிடம் கொடுக்கச்சொல் , நான் உரிய செக்ஷனில் கொடுப்பேன் ,நீங்கள் யாரும் செக்ஷன் போக வேண்டாம் , இதையும் சுந்தரியிடம் தெளிவாக சொல்லி விடு என்று மாடசாமிக்கு தெளிவான குறிப்புகளை அளித்தார் ராமசாமி. மேலும் சவுகரியமான பயணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய் என்று சொன்னார்.

மாடசாமி சொன்னார் இரண்டு ரூட்லயும் நம்ம பசங்க தான் [TTE ] பாக்குறாங்க நான் சொல்லிடறேன்  ரொம்ப நன்றிடா என்று கை குலுக்கி விடை பெற்று  அகன்றார் மாடசாமி..

பின்னர் சுந்தரி வியாழன் மதியம் 1.10 எக்ஸ்பிரஸில் முக்கியபைலை கொண்டுபோய் சேலத்தில் கொடுத்துவிட்டு , மறுநாள் 10,45 வண்டியில் வேறொரு பைல்+தங்கையுடன் திரும்பி, பைலை ராமசாமியிடம் கொடுத்துவிட்டு போக ஏற்பாடு செய்யப்பட்டு இருவழி பயணத்துக்கும் ட்யூட்டி  பாஸ், தந்து, போகும்போது TTE விஜயரங்கன் , வரும்போது சார்லி [TTE ] சொல்லும் கோச்சில் ஏறி பயணம் செய்ய வேண்டும் . 

திருச்சியில் நான் பார்த்துக்கொள்கிறேன் அங்கிருந்து வரும்போது இந்த போன் நம்பரில் கேட்டால் சார்லி எந்த கோச் என்று சொல்வார் [நானே சார்லியிடம் பேசி இருக்கிறேன்] கவலைப்படாமல் போய் வா -குட் லக் என்று கை கூப்பினார். சுந்தரிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ; அதே சமயம் எவ்வளவு பரோபகாரி இந்த மாடசாமி ராமசாமி இருவரும். இவரைப்போய் புகார் சொன்னேனே என்று வயிற்றைப்பிசைந்தது. ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொன்னாள்

ஆனால் மனசாட்சி ["மானங்கெட்டவளே தராதரம் தெரியாமல் நடந்துகொண்டாயே, உனக்கு பாஸ் என்ன பாதுகாப்புக்கு TTE என்ன என்று ஏற்பாடு செய்கிறார்களே , இதை எல்லாம் நீ கனவில்கூட நினைத்திருப்பாயா , நீ ஜென்மத்துக்கும் எவர் பற்றியும் பேசாதே " என்று கொந்தளித்துக்குமுறியது]. உண்மைதான் என்று உணர்ந்தாள் ; பொங்கி வந்த அழுகையை மறைத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் போய் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள்.   

தொடரும்          

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...