Wednesday, July 3, 2024

SALEM SUNDARI- 29

 SALEM SUNDARI- 29

சேலம் சுந்தரி -29

உங்கள தெரியாம திருச்சியில் யார் இருப்பாங்க அல்லது உங்களுக்கு தெரியாதவங்க திருச்சியில் இருக்காங்களா? என்று அதிரவைத்தாள். இப்போது சுந்தரி மலைத்தாள்   இந்த   "பொண்ணு" ராமசாமி சாரையே அதிர வெக் குது அம்மாடியோவ் என்று .

“சார் இவ எங்க ஓல்ட் ஸ்டூடன்ட் சாரதா பயங்கர வாயாடி ஆனா நல்லா ஹெல்ப் பண்ணுவா . பத்திரிகை அடிக்கணும் னு சொன்னேங்களே

அதுக்கு தான் வாடி இங்கே னு வர வெச்சுருக்கேன்.

எதுனாலும் அட்டகாசமா செய்வா.

இந்தாடி இவர் தான் கௌரி யுடைய மாமா   மிஸ்டர் மாடசாமி என்றார் சுபத்திரா.

சாரதா “அவர் பேர் தெரியும் , இப்பதான் பாக்கறேன்.

“அவரைப்போலவே, அவருடைய மீசையும் FAMOUS” என்றாள் சாரதா.

கௌரிக்கு அப்பிளிக்கேஷன் எல்லாம் நல்ல செஞ்சு ஸ்காலர்ஷிப் வரைக்கும் எல்லா வேலையும் இவதான் செஞ்சா என்றார் சுபத்திரா .

நந்தி கோயில் சாரதா வா நீங்க?  என்று மாடசாமி சொல்ல, சாரதா அதிர்ந்தாள்.

நீங்க எழுதிருக்கிறதை குடுங்க என்று சுந்தரியிடம்  கேட்டு வாங்கி , எப்படி வேணுமென்றாள் சாரதா.

“இந்தாடி-- ஏதாவது தாம் தூம் பண்ணாம சிம்பிளா நீட்டா ஒரு 100 காப்பிக்குள்ள இருந்தா  போதும்  என்ன? என்று உத்தரவிட்டார் மேடம்.

சரி மேடம் நாளைக்கு 3,00 மணிக்குள்ள ப்ரூப் அனுப்பறேன். நீங்க ரயில்வே தானே ஈமெயில் பண்றேன் டி[ID] குடுங்க என்று வாங்கிக்கொண்டாள் 

இவ்வாறான நிகழ்வுகளின் நடுவில் அம்ஜம் சமையல் முடித்துவிட்டு அக்கடா என்று ஊஞ்சலில் அமர வந்தவள் சாரதாவைப்பார்த்து இதுக்கு முன்னால வந்ததில்லை னு நினைக்கறேன் Am I right ? என்றாள் . Absolutely-- என்றாள் சாரதா. சரி எப்போ சாப்பிடலாமென்றாள் அம்ஜம்.

கொஞ்சம் போகலாம் என்று சுபத்திரா சாரதா இருவரும் சொல்ல , அப்போ அவங்க 3 பேர் [சுந்தரி , மாடசாமி , ராமசாமி ]முதல் ரௌண்ட்ல சாப்பிடட்டும் , நம்ம 3 பேர் [சுபத்ரா, சாரதா, அம்ஜம் ] அடுத்த ரௌண்ட்ல சாப்பிடுவோம் என்றாள் அம்ஜம்..நல்ல தலை வாழை இலை நன்கு கழுவி அழகாக துடைத்து வைத்திருந்ததை வரிசையாக இட்டு தம்ளர , கூஜா என தயாராக அம்ஜம் ஏற்பாடு செய்ய, சுந்தரியும் சாரதாவும் என்று வியந்தனர்.

சாப்பாடு பரிமாற ஆரம்பித்த நிலையில், சுபத்ரா சாரதா வைபோடி போய் மாமிக்கு ஹெல்ப் பண்ணு என்றாள் . குதிரை மாதிரி கிளம்பி கூட மாட உதவினாள் . வேலைக்கு நடுவில் , சாரதா   சுபத்ராவிடம் "மேடம் ரசம் ரொம்ப கிறங்கடிக்கும் போல இருக்கு சும்மா கமகம னு அதுல தேங்காய் துருவி போட்டிருக்காங்க , விட்டா  இப்பவே நான் ஒருத்தியே காலி பண்ணிடுவேன்.

ஏய் ஏதாவது ஏடாகூடமா பண்ணின நான் ஒன்னை காலி பண்ணிடுவேன்.

இல்ல மேடம் நீங்களே அசரப்போறீங்க ரசத்துல என்றாள்  சாரதா. 

இவ என்னவோ சொல்றாளே என்ன மேடம்? என்று சுபத்ரா கேட்க, ராமசாமி “அதுவா ஒன்னும் இல்ல பொரிச்ச ரசம்

[சொல்லி வைத்தார் போல் மாடசாமி, சாரதா, சுந்தரி முவரும் வியப்புடன் பார்த்தனர்]

ரசத்தை உள்ளங்கையில் வாங்கி ஒரு மிடறு உறிஞ்சிய சுந்தரி கண்கள் இரண்டும் ஒரு விதமாய் [இல்லை ஒரே விதமாய்] புளகாங்கிதம் அடைந்து தேவாமிருத சுவை . என, மிகவும் ரசித்தாள். மாடசாமிக்கு இது புதிதல்ல எனினும் அவரும் மிகவும் ரசித்தார்.. மிக மகிழ்வுடன் இருந்தனர் அனைவரும்..

மீதமுள்ள பெண்கள் அமர்ந்து சாப்பிட துவங்கும் போது சாரதா எனக்கு ரசம் என்றாள் .

ரச பாத்திரத்தை சுபத்ரா தன பக்கம் வைத்துக்கொண்டு எல்லாரும் ரசம் ஆரம்பிக்கும்போது உனக்கும் வரும்.   அது  வரை வெறும் சோத்தை தின்னு. என்று அடக்கி விட்டாள்.

எனவே, பேசாமல் குழம்பு சாதம் முடித்து பின்னர் ரசம் துவங்கிற்று. கோவிச்சுக்காம டம்ப்ளர் தாங்க என்று கெஞ்சி வாங்கி ரசம் சுவைத்து மகிழ்ந்தனர் சாரதா/ சுபத்ரா  எல்லோரும்.

இதுக்கு, ரெசிபி தாங்க என 3 பெண்களும் கோரஸ் பாடினர்.  .நீங்க இதுமாதிரி கேப்பீங்கனு 1 காபி எழுதி வெச்சிருக்கேன் .அதைப்பார்த்து குறிச்சுக்கோங்கோ என்றார் அம்ஜம்..

சரி, என்று சொல்லி விட்டு 3 வரும் அண்ட்ராய்டு போனில் ரெசிபியை   போட்டோ எடுத்துக்கொண்டனர். எழுத்து சூப்பரா இருக்கு, என்று சான்றளித்தாள் சாரதா.

சிறிது நேரம் அரட்டை ஓய்வு பின்னர் 4 மணிக்கு மேல் காபி . மீண்டும் அம்ஜம் தனது காபி திறனை அபரிமிதமாக காட்ட, அனைவரும் மகிழ்ந்தனர். கல்யாணத்திற்கு புடவைகள் குறித்து கேட்டு குறித்துக்கொண்டாள் சுந்தரி.

அம்ஜம், “இதெல்லாம் எங்க வழக்கம் உங்களுக்கு எப்பிடின்னு நீங்க உங்க வழக்கப்படி  என்னனு தெரிஞ்சு அப்பிடி செய்ங்கோ என்றாள் . நான் ஊர்ல கேட்டு , தெரிஞ்சவங்க பட்டு நெசவு போடுறாங்க அவங்க வழியா ஏற்பாடு பண்ணிக்கிறேன் என்று சொல்லி , வேற ஏதாவது தேவைன்னா கொஞ்சம் சொல்லித்தாங்கம்மா என்றாள்  சுந்தரி..  எல்லாரும் அடிக்கடி வாங்கோ என்று சொல்லி குங்குமம் கொடுத்து அனுப்பினாள் அம்ஜம்.

ராமசாமிதம்பதியருக்கு மனமார நன்றி சொல்லி விடைபெற்றனர்

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...