Friday, June 14, 2024

SALEM SUNDARI- 22

 SALEM SUNDARI- 22

சேலம் சுந்தரி -22   

சென்ற பதிவில்....

ஆட்டோவில் மூவரும் ராமசாமி வீட்டிற்கு சென்றனர்.

 ஆட்டோ வந்ததும் ஏ லக்ஷ்மீ என்று கூப்பிட்டுக்கொண்டே அம்புஜம் வாசல் பக்கம் விரைய, இதோ வந்துட்டேன் மாமி என்று சொல்லிக்கொண்டே பக்கத்து வீட்டுப்பெண் ஓடிவர, இங்க வா என்று லக்ஷ்மியை அழைத்து, சுந்தரி/ விசாலாட்சி இருவரையும் அருகில் நிற்கச்சொல்லி, ஆரத்தி எடுத்துவிட்டு உள்ள வாங்கோ என்றுசொல்லிக்கொண்டே முன்னே சென்றாள் அம்ஜம் .

மாடசாமி கண் ஜாடையில் சொன்னார் அந்தம்மா மஹாலக்ஷ்மி மாதிரி னு சொன்னேனே , இப்ப புரியுதா என்பதாக உணர்த்தினார். ஆரத்தி குறித்து இது என்னக்கா என்று விசாலாட்சி அதிர்ந்தாள் . என்ன மாமி ஆரத்தி ? என்றாள் சுந்தரி. கொழந்த நல்ல விஷயமா வாரா அதுனால இப்பிடி வரவேற்கறது தான் எங்க வழக்கம் என்றாள்  அம்புஜம்.

பிறகென்ன சூப்பர் காபி தான் . விசாலாட்சி அம்மாடியோ காப்பியா இது என்று கிடுகிடுத்தாள். மாடசாமி ஜம்மென்று ருசித்து மகிழ்ந்தார்.  மேல போலாமா என்றார் ராமசாமி . மணி 7.04

மேலே டேபிள்மீது  ராதே -கிருஷ்ணர் படம், சந்தன ஊதுபத்தி , நெய் விளக்கு எல்லாம் அம்புஜம் ஏற்பாடு.           4 சேர் பெண்களுக்கு .

 கட்டிலில் ராமசாமி, மாடசாமி இருவரும். மணி 7.08 போன் சிணுங்கியது பிகே நம்பரில் இருந்து.

பேசுங்க சார் என்று ராமசாமியிடம் போனை கொடுத்தாள் சுந்தரி. நமஸ்காரம் என்றபடியே கை கூப்பி வந்தார் பி கே.

ராமசாமியும் நமஸ்காரம் சார் என்று சொல்லிக்கொண்டே போனை மாடசாமி பக்கம் திருப்ப, மாடசாமி வணக்கம் என்று எழுந்து நிற்க , நல்லா இருக்கீங்களா என்றார் பி கே.

சரி மொதல்ல யார் முகத்தைக்காட்டுவது ? பையனா? பொண்ணா ? என்றார் பிகே 

பிள்ளையாண்டானை வர சொல்லுங்க சார் என்றார் ராமசாமி. . சுப்பிரமணி நெற்றி யில் விபூதி குங்குமப்பொட்டு சகிதம் கை கூப்பி நிற்க ராமசாமி கங்கிராட்ஸ் என்று கட்டைவிரலை உயர்த்த , சுப்பிரமணி தரையில் விழுந்து நமஸ்காரம் தெரிவித்தான்.

அனைவரும் அதிர  ஆசியும் வாழ்த்தும் வேண்டறேன் என்றான் சுப்பிரமணி

.."விவகாப்ராப்தி ரஸ்து  "என்றார் அம்புஜம் .

இப்போது பி கே "பொண் எங்கய்யா ? என்றார் . இதோ ஒரு நிமிஷம் என்று சொல்லிக்கொண்டே தலை கொள்ளாமல் மல்லிகைப்பூவை விசாலாட்சியின் பின் தலையினுள்,சொருகி இதோ என்றார் அம்ஜம்..

டேய் பொண்ணு சூப்பரா இருக்காடா சுப்பு என்று பெண் குரல் வேறு யார் / சாக்ஷாத் பிகே அவர்களின் மனைவி தான். 

நீங்க பாருங்கோ என்று சுப்புவின் தாயாரை அழைத்து நிறுத்த --டு -பீ  மாமியார்  பெண்ணை நன்றாகப்பார்த்து திருப்தியுடன் நல்லா இருக்குதப்பா என்று சுப்பிரமணியிடம் சொல்ல, அவன் காது கேளாதவன் மாதிரி இருந்தான்.. ஏதாவது பேசணுமா என்றாள் சுப்பிரமணியின் தாய்.. சில குடும்பத்தகவல்களை பரஸ்பரம் கேட்டு பெற்றுக்கொண்டு முடிந்ததும், கல்யாணம் எப்போ எங்கே என்றார் சுப்பிரமணியன் தாய்.

சுந்தரி லேசாக தயங்க , ராமசாமி மென் குரலில் நாள் பாத்து சொல்றோம், கல்யாணம் திருச்சிலதான் என்று சொல்லச்சொல்ல அவ்வாறே சொல்லிவிட்டாள் சுந்தரி.

ரொம்ப ஆடம்பரமில்லாம கவுரவமா கட்டி கொடுத்தா போதும் , புள்ளைங்க சந்தோசமா இருக்கணும் ஒரே பையன் என்றாள் தாய்..

 ஆமாம்மா இதுவும் எனக்கிருக்கிற ஒரே தங்கச்சி அது நல்ல இருந்தா அது போதும் வேற நாங்களும் ரொம்ப ஆசையோ வசதியோ இல்லாதவங்க தான் என்றாள்  சுந்தரி.

இப்போது பிகே யின் மனைவி

சுப்பு நன்னா பாத்துக்கோ, அப்பிடியே நானும் பாத்துக்கறேன் அந்தப்பொண்ணை என்றார்.

ஆமாம்,, சுந்தரியும் தான் மாப்பிளையை பாக்கணும் கொஞ்சம் வரச்சொல்லுங்கோ என்றாள்L அம்புஜம். இதோ என்றார் பிகே மனைவி. சுப்பிரமணி யை நன்றாக பார்த்துக்கொண்டே சுந்தரி   , ஏய் நல்லா பாத்துக்க என்று தங்கைக்கு சொல்ல அவள் நான் பாத்தாச்சு என்றாள் அவள்.

அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...