Thursday, June 13, 2024

MD S M SUBBIAH NAIDU

 MD S M SUBBIAH NAIDU

எஸ் எம் சுப்பையா நாயுடு

எஸ் எம் சுப்பையா நாயுடு [எஸ் எம் எஸ் ] பழம் பெரும் இசை அமைப்பாளர் . தமிழ் சினிமா கோவையில் இயங்கிக்கொண்டிருந்த 50 களில் கொடிகட்டப்பறந்தவர் . ஜுபிடர் ஸ்டூடியோ வின் ஆஸ்தான இசை அமைப்பாளர். திரு எம்ஜியார் அவர்களுக்கு ஆரம்ப காலம் தொட்டே நண்பர். எம் எஸ் விஸ்வநாதன் , சி கோபாலகிருஷ்ணன், மற்றும் சிலர் எஸ் எம் எஸ் அவர்களின் சீடர்களே. ஆழ்ந்த சங்கீதஞானம் கொண்டவர் , அவரது ஆக்கம் தான் கொஞ்சும் சலங்கையில் இடம் பெற்ற சிங்கார வேலனே தேவா என்ற பாடல்.. அவர் பாரம்பரிய இசை மரபில் வந்தவர் என்பதால் மரபு மாறாமல் மீறாமல் இசை வழங்குவது அவரின் விருப்பம் .சொல்லப்போனால் நாம் அறிந்த நமது தலை முறையின் இசை அமைப்பாளர்களை வளர்த்து எடுத்தவர். எம் எஸ் வியின் வாழ்வில் மிகுந்த பங்களித்தவர்.. அவற்றை இந்த பதிவின் இறுதியில் விளக்குகிறேன்    

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் [மலைக்கள்ளன் ] பாடல்                       இசை எஸ் எம் எஸ் ,குரல் டி எம் சௌந்தரராஜன்

முதன்முதலில் டி எம் எஸ் அவர்கள் எம்ஜிஆருக்கென பாடிய பாடல். அந்நாட்களில் பாடல் வெகு பிரபலம் 1954 இல் வெளியான கருத்துகள் கிட்டத்தட்ட இன்றும் கூட மாறாமல் தொடர்வது , நமது நாட்டின் நிலைமை குறித்த பார்வையாகக்கொள்ளலாம் . இணைப்பு 

https://www.google.com/search?q=ethanai+kaalam+thaan+yemaatruvaar+video+song&oq=ethanai+kaalam+thaan+yemaatruvaar+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHC 1954TMS [I SONG TO MGR, SMS

சிங்காரவேலனே  தேவா "கொஞ்சும் சலங்கை " 1962  பாடல் கு மா பாலசுப்பிரமணியம் , இசை எஸ் எம் எஸ், குரல் ஸ்.ஜானகி , நாதஸ்வர இசை :காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள்.

பலரையும், மிரளவைத்துக்கவர்ந்த பாடல் இது.

. டிராக் ரெக்கார்டிங் வசதி இல்லாத காலத்தில் குரல் தனியாகவும், நாதஸ்வர வாசிப்பு தனியாகவும் பதிவிடப்பட்டது பின்னர் ஓருங்கிணைக்கப்பட்டது .இதில் நாம் ரசிக்கவும் மதிக்கவும் வேண்டியது யாதெனில் எவ்வளவு துல்லியமாக இருவரும் பாடலின் ஜதிகளை இம்மி  பிசகாமல் தத்தம் கடமைகளை ஜானகியும், அருணாச்சலம் அவர்களும் நேர்த்தியாக ஈடேற்றி யுள்ளனர். இசையமைப்பாளர் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் இப்பாடலுக்கு என்னும் இரு முக்கிய தகவல்களைத்தான் . மறக்கவொண்ணாத பிரம்மாண்டம் இப்பாடல் . ரசிக்க இணைப்பு இதோ .

https://www.google.com/search?q=singaara+velane+deva+video+song&oq=singaara+velane+deva+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAHSAQkxNDEzNmow

2021 ம் ஆண்டில் [58 ஆண்டுகளுக்குப்பின்னர் ] ஒரு மேடை நிகழ்வில் எஸ் ஜானகி மீண்டும் சிங்கார வேலனே பாடலை எவ்வளவு நேர்த்தியாகப்படுகிறார் . கேட்டு இன்புறுங்கள் பி ஹெச் அப்துல் ஹமீது அவர்களின் அறிமுகம் மற்றும் பாராட்டுடன் . இணைப்பு இதோ   https://www.youtube.com/watch?v=rcR7IPC2OJE on stage

https://www.google.com/search?q=singaara+velane+deva+live+performance+s+janaki+on+stage+video+song&newwindow=1&sca_esv=cc5c935eaa1cb0b8&sca_upv=1&sxsrf=ADLYWIIUKNNOgICmBjpfj5dqfBbuxj

குயிலோசையை வெல்லும்  "மன்னிப்பு" 1971'  வாலி , எஸ் எம் சுப்பையாநாயுடு பி சுசீலா, பி கோமளா மன்னிப்பு படத்தில் நல்ல பாடல்கள் வழங்கி பெருமை கொண்டவர் திரு நாயு டு அவர்கள். இப்பாடல், கேட்க மென்மையாக நுணுக்கங்கள் மிக்க அமைப்பு கொண்டது.  கேட்டு உணர இணைப்பு

https://www.google.com/search?q=kuyiulosaiyai+vellum+video+song&oq=kuyiulosaiyai+vellum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJC vali ap k ps sms

வளரும்

நன்றி  ராமன்

 

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...