TM SOUNDARARAJAN—8
டி எம் சௌந்தரராஜன்-8
இப்பதிப்பிலும், பின்னர் தொடரும் சிலவற்றிலும் , டி எம் எஸ் அவர்களின் முற்றிலும் மாறுபட்ட செயல் முறைகளைக்காணலாம்
வெள்ளிக்கிண்ணந்தான் [உயர்ந்த
மனிதன் -1967, வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ் பி எஸ்
பல புதுமைகள் நிறைந்த கூடாரம் இப்பாடல் .
ஆம், முன்னணிப்
பாடகி பி. சுசீலா பாடல் முழுவதும் கதாநாயகிக்காக வெறும் ஹம்மிங் மட்டுமே செய்துள்ளார்.
சொற்களே இல்லாத பெண் குரல்
இப்பாடலை வானுயர சுமந்தது எனில் புதுமை இல்லாமல் வேறென்ன?
பல்லவி துவங்கும் போது
வெள்ளிக்கிண்ணன்தான் ….. தங்கக்கைகளில்
முத்துப்புன்னகை ….அந்தக்கண்களில்
வெள்ளிச்சிலை தான்… எந்தன் பக்கத்தில்
தொட்டுக்கலந்தால் ……. அது தான் சுகம்
என்று ஒவ்வொரு சொல்லாக பாடப்பாட ட்ரம் டச்
,டச் , டச் டச்சு என ஒலிக்க மெல்ல ஊர்ந்த பாடல்
பல்லவி இரண்டாம் முறை துவங்கியதும் , பெண் குரல் அ ஆ ஆஅ ஆஅ என தொடர, பாடலில் சூடேற , இப்போது போங்கோ டக்கு கு ட க்கு
கு என கிளம்ப அதீத வேகத்தில் ட்ரம் டச்சுச்சு டச்சுச்சு என துரத்த குரலும் தாளமும்
ஒன்றை ஒன்று துரத்த கேட்கவே ரம்மியம்.
இப்படியே ஓடி சரணத்தில்
பயணிக்க டிராம் ஒதுக்கிவிட தபலாவின் துடிப்பு அதிகரிக்க திடீரென வேகம் குறைந்து “இன்னும் சொல்லவோ” என்று மெல்ல தவழ மீண்டும் டிரம் தரும் மெல்லிய அதிர்வு
கேட்க பரவசம்.
இப்படி மீண்டும் வேகம் அதிகரிக்க
ஆண் குரலுக்கு ஈடுகொடுத்து ஹம்மிங்கில் வேகம் அதிகரிக்கக்காணலாம். .
என்ன ஒரு கற்பனை பாடலின்
அமைப்பில்?. பாடல் இறுதிக்கட்டத்தில் நுழைய வேகம் அதிகரித்து பல்லவி பகுதியில் டிரம்
போங்கோ துரத்தல் , கிட்டத்தட்ட டாம் அண்ட் ஜெரி போல் ஒன்றை ஒன்று துரத்தும் குரல்கள்,
தாளக்கருவிகள் ,இறுதியில் ஒவ்வொரு சொல்லையும் டிரம்பெட் பேச [வாசிப்பு ட்ரம்பெட்- தாஸ் ] உச்சரிப்பு விலகாமல்
ஓடிய விந்தை. மொத்தத்தில் துரத்தித்துரத்தி ஓடிய அமைப்பு இப்பாடலின் சிறப்பு. மட்டுமல்ல
கிட்டத்தட்ட தாளக்கருவிகளையே பெரிதும் சார்ந்து அமைந்துள்ள மாறுபட்ட அமைப்பு இப்பாடல்.
கேட்டு மகிழ இணைப்பு
UYARNDHA
MANIDHAN 1967 VAALI --MSV
https://www.youtube.com/watch?v=4BdsKO2Aoac VELLIKKINNANTHSAN VAALI MSV TMS
PS
என் கேள்விக்கென்ன பதில் -உயர்ந்த மனிதன் -1967 , வாலி எம் எஸ் வி, டி எம் எஸ் பி எஸ்
இப்பாடலில் பாடகர்கள் சிவகுமாருக்கும்
பாரதிக்கும் வெகு பொருத்தமாக பாடியுள்ளனர். அதிலும்,சுசீலாவின் பங்களிப்பில் பாடல் மெருகு கூடியிருப்பதைக்காணலாம். இருவரில் பாரதியி ன் இயல்பான அசைவுகளால் கூட, இப்படி ஒரு மெருகு தோன்றியதோ என்னவோ?
பாரதியின் "மச்சம்" புகழ் பெற்றதல்லவா ?
அதை நேர்த்தியான முறையில் காட்ட,
பாரதியின் காஸ்ட்யூம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கே நாம் உணர வேண்டியது
கதாபாத்திரங்களுக்கேற்ப, டி எம் எஸ் /சுசீலா இருவரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். .
பாடலில் பாரதியே அதிகம் மிளிர்வதாக உணரலாம். தேர்ந்த நடிகை, பாவம் நடனம் சுறுசுறுப்பு என எதிலும் முன்னிலை கொள்பவர் பாரதி .
மாறுபட்ட வடிவத்தில் இசை தந்துள்ளார் எம் எஸ் வி. கேட்டு மகிழ இணைப்பு
https://www.youtube.com/watch?v=71Mmq0XErhE EN KELVIKKENNA BADHIL TMS PS
பூ மாலையில் [ஊட்டி வரை உறவு-1967] , கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ் பி எஸ்
பலரையும் கட்டிப்போட்ட பாடல்.
நரம்பு மீட்டல்/ தபாலாவில் தொடங்கி ஆ அ ஆ என்று ஆண் குரலில் முன்னேறி வர,
விரைந்து பெண் குரல் வலு சேர்க்க , எத்துணை முறை கேட்டாலும் தெவிட்டாத ஆலாபனையின் வசீகரம் .
இப்பாடலின் வசீகரமே "பூமாலையில்
" என்ற
சொல் பூ ......... மாலையில் என்று பிரித்துப்பாடப்பட்ட விநாடியிலேயே துவங்கிவிடுகிறது , பின்னர் வரும் வசீகரங்களுக்கு எண்ணற்ற ஆலாபனை உத்திகள், இசைக்கருவிகள் முற்றிலும் அடங்கி மீண்டும் குழலில் உயிர்ததெழ , ராக அமைப்புகள் என பாடல் எட்டிய உயரம் அதீதமானது.
அச்சு அசல் அக் மார்க், எம் எஸ் வியின் அக் மார்க்.
இளமை குன்றாத 57 வயது முதிர்ந்த பாடல்.
கவி அரசரின் சொல் அழகு தனி ரகம், குரல்களில் எழும் ஒலிக்கவர்ச்சி
இசை
அமைப்பாளரின்
திறமைக்கு
கட்டியம்
கூறும்
.
கருவிகளின் நர்த்தனம் அருவிபோல் தொடர்ந்து ஒலிக்க, ஐயோ பாடல் முடிந்து விட்டதே என்று ஏக்கத்தை விதைப்பதில் வியப்பென்ன?
காட்சி அமைப்பும் காமெரா கோணங்களும் 57 ஆண்டுகளுக்கு முன்னர் செயல் வடிவம் பெற்றதை என்னென்று விளக்ககுவது? கேட்டு மகிழ இணைப்பு இதோ .
https://www.google.com/search?q=poo+malaiyil+otu+malligaivideo+song&oq=poo+malaiyil+otu+malligaivideo+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigA
ooty varai kd mev tms ps
இதே பாடல் QFR ஆக்கமாக . மிகச்சிறப்பாக
ப்பதிவிட்டுள்ளனர் .
எனினும் ஒரு இடம்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் -என்ற வரியில் பி சுசீலாவின் பாடும் நளினம்
QFR
தரும்
பாடலில்
மாறி
விட்டதோ
என
தோன்றுகிறது
.காரணம்
வி
ரு
ந்
தோ
கொடுத்தான் வி
ழு ந்
தாள் மடி யில் [சுசீலா ]
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் [சாருமதி பாடியுள்ளது]
இதனால் ஏற்படும் காலப்ரமாண வேறு பாடு பாடலை எந்த அளவுக்கு அசைத்து விடுகிறது - அது தான் திரை இசை நமக்கு தரும் நுணுக்கமான ஈர்ப்பு
.நான் குறை சொல்ல வர வில்லை. எனினும் சிறு மாற்றங்கள் நம்மை அசைப்பதை உணரலாம்.
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment