Monday, June 10, 2024

SALEM SUNDARI -21

SALEM SUNDARI -21

சேலம் சுந்தரி- 21

ஒட்டு பதிவு முடிந்து வீட்டிற்கு திரும்பி, மதிய உணவிற்கு 3+3 பொட்டலம் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் எடுத்துக்கொண்டு பக்கத்து ஓட்டலில் சிற்றுண்டி முடித்து ரயில் நிலையம் 9.50 மணிக்கு வந்தனர். சூப்பரின்டென்டென்ட் கௌஸ் முஹம்மது விடம் அவர் பைலை வாங்கிக்கொண்டு இன்று    மாலைக்குள் அலுவலகத்தில் சேர்த்துவிடுவதாக சொல்லி , வணங்கி விடை பெற்று வெளியே வந்தாள் சுந்தரி.

சார்லி இடம் போனில் பேச அவர் சி-5 கோச்சில் ஏறிக்கொள்ளுங்கள் நான் வந்து இடம் ஒதுக்கித்தருகிறேன். மாடசாமி சார் சொல்லியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

இந்த மாடசாமி சாரின் உதவிக்கு எல்லையே இல்லையா என்று எண்ணியதும் சற்றே வருத்தம் அவளைகவ்விக்கொண்டது.. 

சார்லி நல்ல இடமாக இருவருக்கும் கொடுத்துவிட்டு,  பசிக்குது ஈரோட்டில் தான் ஏதாவது வாங்கவேண்டும் என்றார்.

உடனே விசாலாட்சி , அக்கா 2 பொட்டலம் எக்ஸ்ட்ரா இருக்குது அத சாருக்கு குடுத்துருவோம் பாவம் சாப்பிடட்டும் என்றாள் .

சுந்தரி என்ன என்பது போல பார்க்க , விசாலாட்சி நமக்குப்போக 2 பொட்டலம் இருக்குக்கா அதான் சொல்றேன் என்றாள்.

அதை எடு என்று வாங்கி, சார்லியிடம் சுந்தரி, சார் 2 பொட்டலம் இருக்கு இந்தாங்க பசிக்கு சாப்பிடுங்க என்று கொடுத்தாள் . சார்லி தயங்க , சார் எங்களுக்கு இருக்கு சார் பசிக்கும் போது சாப்பிடுங்க, தப்பா  நினைக்காதீங்க   என்று வேண்டுகோள் வைத்தாள். ரொம்ப தேங்க்ஸ் மா பசிநேரத்துல யார் சாப்பாடு தருவாங்க இன்னும் 1 மணி நேரம் ஆவும் ஈரோடு வர என்று நன்றி சொன்னார்.. ஒருவருக்கு உதவி செய்வதில் ஏற்படும் மன மகிழ்ச்சி அலாதியானது என்றுணர்ந்தாள் சுந்தரி.

சிறிது நேரத்தில் சார்லி "லெமன் ரைஸ் , கர்ட்   ரைஸ் 2ம்  சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றிங்க என்றார். இதுல என்ன சார்அவசரத்துக்கு எங்க கிட்ட இருந்ததை நினைச்சு சந்தோசமா இருக்கு என்றாள் சுந்தரி.

ஈரோடு தாண்டியதும் சகோதரிகள் சாப்பிட்டனர். விசாலாட்சிக்கு ரயில் அனுபவம் -அதுவும் எக்ஸ்பிரஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தாள் ; அக்கா சிறிது நேரம் கண்ணயர்ந்தாள் . அவ்வப்போது சார்லி வந்து பார்த்துக்கொண்டார். மதியம் 2.05 ரயில் திருச்சி ஜங்க்ஷனில் வந்து நின்றது. சார்லிக்கு நன்றி சொல்லி கீழே இறங்கி சகோதரிகள் நடக்க துவங்க, எங்கம்மா போறீங்க என்று குரல் பக்கவாட்டில் இருந்து [மாடசாமியும், ராமசாமியும் தான்] தலை கவிழ்ந்து வெட்கத்துடன் நின்றாள் சுந்தரி. தங்கைக்கு எதுவும் புரியவில்லை .பைலை குடுத்துட்டு அப்புறம் போங்க என்றார் மாடசாமி . சாரி சார் என்று கொடுத்துவிட்டு ராமசாமிக்கு நன்றி சொன்னாள் சுந்தரி.

அப்போது மாடசாமி சொன்னார் , வெளியே வெய்யில் கொளுத்துது இப்ப போகாதீங்க நேர வெயிட்டிங் ரூம் போங்க நான் ஷீலாகிட்ட சொல்லிருக்கிறேன் AC சேம்பர்ல இருங்க 4.00 மணிக்கு வீட்டிற்கு போங்க . 6.00 மணிக்கு கிளம்பி 630 மணிக்கு ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாப் காபி ஸ்டால் கிட்ட நில்லுங்க நான் வருவேன், 6..45கு சார் வீட்டுக்கு போவோம், என்று சொல்லி விட்டு கிளம்ப தயாரானார்கள்

சின்னவள் இன்னிக்கேவா என்றாள்.                                  ராமசாமி சொன்னார் ஆமாம்மா இன்னிக்கு வெள்ளிக்கிழமை, நாள் நல்லாருக்கு, குன்டூர்ல சொல்லியாச்சு , சும்மா சந்தோஷமா வாங்கோ, பாக்கி எல்லாம் பகவான் பாத்துப்பார் என்று கூறி விடை பெற்றனர். அதே போல சகோதரிகள் சொன்னபடி  செய்து மாலை 6.30க்கு மைசூர் காபி ஸ்டால் அருகில் நிற்க மாடசாமி வந்தார் . வண்டியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்துவிட்டு ஆட்டோவில் மூவரும் ராமசாமி வீட்டிற்கு சென்றனர்.

தொடரும்

அன்பன் ராமன்     

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...