Wednesday, July 10, 2024

T M SOUNDARARAJAN-12

 T M SOUNDARARAJAN-12

டி எம் சௌந்தரராஜன் -   12        

முத்துப்பல் சிரிப்பென்னவோ [பூக்காரி -1973 ] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

பட்டையை கிளப்பும் இசை வலிமை கொண்ட பாடல். அதிலும் ஒரு சிறப்பு என்னவெனில் குழலும் தாளக்கருவிகளின் ஒருங்கிணைப்பும் ஏற்படுத்திய பெரும் தாக்கம் இப்பாடல்

ஆம் பாடலின் தாள நடைகளையும் ஓங்கி விரைந்து ஒலிக்கும் குழலையும் புறக்கணிக்க இயலுமா ? நிச்சயம் இயலாது. மேலும் அன்றைய சினிமா இலக்கணப்படி இருவர் மட்டுமே காட்சியில் இருக்க பின்னணியில் கோரஸ் மற்றும் சிப்மன்க் வகை ஒலிகளை இடை இசை மற்றும் பின்னிசையில் உலவிட்டு ஒரு கம்பீர பாடலை வழங்கியுள்ளார்  எம் எஸ் வி அவர்கள்

நான் சொல்லும் பாடலின் பண்புகளை திரைக்காட்சியில் உணர்வதை விட மேடை நிகழ்ச்சியில் இதே பாடலை  கேட்கும் பொழுது தாள வலிமை மற்றும் குழலின் பயணமும் நேர்த்தியாக உணரும் வகையில் உள்ளன. இரு இணைப்புகளையும் ஊன்றி கவனித்து ரசியுங்கள். இதோ அவை.

https://www.google.com/search?q=muthuppal+sirippennavo++video+song+&newwindow=1&sca_esv=ab354c44b20dd4be&sca_upv=1&sxsrf=ADLYWILZMvOLoFWVHg4GoknU9gPd1dqJdQ%3A1719724111755&ei=T-iA  pookkari  vaali msv tms ps

https://www.google.com/search?q=muthuppal+sirippennavi+video+song&oq=muthuppal+sirippennavi+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAo stage

ஆடலுடன் பாடலை கேட்டு [குடியிருந்த கோயில்1968 ] ஆலங்குடி சோமு , எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

 மிகச்சிறந்த தாள ஜதிகளும், பாங்க்ரா நடன வகைக்கான இசை க்கூறுகளும் மிகுந்த பாடல். தபலாவும் , ஒலி த்தாள மும் சேர்ந்து அவ்வப்போது எழுப்பும் மயக்கவைக்கும் இசைக்கோலமும் 1968 ம் ஆண்டின் இசை ஜாலம்

அந்நாளில் எம் எஸ் வி மேடையில் தோன்றியதும் "ஆடலுடன் பாடலைக்கேட்டு " பாடுங்க என்று குதூகலிக்க அந்நாட்கள் மறக்கவொண்ணாதவை

எல் விஜயலக்ஷ்மி க்கு ஈடு கொடுத்து ஆடவே எம் ஜி யார் தீவிர பயிற்சி மேற்கொண்டு பின்னரே நடித்தார் என்று பரவலாக பேசப்பட்டது. அற்புதமான பாடல் இணைப்பு இதோ:

https://www.google.com/search?q=aadaludan+paadalai+kettu+video+song&oq=aadaludan+paadalai+kettu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgWGB4yCAgCEAAYFhgeMgoIAxAAGIAEG   aadaludan paadalaikkettu

உனது விழியில் [நான் ஏன் பிறந்தேன் -1972] புலமைப்பித்தன் , ஷங்கர்- கணேஷ் , டி எம் எஸ், பி சுசீலா

மிகச்சிறந்த கவிஞர்கள் பட்டியலில் நிச்சயம் புலமைப்பித்தனுக்கு இடம் உண்டு. எண்ணற்ற பாடல்களை வழங்கி எம் ஜி யாரின் அன்புக்கு பாத்திரமானவர். அவரின் ஆக்கம் "உனது விழியில்". எளிய தமிழில் நளினமாக எழுதி சிறப்பு பெற்றவர். இந்தப்பாடலுக்கு பல சிறப்புகள் உண்டு. பாடலின் ஒலிப்பதிவை கவனியுங்கள் எங்கோ அசரீரி ஒலிப்பது போல் எதிரொலித்து இயங்கும் பாடல்

அதிலும் டி எம் எஸ் -சுசீலா குரல்கள் வானில் சஞ்சரிப்பது போன்றதோர் உணர்வை ஏற்படுத்தும் ஆக்கம் . ஆங்காங்கே எம் எஸ் வியின் நகாசுகள் தென்படுவதில் வியப்பென்ன ? இவர்கள் எம் எஸ் வி யி ன் நேரடி சீடர்கள் என்பது பல இடங்களில் பளிச்சிடக்காணலாம்.  கேட்டு மகிழ இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=VFdPCJFJ8J4 unadhu vizhiyil pulamaipiththan s g, tms, ps

நான் பாடும் பாடல் [நான் ஏன் பிறந்தேன் -1972] வாலி -ஷங்கர் கணேஷ், டி எம் எஸ்

வலியின் பாடல் வாலி எழுதி டி எம் எஸ் குரலில் -ஷங்கர் கணேஷ் இசையில் ; அழகான ஏற்ற இறக்கங்கள் , ஓங்கி ஒலிக்கும் ராக நடை என்று வசீகரிக்கும் பாடல்.

காட்சியில் எம் ஜி யார் பாடுகிறார். ஆனால் ஏனைய நடிகர்களுக்கு தான் நடிக்க வேண்டிய கட்டாயம். காஞ்சனா , மேஜர் , வீரராகவன் அனைவரும் பயந்த படி என்ன ஆகுமோ என்றுகவலையுடன் இருக்க தன் கவனம் குன்றாமல் எம்ஜியார் பாடும் காட்சி. வெகு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=naan+paadum+paadal+nalamaaga+vendum+video+song&oq=naan+paadum+paadal+nalamaaga+vendum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIR naan paadum paadal  vaali sg tms nan yen pirandhen 1972

மற்றுமோர் 1972ம் ஆண்டின் பாடல் . "பொன் அந்தி மாலைப்பொழுது" [இதய வீணை -1972] புலமைப்பித்தன் , இசை ஷங்கர் கணேஷ் . குரல் கல் டி எம் எஸ் ,       பி சுசீலா

முழுவதும் தாளத்தை க்கொண்டே பயணிக்கும் பாடல்

சுசீலாவும் டி எம் எஸ்ஸும் அதியற்புதமாக பாடல் முழுவதிலும் பயணித்துள்ளனர்.

முதல் பல்லவியில் கிளம்பிய தாளம் இடைவிடாது பயணித்து ஒரு தொடர்ச்சியை தூக்கிப்பிடித்துள்ளது. ஆனால் முழுநேர பங்களிப்பாக triple congo வெகு இயல்பாக குன்றாத துடிப்பு ன் நர்த்தனம் செய்து மீண்டும் மீண்டும் கேட்கச்சொல்லும் விந்தையை அரங்கேற்றியுள்ளது. துடிப்பான பாடல் -அந்நாளில் வெகு பிரபலம் . கேட்டு மகிழ இணைப்பு இதோ. 

pon andhi malaipozhudhu idhaya veenai -1972 SG pulamaipith https://www.dailymotion.com/video/xf42eo

வளரும்

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...