Thursday, July 11, 2024

Music Director: VEDHA

 Music Director: VEDHA

இசை அமைப்பாளர்: திரு. வேதா

சுமார் 25 ஆண்டுகள் திரை உலககில் நன்கு அறியப்பட்ட இசை அமைப்பாளர்களுள் ம் உக்கியமானவர் திரு வேதா அவர்கள். இயற் பெயர் திரு வேதாசலம் .

திரை உலக நடைமுறைகளை ஒட்டி பெயரை சுருக்கி வேதா என வைத்துக்கொண்டார். திரு டி ஜி லிங்கப்பா மற்றும் திரு பாண்டுரங்கன் ஆகியோரிடம் உதவியாளராக இசைத்துறையில் பணியாற்றி பின்னர் தனித்து இயங்கினார்.

காலப்போக்கில் சேலம் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆனார்.  சேலம் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் சிறப்பு-- பல இசை அமைப்பாளர்களுக்கும் வசனகர்த்தாக்களுக்கும் வாழ்வளித்த பெருமை கொண்டது. அவ்வகையில் திரு வேதா அவர்களுக்கு சிறப்பிடம் உண்டு.

பலரும் திரு வேதா அவர்களை "ஹிந்தி மொழி பாடல்களை காப்பி அடித்து தமிழ் பாடல்களை வழங்குபவர்" என்று ஒரு முத்திரை குத்தி அவரின் இயல்பான வாய்ப்புகளை கெடுத்தனர் என்றே தோன்றுகிறது. இந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டவர்களில் அநேகர் விமரிசகர்கள் என்னும் அடையாளம் கொண்டவர்கள்.

தமிழைத்தாண்டி எதுவுமே தெரியாத நம்மவர்கள் போல் வாய்ச்சொல் வீரர்களை காண்பது எளிதன்று.        

சரி-- இப்போது கேள்வி ஒன்று எழுகிறது. முதலீடு செய்து படம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த வகை இசை அமைப்பு ஹிந்தியில் இருந்து இறக்குமதி ஆனது என்று தெரியாதா?

அவ்வளவு தெரியாமலா ஹிந்திப் பாடலை காப்பி அடிப்பவருக்கு வாய்ப்பளித்தார்கள்?      

ஏன்?   வி எம் நிறுவனத்தின் "அதே கண்களில்" ஓஹோ எத்தனை அழகு பாடல் ஆச்சு அசலாக ஹிந்தி இசை அமைப்பு தானே. தெரிந்து தான் வாய்ப்பளித்தனர் என்பதை தாண்டி , ஹிந்திப்பாடல் இம்மியும் மாறாமல் தமிழில் வேண்டும் என்று நிபந்தனையுடன் தான் திரு வேதா அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன என்பதே உண்மை. தயாரிப்பாளர் கோரிக்கைக்கு செவி சாய்த்து, செயல் படப்போக -இப்படி ஓர் நிலைமை.

 கேள்வி இரண்டு 'பாடல்களை பாடி கச்சேரி செய்தாலே ராயல்டி பிரச்சினை இருக்கும் .அப்படி எனில் ஹிந்திப்படலை பயன்படுத்தி பாடல் உருவாக்கிய தயாரிப்பாளர் /பாடலாசிரியர் /இசை அமைப்பாளர்  /பாடகர் எல்லோரும் அல்லவா சட்டப்பிரச்சினைக்கு ஆளாகி இருப்பர்.?  ஆகவே ஏதோ ஒரு 'அனுமதியுடன்' தான் இவை நடந்திருக்கும். இதை ஆய்ந்து அணுகாமல் பேசுவோரை என்னென்பது? சரி , திரு வேதா உருவாக்கிய சில 'ஒரிஜினல்' பாடல்களாவது  அவரது இசை ஞானத்தை ஏற்க உதவும் என நம்புகிறேன்.அப்படி சில பாடல்களை பார்ப்போம் .

பழகும் தமிழே [ பார்த்திபன் கனவு1960  ] கண்ணதாசன், வேதா, எம் ராஜா, பி சுசீலா

பாடலின் தமிழ் நடையின் மேலாண்மை குன்றாமல் வடிவமைத்துள்ள  இசை -வேதாவின் இசை உத்திகளை காட்சிப்படுத்தியுள்ளது. இசைக்கருவிகளின் தேர்வையும் தேர்ச்சியையும் நிர்வகித்த வேதா எவ்வளவு அழகாக பாடலை கையாண்டுள்ளார். குரல்களின் தேர்விலும் தனது இசை குறித்த பார்வையை தெளிவாக்கி 1960 இல் வழங்கியுள்ளார். எதுவும் தெரியாமல் அபாண்ட விமரிசனம் செய்வோர்/செய்தோர்  தங்களை தாங்களே நொந்து இறைவனிடம் மன்றாடுவதைத்தவிர வேறு வழியில்லை பாடலைக்கேட்டு மகிழ இணைப்பு இதோ:

https://www.google.com/search?q=PAZHAGUM+THAMIZHE+PAARTHTHIBAN+MAGALE+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=a5295d27d6bcdf79&sca_upv=1&sxsrf=ADLYWILFV6lp9XTD-x9HLYU1D PARTHIBAN KANAVU, KD VEDHGAA AM R P S

கண்ணாலே நான் கண்ட கனவு  [ பார்த்திபன் கனவு1960  ]மருதகாசி , வேதா, எம் ராஜா, பி சுசீலா

எவ்வளவு நேர்த்தியான காதல் டூயட் ; சொற்களில் உலவும் மன ஓட்டம்/ மன நாட்டம் இரண்டையும் பின்னி தழுவும் இசை [வேதா ] இதை எந்த ஹிந்தி பாடலில் இருந்து எடுத்தார்? எந்த மேதையாவது பதில் சொல்லட்டும். ஜாட்சி இசையில் காதல் மன பாய்ச்சலை வெளியிடும் xylophone கிணு கிணு கிணுங் என்று துடித்து ஓடுவதை கவனியுங்கள் . இசை அமைப்பாளரின் ராக பாவம், ஓசை நயம், கருவிகளின் வருடல் மற்றும் எம் ராஜா சுசீலா இருவரின் உள்ளார்ந்த பாவ வெளிப்பாடு. சொல்லிக்கொண்டே போகலாம் அதோடு இதையும் கவனியுங்கள் வைஜயந்திமாலாவுக்கு single strap upper garment            1960 ம் ஆண்டிலேயே வடிவமைத்திருப்பதையும் காணலாம்..                                                                          கேட்டு ரசிக்க இணைப்பு இதோ. 

https://www.youtube.com/watch?v=UbRvw6x00e0 PARTHIBAN KANAVU KANNALE NAN KANDA MARUTHA KASI VEDHA AM R P SUSEELA

இதய வானின் உதய நிலவே [பார்த்திபன் கனவு-1960] பாடல் : விந்தன் , இசை வேதா , எம் ராஜா, பி சுசீலா

 

இதே படத்தில் வந்த பிரிவாற்றாமை த்ந்த பாடல் விந்தனின்  நேர்த்தியான சொல்லாடலில். இசை அதை மேலும் ஆழமாக்கி  உள்ளதை பாடலின் மென் நகர்விலும், இடை இசையின் ஆர்ப்பரித்து வெடிக்கும் [உள்ளக்குமுறல் ] வடிவாய் இயங்கியுள்ளதை காணலாம். இயக்குனர் அலை பாயும் மனம் என்பதை , புரண்டு கிளம்பும் அலைகளைக்கொண்டே இடையிசை பகுதிகளில் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஒரே படத்தில் பலதரப்பட்ட பாடல்களை வழங்கியவரை முறையாக அங்கீகரிக்க விமரிசகர்களுக்கு கூட மனம் இல்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது?

 பல நேரங்களில் திறமையாளர்கள் புதையுண்டு மடிந்த அவலம் இன்றளவும் தொடர்கிறது.

 பாடலுக்கான இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=UuZmjOyjapU PARTHIBAN KANAVU IDHAYA VANIN PS    AM R VEDHA

ஆசை வந்த பின்னே [கொஞ்சும் குமரி- 1963] வாலி, வேதா, கே. ஜெ.  ஜேசுதாஸ்,   பி வசந்தா

கிட்டத்தட்ட ஜேசுதாஸ் பாடிய முதல் டூயட் வகை பாடல் எனலாம் . அதை விட சிறப்பு இந்த பாலை உருவாக்கியோர் அனைவரும் முதன்முதலில் இணைந்த பாடல் இதுவே என்பது அடியேனின் கருத்து . அதை விட ஒரு சிறப்பு B வசந்தா அவர்கள் ஒரு பாடகியாக பரிமளித்த  பாடல்.

பலருக்கும் ஒரு குறை உண்டு. வெகு சிறப்பாக ஹம்மிங் செய்யும் வசந்தா  ஏன் பாடுவதில்லை? என்று. [ என்னவோ அவர் பாட மறுத்ததைப்போல பலர் கேட்பதுண்டு].

தமிழ் சினிமாவில் ஹம்மிங் தேவதைகள் இருவர்–B.வசந்தா/ BSசசிரேகா. இவர்களை ஒதுக்கி விட்டு நீண்ட நெடிய ஹம்மிங் குரல் கொடுக்க எவருக்கும் இயலாது என்றே பலரும் கருதுகின்றனர்.

புது முக டூயட் என்பதால்  இரு புதிய குரல்களை வேதா பயன்படுத்தியிருக்கக்கூடும். ஒரு நல்ல பாடல், நன்கு பாடப்பட்டு ரேடியோ சிலோன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பரிச்சயமான பாடல். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=ASAI+VANDHA+PINNE+VIDEO+SONG&oq=ASAI+VANDHA+PINNE+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJC 1963 KONJUM KUMARI B VASANTHA KJ J VEDHA

பாப்பா பாப்பா கதை கேளு [அம்மா எங்கே? -1965] வாலி, வேதா எல் ராகவன்

ஒரு குழந்தைப்பாடலாக வேதா இசையில் வெளிவந்த வெற்றிப்பாடல். வாலியின் சொற்கள் வேதாவின் இசையில் . மிகவும் பழமையான காக் கா -நரி  -வடை தான் பாடலின் மையப்புள்ளி. வெகு இயல்பான நடையில் இசை பயணிக்க -இதுவும் வேதாவின் கற்பனையில் பிறந்த இசை வடிவம். எனவே வேதா சொந்த முயற்சியில் பாடல்களை உருவாக்கும் திறன் கொண்டவர் என்பதை நிறுவிட இப்பாடல்கள் உதவும் என  நம்புகிறேன்

https://www.bing.com/videos/riverview/relatedvideo?q=pappa+paappa+kadhai+kelu+video+song&mid=C401E7DB5CAF6F5706D6C401E7DB5CAF6F5706D6&FORM=VIRE

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

MUSIC DIRECTOR R. SUDARSANAM

  MUSIC DIRECTOR R. SUDARSANAM இசை அமைப்பாளர் ஆர்   சுதர்சனம் ஆரம்ப கால ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் . அந்த நிறுவன...