SALEM SUNDARI -20
சேலம் சுந்தரி-20 POSTING NO: 1,000
சுந்தரிக்கு சற்று மனச்சுமை
குறைந்தாற்போல் இருந்தது. கண்ணாடியில் பார்த்தாள் , கண்கள் சிவந்து கலங்கி, மூக்கின்
முன் பகுதி சிவந்து , ஐயோ இது என்ன அலங்கோலம் , என்னைப்பார்க்க
எனக்கே பிடிக்கவில்லையே சீ என்றுணர்ந்தாள்; ஆனாலும் மனம் என்னவோ பஞ்சுபோல்
எடை இல்லாது இருப்பதாகப்பட்டது. இது தான் பாரத்தை
இறக்கி வைப்பதோ ? ஆஞ்சநேயா காப்பாற்று என்று நொடிப்பொழுதில் நாமக்கல்
சன்னதியில் நின்று நெக்குருக வேண்டினாள் .
என்ன? சரியாச்சா
, நீ
எதையாவது பண்ணிட்டு அப்பப்ப ஆஞ்சநேயா
காப்பாத்து காப்பாத்துங்கற , எனக்கு வேற வேலையே இல்லைனு
நெனச்சியா. உன் பாரத்தை நான் சுமக்க முடியுமா? எல்லாருமே நீங்களா ஏதாவது
சுயநலத்துக்கு தப்புத்தப்பா [யோசிக்காம] சுமையை ஏற்றிக்கொண்டு, திடீரென்று
ஆஞ்சநேயா காப்பாத்து காப்பாத்து னு புலம்பி வெத்தலை மாலை போடறேன், வடைமாலை
போடறேன் னு என் மேலே எடையை போட்டு , உங்க சுமையை குறைக்க என் மேலே
சுமையை ஏத்திட்டு நிம்மதி அடை யறீங்க. .ஆஞ்சநேயன் தான் என்ன பண்ணுவான் னு யாராவது
யோசிக்கறீங்களா?
“யாரோ வாத்யார் என்னை
சபிச்சுட்டார் போல இருக்கு , ஏன்னா,
வாத்தியாருக்கு அடுத்தபடியான இருக்கவே இருக்கார் னு ஆஞ்சநேயருக்கு அப்பப்ப
பாராட்டு பாத்திரம் வாசிக்கறீங்க , யார்கிட்டயாவது சொல்லி அழணும்
னு நெனச்சேன் , நீ
கிடைச்ச சொல்லிருக்கேன் . ஞாபகம்
இருக்கட்டும்; நல்லவர்கள் யார் ? அல்லாதவர்கள் யார் பார்த்து நடந்துக்கோம்மா.
என்று ஆசிரியர் போல் ஆஞ்சநேயர் அறிவுரைப்பதாக
உணர்ந்தாள். இப்போது கண்கள் தெளிவடைந்து மூக்கு சிவப்பு மறைந்துவிட்டது.
நன்றாக முகம் கழுவி மீண்டும் செக்ஷன் சென்றாள்
மாடசாமி வரும் 3 - 4 நாள்
சார்ட்டைப்பார்த்து சரிதான் விஜயரங்கனும் , சார்லியும் தான் குறிப்பிட்ட
வண்டியில் அந்த நாட் களில் ட்யூட்டியில் இருக்கிறர்களா என்று நன்றாக உறுதிசெய்து
கொண்டார் நான் சொன்னதுதாம்மா என்று சுந்தரியிடம் சொல்லி விட்டு மென் குரலில் பைலை
நாளைக்கு நானே வாங்கி தரேன் நீங்களா போய் எங்கயும் கேட்கவேண்டாம் என்று எச்சரித்தார்.
சரி சார். என்றாள் சுந்தரி .பின்னர் சார் இங்க பக்கத்துல ஆஞ்சநேயர் கோயில் இருக்கா
சார் என்றார். ஏன் இருக்கே-“போவணுமா?”
என்றார் மாடசாமி..
ஆமா சார் ரொம்பநாள் ஆச்சு ஆஞ்சநேயர் கோயிலுக்கு
போய் . ஊர்லமாசம் 1 தடவ நாமக்கல் ஆஞ்சநேயர் கும்பிடுவேன் என்றாள்
சுந்தரி.
ஏம்மா புவனேஸ்வரி [ புக்கிங் staff ] நீங்க
கல்குழிதானே , இவங்கள
ஆஞ்சநேயர் கோயில்ல விட்டுட்டுட்டு பஸ் ஸ்டாப் எங்கன்னு காமிச்சுட்டு நீங்க போக
முடியுமா ? என்றார்
மாசா.
சரி சார் என்றாள் புவனேஸ்வரி. அவங்க கூட ஸ்கூட்டர்ல போயிட்டு
வீட்டுக்கு பஸ் ல போயிருங்க என்று ஏற்பாடு செய்தார் மாடசாமி.
மறுநாள் 12 .45 க்கு
விஜயரங்கனை அறிமுகம் செய்துவிட்டு பாத்து கூட்டிகிட்டு போ ப்பா என்றார் மாசா. சரி
சார் என்றார் விஜயரெங்கன்..
வண்டி வரும் நேரத்தில் ராமசாமியும்
மாடசாமியும் வந்தனர் எங்கப்பா என்றார்
மாடசாமி .C
7 ல ஏற சொல்லுங்க என்றார்
வி.ரெங்கன். குறிப்பிட்ட இடத்தில் நின்று
வண்டியில் C 7 பார்த்து
சுந்தரியை TTE சீட்
பாத்து உக்கார வைத்தார் மாடசாமி . பின்னர் பைலை கொடுத்து , சேலம்
இறங்கியதும் சுப்பரின்டென்டென்ட் கௌஸ் முகம்மது விடம் கையில் பைலை கொடுத்தபின்னர் , நாளை
உங்கள் பைலை காலை 10.40 வண்டியில் போகுமுன் வாங்கிக்கொள்ளுகிறேன் என்று
சொல்லிவிட்டு வீட்டுக்கு போங்க குட் லக் என்று வாழ்த்தி அனுப்பினர்.. கரூரில் 2.00 மணி
, ஏதாவது
சாப்பிடுறீங்களா என்றார் வி ரெங்கன் . இல்ல சார் என்றாள் சுந்தரி. சும்மா
சாப்பிடுங்க என்று யாரையோ கையசைத்தார் வி
ரெ.
ஒருவன் 10 நுங்குகளை
பனை ஓலையில் முடிந்து இந்தங்கம்மா என்று கொடுத்தான். சுந்தரி எவ்வளவு என்றாள் .
அய்யய்யோ வேணாம் மா அய்யா சத்தம் போடுவாரு என்று சொல்லிக்கொண்டே மெல்ல ஓடும் வண்டியில்
இருந்து பிளாட்பாரத்தில் குதித்தான். ரயில்வேக்காரர்கள் யாருக்கு எப்போது என்ன
செய்யமுடியும் என்று நன்கு அறிவர். வாழ்வு என்பது பெரும்பகுதி ரயிலிலும், பிளாட்பாரத்திலும் தண்டவாளத்திலும் தான்.
எனவே இறக்க குணம் மிக்கவர்கள்.. இவை எல்லாம் சுந்தரியை வேரோடு
அசைத்துவிட்டன . இனி எல்லோருக்கும் உதவியும் உபகாரமும் செய்துதான் வாழ வேண்டுமென்று
வைராக்கியம் பூண்டாள் . [முன்பு இப்படித்தான் கஸ்தூரிரெங்கன் என்றொருவன் வீரவசனம்
பேசினான் , என்னாயிற்று
என்கிறீர்களா? அவன்
இப்போது ஹார்மோன் பிடியில் சிக்கி திண்டாடுகிறான் - ஆனாலும் அவனை மோசமானவன் என்று
ஒதுக்கிவிட முடியுமா?] சேலம்
மாலை 4.10க்கு
வந்தது. வி ரக்கு வணக்கமும் நன்றியும் சொல்லிவிட்டு கீழிறங்கினாள். வி ரெங்கன் கூடவே
வந்து , இதுதான்
மேடம் சுப்பரின்டென்ட் கௌஸ் ஆபிஸ் என்று காட்டிவிட்டு ஓடி ரயிலில் ஏறிக்கொண்டு
கை அசைத்தார். கௌஸ் அவர்களிடம் நாளை காலை 10.30
மணிக்கு பைலை வாங்கிக்கொள்வதாக சொல்லிவிட்டு , ஒரு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு
பயணித்தாள் . ஒரு 1 மணி நேரம் பர்மிஷன் போட்டு தங்கை காத்திருந்தாள் .
வாக்கா என்று ஓடி அக்காவை கட்டி பிடித்துக்கொண்டாள்.
அக்கம்பக்கத்தினர் சகோதரிகளின்
வாஞ்சையை கண்டு மனதார வாழ்த்தி , பனித்த கண்களுடன்
சுந்தரியை நலம் விசாரித்தனர். சாப்பாடு செஞ்சு வெச்சிருக்கேன் , இப்ப
கடைக்கு போயிட்டு 7.45--8.00 க்குள்ள வந்துருவேன். ரெண்டு பேரும் சாப்புடுவோம். நாளைக்கு ஒட்டு போட்டுட்டு
உங்ககூட திருச்சிக்கு வர்றேன்க்கா என்றாள் விசாலாட்சி.. நொடிப்பொழுதில் சுந்தரி
மனதில் ராமசாமியும் மாடசாமியும் வந்து
போயினர். சொன்னபடியே சின்னவள் வந்தாள் இருவரும் மிகுந்த பூரிப்பும் குதூகலமும்
கொண்டு இரவு சாப்பிட்டனர். “இந்தப்பொடிசு என்னமா சமைக்குது” என்று தங்கையின் திறன் பற்றி சுந்தரி பெருமையும் வியப்பும் கொண்டாள்.
தொடரும்
No comments:
Post a Comment