Monday, July 8, 2024

THE ‘FADING OFF’ SIBLINGS

 THE ‘FADING OFF’ SIBLINGS

மறைந்து வரும் சகோதர உறவுகள்

இது என்ன தலைப்பு-- எனில் -இதுவே இந்நாளின் யதார்த்தம். ஆம் மனித உறவு முறைகள் வெகுவாக விஸ்தரித்து வியாபித்து, ஓடிப்படரும் கொடிபோல , கிளைகளும் பிரிவுகளும் கொண்டது. உறவுகள் நீடிக்கின்றன.   ஆனால் தொடர்புகள்?

சென்ற தலைமுறையை நினைத்துப்பாருங்கள்

வீட்டிற்கு யாரேனும் வந்தால் எப்படி தூண்டித்துருவி  விசாரித்து நீ எந்த ஊர், தகப்பனார் , தயார் யார் யார், அவர்களின் பூர்விகம் என்று குடைந்து . ஏதோ ஒரு தொடர்பை பிடித்து, நீ உங்க அப்பா தேரழுந்தூர் னு தானே சொன்ன

அவரோட பாட்டி பேர் கோமதியா ? என்பார், வந்தவன் விழிப்பான் . என்னப்பா இப்பிடி இருக்கியே , உங்க பெரியவங்க யார் யார் னு தெரிஞ்சுக்க வேணாமா? போ வீட்டுக்குப்போனதும் கேட்டு தெரிஞ்சுக்கோ என்று கட்டளை இடுவர்.. அவனுக்கு பிடிக்காது ஆனால் உள்ளூர ஒரு ஆர்வத்தை விதைத்துவிடும். இரண்டொரு நாளில் தந்தையிடம் நேரடியாக மகன் கேட்க அவர் ஆமாம் ஏன் இப்பிடி திடீர்னு கேக்கற என்பார். இவன் நண்பன் வீட்டு பாட்டி பற்றி சொல்ல , அவங்க நமக்கு சொந்தமா ? என்று வினவ பையன் தெரியாது அப்பா; கேட்டு தெரிஞ்சு வெச்சுக்க னு சொன்னாங்க.  இப்போது தகப்பனுக்கு பாட்டியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் [அவர் இன்றைய தலைமுறைக்கு முந்திய இடத்தில் இருப்பவர்

ஒரு நாள் பாட்டியை பார்க்க போவார். பாட்டி குடைந்து துருவி , உங்க பெரிய பாட்டனார் பட்டா மணியம் கோவிந்தன். அவரோட தம்பி வைத்தியநாதன் [அதுதான் உங்க தாத்தா  னு நெனைக்கிறேன். ஆமாம் பாட்டி எங்க   தாத்தா பேர் வையகியநாதன் தான்னு சொல்லி கேட்டிருக்கேன் என்பார்

சரி தான் நீங்க பாத்திருக்க முடியாது கோமத்திக்கு 32 வயசு இருக்கும் போது அவர் காலமாயிட்டார் [காலரா வுக்கு நெறைய பேர் பலியானா ங்க ]அப்பஅவரும் அதுல ஒருத்தர். என்று பாட்டி விடாமல் கோர்வையாக சொல்ல பேரன் [சிறுவனின் தந்தை] மலைத்துப்போய் எவ்வளவு ஞாபகம் இந்த  பாட்டிக்கு என்று வியப்பார்.. இது தான் பழைய தலைமுறை தொடர்புகள் குறித்து  அக்கறைகாட்டி வந்த.அன்றைய தலைமுறை யின் அடிப்படை ஆர்வம். 

அதனால் அவர்களால் திருமண பந்தங்களை வெகு துல்லியமாக நிர்ணயிக்க முடிந்தது. ஒதுக்க வேண்டியவர்களை ஒதுக்கி பெண்களை நல்ல குடும்பங்களில் ஒப்படைத்தனர். இன்றோ, கல்வி செல்வம் , அந்தஸ்து , ஜபர்தஸ்து என்று பாதிப்பேர் ஏமாந்து உள்ளூர குமைந்து கொண்டிருக்கின்றனர் .

இது ஏன் ? சற்று யோசிப்போம்.  இன்றைய நிலையில், நமது குழந்தைகளுக்கே சித்தப்பா பெரிய்யப்பா வகைகளின் குழந்தைகள் தாண்டி வேறெவரையும் தெரிய வில்லை, ஏனெனில் முன்காலம்போல் விடுமுறைக்கு விடுமுறை யாராவது சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போய் , வேறு வீட்டு குழந்தைகளுடன் விளையாடுவது, கோயில் சென்று சுவாமி தரிசனம், கிராமத்து தேர் திருவிழா கோலாகலம், வீட்டின் பின்புறம் 200 அடி தூரத்தில் காவிரி என்று குதூகலித்த  தலை முறை இன்று இல்லை

குழந்தைகள் கும்பகோணமா நீ போ நான் வர மாட்டேன் என்பதும் , சில குழந்தைகள் சென்னைக்கு வர விரும்பும் ஆனால் பீச், ஐஸ்க்ரீம் இது உண்டுன்னா தான் வருவேன்; இல்லாட்டி வரலை என்று விலகி விலகி வாழ்ந்து இன்று அத்தையை பார்த்ததில்லை, மாமாவைப்பார்த்து 8 வருஷம் ஆயிற்று,அவருக்கு 2 பெண்கள் -வர்ஷினி ,தர்ஷினி என்று பெயர் தெரியும் .இரண்டு 'ஷினி'யும்  பக்கத்தில் இருந்தால் கூட  தெரியாது; ஏனெனில் முன் /பின் பார்த்தது இல்லை

அதிலும் யூஎஸ், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்கேண்டிநேவியா , என்று தம்பி மார்கள் பறந்து விட அவனவன் அங்கேயே எவளையாவது 'பிடித்து விட' கும்பகோணமாவது, கொரடாச்சேரியாவது, இங்கிருக்கும் சகோதரி வாட்சப்பில பேசுடா , உன் குழந்தைகளை முகத்தை போன் காட்டுடா என்று கோரிக்கை வைக்க அவர்கள் செஷன்  எக்ஸாம் என்று சாக்குப்போக்கு சொல்லி அந்த கரிய ன்களை  கண்ணிலே காட்ட மாட்டான் வேறென்ன அந்த வெளி நாட்டு மாமி கமலா ஹாரிஸ் வகை -புரிந்துகொள்ளுங்கள். நாலும் கிடக்க நடுவில் பசங்களுக்கு உபநயனம் ஆயிடுத்தா என்று தாய் நாட்டு சகோதரிக்கு கவலை .

அவன் [தம்பி] எத்தன். பெரியவனுக்கு ஆச்சு [கண் பார்வை மங்கல்] கண்ணாடி -அதுதான் உப    நயனம் என்று சமாளிக்கிறான் இது போன்ற கால மாறுபாடுகளால், அங்கங்கே தீவு களாக பிரிந்து விட் சொந்தங்கள் உண்டு ஆனால் அந்நியப்பட்டுவிட்ட தொடர்புகள்

 "இருந்தும் இல்லாத நிலை அடைந்தான்" என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் நமது விலகி விட்ட சொந்தங்களுக்கென்றே புனையப்பட்டதோ?  

வருந்துவதைத்தவிர வேறு வழியில்லை

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...